Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Posted: 14 Jun 2014 11:41 AM PDT

என்னதான் இருள்புயல் அடித்தாலும் கதிர்க் கிரண வாளெடுத்து அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும் சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும் நுண்ணறிவுப் புழைகளிலும் நூதனமாய் அமர்ந்து நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும் பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட ப்ரியம் தளர்வின்றி தலைகோதும் உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில் உயர்விவாசாயக் குணத்தோடு உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும் மழை கேட்டால் போதும் மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும் பால்வேறுபாடுகள் உடையும் பகைக்கூறுகள் ...

தொடரும் மின்வெட்டு! முதல்வரின் பொய்யான வாக்குறுதி!

Posted: 14 Jun 2014 11:02 AM PDT

கடந்த மாத இறுதியில் தமிழக முதல்வர் ஓர் இனிய அறிவிப்பைச் செய்தார். 'ஜூன் முதல் தேதி முதல் மின்வெட்டு முழுவதுமாக நீங்கும்.' அடுத்த வாரத்திலேயே பதிலடியாக டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார். 'முதல்வர் அறிவிப்புக்குப் பின்னர்தான் மின்வெட்டு அதிகமானது'... உண்மை நிலவரம் என்ன? தமிழகம் முழுதும் திரட்டிய 'ஷாக்' தகவல்கள் இவை... 'ஜூன் 1-ம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் மின்தடை முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும்' என்று எப்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்தாரோ, அதற்கு மறுநாளில் இருந்து மின்வெட்டு ...

பாலியல் பலாத்காரம்: 6 மாணவர்களுக்கு 1600 வருடங்கள் சிறைத்தண்டனை

Posted: 14 Jun 2014 10:44 AM PDT

15 வயது மாணவியை பாலியல் பலாத்காரக் செய்த 6 மாணவர்களுக்கு 1600 வருடங்கள் சிறைத்தண்டனை அமெரிக்காவில் உள்ள மத்திய டெக்சாஸ் மாகாணத்தின் ஒரு பகுதியான மெக்லெனன் என்ற பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரை ஆறு பேர் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆறு பேர்களுக்கும் சேர்த்து 1600 வருடங்கள் சிறைத்தண்டனை அளித்து வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெக் லெனன் கவுண்டி பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ...

கும்பகோணத்தில் வளரும் இது நம்ம ஆளு...!

Posted: 14 Jun 2014 10:31 AM PDT

- பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் 'இது நம்ம ஆளு'. ஹீரோவாக சிம்புவும், ஹீரோயினாக நயன்தாராவும் நடிக்கிறார்கள். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தை அவரது தந்தை டி.ராஜேந்தரே தயாரிக்கிறார். - தற்போது கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தை இறுதிகட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டனராம் - காதல் தோல்விக்குப் பின் சிம்பு, நயன்தாரா இணையும் படம் என்பதால் இது நம்ம ஆளு படத்திற்கு விளம்பரம் செய்யாமலே பெரிய விளம்பரம் கிடைத்துள்ளதாம் --

இந்தி படத்தில் தமன்னா

Posted: 14 Jun 2014 09:46 AM PDT

- - கடந்த 9 ஆண்டுகளில் 30 தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார் தமன்னா. தெலுங்குத் திரையில் தமன்னாவை யாரும் அசைக்க முடியாது என்ற நேரத்தில், சமந்தாவோடு ஸ்ருதிஹாசனும் மல்லுக்கு நிற்க, தமன்னாவைக் கொஞ்சம் சீனியர் ஹீரோயின் போலப் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் பாலிவுட்டுக்கு இந்தத் தகுதிதானே முக்கியமாக இருக்கிறது. - கடந்த ஆண்டு அஜய் தேவ்கன் ஜோடியாக 'ஹிம்மத்வாலா' என்ற, 80களில் வெளியான இந்திப் படத்தின் ரீமேக்கில் ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைத்தார் சஜித் கான். - ஆனால் ...

