மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக 8-ந்தேதி மங்களகிரியில் பதவியேற்பு
- திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரியை மண்எண்ணை ஊற்றி உயிருடன் எரித்த தோழி
- கேரளாவுக்கு மரம் வெட்ட செல்வதாக ஏமாற்றி திருப்பதிக்கு அழைத்து சென்ற புரோக்கர்
- திருவனந்தபுரம் அருகே 9 வயது மகனை கொன்று தாய்–தந்தை தற்கொலை
- காளஹஸ்தி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 5 பெண்கள் சாவு
- மும்பையில் காரில் இளம்பெண் கற்பழிப்பு
- பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை: தந்தை பதவியை பறித்த பா.ஜனதா பெண் எம்.பி.
- கோடை விடுமுறை முடிந்ததால் திருப்பதி கோவிலில் கூட்டம் குறைந்தது
- மராட்டிய சட்டசபை தேர்தல்: சிவசேனா கட்சி முதல்-மந்திரி வேட்பாளர் உத்தவ்தாக்கரே
- சந்திரசேகரராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- தெலுங்கானா கவர்னராக நரசிம்மன் நியமனம்
- ராஜஸ்தானில் 10 பைசாவுக்கு 1 லிட்டர் குடிநீர் விற்பனை
- ரெயில் கட்டண உயர்வு குறித்து பிரதமருடன் ஆலோசித்து முடிவு: சதானந்த கவுடா பேட்டி
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: அருண் ஜெட்லி தகவல்
- ஐ.பி.எல். வெற்றி: கொல்கத்தா அணிக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து
- புதுத் தெலுங்கானா மாநிலத்துக்கு மன்மோகன் சிங் வாழ்த்து
- குஜராத்: வறுமை வாட்டியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
- ஊடக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மோடி அரசு துணை நிற்கும்: மந்திரி பேச்சு
- சார்க் தலைவர்களை அழைத்ததன் மூலம் உலகுக்கு சேதி சொன்னோம்: மோடி
- பிரதமர் அலுவலக பேஸ் புக் பக்கம் சாதனை: 4 நாளில் 11 லட்சம் பேர் ஆதரவு
| சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக 8-ந்தேதி மங்களகிரியில் பதவியேற்பு Posted: 01 Jun 2014 11:55 PM PDT ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு நடந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வெற்றி பெற்றது. அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் புதிய மாநிலமான தெலுங்கானா முதல்–மந்திரியாக இன்று பதவியேற்றார். சீமந்திரா பகுதியில் நடந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்குதேசம் அமோக வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபுநாயுடு முதல்–மந்திரியாக வருகிற 8–ந் தேதி பதவியேற்கிறார். |
| திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரியை மண்எண்ணை ஊற்றி உயிருடன் எரித்த தோழி Posted: 01 Jun 2014 11:23 PM PDT திருவனந்தபுரம் அருகே பரவூரில் கன்னியாஸ்திரிகள் படிக்கும் மடம் உள்ளது. இங்கு 9 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். பரவூர் பகுதியைச் சேர்ந்த டெல்பி (வயது 24) மற்றும் அவரது உறவினர் ரேச்சல் (21) ஆகியோரும் இந்த மடத்தில் தங்கி படித்து வந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு டெல்பி தனது அறையில் படுத்து |
| கேரளாவுக்கு மரம் வெட்ட செல்வதாக ஏமாற்றி திருப்பதிக்கு அழைத்து சென்ற புரோக்கர் Posted: 01 Jun 2014 11:03 PM PDT திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்திய கும்பல் 3 பேர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியாகினர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களை பற்றி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் 3 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா தானியர்கொள்ளை, அத்திமூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 25), சிவா (28), விஜயகாந்த் (25) என தெரியவந்தது. பலியானவர்களின் குடும்பத்தாருக்கு திருப்பதி போலீசார் தகவல் |
| திருவனந்தபுரம் அருகே 9 வயது மகனை கொன்று தாய்–தந்தை தற்கொலை Posted: 01 Jun 2014 11:00 PM PDT திருவனந்தபுரம் அருகே காஞ்சாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தம்பான், (வயது 50). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பத்மினி (45). இந்த தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. பிறகு கார்த்திக் என்ற ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு தற்போது 9 வயது. நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்த |
