ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பௌர்ணமியின் மகத்துவம் என்ன?
- பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும்: யுனிசெப்
- ரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக் - René-Théophile-Hyacinthe Laennec
- சிலுக்கு - சிறுவர்கதை
- வைத்தியர் வந்தார்!
- மருதநாயகம் படம் எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கப்படலாம்- கமல்ஹாசன்
- சூரியனை சிறை பிடியுங்கள்
- சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை
- உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள்: இந்திய நேரப்படி அட்டவணை
- வெந்நீரின் சுவை குறைவது ஏன்?
- நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாள்: ஜூன் 12, 1964
- குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்: ஜுன் 12, 2002
- தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்: ஜுன் 11, 1995
- புதிய முப்பரிமாண வசதி.
- உங்களால் முடிகிறதா?
- சிறகுகளும் இறகுகளும்...
- திருமயம் கோட்டைக் காட்சிகள் – முனைவர் சு. சௌந்தரபாண்டியன்
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- பிள்ளையார்பட்டிக் கோயிற் காட்சிகள் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
- அக்கரை பச்சையில்லை!
- கவியரங்கில் வாலி சொன்னது
- தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ...
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள்.
- மரணத்தோடு விளையாடியவன்!
- நேர்வழியே நிறைவாழ்வு
- ஆன்டிவைரஸ் தேவை உதவுங்கள்
- (வி-சித்திரக்கவிதை)
- பரிசு
- பாடம்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (34)
- காளையார்கோயில் காட்சிகள் – முனைவர் சு. சௌந்தரபாண்டியன்
- இமாச்சல் நதியில் மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்ட காட்சி! (காணொளி )
- கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
| Posted: 11 Jun 2014 01:34 PM PDT பௌர்ணமி ஒரு முக்கியமான நாள். காரணம், அந்நாளில் நிலவு சுண்டியிழுக்கும் தன்மை நிறைந்ததாய் இருக்கும். நீங்கள் காணும் எந்த ஒரு பொருளும், அழகாய் இருந்தால் அதன்பால் உங்கள் கவனம் சற்றே அதிகமாகும் அல்லவா? இதுவே அசிங்கமாய் இருக்கும் ஒரு பொருளின் மீது நீங்கள் ஈர்க்கப்படுவது கிடையாது என்பதை கவனித்திருக்கிறீர்களா? நிலவிற்கு நம்மைச் சுண்டியிழுக்கும் குணமிருக்கும் அதே சமயத்தில், அதனால் நம் உள்வாங்கும் தன்மையையும் அதிகரிக்க முடியும். மற்றொரு விஷயம், இந்தப் பூமி, நிலவின் நிலையோடு ஒரு குறிப்பிட்ட நிலையில் அமைந்திருக்கும். நிலவின் ... |
| பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும்: யுனிசெப் Posted: 11 Jun 2014 01:30 PM PDT பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் மிருகத்தனமான பலாத்கார கொடூரங்களில், குற்றவாளிகளுக்கு எந்த பாரபட்சமும் இன்றி தண்டனை அளிக்க வேண்டுமென உத்தரபிரதேச சிறுமிகள் பலாத்கார சம்பவத்தை குறிப்பிட்டு யுனிசெப் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் ... |
| ரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக் - René-Théophile-Hyacinthe Laennec Posted: 11 Jun 2014 01:21 PM PDT ''டாக்டர்! எனக்கு நெஞ்சு வலிக்குது'' என்று கூறும் நோயாளியை ஓர் இடத்தில் படுக்கவைத்து அவரது மார்பில் காதைவைத்து இதயத் துடிப்பை ஒரு மருத்துவர் பரிசோதித்தால், அந்த நோயாளிக்கு எவ்வளவு அசௌகரியமாக இருக்கும்? அந்த மாதிரியான ஓர் சூழ்நிலையை நோயாளிகள் எப்படி எதிர்கொள்வர்? இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைதான் 1816-ம் ஆண்டு வரை நிலவி வந்தது. கூச்சத்தால் நெளிந்த நோயாளிகளுக்கும், இதயத் துடிப்பை சரிவரக் கேட்க முடியாது தவித்த மருத்துவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஒரு கருவியை வடிவமைத்தவர்தான் ரானே தியோஃபிலி ஹயாசிந்த் ... |
| Posted: 11 Jun 2014 01:15 PM PDT முன்னொரு காலத்தில் பறவைகளில், சேவல்களே உயரமாகப் பறக்கும் ஆற்றல் உடையனவாக இருந்தன. அந்தச் சேவல்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாக "சிலுக்கு' என்ற சேவல் இருந்தது. ஒரு தடவை பறவைகளிடையே, யார் மிக உயரமாகப் பறப்பவர் என்ற போட்டி ஏற்பட்டது. போட்டியில் கலந்து கொள்ள சிலுக்கு வந்தது. கம்பீரமாக நின்று சுற்றும்,முற்றும் பார்த்து, நெஞ்சை நிமிர்த்தி, சிறகுகள் அகல விரித்து, உயரே எழுந்து பறந்து முதலிடம் பெற்றது. பறவைகள் அனைத்தும் அதை பாராட்டின. சிவப்பு நிறத் தொப்பி சிலுக்குக்கு அணிவிக்கப் பட்டது. வெற்றி ... |
| Posted: 11 Jun 2014 01:12 PM PDT காட்டு விலங்குகளுக்கெல்லாம் தலைவரான காட்டு ராஜா சிங்கம் ஒருநாள் முள்ளம்பன்றியைக் கொன்றது. அதற்கு கடுமையான பசியாய் இருந்ததால், மிக விரைவாய் அதை உண்டது. உண்ணும்போது ஒரு முள் அதன் தொண்டையில் சிக்கிக் கொண்டது. அந்த முள்ளை அதனால், விழுங்கவும் முடியவில்லை; வெளியே தள்ளவும் இயலவில்லை. அந்த முள்ளை எப்படியாவது வெளியே துப்பிவிட வேண்டும் என எண்ணியது. இருமிப் பார்த்தது. இடி முழக்கம் போல் கர்ஜனை செய்தது. தலையைப் பலமாக ஆட்டி அசைத்துப் பார்த்தது. அந்த முள் இன்னும் ஆழமாகத் தொண்டையில் இறங்கியது. கொஞ்சமும் ... |
| மருதநாயகம் படம் எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கப்படலாம்- கமல்ஹாசன் Posted: 11 Jun 2014 01:10 PM PDT தன் கனவுப் படைப்பான மருதநாயகம் படத்தை எப்போது வேண்டுமானாலும் புதிப்பிக்க தான் காத்திருப்பதாக, நடிகர் கமல்ஹாசன் 'தி இந்து' டிவிட்டர் பக்கத்தில் கேள்விக்கு பதிலளிக்கையில் கூறி உள்ளார். 'தி இந்து' ஆங்கில நாளிதழின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அவர்கள் தொடுத்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். கடந்த மாதம் நடந்த கேன்ஸ் விழாவில் முதன்முறையாக பங்கேற்றது குறித்த அனுபவத்தை ட்விட்டர் வாசகர்களுடன் பகிர்ந்த கொண்ட கமல், தனது பல வருடக் கனவுப் படைப்பான ... |
| Posted: 11 Jun 2014 01:07 PM PDT மண்டியா தேசத்தை ஒரு ராஜா ஆண்டு வந்தார். அவரிடம் ஒரு மந்திரி வேலை பார்த்தார். ராஜா என்றால் சும்மாவா? ரத கஜ துரபதிகளுடன் எல்லா ராஜாக்களையும் போல அரண்மனை அரச சபையில் இருந்துகொண்டே, "மந்திரியாரே... நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதா?" என்று கேட்பார். உடனே மந்திரியும், "அப்படியே மன்னா..." என்று கூவுவார். ஆனால் இருவருமே அரண்மனையை விட்டு வெளியே போனதில்லை. வெளியே வெயிலடிக்கிறதா, மழை பெய்கிறதா என்றுகூடத் தெரியாது. ஏனெனில் ராஜா ஏற்கெனவே ஒரு உத்தரவு போட்டிருந்தார். மந்திரி எப்போதும் அவரைத் தனியே ... |
| சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Posted: 11 Jun 2014 01:00 PM PDT புதுடில்லி: நாட்டிற்கான வளர்ச்சியை முன்னிறுத்தி, பிரதமர் நரேந்திரமோடியால் தீட்டப்பட்ட திட்டங்களை அடிப்படையாக கொண்ட ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து, அத்திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்து அமைச்சரகங்களும் மும்முரமாக இறங்கி உள்ளன. நாட்டின் 16வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். இந்த உரை, மோடியின் வளர்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஜனாதிபதியின் உரை வாசிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, திட்டங்களை உடனடியாக ... |
| உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள்: இந்திய நேரப்படி அட்டவணை Posted: 11 Jun 2014 12:58 PM PDT நாளை பிரேசிலில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் துவங்குகின்றன. முதல் போட்டியில் பிரேசில், குரேசியா அணிகள் மோதுகின்றன. 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிவுகள் மற்றும் அணிகள் விவரம் வருமாறு: ஆட்டம் நடைபெறும் இந்திய நேர விவரம்: ஜூன் 13: பிரேசில்-குரேஷியா (அதிகாலை 1.30) ஜூன் 13: மெக்ஸிகோ-கேமரூன் (இரவு 9.30) ஜூன் 14: ஸ்பெயின்-நெதர்லாந்து (அதிகாலை 12.30) ஜூன் 14: சிலி-ஆஸ்திரேலியா (அதிகாலை 3.30) ஜூன் 14: கொலம்பியா-கிரீஸ் (இரவு 9:30) ஜூன் 15: உருகுவே-கோஸ்டா ... |
| Posted: 11 Jun 2014 12:54 PM PDT நிலா டீச்சர் ஊரில் ஒரு வாரமாகக் கடுமையான மழை. ஊரெல்லாம் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால் கொதிக்கவைத்து, ஆறவைத்த நீரையே குடிக்குமாறு சுகாதாரத் துறை பிரச்சாரம் செய்தது. நிலா டீச்சர் வீட்டிலும் கொதிக்க வைத்த குடிநீர்தான். ஆனால், கவினுக்கு அதைக் குடிக்கவே பிடிக்கவில்லை. "அம்மா! கொதிக்க வைத்த தண்ணி சப்புன்னு இருக்கு. தண்ணி குடிச்ச மாதிரியே இல்ல. நான் கொதிக்க வைக்காத தண்ணியே குடிக்கிறேன், கொதிக்க வைச்ச தண்ணி வேணாம்" என்று அடம்பிடித்தான். "டேய்! ரோடெல்லாம் மழை தண்ணி ... |
| நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாள்: ஜூன் 12, 1964 Posted: 11 Jun 2014 12:51 PM PDT நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, 'கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. ... |
| குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்: ஜுன் 12, 2002 Posted: 11 Jun 2014 12:51 PM PDT குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜுன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. ... |
| தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்: ஜுன் 11, 1995 Posted: 11 Jun 2014 12:50 PM PDT பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். இவருடைய பெற்றோர் துரைச்சாமியார்-குஞ்சம்மாள் ஆவர். தொடக்க கல்வியை சேலத்திலும், ஆத்தூரில் பயின்ற இவர், பட்டப்படிப்பை சேலத்தில் பயின்றார். பயின்ற காலத்திலேயே பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும்போது கமலம் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 1995-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இதே நாளில் ... |
| Posted: 11 Jun 2014 11:55 AM PDT உலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் – எந்த சாதனமும் தேவையில்லை! Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம். இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்கு Street View என்று சொல்லப்படும் 360 degree 3d image View வசதி இதில் இல்லை. 360 degree 3d image View என்பது ஒரு இடத்தை நாம் நேரில் சென்று பார்த்தால் நமது கண்களுக்கு எப்படி தெரியுமோ அதே போன்று நமக்கு தேவைப்படும் இடத்தை அந்த இடத்திற்கு செல்லாமலே ... |
| Posted: 11 Jun 2014 11:50 AM PDT ![]() |
| Posted: 11 Jun 2014 11:44 AM PDT சிறகு பூட்டிக் கொள்ளவும் இறகு தரித்துக் கொள்ளவும் எப்போதும் மனம் இடைவெளிகொண்டு ஏங்கியதில்லை இண்டு இடுக்குகளில் கூட இட்டு நிரப்பும் ஏக்கம் துறந்து சிறகெதற்கு?...இறகெதற்கு?... இந்தக் கேள்வி எழுந்து நின்று எப்படியேனும் நம் உதடுகளைப் பிரித்துப் பிடித்தேனும் பேச வைத்துவிடும் கலவையாக பெரும்பாலும் உளமார பிரியத்தில் இளைப்பாற நட்பு-காதல்-காமம்-காற்று-கானம்-மண்-மழை யதார்த்தம்-உன்மத்தம்-உயர் மோனம்-வளர் ஞானம் விஞ்ஞானம்-அஞ்ஞானம்-மெய்ஞானம் இவற்றில் எதன் பக்கம்தான் இல்லை சிறகும் இறகும் ஆம் சிறகும் ... |
| திருமயம் கோட்டைக் காட்சிகள் – முனைவர் சு. சௌந்தரபாண்டியன் Posted: 11 Jun 2014 11:42 AM PDT திருமயம் கோட்டைக் காட்சிகள் – முனைவர் சு. சௌந்தரபாண்டியன் புதுக்கோட்டையை அடுத்த திருமயம் என்ற ஊரில் கோட்டை ஒன்று உள்ளது ! இக் கோட்டை கி.பி.1687இல் இராமநாதபுரம் மன்னர் விஜய இரகுநாத சேதுபதியால் கட்டப்பட்டது ! வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை இங்கிருந்துதான் ஆங்கிலேயர் கைதுசெய்தனர்! 8-6-2014அன்று நாங்கள் அவ்வழியாகப் போனபோது எடுத்த காட்சிகள் !:- கோட்டைமுன் ஆகாயத்தைத் தழுவிநிற்கும் மரம் மலைவேம்பு ! |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 11 Jun 2014 11:17 AM PDT ![]() |
| பிள்ளையார்பட்டிக் கோயிற் காட்சிகள் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன் Posted: 11 Jun 2014 11:14 AM PDT பிள்ளையார்பட்டிக் கோயிற் காட்சிகள் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன் 1300 ஆண்டுகளுக்கு முன் மலையச் சிறிது குடைந்து கட்டப்பட்ட 'கற்பக விநாயகர்' கோயில் சிவகங்கை மாவட்டப் பிள்ளையார்பட்டியில் உள்ளது! 9-6-2014 அன்று நாங்கள் அங்கு பார்த்த சில காட்சிகள் !:- இது சிறிய குன்றின்மீதுள்ள கோரக்கவிநாயகர் கோயில் !- குன்றின்மீதுள்ள கோரக்க விநாயகர் கோயிற் படிக்கட்டுகள் !- கோயிற் குளத்தில் மர நிழல்கள் !- கோபுரங்களும் குளமும் !- |