உக்ரைன் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்: 49 வீரர்கள் பலி

Posted: 14 Jun 2014 09:44 AM PDT

கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவது தொடர்பாக அங்கு எழுந்த பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் கிழக்குப் பகுதியான கிரிமியா உலக நாடுகளின் பலத்த எதிர்ப்பிற்கிடையே ரஷ்யாவுடன் இணைந்தது. அதுபோல் இன்னும் சில கிழக்குப் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராளிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நகரங்களில் லுகான்ஸ்க்-கும் ஒன்றாகும். கடந்த ஏப்ரல் முதல் போராளிகளின் ஆதிக்கம் இங்கு அதிகரித்துள்ள போதிலும் உக்ரைன் அரசு அங்குள்ள விமான நிலையத்தை ...

அஜீத் படத்தில் சமந்தா

Posted: 14 Jun 2014 09:43 AM PDT

- சமந்தாவுக்கு 'சவுத் ஏஞ்சல்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் டோலிவுட்டில். ஆனால் மலையாளம், கன்னடம் இரண்டிலும் சமந்தா இன்னும் நடிக்கவில்லை. - விக்ரம், விஜய், சூர்யா ஆகிய மூன்று ஹீரோக்களுடன் நடித்து விட்டார் சமந்தா. - இயக்குநர் சிறுத்தை சிவா அஜித்தை இயக்க இருக்கும் படத்தில் சமந்தாவையே நாயகியாக்கிவிடலாம் என்று அஜித்திடம் கேட்க, அவரும் ஓகே சொல்லிவிட்டராம். -

70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்!

Posted: 14 Jun 2014 08:33 AM PDT

சென்னை நகர மக்களின், குடிநீர் தேவைக்காக, முதன் முதலில் கட்டப்பட்டது, பூண்டி நீர்தேக்கம். இது, அப்போது, 65 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டது. ஜூன் 2014ல், 70வது ஆண்டை நிறைவு செய்கிறது.பூண்டியில் நீர்தேக்கம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, 1900ம் ஆண்டே எழுந்தாலும், அது, செயலாக்கம் பெற்றது, தீரர் சத்தியமூர்த்தி முயற்சியால் தான்.கடந்த, 1939ல் சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவியது. போதிய பருவ மழை இல்லாமல், நிலத்தடி நீர் குறைந்து, மக்கள் தண்ணீருக்கு தவியாய் தவித்தனர். மக்களின் துயரைப் போக்க, ...

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை கடற்படைக்காக அர்ப்பணித்தார் மோடி

Posted: 14 Jun 2014 07:03 AM PDT

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கும் விழா கோவாவில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு பயணமாக கோவா வந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் வந்திறங்கினார். விக்ரமாதித்யா கப்பலுக்கு வந்த நரேந்திர மோடிக்கு கப்பல் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடற்படை வீரர்கள் அளித்த சிறப்பு ...

ஆப்பிளின் ஹெல்த் கிட்டுக்குப் போட்டியாக வருகிறது கூகுள் பிட்!

Posted: 14 Jun 2014 06:19 AM PDT

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் இடையே நிலவி வரும் கடும் போட்டியினால் இரு நிறுவனங்களும் பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து தங்கள் ஆளுமையை நிரூபித்து வருகின்றன. அந்த வகையில், ஆப்பிளின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் 'ஹெல்த் கிட்' (Health Kit) செயலிக்கு போட்டியாக, கூகுள் நிறுவனமும் 'கூகுள் ஃபிட்' (Google Fit) என்ற புதிய செயலியினை அறிமுகப்படுத்த இருக்கின்றது. கூகுளின் கூகுள் ஃபிட் தயாரிப்பானது, இம்மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற ...

உலக ரத்ததான தினம்: இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்

Posted: 14 Jun 2014 04:53 AM PDT

உலக ரத்ததான தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "உலக ரத்ததான தினமான இன்று ரத்ததானம் செய்யும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ரத்ததானம் செய்வது சமூகத்திற்கு செய்யும் சிறந்த சேவை. ரத்ததானத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று நாம் மீண்டும் உறுதிமொழி ஏற்போம். எனது இளம் நண்பர்கள் இதனை வழிநடத்திச் செல்ல வேண்டும்" ...

தெரிஞ்சுக்கோங்க!.............மர்ம முடிச்சு.....பறவைகள் தற்கொலை

Posted: 14 Jun 2014 01:16 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 14 Jun 2014 12:33 AM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

சிலுக்கு - சிறுவர்கதை

Posted: 14 Jun 2014 12:31 AM PDT

முன்னொரு காலத்தில் பறவைகளில், சேவல்களே உயரமாகப் பறக்கும் ஆற்றல் உடையனவாக இருந்தன. அந்தச் சேவல்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாக "சிலுக்கு' என்ற சேவல் இருந்தது. ஒரு தடவை பறவைகளிடையே, யார் மிக உயரமாகப் பறப்பவர் என்ற போட்டி ஏற்பட்டது. போட்டியில் கலந்து கொள்ள சிலுக்கு வந்தது. கம்பீரமாக நின்று சுற்றும்,முற்றும் பார்த்து, நெஞ்சை நிமிர்த்தி, சிறகுகள் அகல விரித்து, உயரே எழுந்து பறந்து முதலிடம் பெற்றது. பறவைகள் அனைத்தும் அதை பாராட்டின. சிவப்பு நிறத் தொப்பி சிலுக்குக்கு அணிவிக்கப் பட்டது. வெற்றி ...

படித்ததில் பிடித்தது :) - கணவன் இருந்தும்...

Posted: 13 Jun 2014 11:57 PM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

ஏற்றினாளே என் நெஞ்சில்!

Posted: 13 Jun 2014 11:50 PM PDT

மழைக்காலத்தில் கடற்கரையின் அழகு கூடியிருப்பதாக நினைத்தான் ராம். இதற்கு காரணம், நண்பர்களின் அருகாமை என்று, உடனே தோன்றியது. நண்பர்கள் அத்தனை பேரும், பள்ளி, கல்லூரி, கிரிக்கெட் என்று வாழ்க்கையை, கூடவே இருந்து அழகாக்கியவர்கள். ஊட்டிக்கும், கோவாவுக்கும் பிரத்யேக எழில் சேர்த்தவர்கள். ஒரகடம் ப்ளாண்ட்டில், அவன் இன்ஜினியராக இருக்கிற, கார் கம்பெனியின் பிரமாண்டம் பார்த்து, வியந்து அவன் முன்னேற்றத்திற்கு கை கொடுத்தவர்கள். ''ராம்... 'ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. மீட் செய்யணும்'ன்னு கூப்பிட்டயே... ...

பிடிக்காது!

Posted: 13 Jun 2014 11:36 PM PDT

சுரேஷும், ரவியும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தனர்.சுரேஷுக்கு கணிதம் என்றால் வேப்பங்காய் போல் கசந்தது. மற்ற பாடங்களில் அவன் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான். கணிதப் பாடத்தில் மட்டும் விருப்பம் இல்லை.ரவிக்கு கணிதப்பாடம் தேனாய் இனித்தது. ஆனால், இலக்கணத்தில் அவன் மனம் ஈடுபாடு காட்டவில்லை.இலக்கணம் தவிர, மற்ற பாடங்களில் அவன் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான். ரவிக்கு, சுரேஷ் இலக்கணம் கற்றுக் கொடுத்தான். ஏனோ அது ரவிக்கு புரியவில்லை. சுரேஷுக்கு, ரவி கணிதப் பாடம் கற்றுக் கொடுத்தான். ஏனோ கணிதம் அவனுக்குப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™