Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரகசியம் காக்க மலேஷியா புறப்பட்டார் அஜீத்..!

Posted:

கௌதம்மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக அஜீத் மலேஷியா புறப்பட்டுச் சென்றார். அவருடைய 55 வது படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. காரணம்...முன்கூட்டியே தலைப்பு வைத்தால் இது என்னுடைய தலைப்பு என்று யாராவது சொந்தம் கொண்டாடுவார்கள். பிறகு கோர்ட்டுக்குப் போவார்கள். ...

அனுஷ்காவிற்கு அடுத்த ஆண்டு திருமணம்...?!

Posted:

நடிகை அனுஷ்காவின் தீவிர ரசிகர்கள் யாராவது இருந்தால் கொஞ்சம் மனசைத் தேத்திக்குங்க…அவங்களுக்கு அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணத்துல அவங்க பொற்றோர் இருக்காங்களாம். முப்பது வயதை அனுஷ்கா கடந்து விட்டதால்தான் இந்த முடிவு என்கிறார்கள்.

அனுஷ்கா தற்போது தமிழ், தெலுங்கு என முக்கியமான சில பிரம்மாண்டமான படங்களில் ...

ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு..! சித்தார்த் எடுத்த முடிவு!

Posted:

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருந்தார் சித்தார்த். சில வருடங்களுக்கு முன் தெலுங்கு மீடியாக்களைப் பற்றி தரக்குறைவாக பேசியதை அடுத்து சித்தார்த்துக்கு எதிராக தெலுங்கு மீடியாக்கள் திரண்டன. வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை சமாளித்தார். ஆனாலும் சித்தார்த் மீதான மீடியாக்களின் கோபம் நீறுபூத்த நெருப்பாக ...

பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் - ஹாலிடே!

Posted:

விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தை ஹிந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அக்ஷய்குமார் ஹீரோவாக நடித்த இந்தப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. துப்பாக்கி படத்துக்கு தமிழில் வரவேற்பு கிடைத்த அளவுக்கு, ஹாலிடே படத்துக்கு வரவேற்பு இல்லை என்று ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் ஹாலிடே படத்தின் ...

விஜயத்தை கழற்றிவிட்ட மனோஜ்குமார்!

Posted:

சுமார் 25 படங்களை இயக்கியவர் இயக்குநர் மனோஜ்குமார். இவற்றில் சில வெற்றிப்படங்களும், பல தோல்விப்படங்களும் அடக்கம். இயக்குநராக இருந்து சினிமாவில் சம்பாதித்து தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். சினிமாவில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு சொந்த ஊரில் நிலபுலன்கள், சென்னையில் பல சொந்த வீடுகள் என செமத்தியாய் செட்டிலானார். அப்படியும் அவருக்கு ...

விமலை வெறுப்பேற்றிய லிங்குசாமி பிரதர்ஸ்!

Posted:

சில தினங்களுக்கு முன் வெளியான மஞ்சப்பை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமல் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் தாத்தா பேரன் இருவருக்குமிடையிலான பாசத்தைச் சொல்கிற படம். தாத்தாவாக ராஜ்கிரணும், பேரனாக விமலும் நடித்துள்ளனர். விமல் வழக்கம்போல் அலட்டிக்கொள்ளாமல் நடிக்க, ராஜ்கிரணோ கிராமத்து தாத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார். ...

ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய விஜய்...!!

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவருக்கு என்று ரசிகர்கள் கூட்டமே உள்ளது. விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை ஒருங்கே அரவணைத்து செல்பவர். தான் எவ்வளவு தான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார். மாதம் இருமுறை, 2வது ஞாயிறு மற்றும் 4வது ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ...

படுக்கையறை காட்சியில் நடித்த தமிழ் பட நாயகி!

Posted:

தமிழில் வசந்த் இயக்கிய மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தவர் சுர்வின் சாவ்லா. தற்போது அர்ஜுன் இயக்கி, தயாரித்து, நடிக்கும் ஜெய்ஹிந்த் 2 படத்தில் நடித்து வருகிறார். சுர்வின் இந்தியில் ஹேட் ஸ்டோரியின் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதுதான் இப்போது பாலிவுட்டின் ஹாட் நியூஸ். ஹேட் ஸ்டோரி படம் 2012ம் ஆண்டு ...

எக்குத்தப்பாக எகிறி நிற்கும் சன்னி லியோனின் மார்க்கெட்!

Posted:

இந்தி சினிமாவில் ஐஸ்வர்யாராய், வித்யாபாலன் உள்ளிட்ட சில முன்னணி நடிகைகள் கவர்ச்சிக்கு தடா போட்டு விட்டு பர்பாமென்ஸ் நடிகைகளாக உருவெடுத்திருப்பதால், சன்னி லியோனின் மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறி நிற்கிறதாம். அவர் படங்களில படு ஆபாசமாக நடிக்கிறார் என்று மாதர் சங்கங்கள் ஒருபக்கம் அவருக்கு எதிர்ப்பாக கொடி பிடித்தபோதும, ...

கிருத்திகா உதயநிதி படத்தை தயாரிக்கிறார் தனுஷ்!

Posted:

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா, 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கினார். இதனை அவரது கணவர் உதயநிதியே தயாரித்தார். கிருத்திகாவின் இரண்டாவது படத்தை தயாரிக்கப்போவது தனுஷ். இசை அமைக்கப்போவது வழக்கம்போல் அனிருத்.

இதுபற்றி கிருத்திகா கூறியிருப்பதாவது: என்னோட முதல் படம் ரொமாண்டிக் காமெடியாக இருந்தது. இரண்டாவது படம் ...

சந்தானம் மாதிரி நான் காமெடியன் இல்லை: லொள்ளு சபா ஜீவா சொல்கிறார்

Posted:

பிரபல மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஜீவா. ரஜினி மாதிரி மிமிக்ரி செய்தே முன்னுக்கு வந்தவர். சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சியிருந்து விலகி நடிகர் ஆனதும். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தியவர். இப்போது ஜீவாவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சில படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்திருக்கும் ஜீவா. மாப்பிள்ளை விநாயகர் படத்தின் மூலம் ...

சித்தார்த்-சோனாக்ஷி நெருக்கம்?!

Posted:

அதிகம் கிசுகிசுக்கப்படாத இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா. பிரபு தேவாவின் படங்களில் தொடர்ந்து நடித்ததால் இருவரையும் இணைத்து ஆரம்பத்தில் கிசுகிசு வந்தது. அதனை இருவருமே பலமாக மறுத்தனர். இப்போது சோனாக்ஷி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா நெருக்கம்தான் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கிறார்கள். நண்பர்களின் ...

ஹீரோவாக அறிமுகமாகும் இரட்டையர்கள்

Posted:

குரு, கமல்நாத் என்ற இருவரும் இரட்டை சகோதரர்கள். இவர்கள் இருவரும் குரு சுக்ரன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள். சாதனா டைட்டஸ் என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர சிங்கமுத்து, சண்முகராஜன், நரேன், நடிக்கிறார்கள். செலத்துரை கேமராமேன், இசை அமைப்பாளர் சந்திரபோஸ் மகன் சந்தோஷ் இசை அமைக்கிறார்.

"தோற்றத்தில் ஒரே ...

ஹீரோவானார் செண்ட்ராயன்!

Posted:

பொல்லாதவன் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி மூடர்கூடம் படத்தில் காமெடியன் ஆனவர் செண்ட்ராயன். கைவசம் இப்போது 10 படங்கள். அனைத்திலும் காமெடியன்தான். விஷயம் வெளியே தெரியக்கூடாது (படத்தின் பெயர்தான்) என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். செண்ட்ராயனுடன் ஆர்யன், குபேரன், ரங்கன், அம்பாசங்கர் என்ற புது காமெடியன்கள் நடிக்கிறார்கள். ...

