Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இந்தியாவில் தெரிவாகவுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்! தமிழ் தேசிய உறுப்பினர் மாவை சேனாதிராஜா கருத்து!

Posted: 11 May 2014 11:23 PM PDT

senathi-raja

senathi-rajaஇந்தியாவில் புதிதாக தெரிவாகவுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் 16ம் திகதிக்கு பின்னர் புதிய அரசாங்கம் பதவி ஏற்கவுள்ளது. இந்த நிலையில் புதிய அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தி, விரைவான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட தமிழ் தேசிய கூட்டமைப்பு விருப்பத்துடனும், தயாராகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த தினம் ஒன்றில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்த போது இந்த விடயத்தை தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் அரிதான நிலையில் பிறந்த இரட்டை பெண்குழந்தைகள்!

Posted: 11 May 2014 11:14 PM PDT

Twins-baby

Twins-babyஒகையோ என்ற இடத்தில் அரிதான நிலையில் பிறந்த இரட்டை பெண்குழந்தைகள் அன்னையர் தினத்தில் தாங்களாகவே சுவாசித்ததுடன் தாய் தந்தையர்கள் கைகளில் வைத்திருக்க கூடிய நிலையில் இருக்கின்றனரென கூறப்பட்டுள்ளது. இரட்டை குழந்தைகளான ஜிலியனும் ஜெனாவும் ஞாயிற்றுக்கிழமை செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டு இயற்கையாக சுவாசிக்கும் நிலையை அடைந்துள்ளதாக குழந்தைகளின் தாய் சாரா தெரிவித்துள்ளார். இந்த ஒத்த இரட்டை பெண் குழந்தைகள் ஒரே நஞ்சுக்கொடியையும் பனிக்குடப்பையையும் பகிர்ந்து கொண்டிருந்துள்ளனர். இத்தகைய பிறப்பு மொனொஅமிநொடிக் அல்லது மொனொ மொனொ என்று அழைக்கப் படுகின்றதென டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஒவ்வொரு 10,000 கற்பங்களில் ஒன்று தான் இவ்வாறு ஏற்படும் எனவும் கூறியுள்ளனர். வெள்ளிக்கிழமை ஒகையோவில் இக்குழந்தைகள் பிறந்தனர். பிறந்த குழந்தைகளை பெற்றோரிடம் காட்ட டாக்டர்கள் தூக்கிய போது ஒருவருக்கொருவர் கைகளை பிடித்த படி இருந்ததை கண்டுள்ளனர். இது தனக்கு ஒரு மிகச்சிறந்த அன்னையர் தின பரிசு என சாரா நாளேடு ஒன்றிற்கு கூறியுள்ளார். இரட்டையர்களின் பிரசவத்தில் உதவிய டாக்டர் மெலிஸ்சா மன்குசோ கடந்த 11 வருடங்களில் தான் உதவிய பல இத்தகைய பிரசவங்களில் இதுவும் ஒன்று என கூறியதோடு கற்பகாலத்தில் தொப்புள் கொடி சிக்கலடைந்தால் அதனால் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும் இத்தகைய கர்ப்த்தில் இருக்கும் இரட்டையர்களின் நிலை அபாயமானதெனவும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்புவை கடுப்பேற்றி வரும் ஹன்சிகா?

Posted: 11 May 2014 02:32 AM PDT

Hansika

Hansikaஹன்சிகா தனது முன்னாள் காதலரான சிம்புவை கடுப்பேற்றி வருகிறாராம். ஹன்சிகா சிம்புவை பிரிந்த பிறகு படங்களில் பிசியாக உள்ளார். சிம்புவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சிங்கிளாக இருப்பது ஜாலியாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஹன்சிகா செய்யும் செயல்கள் சில சிம்புவை கடுப்பேற்றும் விதமாக உள்ளது என்று கூறப்படுகிறது. சிம்புவுக்கு யார், யாரை எல்லாம் பிடிக்காதோ அவர்களுடன் ஹன்சிகா நட்பாக உள்ளாராம். காதல் முறிவுக்கு பிறகு நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் ஹன்சிகா. சேட்டை படத்தை அடுத்து ஆர்யாவுடன் சேர்ந்து மீகாமன் படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. படப்பிடிப்பில் ஆர்யாவின் தோளில் சாய்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹன்சி. ஹன்சிகா ஆர்யாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ரசிகர்களுக்காக அல்ல சிம்புவை கடுப்பேற்ற தான் ட்விட்டரில் போட்டுள்ளார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் ஹன்சிகா எப்பொழுதும் சிரித்துப் பேசி ஜாலியாக உள்ளாராம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹிருணிக்கா மீது பாய்ந்த ரஞ்சன் ராமநாயக்க!

