Tamil Star |
- முட்டை வீச்சு தாக்குதல் நடத்திய இலங்கையர் மூன்று பேர் கைது!
- வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவி பலி!
- இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்! அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு
- மோடியின் பதவியேற்புக்கு விக்னேஸ்வரன் செல்லாதது வரலாற்று தவறு: யோகேஸ்வரி பற்குணராசா கருத்து!
- மோடி சந்தித்த பிறகு மகிந்தவின் உறுதிமொழிகளை நினைவுபடுத்தி இருக்கும்! கேர்ணல் ஹரிஹரன் சுட்டிக்காட்டல்
- ரொறன்ரோவில் 50 பேர் போலிசாரிடம் சிக்கியுள்ளனர்!
- ரஜினிக்கு ஜோடியாக லிங்காவில் பிரபல பிரிட்டிஷ் நடிகை லாரன் ஜே இர்வின்!
- நடிகை த்ரிஷா உடல் உறுப்புகளைத் தானம் செய்தார்! தனது ரசிகர்களும் செய்ய வேண்டுகோள்
- நடிப்புக்கு குட்பை சொல்லும் நஸ்ரியா நஸீம்!
- சண்டமாருதம் படம் ஆகஸ்டில் வெளியீடு! தென்காசியில் சரத் குமார் பேட்டி
- முதல்பாதியைப் பார்த்து இடைவேளைக்கு பின்னர் மீதி கதையை யூகித்துக் கூறுபவர்களுக்கு ஒரு கோடி பரிசு இது பார்த்திபன் ‘சவால்’
- பேஸ்புக்கின் சி.இ.ஓ வான மார்க் ஐுகர்பெர்க்கிற்கு ஈரான் கோர்ட் சம்மன்!
- கிப்ட் கொடுத்த மோடிக்கு தேங்க்ஸ்: நவாஸ் மகள் மரியம் ஷெரீப்
- கேட் மிடில்டன்னின் பேர் பாட்டம் போட்டோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய செய்தித்தாள்!
- மோட்டார் சைக்கிள் பறந்து பார்த்ததுண்டா?…. போட்டியில இதெல்லாம் சகஜம் பாஸ்
- சுண்டெலியின் அதிரடித் தாக்குதலில் நிலைகுலையும் மான்!
- ரயிலுடன் மோதி சுக்கு நூறாகும் ட்ரக்
- இளவட்டங்களுக்கு சவால்விடும் அசத்தலான நடனம்!
- இங்க என்னங்க நடக்குது?… ஒருவேளை சிலைக்கு உயிர் கொடுத்திருப்பாங்களோ!
- உங்கள் கண்முன் நடக்கும் வன்முறைகளின் உண்மை முகம் இப்படியும் இருக்கலாம்!
| முட்டை வீச்சு தாக்குதல் நடத்திய இலங்கையர் மூன்று பேர் கைது! Posted: 28 May 2014 11:51 PM PDT
ஜப்பானில் வெளிநாட்டு மாணவர்கள் மீது முட்டை மற்றும் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 மற்றும் 19 வயதான இந்த இளைஞர்கள் இலங்கை, வியட்நாம் மற்றும் நேபாள நாடுகளை சேர்ந்தவர்கள் என டோசு சாகா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞர்கள் பல முறை காரில் இருந்தவாறு வெளிநாட்டு மாணவர்கள் மீது முட்டைகளை வீசியுள்ளனர். மே 20 ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும் மூன்றாவது நபர் தனக்கு சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என பொலிஸாரிடம் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இவ்வாறு வெளிநாட்டு மாணவர்கள் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 19 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களுடன் மேற்படி மூன்று இளைஞர்களுக்கு தொடர்புள்ளதா என்பது பற்றி அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து மாணவர்களும் டோசுவில் உள்ள மொழியியல் நிறுவகத்தில் ஜப்பானிய மொழியை பயின்று வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவி பலி! Posted: 28 May 2014 11:45 PM PDT
நீர்கொழும்பு கண்டி விதியில் அமைந்துள்ள வனவாசல மேம்பாலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவியொருவர் கொல்லப்பட்டுள்ளார். ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மேம்பாலத்தின் பாதுகாப்பு கம்பி வேலியில் மோதுண்டதனால் விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனத்தில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்! அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு Posted: 28 May 2014 11:28 PM PDT
பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலவச கல்வியை சீர்குலைக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டார். இலவசக் கல்வியை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனத்துடனும் அரசாங்கம் உடன்படிக்கை கைச்சாத்திடவில்லை. அவ்வாறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தால் அதனை ரணில் விக்ரமசிங்க நிரூபிக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் பகிரங்க விவாதமொன்றில் பங்கேற்கத் தயார். ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற்றுக்கொண்டு கல்வித்துறையில் புதிய மாற்றங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாட விதானத்தில் தொழில்நுட்ப கல்விக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோடியின் பதவியேற்புக்கு விக்னேஸ்வரன் செல்லாதது வரலாற்று தவறு: யோகேஸ்வரி பற்குணராசா கருத்து! Posted: 28 May 2014 11:23 PM PDT
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்குச் செல்லாமல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வரலாற்று தவறிழைத்துள்ளதாக யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவிற்குச் சென்றுவிட்டு நேற்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் திரும்பி அவரிடம் உங்கள் பயணம் எவ்வாறு அமைந்ததென கேட்ட பொழுதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், பதவியேற்பு விழாவிற்குச் செல்வது மிகப்பெரிய சந்தர்ப்பம். அதற்கான அழைப்பு ஜனாதிபதியினால் முதலமைச்சருக்கு விடுக்கப்பட்ட போதும், அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து அதனை மறுத்து, தவறிழைத்து விட்டார்கள். தொடர்ந்து தமிழர் சார்பாக பிரதிநிதியொருவரை அழைத்துச் செல்லும் பொருட்டு ஜனாதிபதியினால் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியேற்பு முடிந்த மறுநாள் நாங்கள் கலந்துரையாடுவதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன்போது மோடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இணக்கமான சுமுகமான பேச்சுக்கள் இடம்பெற்றன. இதன்போது 13வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற வகையில் பேச்சுக்கள் இருந்தன. அத்துடன் வடமாகாணத்தில் இடம்பெற்ற தேர்தல், மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பனவற்றை ஜனாதிபதி மோடிக்கு எடுத்துரைக்கும் போது, கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரத்தில் வடமாகாணம் முதலிடம் பெற்றமையும் எடுத்துரைத்ததாக யோகேஸ்வரி மேலும் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோடி சந்தித்த பிறகு மகிந்தவின் உறுதிமொழிகளை நினைவுபடுத்தி இருக்கும்! கேர்ணல் ஹரிஹரன் சுட்டிக்காட்டல் Posted: 28 May 2014 11:17 PM PDT
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கொண்டிருந்தனர். இதன் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவின் விரிவாக்கம் தொடர்பில் முக்கியத்துவம் வழங்கி பேசப்பட்டது. அதேநேரம் இலங்கையில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என்பதை நரேந்திர மோடி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்பதையும், 13ம் திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தையும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது இந்தியாவின் முன்னாள் காங்கிரஸ் அரசாங்கத்திடம் மகிந்த ராஜபக்ச வழங்கியிருந்த உறுதிமொழிகளை நினைவுபடுத்தி இருக்கும் என்று கேர்ணல் ஹரிஹரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் தாம் தமது உறுதிமொழிகளில் இருந்து தப்ப முடியாது என்பதையும் மகிந்த ராஜபக்ச புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொறன்ரோவில் 50 பேர் போலிசாரிடம் சிக்கியுள்ளனர்! Posted: 28 May 2014 11:07 PM PDT
ரொறன்ரோவில் புதன்கிழமை காலையில் போலிசார் பாரிய முன்னெடுப்பில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிகிறது. இந்தத் தேடுதலானது ரொறன்ரோவின் பல பாகங்களில் நடைபெற்றிருக்கின்றது. இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது இரு குழவினர் வைத்திருந்க காசு, கொக்கைன். கெறோயின், மரிச்சுவானா உடன் வேறுபல பொருட்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டிருப்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலிசார் ரொறன்ரோவில் குறிப்பாக தென்பகுதி ஒன்றாரியோவில் ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்ற போட்டிக் குழக்கள் இரண்டினை இலக்குவைத்து தேடுதலை ஆரம்பித்திருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது. புதன்கிழமை காலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 9 துப்பாக்கிகள் பெரும் தொகையான பணத்துடன் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. இவற்றைத் தவிர கொக்கைன், கெறோயின். மர்சுவானா வுடன் வேறு பால பொருட்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலிசாரின் இந்தத் தேடுதல் நடவடிக்கையானது ஒரு கூட்டு நடவடிக்கையாக அமைந்துள்ளது. குறிப்பாக Toronto, York, Durham, Barrie, Waterloo, Guelph, Windsor, London, Hamilton, Belleville, South Simcoe, Halton, Brantford, Niagara, the RCMP, and the OPP ஆகிய போலிசார் இணைந்து மேற்கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிகிறது. குறிப்பிட்ட தேடல் நடவடிக்கையானது 2மணித்தியாலங்களாக நீடித்திருக்கின்றது எனப் போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஜினிக்கு ஜோடியாக லிங்காவில் பிரபல பிரிட்டிஷ் நடிகை லாரன் ஜே இர்வின்! Posted: 28 May 2014 03:41 AM PDT
லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பிரிட்டிஷ் நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார். ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் லிங்கா. இதில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடிக்கின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு ஜோடியாக பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார். அவர் ரஜினியுடன் நடிக்கும் காட்சி, புகைப்படங்களாக வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் வெளிநாட்டில் படித்த எஞ்ஜினியராக ஒரு பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா விடுதலையடைவதற்கு முந்தைய காலத்தில் நடக்கும் கதையில் ரஜினி, லாரன் இர்வின், சோனாக்ஷி நடிக்கிறார்கள். கடந்த வாரம் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மைசூர் வந்தார் லாரன். அவர் பங்கேற்கும் காட்சிகள் முடிந்ததும், "சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவம். ரவிக்குமார் மாதிரி இயக்குநர் ஒரு ஆச்சர்யம்," எனப் புகழ்ந்தார். அத்துடன் கடந்த வாரம் வெளியான ரஜினியின் கோச்சடையான் படத்தையும் பார்த்துப் பாராட்டியுள்ளார். பிரிட்டிஷ் படம் ஹார்ட், ஹாலிவுட் படம் வகரி, லண்டனின் புகழ்பெற்ற நாடகங்கள் வெஸ்ட் எண்ட், ஆன்னி, ஆலிவர் போன்றவற்றில் நடித்தவர் லாரன் இர்வின். லிங்கா படம் தனக்கு நிறைய இந்தியப் பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடிகை த்ரிஷா உடல் உறுப்புகளைத் தானம் செய்தார்! தனது ரசிகர்களும் செய்ய வேண்டுகோள் Posted: 28 May 2014 03:33 AM PDT
மண்ணு திங்கப் போற உடம்புதானே... மத்தவங்களுக்குப் பிரயோசனமாகவாவது இருக்கட்டுமே என்ற எண்ணம், மக்கள் மத்தியில் ஓரளவு பரவ ஆரம்பித்திருக்கிறது. இதற்கு பிரபலங்களின் உடல் உறுப்பு தானம் பற்றி மீடியாவில் அடிக்கடி வெளியாகும் செய்திகளும் முக்கிய காரணம். நடிகர்களில் முதல் முதலாக இந்த உடல் உறுப்பு தானம் செய்தவர் அநேகமாக கமல்ஹாஸன்தான். அவர் இப்படிச் செய்த பிறகுதான் பலரும் தாமாக முன்வந்து உடல் தானம் மற்றும் உறுப்பு தானம் செய்ய ஆரம்பித்தனர். இன்றைய தேதிக்கு உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடம் வகிப்பது தமிழகம்தான்! இப்போது இந்தப் பட்டியலில் இணைந்திருப்பவர் முன்னணி நடிகை த்ரிஷா. சமீபத்தில் அவர் தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக பிரமாணப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டார். தனது ரசிகர்கள் மற்றும் தன்னை நேசிக்கும் பொது மக்களும் இதே போல உடல் தானம் செய்ய வேண்டும் என்று த்ரிஷா கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக த்ரிஷா ரசிகர் மன்றம் சில ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்து வரும் த்ரிஷா, இன்றும் முதல் நிலை நடிகையாகத் திகழ்கிறார். தமிழில் அடுத்து வெளியாகும் அவர் படம் பூலோகம். அடுத்து அஜீத் ஜோடியாக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் பேசி வருகிறார்கள். தெலுங்கில் மீண்டும் இரு படங்களில் நாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. அவற்றில் ஒன்று பாலகிருஷ்ணா படம். அவர் புனீத் ராஜ்குமார் ஜோடியாக முதல் முதலாக நடித்த கன்னடப் படம் பவர் விரைவில் வெளியாக உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடிப்புக்கு குட்பை சொல்லும் நஸ்ரியா நஸீம்! Posted: 28 May 2014 03:22 AM PDT
திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று ஒருவழியாக முடிவு செய்து, அதை திரையுலகிலுள்ளவர்களுக்கும் சொல்லிவிட்டாராம் நஸ்ரியா. சினிமாவில் அறிமுகமானவுடன் பரபரவென புகழ் பெற்றவர் நஸ்ரியா. தமிழிலும் மலையாளத்திலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நேரத்தில் தனது வாய்த்துடுக்கால் சர்ச்சைகளிலும் சிக்கினார். இதற்கிடையில் திடீரென அவருக்கும் நடிகர் பகத் பாஸிலுக்கும் காதல் என செய்தி கிளம்பியது. அதே வேகத்தில் அந்தக் காதலை உறுதி செய்து, திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர் நஸ்ரியாவும் பகத் பாசிலும். இருவருக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வேண்டும் என்பது நஸ்ரியாவின் ஆசை. ஆனால் பாஸில் வீட்டில் இதை விரும்பவில்லை. திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட வேண்டும் என வற்புறுத்தினர். இதனால், தான் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த மலையாளப் படங்களிலிருந்து விலகிக் கொண்டாராம் நஸ்ரியா. தமிழில் திருமணம் எனும் நிக்காஹ்தான் அவரது கடைசி படம்!This posting includes an audio/video/photo media file: Download Now |
| சண்டமாருதம் படம் ஆகஸ்டில் வெளியீடு! தென்காசியில் சரத் குமார் பேட்டி Posted: 28 May 2014 03:13 AM PDT
ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக தான் நடித்து வரும் சண்டமாருதம் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருப்பதாக சரத்குமார் தெரிவித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினரும்,நடிகருமான சரத்குமார் நேற்று மாலை குற்றாலம் ஐந்தருவியில் நிருபர்களை சந்தித்தார். அபோது அவர் கூறுகையில், "ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, தற்போது சண்டமாருதம் படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துவருகிறேன். கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். ஆவணி மோடி, மீனாட்சி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ராதாரவி,சமுத்திரக்கனி,கன்னடநடிகர் அருன்சாகர்,தம்பிராமையா, கவுரவ வேடத்தில் ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னை, கும்பகோணம், பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 15தினங்களில் விடியல் படத்தின் பாடல்வெளியிட்டு விழா நடைப்பெறுகிறது. தலைப்பாக்கட்டி இந்தப் படத்துக்குப் பிறகு தலைப்பாக்கட்டி என்ற படத்தில் நடிக்கிறேன். தனுஷை வைத்து ஒரு படமும் தயாரிக்கும் திட்டம் உள்ளது," என்றார். தலைப்பாக்கட்டி ஓட்டல் விளம்பரத்தில் சரத்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 May 2014 03:06 AM PDT
இயக்குநர் - நடிகர் பார்த்திபன், தான் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இடைவேளைக்கு பின்னர் மீதி கதையை யூகித்துக் கூறுபவர்களுக்கு ஒரு கோடி பரிசு தருவதாக சவால் விடுத்துள்ளார். இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தற்போது 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ விழா சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் பார்த்திபன். இதில், படத்தில் நடித்துள்ள தம்பிராமைய்யா, சந்தோஷ், அகிலா, விஜய்ராம், தினேஷ், லல்லு, சாஹித்யா, படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ள சத்யா, கேமராமேன் ராஜரத்னம், எடிட்டர் சுதர்ன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் தலைப்பில் மட்டுமே கதை உள்ளது. ஆனால், படத்தில் கதை இல்லை. அதேசமயம் சுவராஸ்யமான காட்சிகளின் தொகுப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். மேலும் முதல் பாதியில் படம் எதை நோக்கி செல்கிறது என்பதை ரசிகர்களால் யூகிக்க முடியாது. ஆனால், இரண்டாவது பாதி படு சுவராஸ்யமாக இருக்கும். அந்த வகையில் வாழ்க்கையின் உண்மையான சுவராஸ்யங்களை இப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறேன். என் படத்தின் முதல் பாதியைப் பார்த்து விட்டு இரண்டாம் பாதி இப்படித் தான் இருக்கும் என யாராவது யூகித்துச் சொன்னால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாயை பரிசாக தர தயாராக இருக்கிறேன். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே படத்தை தொடங்கினாலும் இப்போது கதைக்கு தேவையான சில பிரபல நட்சத்திரங்களும் படத்தில் நடித்து பெருமை சேர்த்திருக்கிறார்கள். விஷால், ஆர்யா, அமலாபால், விஜய்சேதுபதி, டாப்சி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்திருக்கிறார்கள். அதோடு, முதலில் பாடலே இல்லாமல் படமாக்க நினைத்தேன். பின்னர் பாடலும் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் நான்கு பாடல்களை படத்தில் இணைத்திருக்கிறேன். ஆனால் நான்கு பாடல்களுக்கும் விஜய் ஆண்டனி, அல்போன்ஸ் ஜோசப், ஷரத், எஸ்.எஸ்.தமன் என தலா ஒரு பாடல் என்று நான்கு இசையமைப்பாளர்களை வைத்து இசையமைத்திருக்கிறேன். மேலும், எங்கேயும் எப்போதும் சத்யா பின்னணி இசையமைத்திருக்கிறார். ஆக, இவர்கள் ஒவ்வொருவருமே தங்களது பெஸ்ட்டை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறார்கள். நான் எப்போதுமே பத்து வருடத்துக்கு பிறகு சொல்ல வேண்டியதை முன்பே சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவன். அப்படித்தான் குடைக்குள் மழை உள்ளிட்ட பல படங்களுக்கு கதை உருவாக்கினேன். அந்த வகையில, இப்போதைய ஆடியன்ஸ் இன்டலிஜன்டாகவும், இன்ட்ரஸ்டிங்காகவும் இருப்பதால் அதை மனதில் கொண்டு இந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை இயக்கியிருக்கிறேன். மேலும், மற்றவர்களை கிண்டல் செய்து படமெடுக்கிற பழக்கம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வருகிறது' என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேஸ்புக்கின் சி.இ.ஓ வான மார்க் ஐுகர்பெர்க்கிற்கு ஈரான் கோர்ட் சம்மன்! Posted: 28 May 2014 02:55 AM PDT
சமூக வலைதளமான பேஸ்புக்கின் சி.இ.ஓ வான மார்க் ஐுகர்பெர்க்கிற்கு ஈரான் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை பேஸ்புக் திருடுவதாக கூறி இந்த சம்மனை அனுப்பியுள்ளது. பேஸ்புக் சமூக இணையதள தலைமை செயல் அதிகாரி மார்க் ஐுகர்பெர்க்கிற்கு ஈரான் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான இஸ்னா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ள ஈரான் நாட்டினருக்கு, அதன் சில செயல்பாடுகள் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஈரான் கோர்ட், மூலம் ஐுகர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் இன்னொரு ஈரான் நீதிமன்றம் கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் என்னும் சமூக வலைதளத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும், ஈரானில் மக்கள் இன்னும் இந்த இரண்டு வலைதளங்களையும் தொடர்ந்து தங்கு தடையின்றி பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிப்ட் கொடுத்த மோடிக்கு தேங்க்ஸ்: நவாஸ் மகள் மரியம் ஷெரீப் Posted: 28 May 2014 02:50 AM PDT
எனது பாட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி கிப்ட் கொடுத்து அனுப்பியுள்ளார். இதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் ஷெரீப் கூறியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மரியம் எழுதியுள்ளார். நவாஸ் ஷெரீப், மோடி பதவியேற்புக்கு அழைக்கப்பட்டது முதல் உற்சாகமாக அதுகுறித்து எழுதி வருகிறார் மரியம். இந்த நிலையில், தனது பாட்டிக்கு அதாவது நவாஸ் ஷெரீப்பின் தாயாருக்கு மோடி சில பரிசுகளை கொடுத்து அனுப்பியுள்ளது குறித்து பூரிப்புடன் டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் மரியம். எனது பாட்டிக்கு பிரதமர் மோடி கொடுத்துள்ள பரிசுப் பொருட்கள் எனது தந்தையை வெகுவாக கவர்ந்து விட்டன. தனது தாயாருக்கு மோடி கொடுத்த ஷால் குறித்து அவர் பெருமிதம் அடைந்துள்ளார். அவரே மோடி கொடுத்த பரிசை தனது தாயாரிடம் நேரடியாக கொடுத்து சந்தோஷப்பட்டார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், எனது பாட்டிக்கு அழகான ஷால் கொடுத்து கெளரவித்த நரேந்திர மோடிக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மரியம் தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரீப் நேற்று தன்னைச் சந்தித்தபோது அவரிடம் அவரது தாயாருக்காக ஒரு அழகிய ஷால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எழுதிய கவிதைத் தொகுப்பு ஆகியவற்றைப் பரிசாக அளித்தார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. நவாஸ் ஷெரீப்பின் தாயார் இஸ்லாமாபாத்தில்தான் வசித்து வருகிறார். இருப்பினும் அவரை வாரம் ஒருமுறைதான் பார்ப்பாராம் ஷெரீப். இந்த நிலையில் மோடி தனது தாயாரைச் சந்தித்தபோது அவர் தனது மகனுக்கு இனிப்பு ஊட்டிய காட்சியை டிவியில் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தாராம் ஷெரீப்பின் தாயார். மேலும் கண்ணீரும் விட்டுள்ளார். ஷெரீப்பும் இதைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தாராம். இந்த விவரத்தை மோடியைச் சந்தித்தபோது பகிர்ந்து கொண்டார் ஷெரீப். இதையடுத்தே ஷெரீப்பின் தாயாருக்கும் அழகிய பரிசை மோடி கொடுத்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கேட் மிடில்டன்னின் பேர் பாட்டம் போட்டோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய செய்தித்தாள்! Posted: 28 May 2014 02:43 AM PDT
தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலிய அமெரிக்க தொழில் அதிபரான ரூபர்ட் முர்டோக்கின் செய்தித்தாளில் இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட்டின் வெளியிடக்கூடாத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல பத்திரிக்கை அதிபரான ஆஸ்திரேலிய அமெரிக்கரான ரூபர்ட் முர்டாக்கிற்கு சொந்தமான நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை லண்டன் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசியை ஒட்டு கேட்ட விவகாரம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வெளிவரும் ரூபர்ட் முர்டாக்கிற்கு சொந்தான செய்தித்தாள்களில் ஒன்றில் இங்கிலாந்து இளவரசர் வில்லயமின் மனைவி கேட் மிடில்டன்னின் வெளியிடக்கூடாத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. வில்லியமும், கேட்டும் கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது ப்ளூ மவுன்டெய்ன்ஸ் பகுதியில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி அவர்கள் நடந்தபோது பலமாக காற்று அடித்ததில் கேட்டின் கவுன் பறக்க அவரது ஆடையில்லா பின்னழகு(bare bottom) தெரிந்தது. இந்த புகைப்படம் தான் இன்றைய செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையான குளோசர் கேட்டின் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோட்டார் சைக்கிள் பறந்து பார்த்ததுண்டா?…. போட்டியில இதெல்லாம் சகஜம் பாஸ் Posted: 28 May 2014 02:30 AM PDT |
| சுண்டெலியின் அதிரடித் தாக்குதலில் நிலைகுலையும் மான்! Posted: 28 May 2014 02:28 AM PDT |
| ரயிலுடன் மோதி சுக்கு நூறாகும் ட்ரக் Posted: 28 May 2014 02:25 AM PDT |
| இளவட்டங்களுக்கு சவால்விடும் அசத்தலான நடனம்! Posted: 28 May 2014 02:20 AM PDT |
| இங்க என்னங்க நடக்குது?… ஒருவேளை சிலைக்கு உயிர் கொடுத்திருப்பாங்களோ! Posted: 28 May 2014 02:16 AM PDT |
| உங்கள் கண்முன் நடக்கும் வன்முறைகளின் உண்மை முகம் இப்படியும் இருக்கலாம்! Posted: 28 May 2014 02:11 AM PDT |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















