Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சூர்யாவை முந்திய ஆர்யா, விஜய்க்கு ஐந்தாவது இடம்!

Posted:

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற தமிழ்த்திரைப்பட நடிகர் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தி, முடிவை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் இப்படியொரு கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது அந்த நாளிதழ். அதன்படி 2012 ஆம் ஆண்டின் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற தமிழ்த்திரைப்பட நடிகராக கடந்த அண்டு சூர்யா தேர்வு ...

கண்டிப்பாக முத்தக்காட்சிகளில் நடிப்பேன்! - மனோ சித்ரா பேட்டி!

Posted:

கதாநாயகி என்றால் கவர்ச்சி காட்ட வேண்டும், முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டும். இதில் உடன்பாடு இல்லாமல் இருந்திருந்தால் நான் கதாநாயகியாக நடிக்க வந்திருக்க மாட்டேன். தங்கையாகவே நடித்திருப்பேன் என்கிறார் மனோசித்ரா. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி இதோ...

* அவள் பெயர் தமிழரசி படத்திற்கு பிறகு எந்த படத்திலும் ...

மீண்டும் நடிக்க ஆசைப்படும் மாளவிகா...!

Posted:

எத்தனையோ மாளவிகா இப்போது வந்துவிட்டார்கள், இதில் எந்த மாளவிகாவை நீங்கள் சொல்கிறீர்கள் எனக் கேட்பது கேட்கிறது. 'கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு....' எனப் பாடி ஆடி கவர்ந்த மாளவிகாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படியே மறந்திருந்தாலும் அந்தப் பாடலை மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பாடல் வந்த பிறகுதான் கருப்பாக இருப்பவர்கள் ...

இந்தி நடிகர் கோவிந்தா மகள் நர்மதா நடிக்க வருகிறார்...!

Posted:

பிரபல இந்தி நடிகரான கோவிந்தா மகள் நர்மதா, விரைவில் இந்திப் படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். தனது நடனத்தாலும், நடிப்பாலும் இந்தித் திரையுலக ரசிகர்களைக் கவர்ந்தவர் கோவிந்தா. அனில் கபூர் மகள் சோனம் கபூர், சத்ருக்கன் சின்ஹா மகள் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முன்னணி ஹீரோயின்களாக ஏற்கெனவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த ...

சிரஞ்சீயின் 150வது படத் தொடக்க விழாவில் அனைத்து நடிகர்கள் பங்கேற்பு...!

Posted:

அரசியலை விட்டு கொஞ்சம் விலகியிருந்து விரைவில் 150வது படத்தில் நடிக்கும் முடிவை சிரஞ்சீவி எடுத்ததும், அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தற்போதைய செய்தி, சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெற உள்ள அந்தப் படத்தின் தொடக்க விழாவில் அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். அநேகமாக ...

கமல் மகளைக் கவர்ந்த காரைக்குடி...!

Posted:

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் சென்னையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து தற்போது மும்பையில் வசித்துக் கொண்டிருக்கிறார். மாநகரத்து வாழ்க்கை வாழ்ந்து வரும் அவருக்கு மண் மனம் மாறாத காரைக்குடி நகரம் மிகவும் பிடித்து விட்டதாம். தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக 'பூஜை' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த ...

2014 - அரையாண்டில் தெலுங்கில் 60 படங்கள் ரிலீஸ்...!

Posted:

இந்த 2014ம் ஆண்டில் தென்னிந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை இன்றுடன் முடியும் அரையாண்டில் தமிழ்ப் படங்கள்தான் அதிக எண்ணிக்கையில் வெளிவந்துள்ளன. தமிழில் சுமார் 100 படங்களும், தெலுங்கில் சுமார் 60 படங்களும், மலையாளத்தில் சுமார் 80 படங்களும், கன்னடத்தில் சுமார் 65 படங்களும் வெளிவந்துள்ளன. ஆக, மொத்தம் தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் சுமார் ...

விஜய் வசந்த் நடத்திய டூ இன் ஒன் விழா!

Posted:

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய்வசந்த் சுமார் அரை டஜன் படங்களில் நடித்தும் அங்கீகாரம் கிடைக்காத நடிகராகவே இருந்து வந்தார். கடைசியாக அவர் நடித்த என்னமோ நடக்குது படம் வித்தியாசமான படம் என்ற மவுத் டாக்கிலேயே வெற்றி எலக்கை எட்டி வசூலையும் குவித்தது. திரைப்படக் கல்லூரி மாணவரான ராஜபாண்டி என்பவர் என்னமோ நடக்குது படத்தை ...

சோலோ ஹீரோவாக ஜெயிப்பாரா ஜெய்?

Posted:

பகவதி படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி சினிமாவுக்கு வந்தவர் ஜெய். இசை அமைப்பாளர் தேவாவின் தம்பி மகன். அதன் பிறகு அவர் நடித்த சென்னை 28 வெற்றி பெற்றதால் நாடறிந்த நடிகர் ஆனார். ஆனால் அவர் இதுவரை நடித்த படங்களில் தனி ஹீரோவாக நடித்த எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்த படங்கள் வெற்றி ...

ஹீரோவாக நடிக்க 1 கோடி சம்பளம் கேட்கும் கானா பாலா..!

Posted:

சில வருடங்களுக்கு முன்பு வரை வட சென்னை ஏரியாவில் கானா பாடல்களை பாடி வந்தவர் கானா பாலா. அவரை பாடகராக, பாடலாசிரியராக அட்டகத்தி படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பா.ரஞ்சித். அட்டகத்தி படத்தில் நடுக்கடலில் கப்பலில் இறங்கி தள்ள முடியுமா என்ற பாடல் சூப்பர்ஹிட்டாகி, கானா பாலாவை பிரபலமாக்கியது. தொடர்ந்து அனைத்து முன்னணி ...

பாலா சொன்ன பச்சைப்பொய்

Posted:

ஆர்யா தயாரிக்கும் படம் என்பதாலோ என்னவோ அமரகாவியம் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகளுக்கு கொடுத்த முக்கியத்துவம் இயக்குநர் பாலாவுக்கு கொடுக்கப்படவில்லை. பாலாவின் தலைமையில் இசை வெளியீடு என்று சொல்லப்பட்டாலும், இசையை வெளியிடும்போது, ...

ஜிகிர்தண்டா வெளியாவதில் தாமதம் ஏன்?

Posted:

பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கி உள்ள படம் 'ஜிகிர்தண்டா'. இதில் சித்தார்த், லட்சுமி மேனன் நடித்துள்ளனர். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

இதற்கு காரணம் தணிக்கை குழு ...

அழுக்கு பையனாக நடிக்க தயக்கம் இல்லை: விஜய் வசந்த்

Posted:

வசந்த் அணட் கோ அண்ணாச்சி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நடித்த என்னமோ நடக்குது படம் சமீபத்தில் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. பெரிய அளவில் லாபம் சம்பாதிக்காவிட்டாலும் தயாரிப்பாளருக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் திருப்திகரமான படமாக இருந்தது. இந்தப் படத்தை அண்ணாச்சியின் இளைய மகன் வினோத்குமார் ...

சினிமா பி.ஆர்.ஓ சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted:

தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்திற்கு 2014-2016ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று (ஜூன் 29) நடந்தது. இதில் தலைவராக விஜயமுரளியும், பொருளாளராக மவுனம் ரவியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பொதுச் செயலாளராக பெரு.துளசி பழனிவேல் வெற்றி பெற்றார். துணை தலைவர்களாக கோவிந்தராஜ், சங்கரலிங்கம் ஆகியோரும், ...

சிம்ரன் நடத்தும் டான்ஸ் தமிழா டான்ஸ் அடுத்த மாதம் தொடங்குகிறது

Posted:

சீ தமிழ் தொலைக்காட்சியில் சிம்ரன் நடத்திய டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சிம்ரன் நடுவராக இருந்து நிகழ்ச்சியை நடத்தினார். பிரபு தேவா இறுதிப்போட்டிக்கு நடுவராக இருந்த திறமையாளர்களை தேர்வு செய்தார்.

தற்போது இதன் இரண்டாம் பாகத்துக்கான முதல்கட்ட தேர்வுகள் நடந்து வருகிறது. டான்ஸ் தமிழா டான்ஸ் ...

ஜெயம்ரவி படத்தில் சிறப்பு தோற்றத்தில் 5 ஹீரோக்கள்

Posted:

பார்த்திபன் இயக்கி வரும், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால், உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். அதேபோல தற்போது ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்திலும் 5 ஹீரோக்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

கதைப்படி ஹீரோ ஜெயம்ரவி நடிகர்களுக்கு சிக்ஸ்பேக் ...

தொடர் தோல்விகளில் மம்முட்டி: கதை தேர்வில் கவனம் செலுத்த முடிவு

Posted:

மலையாள சினிமாவில் அதிகம் ஹிட் கொடுத்த ஹீரோ மம்முட்டி. ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். மோகன்லாலும் அப்படியே இருந்தாலும் த்ரிஷ்யம் என்ற ஒரு வெற்றி அவரை காப்பாற்றிவிட்டது.

கடந்த ஆண்டு வெளிவந்த பாலிவுட்டியோட நாமத்தில் என்ற படம்தான் மம்முட்டி கொடுத்த கடைசி ஹிட். அதன் பிறகு நடித்த ...

விஜய்யின் மும்பை சென்டிமென்ட்!

Posted:

விஜய் நடித்த பல ஆக்சன் படங்களின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்றது. அதிலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அவர் நடித்த தலைவா ஆகிய படங்கள் முழுக்க முழுக்க மும்பையில்தான் படமாக்கப்பட்டன. கதை மும்பை களம் என்பதால், இந்தி டயலாக் வாசனைகளும் அதிகமாக அப்படங்களில் வீசின.

இந்த ...

அடுத்த நமீதா ஆகிறார் அருந்ததி!

Posted:

வேடப்பன் என்ற படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் அருந்ததி. அதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் நடித்தார். அதோடு, எஸ்.ஏ.சி மூலமே விஜய் படத்திலும் நடித்து தமிழில் நம்பர்-ஒன் நடிகையாகி விடுவேன் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் அதையடுத்து அருந்ததி நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறாததால் அவரால் ...

ஜிப்ரான் தான் அடுத்த ஏ.ஆர்.ரகுமான்! படவிழாவில் புகழ்ந்த பிரபலங்கள்!!

Posted:

களவாணி படத்தை இயக்கிய சற்குணத்தின் இரண்டாவது படம் வாகை சூடவா. தேசிய விருது பெற்ற இந்த படத்திற்கு இசையமைத்திருந்தவர் ஜிப்ரான். அந்த படத்தின் பாடல்கள் வித்தியாசமாக இருந்ததால் அதையடுத்து தான் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படத்திற்கு கமிட் பண்ணினார் கமல். அப்படத்தில் அவரது இசைப்பணி திருப்தியை கொடுக்கவே இப்போது தான் நடித்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™