| Posted: 11 Jun 2014 11:04 AM PDT குளிர் காற்று சில்லென்று இருக்க எந்தவித சொரணையுமின்றி படுத்துக்கிடந்தான் தாமோதரன்.ஆரம்பத்தில் புதிய நாடு புதிய மொழி புதிய சூழல் அனைத்தும் அவனுக்குப் பிடித்திருந்தது் காலம் செல்லச் செல்ல அந்த நாட்டின்மேல் பிடிப்பற்றுப் போனது.இதற்குக் காரணம் அந்நாட்டவர்கள் தன்னை ஒரு அடிமை போன்று நடத்துவதுமாகும்.அடிக்கடி என்ன வாழ்க்ைகடா இது என வருந்திக் கொள்வான். வௌ்ளைக் காரனக்குப் பயந்து சலாம் போடுவதும் அவனது பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆட்பட்டு மனநோவதும் நாளாந்த ... |
| Posted: 11 Jun 2014 09:00 AM PDT கவிஞர் வாலி ஒரு பட்டிமன்றத்தில் தலைமையுரை ஆற்றிய போது இப்படித் தொடங்கினார். இது கவிக்கூட்டம்; இதற்குத் தலைவன் நான் வாலி! மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் சர்ச்சையாய் இருந்த காலகட்டம்! அவர் எந்தப் பக்கம்! 'மரபுக்கவிதைகள் அழியாத கோலங்கள் மற்றப் பாக்கள் - உதிரிப்பூக்கள்' பிறகு சினிமாவில் கேட்டபடியெல்லாம் பாட்டெழுதுகிறீர்களே என்னும் ஐயத்திற்கு, 'எது கைகொடுக்கும் என்று அறிந்தபின்னர் எதுகையைப் பற்றி நான் எண்ணுவானேன்! மோனைமுகம் பார்த்து முழங்கிட முயன்றிட்டால் பானைமுகம் பார்த்து ... |
| தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... Posted: 11 Jun 2014 08:21 AM PDT ![]() |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 11 Jun 2014 08:20 AM PDT ![]() |
| இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Posted: 11 Jun 2014 07:54 AM PDT ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது. சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ... |
| Posted: 11 Jun 2014 07:36 AM PDT ரெஸ்லிங் போட்டிகளைப் பார்த்திருக் கிறீர்களா? மாமிச மலை உடல்களோடு, வன்மம் நிறைந்த கண்களோடு முரட்டுத்தனமாக இருவர் மோதிக்கொள்ளும் போட்டி அது. கூடியிருக்கும் ரசிகர்கள், 'அவனைத் தூக்கிப் போட்டு மிதி', 'ஏறி மிதிச்சு கழுத்தை உடை' என்றெல்லாம் தங்கள் ஸ்டார்களுக்கு ஆதரவாக அலறுவார்கள். அத்தனை ரணகள போட்டி. அப்படிப்பட்ட போட்டியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இது... கடந்த ஏப்ரலில், அமெரிக்காவில் நடந்த 'ரெஸ்லிங்மேனியா ட்ரிபிள் எக்ஸ்' போட்டியில் தன் போட்டியாளரைப் பொளந்துவிட்டுப் பட்டத்தை வென்ற கையோடு ரெஸ்லிங் ... |
| Posted: 11 Jun 2014 07:32 AM PDT அன்பு நிறைந்த வாழ்வினில் அமைதி என்றும் குடியிருக்கும் இன்பம் என்பது தூரமில்லை உன்னில் உள்ளது உண்மையடா! பண்பில் சிறந்த மனிதர்க்கு பணமும் பதவியும் பெரிதில்லை உண்மை வாய்மை மெய்ம்மையென்று வாழ்வோர் நிழலில் இடரில்லை கள்ளம் நிறைந்த உள்ளத்தினில் கரவும் பொய்யும் உறைந்திருக்கும் எள்ளளவும் உதவா வாழ்க்கையது எவருக்கும் அதனால் பயனுண்டோ? நேர்மை வழியில் செல்பவர்க்கு நித்தமும் துன்பங்கள் சூழ்ந்திடுமே சூரியனைக் கண்ட குளிர்பனிபோல தோன்றிய இருளும் மறைந்திடுமே இல்லார் வாழ்வில் ஒளியேற்றும் இலக்கை ... |
| Posted: 11 Jun 2014 07:23 AM PDT நண்பர்களே லைப்டைம் அவாஸ்ட் ஆன்டிவைரஸ் பயன்படுத்தி வந்தேன்.சிஸ்டம் ஹெங் ஆனதால் அன்இன்ஸ்டால் செய்துவிட்டு திரும்ப இன்ஸ்டால் செய்தால் ஆகவில்லை, வேறு நல்ல ஆன்டிவைரஸ் (அவாஸ்ட், அவிரா, நோடு32 )இருந்தால் லிங்க் கொடுங்கள் நண்பர்களே. நன்றி |
| Posted: 11 Jun 2014 06:45 AM PDT பதிவே பேசு சித்திரம் பேசுதடி என்று சொன்னார்கள் அப்படியானால் பேசு பதிவே பேசு வண்ண வண்ண பழங்கள் கண் பசி தீர்க்கின்றனவா? இல்லாவிடில் பசியை தூண்டி வேடிக்கை பார்க்கின்றனவா? அல்லது ஓவியத்துப்பின் மறைந்துள்ள ஓவியரின் ரசனையை காட்டுகின்றனவா? பல கண் காணும் பதிவே புலமை நிறைந்த இவ்விடத்தில் பணிவோடு கேட்கிறேன் கூறு |
| Posted: 11 Jun 2014 05:23 AM PDT - கொஞ்சமாய் கொஞ்ச கொலுசு...! கழுத்தை முத்தமிட நெக்லஸ்..! வெண்டை விரலுக்கு வெள்ளைக்கல் மோதிரம்..! உடம்பை ஸ்பரிசிக்க சுடிதார்..! - என்ன வேண்டுமென பிறந்த நாளுக்கு கேட்டிருந்தேன்... கடிதத்தில் ரகசியமாய்... - எல்லாவற்றையும் அடித்துவிட்டு ஏழுதியிருந்தாள்...! ஒற்றை எழுத்தில் சின்னதாய்..! நீ..! - ---------------------------- >ஆர்.சத்தியன் (எழுத மறந்த கவிதை) |
| Posted: 11 Jun 2014 04:54 AM PDT - இரவு, பகல் வெயில் மழை எதையும் யோசிக்காது உயரமான மரக்கிளையில் கூடுகட்டி முட்டையிட்ட பறவை அமைதி\யாய் மனிதனுக்குச் சொல்லும் எவ்விதத்திலும் நம்பிக்கையை..! - ------------------ >ஆர்.சத்தியன் (எழுத மறந்த கவிதை) |
| Posted: 11 Jun 2014 04:34 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| காளையார்கோயில் காட்சிகள் – முனைவர் சு. சௌந்தரபாண்டியன் Posted: 11 Jun 2014 04:23 AM PDT காளையார்கோயில் காட்சிகள் – முனைவர் சு. சௌந்தரபாண்டியன் 1801 அக்டோபர் 24இல் திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டவர்கள் மருது சகோதரர்கள் ;பின் காளையார்கோயில் கோபுரத்தின் முன்பாக அடக்கம் செய்யப்பட்டனர் ! அந்த வீர மருதிருவர் கட்டியதே காளையார்கோயில் ! சங்க இலக்கியத்தில் 'கானப்பேரெயில்' என்றும் , 'ஏறை' என்றும் குறிப்பிடப்படுவது காளையார்கோயில் ! காளையார்கோயில் கோபுரத்தைக் காப்பதற்கே படையெடுத்துவந்த அக்னியூவுக்கு எதிர்ப்புத் தராமல் 78000 படைவீரர்களுடன் இரவோடு இரவாக நகரைவிட்டு மருது ... |
| இமாச்சல் நதியில் மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்ட காட்சி! (காணொளி ) Posted: 11 Jun 2014 03:23 AM PDT ஹைதராபாத் நகரைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஹிமாசலப் பிரதேசத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றனர். அப்போது பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி மாணவர்கள் 24 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அமர் உஜாலா என்ற இணையத்தில் பிரத்யேகக் காட்சிகளாக இந்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆற்றின் நடுவில் உள்ள பாறைகளில் நின்று கொண்டு மாணவர்கள் புகைப்படம் எடுப்பதும், அடுத்த சில நொடிகளில் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, ... |
| Posted: 11 Jun 2014 01:19 AM PDT 100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள் கேழ்வரகில் 'மித்தியானைன்' என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த 'மித்தியானைன்' புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது. பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



