மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- முஸ்லிம் தலைவர்கள் மூலம் இந்தியர்களை மீட்க முடிவு: ராஜ்நாத்சிங்
- ஆந்திராவில் செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
- ரெயில் கட்டண உயர்வுக்கு கண்டனம்: கேரளாவில் ரெயில் மறியல்
- அபினை காய்ச்சி, சாறாக கடத்திய பலே ஆசாமி கைது
- புத்தர் உபதேசித்த சாரநாத்தில் போதி மரம் முறிந்து விழுந்தது
- மிக அரிய பிறப்பு குறைபாடு மருத்துவ ஆய்வில் கண்டுபிடிப்பு
- இணையதள உபயோகத்திற்கு அடிமையானவர்களை மீட்கும் முதல் ஆலோசனை மையம்
- மின்சாரமில்லாமல் ஓடும் வாஷிங்மெஷின்: மொபைல் போனையும் சார்ஜ் செய்யும்
- பீகாரில் மூளை வீக்கத்தால் உயிரிழக்கும் குழந்தைகள்: மருத்துவ உதவிக்கு மத்திய அரசு உறுதி
- ரெயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: டிக்கெட் எடுக்காமல் ரெயில் பயணம்
- ஆந்திராவில் மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய கணவன் கைது
- ரெயில் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவேன்: உத்தவ் தாக்கரே
- ரெயில் கட்டணம் உயர்வை தொடர்ந்து சமையல் கியாஸ் விலை மாதம் ரூ.10 உயர்வா?
- பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி பிரதமர் மோடியை சந்தித்தார்
- குடியரசு தலைவர் பதவிக்கு தகுதியானவர் அத்வானி: கட்காரி பேட்டி
- ரெயில் கட்டண உயர்வு கடினமானது... ஆனால் சரியான முடிவு: ஜெட்லி
- பீகாரில் மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
- கேரளா ஜெயில் கைதிகள் புகைப்பிடிக்க தடை
- ஈராக்கின் நஜப் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தவிப்பு: புதிய தகவல்
- வாஜ்பாய் பிறந்தநாளில் திறப்பு விழா காணும் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை
| முஸ்லிம் தலைவர்கள் மூலம் இந்தியர்களை மீட்க முடிவு: ராஜ்நாத்சிங் Posted: 21 Jun 2014 10:23 PM PDT ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கி பணய கைதிகளாக இருக்கும் இந்தியர்களை மீட்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி மூத்த மந்திரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன, அவசர ஆலோசனை நடத்தினார். இதில் இந்தியர்களை மீட்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயப்பட்டது. இந்தியாவுக்கும் அரேபியாவுக்கும் இடையே நல்லுறவு இருப்பதால் அரேபியாவின் உதவியை இந்தியா நாடியது. மேலும் சன்னி பிரிவு முஸ்லிம் |
| ஆந்திராவில் செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி Posted: 21 Jun 2014 10:06 PM PDT ஆந்திர மாநிலம் சித்தூர் கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்கள் அதிகளவில் உள்ளன. கடத்தல்காரர்கள் இந்த மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். அதை தடுக்க முயன்ற வனத்துறை அதிகாரிகள் |
| ரெயில் கட்டண உயர்வுக்கு கண்டனம்: கேரளாவில் ரெயில் மறியல் Posted: 21 Jun 2014 09:34 PM PDT மத்திய அரசு சமீபத்தில் ரெயில் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு ரெயில் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளது. ரெயில் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர் |
| அபினை காய்ச்சி, சாறாக கடத்திய பலே ஆசாமி கைது Posted: 21 Jun 2014 08:59 PM PDT கொடிய போதைப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் அபின், வலியை முற்றிலுமாக மறக்கடிக்க செய்யும் வகையில் செயலாற்றும் சக்தி கொண்டது என்பதால் உலகெங்கிலும் கோடிக் கணக்கான போதைப் பிரியர்கள் அபினின் வீரியமான போதைக்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். ஆசியா கண்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெருமளவுக்கு பயிரிடப்படும் அபினின் அறுவடை தரும் பணப் பலனால் தான் அங்குள்ள தீவிரவாத இயக்கங்கள் ஆயுதங்களை வாங்கி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி கொன்று குவித்து வருகின்றன. |