| காளஹஸ்தி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 5 பெண்கள் சாவு Posted: 01 Jun 2014 10:50 PM PDT ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் வெலம்பாடு கிராமத்துக்கு அருகில் சொர்ணமுகி சோமசீலா கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்க்கு அருகில் ஒரு கல்குவாரிக்கு சொந்தமான குட்டை இருக்கிறது. அந்த குட்டையில் கழுத்தளவுக்கு தண்ணீர் நிரம்பி கிடக்கிறது. வெலம்பாடு கிராமத்தை சேர்ந்த வெங்கடசுப்பையாவின் மகள் போலம்மா (வயது 16), குருவய்யா என்பவர் மகள் மகாலட்சுமி (11), வெங்கடரமணய்யாவின் மகள் லட்சுமி (17), மற்றொரு குருவய்யாவின் |
| மும்பையில் காரில் இளம்பெண் கற்பழிப்பு Posted: 01 Jun 2014 10:42 PM PDT மும்பை தானே மாவட்டம் பியாண்டர் ரெயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், ''உங்களுக்கு கார் தேவையா?'' என்று கேட்டார். அதற்கு அந்த பெண் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். |
| பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை: தந்தை பதவியை பறித்த பா.ஜனதா பெண் எம்.பி. Posted: 01 Jun 2014 10:33 PM PDT பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை: தந்தை பதவியை பறித்த பா.ஜனதா பெண் எம்.பி. |
| கோடை விடுமுறை முடிந்ததால் திருப்பதி கோவிலில் கூட்டம் குறைந்தது Posted: 01 Jun 2014 10:30 PM PDT கோடை விடுமுறை யொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இலவச தரிசனம் செய்ய பக்தர்கள் 26 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நடந்து சென்ற பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளதால் திருப்பதியில் கூட்டம் குறைய தொடங்கி உள்ளது. நேற்று விடுமுறை நாள் |
| மராட்டிய சட்டசபை தேர்தல்: சிவசேனா கட்சி முதல்-மந்திரி வேட்பாளர் உத்தவ்தாக்கரே Posted: 01 Jun 2014 10:23 PM PDT மராட்டிய சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே தான் முதல்–மந்திரி வேட்பாளர் என்று சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரசைச் சேர்ந்த பிருதிவிராஜ் சவான் முதல்–மந்திரியாக இருந்து வருகிறார். அங்கு சட்ட சபைக்கு வருகிற அக்டோபர் மாதம் தேர்தல் நடக்கிறது. அங்கு முதல்–மந்திரி பதவியை பிடிக்க கட்சிகளிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் இந்த முறை முதல்–மந்திரி பதவி தங்கள் கட்சிக்கு வேண்டும் என்று கூறியுள்ளது. |
| சந்திரசேகரராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து Posted: 01 Jun 2014 10:16 PM PDT தெலுங்கானா முதல்– மந்திரி சந்திரசேகரராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 29–வது புதிய மாநிலமாக தெலுங்கானா இன்று உதயமானது. அதன் முதலாவது முதல்–மந்திரியாக கே.சந்திரசேகரராவ் பதவி ஏற்றார். அவருடன் 11 மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொண்டனர். சந்திரசேகரராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருப்பதாவது:– |
| தெலுங்கானா கவர்னராக நரசிம்மன் நியமனம் Posted: 01 Jun 2014 09:53 PM PDT தெலுங்கானா மாநிலம் உதயமானதைத் தொடர்ந்து அதன் முதலாவது கவர்னராக நரசிம்மன் நியமிக்கப்பட்டார். இவர் ஆந்திர கவர்னராக இருக்கிறார். தெலுங்கானா கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத் ராஜ்பவனில் தெலுங்கானா கவர்னராக பதவி ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் முதல்–மந்திரி சந்திரசேகரராவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். |
| ராஜஸ்தானில் 10 பைசாவுக்கு 1 லிட்டர் குடிநீர் விற்பனை Posted: 01 Jun 2014 09:49 PM PDT வசுந்தரா ராஜேசிந்தியா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பல இடங்களில் குடிநீர் உப்பாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் மிகுந்த குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பார்மர் மாவட்டத்தில் உள்ள 160 கிராமங்களில் சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இங்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. |
| ரெயில் கட்டண உயர்வு குறித்து பிரதமருடன் ஆலோசித்து முடிவு: சதானந்த கவுடா பேட்டி Posted: 01 Jun 2014 04:34 PM PDT மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக பெங்களூர் வந்துள்ளேன். ரெயில்வே துறை பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து வருகிறேன். நேற்று முன்தினம் தெற்கு ரெயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அதேபோல் தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை |
| விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: அருண் ஜெட்லி தகவல் Posted: 01 Jun 2014 02:31 PM PDT விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2-வது ஆண்டாக 5 சதவீதத்திற்கு கீழேயே தங்கிவிட்டது. 2013-14-ம் ஆண்டில் 4.7 சதவீதமாகவும், கடந்த ஆண்டின் 4-வது காலாண்டில் 4.6 சதவீதமாகவும் இருந்தது. இதற்கு காரணம் உற்பத்தி நலிவடைந்தது தான். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிதி மந்திரியாக பாரதீய ஜனதாவின் அருண் ஜெட்லி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஒரு வாரமாக அவர் தனது அலுவலகத்தில் பணிகளை கவனித்த பின்னர், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் பொருளாதார நிலைமை மற்றும் விலைவாசி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். |
| ஐ.பி.எல். வெற்றி: கொல்கத்தா அணிக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து Posted: 01 Jun 2014 01:44 PM PDT ஐ.பி.எல். கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ள 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ்' கிரிக்கெட் அணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஏழாவது ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியுடன் மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது. |
| புதுத் தெலுங்கானா மாநிலத்துக்கு மன்மோகன் சிங் வாழ்த்து Posted: 01 Jun 2014 01:22 PM PDT நாட்டின் 29-வது மாநிலமாக இன்று உதயமாகும் தெலுங்கானா மாநிலத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மனுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், 'புதிய மாநிலத்தின் மக்கள் ஒளிமயமான எதிர்காலத்தையும், நீடித்த வளத்தையும் பெற |
| குஜராத்: வறுமை வாட்டியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை Posted: 01 Jun 2014 12:47 PM PDT வறுமையை சமாளிக்க முடியாமல் குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், அனந்த் மாவட்டம், பட்ரன் கிராமத்தி சேர்ந்த அரவிந்த் கோஹில்(42) கொத்தனாராக வேலை செய்து வந்தார். சில மாத காலமாக சரியாக வேலை கிடைக்காத காரணத்தால் குடும்ப செலவினங்களை சமாளிக்க முடியாமல் இவர் வறுமை நிலையில் வாடி வந்ததாக கூறப்படுகிறது. |
| ஊடக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மோடி அரசு துணை நிற்கும்: மந்திரி பேச்சு Posted: 01 Jun 2014 10:38 AM PDT ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு துணையாக இருக்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம், புனேவில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சங்க விழாவில் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:- பணி நிரந்தரம் செய்யப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு இணையாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். |
| சார்க் தலைவர்களை அழைத்ததன் மூலம் உலகுக்கு சேதி சொன்னோம்: மோடி Posted: 01 Jun 2014 10:21 AM PDT டெல்லியில் நடைபெற்ற 15-வது பிரதமரின் பதவி ஏற்பு விழாவுக்கு 'சார்க்' நாடுகளின் தலைவர்களை அழைத்ததன் மூலம் உலகுக்கு இந்தியா ஒரு சேதியை வெளியிட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமராக பதவியேற்ற பிறகு டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்துக்கு இன்று மாலை முதல் முறையாக சென்ற மோடி, அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். |
| பிரதமர் அலுவலக பேஸ் புக் பக்கம் சாதனை: 4 நாளில் 11 லட்சம் பேர் ஆதரவு Posted: 01 Jun 2014 08:06 AM PDT பிரதமர் நரேந்திர மோடி, மக்களை தொடர்புகொள்வதற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் மிகுந்த விருப்பம் காட்டி வருகிறார். அவர் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் அலுவலகத்துக்கு என அதிகாரபூர்வ 'பேஸ் புக்' பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மோடி, பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றும் படம் இடம்பெற்றிருக்கிறது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |