Tamil Star |
- அம்மா வேடத்தில் நடிக்க முடிவு செய்திருக்கும் கனிகா!
- இனிப்பு வழங்கும் ரஜினி ரசிகர்கள்! இரண்டாவது நாளும் கொண்டாட்டம்!
- குடித்து குடித்தே துன்பப்படும் மனிதர்களே குடி நோயாளிகள்: கதை தான் 'அப்பா..வேணாம்ப்பா'
- தெலுங்கு சினிமாக்காரர்கள் மீது நடிகை ஸ்ருதி ஹாஸன் புகார்: தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு!
- பாசிப் பருப்பின் மகத்துவம்!
- எலுமிச்சை ஒரு ஜீவக் கனி!
- ஐபால் Andi 4 ஐபிஎஸ் டைகர் ஸ்மார்ட்போன் ரூ.6,299 விலையில்!
- விபத்தில் கொதிக்கும் சுடுதண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் பரிதாபக் காட்சி!
- தந்தையின் விபரீத ஆசை: பாராசூட்டில் தனியாக பறந்த 11 மாத குழந்தை!
- முயன்றால் முடியாதது எது?… ஒரு நிமிடம் மனதிற்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் மகிழ்ச்சி!
- இந்த ரோட்டுல கார் ஓட்டுற சாரதியெல்லாம் ரொம்ப பாவம்!
- காகிதத்தில் கால்பந்து விளையாடும் அற்புத காட்சி!
- கன்னம் முழுவதும் ஓட்டை!
- மோடிக்கு வலிந்து வலிந்து வந்து அழைப்பு விட்டபடி இருக்கிறது அமெரிக்கா!
- உபெர் கோப்பை பேட்மின்டன் தொடரின் அரை இறுதியில் சாய்னா அபார வெற்றி!
| அம்மா வேடத்தில் நடிக்க முடிவு செய்திருக்கும் கனிகா! Posted: 24 May 2014 02:33 AM PDT
அம்மா வேடத்தில் நடிக்க முடிவு செய்திருக்கும் கனிகா, அதற்காக சான்ஸ் பிடிக்கும் வகையில் உடலில் பச்சை குத்திக்கொண்டார். 'பைவ் ஸ்டார், 'ஆதிரை, 'டான்ஸர் படங்களில் நடித்துள்ள கனிகா தமிழில் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு 'வரலாறு என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழ் பக்கம் தலைவைக்காதவர் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்க மாப்பிள்ளை ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை மணந்துகொண்டு குடும்பம் நடத்த சென்றுவிட்டார். ஒரு வருடத்திலேயே குடும்ப வாழ்க்கை போரடித்துவிட மீண்டும் நடிக்க வந்தார். 'பழஸி ராஜா'வில் தொடங்கி தொடர்ச்சியாக அம்மா மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோயின்கள் நயன்தாரா, திரிஷா, இலியானா தங்கள் உடலில் பிறர் பார்வைபடும் இடங்களில் காதலன் பெயர், அல்லது வேலைப்பாடுடன் கூடி டிசைனில் டாட்டூ வரைந்துகொள்கின்றனர். இந்த பட்டியல் நீள்கிறது. திருமணத்துக்கு பிறகு படங்கள் தேடி வராததால் கனிகா வருத்தம் அடைந்தார். அம்மா வேடம் வந்தால் கூட போதும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் தனது வலது கை மேல்புறத்தில் குழந்தையை அன்பாக அரவணைத்து முத்தமிடும் தாய் உருவத்தை டாட்டூவாக வரைந்திருக்கிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இனிப்பு வழங்கும் ரஜினி ரசிகர்கள்! இரண்டாவது நாளும் கொண்டாட்டம்! Posted: 24 May 2014 02:21 AM PDT
ரஜினியின் கோச்சடையான் படம் வெளியானதை இரண்டாவது நாளும் கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். பல திரையரங்குகளில் இன்றும் பட்டாசு வெடித்து நடனமாடி, படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள். பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு ரஜினியின் கோச்சடையான் நேற்று உலகெங்கும் வெளியானது. மிக அதிக அரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம், வளைகுடா நாடுகள், தென்கிழக்காசியா, ஐரோப்பாவில் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு வெளியீட்டை, ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். நேற்று கோச்சடையான் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்ற ரஜினி ரசிகர்கள், இன்றும் அதைத் தொடர்கின்றனர். சென்னை காசி தியேட்டரில் நேற்று முழுக்க நடந்த கொண்டாட்டங்கள், இன்றும் தொடர்கின்றன. தியேட்டருக்கு வெளியே பட்டாசுகள் வெடித்த ரசிகர்கள், அங்கு குழுமி நின்றவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். பாலாபிஷேகம், ஆரத்தி, தேங்காய் உடைப்பு என ஆராதனைகளுக்கும் குறைவில்லை. பெரும்பாலான ரசிகர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகள் பார்க்கவே விரும்புகின்றனர். பொதுவாக ரஜினி படம் என்றால் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பைப் பார்த்து, சில தினங்கள் கழித்தே திரையரங்குக்கு வருவார்கள் குடும்ப ரசிகர்கள். ஆனால் இந்த முறை முதல் நாளிலிருந்தே குழந்தை குட்டிகளுடன் குடும்பம் குடும்பமாகப் படம் பார்க்க வருகிறார்கள். சென்னையைத் தாண்டி, புறநகர்களில் ரசிகர்கள் ஆரவாரத்துக்கும் உற்சாகத்துக்கும் குறைவில்லை. அம்பத்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வில்லிவாக்கம் பகுதிகளிலும், வெளிமாவட்டங்களில் சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, கும்பகோணம் பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் இன்றும் பட வெளியீட்டைக் கொண்டாடி வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| குடித்து குடித்தே துன்பப்படும் மனிதர்களே குடி நோயாளிகள்: கதை தான் 'அப்பா..வேணாம்ப்பா' Posted: 24 May 2014 02:15 AM PDT
ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்து சமுதாயத்தில் மிக கெளரவமான வேலைக்கு செல்லும் ஒருவன் குடி நோயால் தன் வாழ்க்கையில் மானம், மரியாதை, வீடு, மனைவி எல்லாவற்றையும் இழக்கிறான். அதன்பின் மருத்துவ சிகிச்சை மூலம் குடிநோயிலிருந்து விடுபடும் அவன், இனி வாழ்க்கையில் மதுவையே தொடக்கூடாது என்ற உறுதியுடன் மனம் திருந்தி வரும்போது, அவன் மீது நம்பிக்கையில்லாமல் மனைவி வெளியேறுகிறாள். அவன் மீண்டும் குடிக்குத் திரும்புகிறானா.. அல்லது மனைவியைச் சமாதானப்படுத்தி நல்ல வாழ்க்கை வாழ்கிறானா.. இதுதான் அப்பா வேணாம்ப்பா படத்தின் கதை. பொதுவாக சமுதாயத்தில் பல பேர் குடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் குடி நோயாளிகள் அல்ல. தன் நிலை தெரிந்தும் குடியை விட முடியாமல் குடித்து குடித்தே துன்பப்படும் மனிதர்களே குடி நோயாளிகள். அப்படிப்பட்ட மனிதனின் கதை தான் 'அப்பா..வேணாம்ப்பா..' இது வரை தமிழ் திரைப்பட வரலாற்றில் குடி நோய் பற்றிய திரைப்படம் இத்தனை விரிவாக எடுக்கப்படவில்லை என்னும் அளவுக்கு விரிவாக எடுத்திருக்கிறார்கள். ஆல்கஹாலிக் அனானிமஸ் என்னும் அமைப்பினால் பல லட்சம் பேர் குடியிலிருந்து திருந்தி வாழ்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது இந்தப் படம். படத்தின் இயக்குனர் வெங்கட்டரமணன் பல தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியவர். பல ஆவணப்படங்களை இயக்கி அவை சென்னை பொதிகையில் வெளிவந்திருக்கின்றன. இவர் இயக்குனர் வேலு பிரபாகரனின் உதவியாக திரைப்படங்களிலும் தொலைக்காட்சித்தொடரிலும் பணியாற்றியவர். தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் பணியாற்றியவர். 53 வயதிலும் ஒரு சமுதாய சிந்தனை உள்ள கதையை தேர்ந்தெடுத்து கதாநாயகனாக நடித்து இயக்கி, தயாரித்துள்ளார். ஏறக்குறைய முற்றிலும் புதுமுக நடிக நடிகைகளைக் கொண்டு உருவான இப்படம் இந்த கால கட்டத்திற்கு மிகவும் ஏற்ற படமாகும். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் உருவான மிகக் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களின் வரிசையில் இதுவும் அடங்கும். டிடிகே மருத்துவமனையில் மருத்துவராக பணி புரியும் டாக்டர்.சிவசுப்ரமணியன் மருத்துவராகவும் மற்றும் கவுன்சிலராக சங்கரும் நடித்திருக்கிறார்கள். இம்மருத்துவமனையின் இயக்குனர் சாந்தி ரங்கநாதன் இத்திரைப்படத்தின் மீது தனி அக்கறை கொண்டு உதவி இருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது. வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய, விகே கண்ணன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்துமே குடி நோயாளிகளின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களே..அவர்கள் பல பேரை சந்தித்து அவர்கள் குடியால் இழந்தவற்றையும் திருந்தி பல பேர் வாழ்வதையும் கேட்டு தெரிந்து கொண்டு உருவான திரைப்படம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தெலுங்கு சினிமாக்காரர்கள் மீது நடிகை ஸ்ருதி ஹாஸன் புகார்: தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு! Posted: 24 May 2014 02:08 AM PDT
தன்னை ஆபாசமாகப் படம் பிடித்துவிட்டார்கள் என தெலுங்கு சினிமாக்காரர்கள் மீது நடிகை ஸ்ருதி ஹாஸன் புகார் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு தெலுங்கில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் ஆபாசமாக ஆடியதைத்தானே படமாக்கினோம்... அதற்கு புகார் செய்வதா என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி, சமீபத்தில் எவடு படத்தில் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார். இந்தப் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாயின. கிட்டத்தட்ட அரை நிர்வாணம் எனும் அளவுக்கு ஆபாசம் தெறித்தது அந்தப் படங்களில். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின. படத்தில் நடிக்கும்போது இதுபற்றி கவலையே படாமல், முன்னழு வெளியில் பளிச்சென்று தெரியும்படி ஆடிய ஸ்ருதிக்கு, அதுவே புகைப்படங்களாக வெளியானபோது அதிர்ச்சியாகிவிட்டது. உடனடியாக படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுவை தொடர்பு கொண்டு பேசினார். அவரோ இந்த கவர்ச்சிப் படங்கள் எப்படி வெளியாகின என்று தனக்கு தெரியாது என கை விரித்து விட்டார். இதையடுத்து போலீசில் புகார் கொடுத்தார் ஸ்ருதி. தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டவர்களை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார். போலீசார் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். தெலுங்கு சினிமா படப்பிடிப்பு தளங்களில் போட்டோ எடுக்கும் பத்து போட்டோகிராபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தெலுங்கு பட உலகினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ருதிஹாசன் ஏற்கனவே நிறைய படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். பாலியல் தொழிலாளியாக இந்திப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் படு ஆபாசமான காட்சிகளில் உடலுறவு கொள்வது போன்ற போஸ்களைக் கொடுத்துள்ளார். மேலும் இந்த எவடுவில் அவர் விருப்பத்தோடுதான் அந்தப் பாடல்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தெரியாமல் இந்தப் படங்கள் எடுக்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடனமாடியபோது எடுத்த ஸ்டில்கள்தான் இவை. எனவே இந்தப் புகாரில் உண்மையும் இல்லை, அர்த்தமும் இல்லை. தேவையில்லாத நெருக்கடியை ஸ்ருதிஹாஸன் உருவாக்கிவிட்டார் என தெலுங்கு படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 24 May 2014 01:42 AM PDT
தோல் உரிக்காமல் பச்சை நிறத்தில் இருப்பது பச்சைப் பயறு என்றும், அதுவே தோல் உரித்து உடைத்த பருப்பை பாசிப் பருப்பு என்றும் கூறுகிறோம். பாசிப் பருப்பு பொதுவாக பொங்கல் வைக்கவும், கூட்டு செய்யவும் மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். அதன் பயன்கள் ஏராளம் ஏராளம். பாசிப் பருப்பில் இருக்கும் சத்துக்களோ தாராளம் தாராளம். பயறு வகைகளில் ஏராளமான புரதச் சத்து நிறைந்துள்ளது. பாசிப் பருப்பில் புரதமும், கார்போஹைட்ரேட்டும், கலோரியும் சரிவிகிதத்தில் கலந்து உள்ளது. இந்த பருப்பு வகைகளை நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்பதால்தான், குழைந்து செய்யும் பொங்கல் மற்றும் கூட்டுக்களை இந்த பருப்பை வைத்து செய்துள்ளனர் நம் முன்னோர்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 24 May 2014 01:36 AM PDT
மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும். குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும். குளவி மற்றும் தேனி கடியால் ஏற்பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சம் பழச்சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் பித்தக்கற்கள் கரையும். தினமும் புதிதாக பறிக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை நீக்கி சுத்தப்படுத்தும். எலுமிச்சை ஒரு ஜீவக் கனி என்று கருதப்படுகிறது. பல்வேறு அரிய சக்திகளைக் கொண்டது எலுமிச்சை. அப்படிப்பட்ட எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம். தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது. தொற்று வியாதிகளை எதிர்த்துபோரிடும் திறன் கொண்டது. சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு உடலில் இருக்கும் புண்கள் அழுகிப் பெரிதாகாமல் இருக்க உதவுகிறது. இதற்கு தோலின் மேற்பரப்பில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்தாலோ, அல்லது பருகினாலோ பலன் கிடைக்கும். காயம் ஏற்படும்போது ரத்தம் வடிவதையும் எலுமிச்சம் பழம் கட்டுப்படுத்தும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐபால் Andi 4 ஐபிஎஸ் டைகர் ஸ்மார்ட்போன் ரூ.6,299 விலையில்! Posted: 24 May 2014 01:29 AM PDT
ஐபால் நிறுவனம் Andi4 ஐபிஎஸ் ஜெம் மற்றும் Andi4 ஐபிஎஸ் வெல்வெட் வெளியீட்டிற்கு பிறகு, இப்போது Andi 4 ஐபிஎஸ் டைகர் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஐபால் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இப்போது விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும், ஐபால் Andi 4 ஐபிஎஸ் டைகர் இகாமர்ஸ் இணையதளம் வழியாக ஆன்லைனில் இப்போது ரூ.6,299 விலையில் கிடைக்கிறது. Andi 4 ஐபிஎஸ் டைகர் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) ஆதரவை வழங்குகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. புதிய ஐபால் பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஒரு (WVGA) 480x800 பிக்சல் தீர்மானம் கொண்ட 4 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 233ppi பிக்சல் அடர்த்தி வழங்குகிறது. Andi 4 ஐபிஎஸ் டைகர் ஸ்மார்ட்போன், ரேம் 512MB உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A7 ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது. புதிய ஐபால் ஸ்மார்ட்போன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. Andi 4 ஐபிஎஸ் டைகர் ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32GB வரை விரிவுபடுத்தக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, 802.11 பி / ஜி / n, ப்ளூடூத் 4.0, மைக்ரோ-USB, ஜி.பி. எஸ் / எ -ஜி.பி. எஸ், GPRS / EDGE மற்றும் 3G ஆதரவு ஆகியவை அடங்கும். Andi 4 ஐபிஎஸ் புலி ஒரு 1300mAh பேட்டரி ஆதரிக்கப்படுகிறது. ஐபால் Andi 4 ஐபிஎஸ் டைகர் ஸ்மார்ட்போன் ஈபே இந்தியா வழியாக தற்போது கிடைக்கிறது. வியாழனன்று ஐபால் Andi4 ஐபிஎஸ் ஜெம் மற்றும் Andi4 ஐபிஎஸ் வெல்வெட் ஸ்மார்ட்போன்கள் ரூ. 5,699 மற்றும் ரூ.5,199 விலையில் தொடங்கப்பட்டது. இந்த இரண்டுமே இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) மற்றும் இரட்டை காத்திருப்பு ஸ்மார்ட்போன்கள் ஆகும். மேலும் இந்த இரண்டும் ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. ஐபால் Andi 4 ஐபிஎஸ் டைகர் ஸ்மார்ட்போன் குறிப்புகள்: இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்), (WVGA) 480x800 பிக்சல் தீர்மானம் கொண்ட 4 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 233ppi பிக்சல் அடர்த்தி, ரேம் 512MB, 1.3GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A7 ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்), எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 32GB வரை விரிவுபடுத்தக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, Wi-Fi, 802.11 பி / ஜி / n, ப்ளூடூத் 4.0, மைக்ரோ-USB, ஜி.பி. எஸ் / எ -ஜி.பி. எஸ், GPRS / EDGE, 3G, ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன், 1300mAh பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விபத்தில் கொதிக்கும் சுடுதண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் பரிதாபக் காட்சி! Posted: 24 May 2014 01:17 AM PDT |
| தந்தையின் விபரீத ஆசை: பாராசூட்டில் தனியாக பறந்த 11 மாத குழந்தை! Posted: 24 May 2014 01:15 AM PDT |
| முயன்றால் முடியாதது எது?… ஒரு நிமிடம் மனதிற்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் மகிழ்ச்சி! Posted: 24 May 2014 01:11 AM PDT |
| இந்த ரோட்டுல கார் ஓட்டுற சாரதியெல்லாம் ரொம்ப பாவம்! Posted: 24 May 2014 01:09 AM PDT |
| காகிதத்தில் கால்பந்து விளையாடும் அற்புத காட்சி! Posted: 24 May 2014 01:05 AM PDT |
| Posted: 24 May 2014 01:03 AM PDT |
| மோடிக்கு வலிந்து வலிந்து வந்து அழைப்பு விட்டபடி இருக்கிறது அமெரிக்கா! Posted: 24 May 2014 12:59 AM PDT
மோடியை முறைத்துக் கொண்டது, விசா கொடுக்க மறுத்தது எல்லாம் பழங்கதையாகி விட்டது. இப்போது மோடிக்கு வலிந்து வலிந்து வந்து அழைப்பு விட்டபடி இருக்கிறது அமெரிக்கா. மோடியோ அமெரிக்காவை பெரிதாக கண்டு கொள்ளாமல் திராட்டில் விட ஆரம்பித்திருக்கிறார். மோடி காலத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய அளவுக்கு அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் தரப்பட மாட்டாது என்பது தெளிவாகி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் எடுப்பார் கைப்பிள்ளை ரேஞ்சுக்குத்தான் இந்தியா இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவை சற்று தூர வைக்கும் முடிவில் மோடி தரப்பு இருப்பதாகவே தெரிகிறது. மாறாக, இதுகாலம் வரை இந்தியாவுடன் நெருக்கமாக இருந்து,அமெரிக்காவின் இறுக்கமான உறவால் சற்று விலகிப் போய் விட்ட நாடுகளுடன் நட்பைப் புதுப்பிக்கவும், இறுக்கமாக்கவும் மோடி ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது. இதை உணர்ந்துதான் ஒன்றுக்கு இரண்டு முறை அதிபர் ஒபாமாவே மோடியைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஒபாமாவும் சரி, வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும் சரி, புதிய இந்திய அரசுடன் இணக்கமான நட்புறவை பேணிக் காக்க ஆர்வமாக உள்ளனர். இதற்காக மோடியை தொடர்ந்து 2க்கும் மேற்பட்ட முறை இருவரும் தொடர்பு கொணடு பேசியுள்ளனர். ஆனால் தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர், வங்கதேச பிரதமருக்கெல்லாம் நன்றி சொல்லிய பிறகுதான் லேட்டாகத்தான் அமெரிக்காவின் வாழ்த்துக்கே நன்றி கூறி கடுப்படித்தார். மோடி இப்படி கடுப்படித்தாலும் கூட இந்தியாவைக் கண்டு கொள்ளாமல் இருக்க அமெரிக்காவால் முடியாதே.. காரணம், கோடானு கோடி டாலர்களில் இந்தியாவில் அமெரிக்காவின் ஏகப்பட்ட பிசினஸ் இருக்கிறதே.. அதெல்லாம் ஸ்டாப் ஆகி விட்டால் என்னாவது.. எனவே கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத குறையாக மோடி அமெரிக்கா வர வேண்டும் என்று அடுத்தடுத்து அழைப்பு விடுத்து வருகிறது. மோடிக்கும், பாஜகவுக்கும் மக்கள் மத்தியில் இப்படி ஒரு பெரிய ஆதரவு கிடைக்கும் என்பதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. இதனால்தான் இப்போது வேறு வழியில்லாமல் இறங்கி வந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின், தென் மத்திய ஆசியாவுக்கான உதவி அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறுகையில், இந்திய மக்களின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மோடி பிரதமராவதை வரவேற்கிறோம். அவருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்க அதிபர் ஒபாமா ஆர்வமாக உள்ளார். உலகின் பிற நாடுகளைப் போலவே அமெரிக்காவும், இந்தியாவில் நடந்த மாற்றத்தை வரவேற்கிறது என்றார். இந்தியாவில் மட்டுமல்ல.. அமெரிக்காவிலும் கூட அரசாங்க அளவில் மோடியால் பலரது மனநிலை மாறி விட்டதையே இது காட்டுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உபெர் கோப்பை பேட்மின்டன் தொடரின் அரை இறுதியில் சாய்னா அபார வெற்றி! Posted: 24 May 2014 12:52 AM PDT
உபெர் கோப்பை பேட்மின்டன் தொடரின் அரை இறுதியில், இந்திய அணி கேப்டன் சாய்னா நெஹ்வால் அபாரமாக வென்று அசத்தினார். டெல்லி ஸ்ரீ போர்ட் விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த முதலாவது அரை இறுதியில் சீன அணி 3-0 என நேர் செட்களில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரை இறுதியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் சாய்னா நெஹ்வால், ஜப்பானின் மினாட்சு மிடானியுடன் மோதினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய சாய்னா 21-12, 21-13 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார். இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 19-21, 21-18, 26-24 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை சயாகா டகஹாஷியை வீழ்த்த இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