| புத்தர் உபதேசித்த சாரநாத்தில் போதி மரம் முறிந்து விழுந்தது Posted: 21 Jun 2014 08:30 PM PDT மன்னர் வம்சத்தில் சித்தார்த்தனாக பிறந்து புத்த மதத்தை தோற்றுவித்தவர், கவுதம புத்தர். கயாவில் உள்ள போதி என்ற இடத்தில் ஒரு மரத்தின் கீழ் 49 நாட்கள் தவம் இருந்து ஞானம் பெற்ற புத்தப் பெருமான், உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டம், சாரநாத் என்ற இடத்தில் தனது பிரதம சீடர்கள் ஐவருக்கு 'தர்ம சக்கரம்' என்னும் ஞான உபதேசத்தை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் போதித்தார். |
| மிக அரிய பிறப்பு குறைபாடு மருத்துவ ஆய்வில் கண்டுபிடிப்பு Posted: 21 Jun 2014 08:08 PM PDT கருவில் சிசு உருவாகும்போது மூட்டுகள் இல்லாத ஒரு அரிய பிறழ்வென்பது பொதுவாக மூளை, சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க மண்டல தொடர்புடைய விஷயமாகக் கருதப்படுகின்றது. ஆனால் இதுபோன்ற பிற கோளாறுகள் எதுவும் காணப்படாத நிலையில் மூட்டுகள் அமைப்பு என்ற நிலை இல்லாதிருப்பது உலகத்திலேயே மிகவும் அரிய குறைபாடாகக் கருதப்படுகின்றது. |
| இணையதள உபயோகத்திற்கு அடிமையானவர்களை மீட்கும் முதல் ஆலோசனை மையம் Posted: 21 Jun 2014 08:01 PM PDT எந்த ஒரு நிகழ்வுமே மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரையில் மட்டுமே அவனால் அதனைத் திறம்பட செயலாற்றமுடியும். அதுவே அவனது கட்டுப்பாட்டையும் மீறி நேரம், காலம் இல்லாமல் ஒரு செயலிலேயே மூழ்கியிருந்தால் அது அவனை ஆட்கொள்ளத் துவங்குகின்றது. இணையதள பயன்பாடுகள் வெளித் தெரிந்தபோது இருக்கும் இடத்திலிருந்தே உலக நடப்புகள் முழுவதையும் அறியும் வியப்பு மனிதனுக்கு ஏற்பட்டது. |
| மின்சாரமில்லாமல் ஓடும் வாஷிங்மெஷின்: மொபைல் போனையும் சார்ஜ் செய்யும் Posted: 21 Jun 2014 05:06 PM PDT வாரணாசியை சேர்ந்த இரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் மின்சாரமில்லாமல் ஓடும் வாஷிங்மெஷினை உருவாக்கியுள்ளனர். அதே மெஷினை பயன்படுத்தி மொபைல் சார்ஜ் செய்யமுடியும் என்பது சிறப்பம்சமாகும். தாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது தங்களது வீட்டில் தாயார் துணி துவைப்பதை பார்த்த இவர்கள் இருவரும், இந்த எளிய மற்றும் செலவு |
| பீகாரில் மூளை வீக்கத்தால் உயிரிழக்கும் குழந்தைகள்: மருத்துவ உதவிக்கு மத்திய அரசு உறுதி Posted: 21 Jun 2014 04:44 PM PDT பீகாரில் உள்ள முசார்பர்பூர் மாவட்டத்தில் மூளை வீக்கம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 107 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலம் முழுவதும் இதுவரை 130 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இந்நோய் பாதிப்பிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். |
| ரெயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: டிக்கெட் எடுக்காமல் ரெயில் பயணம் Posted: 21 Jun 2014 04:39 PM PDT ரெயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் நூதன போராட்டத்தை மராட்டிய மாநில காங்கிரசார் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக கட்சி தலைவர் மாணிக்ராவ் தாக்ரே கூறுகையில், ரெயில் கட்டண உயர்வை கண்டித்து நானும் தொண்டர்களும் (திங்கட்கிழமை) |
| ஆந்திராவில் மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய கணவன் கைது Posted: 21 Jun 2014 04:14 PM PDT ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோபாவரம் மண்டலத்திற்குட்பட்ட கும்மலடோடி கிராமத்தில் மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த எட்டு வருடங்களுக்கு முன் சுப்புலட்சுமி (25) என்ற அந்த பெண்ணுக்கும், கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவரான ஸ்ரீநிவாஸ்(30) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாள் முதல் |
| ரெயில் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவேன்: உத்தவ் தாக்கரே Posted: 21 Jun 2014 01:43 PM PDT மத்திய அரசு ரெயில் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு வெளியிட்டது. இதில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன், உடனடியாக கட்டண உணர்வை திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த கட்டண உயர்வை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. |