அஜீத்தின் 55வது படத்தின் தலைப்பு சத்யா.?!

Posted:

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்திற்கு படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாக இருந்தபோதுதான் டைட்டிலையே அறிவித்தனர். அந்த அளவுக்கு டைட்டீல் விசயத்தில் அதிகமாக மெனக்கெட்டனர். இதனால் அஜீத்தின் ரசிக கோடிகள், பொறுமையை இழந்தனர். அதேபோல்தான் இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பட விசயத்திலும் ...

சிம்புவிடமிருந்து விடைபெற்றார் ஹன்சிகா!

Posted:

வாலு படத்தில் நடிக்கத் தொடங்கியபோது சிம்பு-ஹன்சிகாவுக்கிடையே மலர்ந்த காதல், ஓரிரு மாதத்திலேயே கருகி விட்டது. அதனால் அப்படத்தில் தான் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளில் நடிக்க மறுத்து வந்தார் ஹன்சிகா. இதனால் தயாரிப்பாளர், டைரக்டருக்கு தர்மசங்கடமாயிற்று. இருப்பினும், படத்தை ஹன்சிகா முடித்துக்கொடுத்தால்தானே ரிலீஸ் பண்ண ...

கமல்ஹாசன் நேரடியாக பாராட்ட மாட்டார்…நடிகை ரோகிணி பேச்சு…!

Posted:

'மறுபடியும், மகளிர் மட்டும்' போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ரோகிணி. திறமையான நடிகையாக இருந்தும் இந்த கமர்ஷியல் சினிமா உலகில் இவரைப் போன்ற நடிகைகள் அவ்வளவாகப் பிரகாசிக்க முடியாமல போய்விட்டது வருத்தமான ஒன்றுதான். இவர் தற்போது 'அப்பாவின் மீசை' என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் ...

ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிப்பேன் - சுஷ்மிதா சென்

Posted:

1994ம் ஆண்டு 'மிஸ் வேர்ல்டு', 'மிஸ் யுனிவர்ஸ்' என ஒரே ஆண்டில் இரண்டு பட்டங்களை இந்திய அழகிகள் வென்று உலகையே தங்களது பக்கம் திரும்ப வைத்தார்கள். ஐஸ்வர்யா ராய் 'மிஸ் வேர்ல்டு' பட்டத்தையும், சுஷ்மிதா சென் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தையும் வென்றார்கள். அதன் பின் சில ஆண்டுகள் கழித்து இருவருமே திரையுலகில் நாயகிகளாக அறிமுகமானார்கள். ...

எந்தப் பட பிரமோஷனுக்கும் வர மாட்டேன் - நயன்தாராவின் ஒப்பந்தம்

Posted:

இப்போதெல்லாம் ஒரு படத்தை எடுத்து முடித்து வெளியிடுவதை விட அந்தப் படத்தை ஓட வைப்பதில்தான் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் பிரச்னையே எழுகிறது. இந்தித் திரையுலகில் ஒரு படம் முடிந்தவுடன் அந்த படத்தை விளம்பரப்படுத்தும், அனைத்து பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் படத்தின் நாயகன், நாயகி, இயக்குனர் தவறாமல் கலந்து கொள்வார்கள். ...

அஜீத்தை போன்று வில்லனாக நடிக்கும் விஜய்-சூர்யா!

Posted:

தற்போதைய இளவட்ட ஹீரோக்களில் பலர் தங்களுக்கான ஹீரோ இமேஜை கட்டிக்காத்து வரும் வேளையில், அஜீத் மட்டும்தான் மங்காத்தாவில் தைரியமாக வில்லனாக களமிறங்கினார். அதோடு நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது, ரொம்ப போரடிக்குது என்று சொல்லியே நடித்தார்.

அதையடுத்து, தொடர்ந்து அவரை ஹீரோவாகவே பார்த்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™