Posted: 11 May 2014 02:19 AM PDT

Ranjan-Ramanayake

Ranjan-Ramanayakeஹரின் பெர்ணான்டோ எனது சிறந்த நண்பர், அவர் ஹிருணிக்காவுடன் தனிப்பட்ட சந்திப்பை மேற்கொண்டிருந்தால், அது அவரது தனிப்பட்ட விடயம். அது பற்றி நான் எதனையும் கூறப்போவதில்லை. ஆனால் சிறந்த எதிர்காலம் உள்ள அரசியல்வாதி என்ற வகையில், ஹரின் என்னை விட கவனமாக வேலை செய்ய வேண்டும். இப்படியான நடவடிக்கைகளால் எமக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு எம்மீதுள்ள நம்பிக்கை இல்லாமல் போகும். அத்துடன் அரசாங்கத்தில் இருப்பவர்களை எம்மால் விமர்சிக்க முடியாது போகும் எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ செய்யும் வேலைகளால், கட்சியினருக்கே கட்சியின் மீது நம்பிக்கையில்லாமல் போயுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஹரின் பெர்ணான்டோ மற்றும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோர் ரகசியமாக சந்தித்து கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நான் எனது உறவினரான அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவை கூட தனிப்பட்ட ரீதியில் சந்திப்பதில்லை. எம்முடன் விவாதிக்கும் டிலான், கெஹெலிய போன்றோரை உள்ளே கடுமையாக திட்டிவிட்டு, ஹோட்டல்களுக்கு சென்று ஒப்பந்தங்களை போடுவதில்லை. இதுதான் ரஞ்சன் ரமாநாயக்கவின் கொள்கை. நான் இரட்டை விளையாட்டு அரசியலில் ஈடுபடுவதில்லை. அப்படி செய்பவர்களை நான் வெறுப்பதுமில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழின அழிப்பிற்கு எதிரான கவனயீர்ப்பு மராத்தான் ஓட்டப் பந்தயம் தொடக்கம்!

Posted: 11 May 2014 02:07 AM PDT

marathon

marathonசுவிஸ் பேர்ண் நகரில் ஏறத்தாழ 33,000 போட்டியாளர்கள் சர்வதேச ரீதியாகக் கலந்து கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிரான கவனயீர்ப்பு மராத்தான் ஓட்டப் பந்தயம் நேற்று இடம்பெற்றுள்ளது. "பேர்ண் க்ராண்ட் பிறிக்ஸ் 2014 (GRAND PRIX BERN 2014 )" 16.3 கி.மீ ஓட்டப் பந்தயத்தில் எமது தமிழின உணர்வாளர்களும், இளையோரும் இணைந்த 10 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு பங்குபற்றிப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். அகவணக்கத்துடன் "மே- 18 தமிழின இன அழிப்பு நாளை" நினைவுகூர்ந்து எமது இலட்சியமாம் தமிழீழத்தை வென்றெடுக்கும்வரை எமது இலட்சியப் பயணம் எம்மால் முடிந்த வழிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென உறுதிமொழி எடுக்கப்பட்டு "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என்ற எமது தாரகமந்திரத்துடன் பயிற்சிகளை ஆரம்பித்தார்கள். பி.ப 16.40 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகின. போட்டிகளில் பங்குபற்றியிருந்த வீரர்கள் "ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்புக்கு எதிரான ஓட்டம்" எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட ரிசேர்ட்டை அணிந்திருந்தார்கள். ஸ்ரீ லங்கா அரசின் தமிழின அழிப்பு சார்ந்த விளக்க துண்டுப்பிரசுரங்களும் பார்வையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன‌. இக்கவனயீர்ப்பு மரதன் ஓட்டமானது கலந்துகொண்ட போட்டியாளர்கள், பார்வையாளர்களினதும் கவனத்தை ஈர்த்தது. ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வேற்றின மக்கள் இப்போட்டிகளைக் கண்டுகளித்தார்கள். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொதுத் தேர்தலால் ஆளும் கட்சிக்கு 15 ஆசனங்கள் குறையும்: அரசியல் ஆய்வாளர்கள்!

Posted: 11 May 2014 01:50 AM PDT

Rajabakshe

Rajabaksheஉரிய காலத்திற்கு முன்னர், பொதுத் தேர்தலையோ ஜனாதிபதித் தேர்தலையோ நடத்தாது, அதனை ஒத்திவைக்க வேண்டும் என அரசாங்கத்தின் உயர் மட்ட அமைச்சர்களிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதலில் பொதுத் தேர்தலை நடத்தி விட்டு அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தலாம் என சிலரும், முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்திய பின்னர், அடுத்து பொதுத் தேர்தலை நடத்தலாம் என மேலும் சிலரும் யோசனை முன்வைத்துள்ளனர். எவ்வாறாயினும் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில், முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் 15 நாடாளுமன்ற ஆசனங்கள் குறையும் எனவும் இதனால் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி விட்டு பின்னர் பொதுத் தேர்தலை நடத்தினால் 10 ஆசனங்களே குறையும் என அரசியல் ஆய்வாளர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர். எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தை பெற முடியாது போகும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக ஜனாதிபதி செயலாகத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த வெள்ளிக் கிழமை விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவிருந்ததுடன், திடீரென அது ஒத்திவைக்கப்பட்டது. அதேவேளை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் தமக்கு சார்பான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வரும் சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவது அரசாங்கத்திற்கு பாதிப்பாக அமையும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முதலில் மேற்குலக நாடுகளிடம் இருந்து வரும் தடைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையவுள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் இரண்டாம் தவணை பதவிக்காலமும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், எந்த விதத்திலாவது இந்த இரண்டு தேர்தல்களையும் முன்கூட்டியே நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™