| ரெயில் கட்டணம் உயர்வை தொடர்ந்து சமையல் கியாஸ் விலை மாதம் ரூ.10 உயர்வா? Posted: 21 Jun 2014 12:41 PM PDT இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறி இருந்தார். அந்த கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாக, ரெயிலில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் மத்திய அரசு நேற்று முன்தினம் திடீரென்று உயர்த்தியது. மேலும் மின்சார |
| பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி பிரதமர் மோடியை சந்தித்தார் Posted: 21 Jun 2014 10:18 AM PDT பீகார் முதல் மந்திரி மந்திரியாக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது அம்மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். தங்கள் மாநிலத்திற்கு இச்சலுகை வழங்கப்பட்டால், முதலீடுகளை பெற பெரிதும் உதவிகரமாக இருக்குமென்றும், புதிய வேலைவாய்ப்புகளை |
| குடியரசு தலைவர் பதவிக்கு தகுதியானவர் அத்வானி: கட்காரி பேட்டி Posted: 21 Jun 2014 09:24 AM PDT பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை குடியரசுத் தலைவர் ஆக்க வேண்டும் என்றும், அதுவே அவரது அந்தஸ்துக்கு சரியான பதவியாக இருக்கும் என மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:- |
| ரெயில் கட்டண உயர்வு கடினமானது... ஆனால் சரியான முடிவு: ஜெட்லி Posted: 21 Jun 2014 05:55 AM PDT பயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு ரயில் கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டு, 25-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன் கட்டண உயர்வை திரும்ப பெறவும் வலியுறுத்தி வருகின்றன. |
| பீகாரில் மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி Posted: 21 Jun 2014 05:19 AM PDT பீகாரில் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பாகல்பூரில் உள்ள மங்காசக் என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. தியோநந்தன் யாதவ், சிவ்நந்தன் யாதவ், யுகல் யாதவ் ஆகிய 3 பேரும் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இடி- மின்னலுடன் கடும் மழை பெய்தது. |
| கேரளா ஜெயில் கைதிகள் புகைப்பிடிக்க தடை Posted: 21 Jun 2014 05:14 AM PDT பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் வகையில் கேரளாவில் உள்ள ஜெயில்களிலும் புகை பிடிக்க தடை வருகிறது. இதுகுறித்து கேரளா மாநில சிறைத்துறை டி.ஜ.பி. ஜெயில்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிள்ளார். அதில் ஜெயில் கைதிகள் புகைப்பிடிப்பதை கட்டாயம் தடுக்க வேண்டும் எனறு வலியுறுத்தியுள்ளார். |
| ஈராக்கின் நஜப் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தவிப்பு: புதிய தகவல் Posted: 21 Jun 2014 05:06 AM PDT உள்நாட்டுப் போரால் நெருக்கடியில் உள்ள ஈராக்கில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உயர்மட்ட அளவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வன்முறை பகுதிகளில் இருந்து 16 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், நஜப் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களிடம் இந்தியாவில் உள்ள சர்வதேச பொது மன்னிப்பு சபை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பாஸ்போர்ட்டுகளை திருப்பிக் கொடுக்க |
| வாஜ்பாய் பிறந்தநாளில் திறப்பு விழா காணும் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை Posted: 21 Jun 2014 03:47 AM PDT பாட்னாவில் கட்டப்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ் மருத்துவமனை) வாஜ்பாய் பிறந்தநாளன்று திறக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் தெரிவித்தார். எய்ம்ஸ் கட்டுமானப் பணியை இன்று ஆய்வு செய்த ஹர்சவர்தன், மருத்துவமனை பேராசிரியர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |