Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தேன் மகிமை

Posted: 06 May 2014 02:49 PM PDT

* உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும். * அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். * அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத்தளர்ச்சியும் நீங்கி விடும். * என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்த வேண்டும். * உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் ...

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Posted: 06 May 2014 02:43 PM PDT

பிறந்த குழந்தையை போட்டோ எடுக்க கூடாது என பரவலான கருத்து உள்ளது.தவறு என்றால் ஏன் ? அறிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்

இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

Posted: 06 May 2014 02:09 PM PDT

இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் இங்கிலாந்தின் ப்ரிமிங்ஹம் நகரில் வசிக்கும் ஓர் இந்திய வம்சாவழி குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அப்பகுதியில் உள்ள பிரபலமான இந்திய உணவு விடுதிக்கு சாப்பிட சென்றனர். பின்னர், வீடு திரும்புவதற்காக காரில் ஏறும்போது, இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்து, கண்மூடித்தனமாக தாக்கியது. 'கிரிக்கெட் பேட்', 'பேஸ்பால் பேட்', டயர்களை கழற்றும் இரும்பு லிவர் போன்ற கொலையாயுதங்களைக் கொண்டு அந்த கும்பல் நடத்திய இந்த அதிரடி ...

மனசாட்சி!!

Posted: 06 May 2014 10:17 AM PDT

முத்தமிழ் அன்று அலங்கரித்தது!
பாக்களையும்! சபாக்களையும்!
ஆனால், இன்றோ!
தெனாவெட்டாய் பேசும் சென்னைத் தமிழ்!
அதிரப் பேசும் மதுரைத் தமிழ்!
கொஞசிப் பேசும் கோவைத் தமிழ்!
அனலாய்ப் பேசும் நெல்லைத் தமிழ்!
இவையனைத்திலும் சோரம் போய் நிற்கிறதே என்தமிழ்!
ஒரு ஓரம் போய் நிற்கிறதே செந்தமிழ்!
நான்  எப்படிச் சொல்வேன்!?
என் மனசாட்சியை வெல்வேன்!?
கண்மூடித்தனமாய்  .  . . . . .  என்
' தமிழுக்கு அமுதென்று பேர் என்று !! .  . . . .

துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!

Posted: 06 May 2014 10:13 AM PDT

போரூர்: போரூர் ஏரியில், துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் யார் என, அடையாளம் தெரிந்தது. ஒருதலை காதலால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த, 3ம் தேதி, போரூர் ஏரியில், துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண், நெசப்பாக்கம், அன்னை சத்யா நகர், 10வது தெருவை சேர்ந்த, ரேகா, 25, என்பது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற தன் மனைவி, கடந்த, 1ம் தேதி முதல் காணவில்லை என, ஸ்ரீராம், 27, என்பவர், எம்.ஜி.ஆர்.நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். ...

எனது அறிமுகம்...

Posted: 06 May 2014 10:05 AM PDT

குறிப்பிட்டு சொல்லும் படியாக இல்லை என்றாலும், இந்த ஈகரை-யில் நிறைந்திருக்கும் உறுப்பினர்களில் நானும் ஒருத்தியாக இணைந்து இருப்பதில் எனக்கும் பெருமை தான்.

சூரியன் உதிக்காமல் போனால்...

Posted: 06 May 2014 09:47 AM PDT

சூரியன் உதிக்காமல் போவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் சூரியனிடமிருந்து வழக்கமாகக் கிடைக்க வேண்டிய வெப்பம் கிடைக்காமல் பல வார காலம் அல்லது பல மாத காலம் தூசு மண்டலம் சூரியனை மறைத்தபடி இருப்பதற்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. அப்படியான நிலைமை ஏற்பட்டால். விபரீத விளைவுகள் ஏற்படும். பூமி ஒரேயடிகாகக் குளிர்ந்துவிடும். இதை எரிமலையால் ஏற்பட்ட குளிர் பருவம் (Volcanic winter) என்பர். கோடையில் நல்ல வெயில் அடிக்க வேண்டிய பருவத்தில் பனிப்பொழிவு (Snowfall) இருக்கும். பயிர்கள் பொய்த்து விடும். மக்கள் உணவுக்குத் திண்டாடும் ...

அன்னை மடி மெத்தை! புகற்றிடும் பல வித்தை!

Posted: 06 May 2014 09:46 AM PDT

பிறந்தேன் அழுதேன்! பாரினை புரிந்தேன்! பரவசம் அடைந்தேன்! பணிகளை அறிந்தேன்! பயணத்தைத் தொடர்ந்தேன்! என் நிலை அறிந்தேன்! எனக்கென முயன்றேன்! ஏற்றவர் வாழ்வை! ஏணியாய் கொண்டேன்! ஏற்றங்கள் பெற்றேன்! கல்வியை மதித்தேன்! கலை பல கற்றேன்! கற்றதை செய்தேன்! கண்டதை படித்தேன்! பண்டிதனானேன்! தாகம் கொண்டேன்! தாவிச் சென்றேன்! தடைகளை உடைத்தேன்! தனி வழி சமைத்தேன்! தேன் சுவையானேன்! பெற்றார் மதித்தேன்! பெற்றவர் பணிந்தேன்! மற்றவர் போற்ற! மானிடம் சிறக்க! மேலிடம் ஆனேன்! ஊரவர் ...

மும்மாரி-ஹைக்கூ

Posted: 06 May 2014 09:46 AM PDT

நடந்தது
கல்யாணம்
மழை வேண்டி கழுதைக்கு.

ராஜாகள் ஆணடால்
சொல்வார்கள் மந்திரிகள்
மாதம் மும்மாரி.

மழை இல்லை
தொலைகாட்சி தொடரில்
மெய் மறந்திருப்பரோ வருண பகவான்.

வருமோ கால்நடைபிழைக்க
மனிதர்கள் பொருட்டு
வாரா மழை.

தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை!

Posted: 06 May 2014 09:44 AM PDT

சென்னை: வங்க கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகி உள்ளது.இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்திலேயே, தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியது. கடல் காற்று வீசாத நிலையில், தமிழகத்தின் பல நகரங்களில் கடும் வெப்ப நிலையே நீடித்தது. வெப்ப சலனம் காரணமாக, அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் அது போதுமானதாக இல்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், பல இடங்களில் தொடர்ந்து ...

இன்று இரவு உங்கள் செல்போனை அணைத்து வையுங்கள்......

Posted: 06 May 2014 09:44 AM PDT

இன்று இரவு உங்கள் செல்போனை அணைத்து வையுங்கள்...... [size=16]//Tonight 12:30 am to 3:30 am cosmo rays entering earth from mars. So switch off your mobile at night. Don't keep your cell with you & put it away while you are sleeping because they are too much dangerous rays: NASA informs BBC NEWS. Pls spread this news.//[/size] இப்படி ஒரு மெசேஜ் எல்லோருக்கும் பரவுகிறது ; - ( எனக்கும் வந்தது ) பயப்பட வேண்டாம் என்று இந்த சைட் இல் போட்டிருக்காங்க எனவே நண்பர்களே பயப்படவேண்டாம் http://journeytothestars.wordpress.com/2012/04/07/hoax-alert-cosmic-rays-from-mars-entering-earth/

முல்லைவாசன் - அறிமுகம்

Posted: 06 May 2014 09:31 AM PDT

பெயர்: முல்லைவாசன்
சொந்த ஊர்: குடியாத்தம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தோழர் இராமஜெயம், கவியருவி ம. ரமேஷ்,
பொழுதுபோக்கு: கவிதைகள் எழுதுவதும் வாசிப்பதும்
தொழில்: தமிழாசிரியர்
மேலும் என்னைப் பற்றி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வேலூர் மாவட்ட செயலாளர்.

தாய்லாந்து நாட்டில் பள்ளி அருகிலும் காவல் நிலையம் அருகிலும் குண்டு வெடித்தது

Posted: 06 May 2014 09:23 AM PDT

தாய்லாந்து நாட்டில் தென்பகுதியில் அமைந்துள்ள யாலா, பத்தானி, நராதைவாத் மாகாணங்களில் கடந்த பல ஆண்டுகளாக தீவிரவாதிகளின் அட்டூழியம் தலைதூக்கி வருகிறது. இன்று பாங்காக்-ல் இருந்து 755கி.மீ(470மைல்) தொலைவில் உள்ள ஹாட்யாயில் இரண்டு குண்டுகள் ஏழு நிமிட இடைவெளியில் வெடித்தன.

முதல் குண்டு கடையில் வெடித்ததில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். இரண்டாவது குண்டு காவல்நிலையம் அருகில் வெடித்ததில் யாரும் காயம் அடையவில்லை. இந்த குண்டு வெடிப்பில் முஸ்லீம் போராளிகள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

"காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் ஐ போடுங்கள் " என்று நூதன விளம்பரம் :)

Posted: 06 May 2014 09:20 AM PDT

The Seat belt Crew !


16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை தடை: இந்தியா ஆதரவு!

Posted: 06 May 2014 09:14 AM PDT

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டி 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை அரசு விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், அமெரிக்கா நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசால் தடைவிதிக்கப்பட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த சில பிரதிநிதிகள் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் கடந்த 1ஆம் தேதி மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேசியதாக, ...

நாய்க் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை

Posted: 06 May 2014 08:44 AM PDT

'நாய்க் குட்டிகள் விற்பனைக்கு' என்று எழுதிய பலகையை தனது கடை கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர். அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன் கடையின் முன் வந்து நின்றான். "நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான். "முப்பது டாலரிலிருந்து" - கடைக்காரர் பதில் சொன்னார். அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தான் "எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான் நாய்க்குட்டிகளைப் ...

ஆசைகளை ராஜினாமா செய்!

Posted: 06 May 2014 08:34 AM PDT

நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது, நாம் அவற்றøவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்த பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக் கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளை குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் ...

பிரபஞ்சம் எப்படி உருவானது?

Posted: 06 May 2014 08:28 AM PDT

பிரபஞ்சம் என்பது ஒரு அதி அடர்த்தியா ன பந்து போலத்தான் முதலில் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த அடர்த்தியான 'பிரபஞ்ச முட்டை' (Cosmic egg) தான் படுபயங்கரமான ஒரு வெடிப்பினால் அப்படியே விரிவடைந்து, இப்போது நாம் காணும் பிரபஞ்சமாக உருவாகியுள்ளது. இந்தக் கருத்தை முதலில் கூறியவர் பெல்ஜிய நாட்டு வானியல் வல்லுனர் ஜார்ஜ் லமாய்டர் (Georges Lemaitre) என்பவர் தான். இப்படி ஒரு சிறிய அதி அடர்த்தியான உடல் வெடித்து அதனால் பிரபஞ்சம் உருவான நிகழ்வை 'மகா வேட்டு' அல்லது 'மகா வெடிப்பு' ...

மருமகள்! - சிறுவர் கதை

Posted: 06 May 2014 08:23 AM PDT

மருதமலை இளவரசன் இளமாறன் அழகும், நற்பண்புகளும் நிறைந்தவ னாக விளங்கினான். அவனுக்குத் திருமணம் செய்ய அரசி நினைத்தாள். பல நாட்டு இளவரசியருள் நான்கு பேரைத் தேர்ந்து எடுத்தாள். அவர்கள் நால்வரும் மகிழ்ச்சியுடன் மருதமலை வந்து அரண்மனையில் தங்கினர். அவர்களிடம் இளவரசன் நன்றாக பேசினான். இளமாறனை அழைத்த அரசி, ""மகனே! நான்கு இளவரசிகளில் உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது என்று சொல். திருமணம் செய்து வைக்கிறேன்,'' என்றாள். ""அவர்கள் நால்வரும் அழகும், நற்பண்பும் உடையவர்களாக விளங்கு கிறார்கள். நீங்கள் யாரைத் ...

உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம்

Posted: 06 May 2014 08:22 AM PDT

திருமணத்தின்போது மணப்பெண்ணை வெள்ளைச் சேலை உடுத்தச் செய்வதும், காலங் காலமாக கிராமத்தில் எந்தச் சூழலிலும் குடையை உபயோகிக்கக் கூடாது என்ற இருவேறு பழக்கங்களைக் கொண்ட அதிசய கிராமம் உருளி. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ளது இந்தக் கிராமம். ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு இனத்திலும் திருமண முறைகள் அவரவர் முறைப்படியே காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில், உருளி, கோடாங்கிபட்டி, மாங்குடி மற்றும் காயாங்குளம் ஆகிய கிராமங்களில் திருமண வைபவத்தின் ...

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

Posted: 06 May 2014 08:10 AM PDT

இந்தியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்திய தென்னாப் பிரிக்க அரசுக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த வீரத் தமிழச்சிதான் தில்லையாடி வள்ளியம்மை. அந்த வீரநங்கையின் நூறாவது பிறந்த நாளும் நினைவு நாளும் பிப்ரவரி 22-ல் வருகிறது. இதற்காக ஏற்பாடாகும் நிகழ்ச்சிக்காக வள்ளி யம்மையின் உறவுகள் முதல்முறை யாக, தில்லையாடி மண்ணில் கால்பதிக்க வருகிறார்கள். காய்கனி வியாபாரியின் மகள் நாகை மாவட்டம் தில்லையாடி யைச் சேர்ந்த மங்கலம் என்ற ஜானகியும் புதுச்சேரி முனுசாமி முதலியாரும் தென்னாப்பிரிக் காவில் காய் கனி வியாபாரம் ...

பெண்களின் தெய்வம்!

Posted: 06 May 2014 08:04 AM PDT

மே 10 - மீனாட்சி கல்யாணம் கந்தர்வ லோகத்தில் வசித்த விச்வாவஸு என்பவன் சிவனருளால், வித்யாவதி என்ற குழந்தையைப் பெற்றான். ஒரு சமயம், வித்யாவதிக்கு, அம்பாள் அருள் பாலிக்கும், பூலோக புண்ணிய தலங்களுக்கு செல்ல வேண்டும் என, விருப்பம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விச்வாவஸு அவளிடம், 'கடம்பவனம் எனப்படும் மதுரையில், 'சியாமளா' என்ற பெயரில், அம்பாள் அருள்பாலிக்கிறாள். அவளை வழிபட்டு வா...' எனக் கூறினான். அதன்படி அம்பாளைத் தரிசிக்க, வித்யாவதி கடம்பவனம் வந்தாள். சியாமளா தேவி ...

நிம்மதியைத் தேடி...!! { கவிதை }.

Posted: 06 May 2014 08:03 AM PDT

* வெகு சீக்கிரத்தில் யாரையும் நம்பிவிடுவதில்லை ஆடுகள். எப்பொழுது வெட்டுப்படுவோம் என்பது புரியாமல் கசாப்புக்காரனை நம்பி அவன் பின்னால் போய்க் கொண்டிருக்கிறது கம்பீரமாக…!!. *** * அம்மாவைப் பற்றி அப்பாவிடம் அப்பாவைப் பற்றி அம்மாவிடம் இப்பொழுதே போட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டன சின்னக் குழந்தைகள் .* நிம்மதி நிம்மதி நிம்மதியில்லாமல் நிம்மதியைத் தேடி அலைகிறது மனம். ***

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!

Posted: 06 May 2014 08:01 AM PDT

"ஆலூர், அரசலூர், அத்திப்பட்டு என்ற ஊரின் பெயர்களெல்லாம் நமது மரங்களின் பெயரால்தான் வைக்கப்பட்டன. உசிலம் மரங்கள் நிறைந்திருந்ததால் உசிலம்பட்டி என்று பெயர் வைத்தனர். ஆக நமது மண்ணும் கலாசாரமும் மரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்தது. இப்போது அந்நிய தாவரங்கள் கோலோச்சும் காலம். அதனால் தமிழகம் பாலையாக மாற வாய்ப்பு அதிகம் உண்டு. அதிலிருந்து மீள நாம் மநது தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்க்க வேண்டும்' என்று எச்சரிக்கை விடுகிறார் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த கண்ணன். இவர் கொடைக்கானலை மையமாகக் கொண்டு ...

தெரிஞ்சுக்கோங்க!..............வெண்குஷ்டம் என்றால் என்ன தெரியுமா?

Posted: 06 May 2014 07:58 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (8)

Posted: 06 May 2014 07:53 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

அரசியல் ஆசை - படுதலம் சுகுமாரன் !

Posted: 06 May 2014 07:46 AM PDT

கடை வீதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான் வேல்ராஜ். ''உன்னைத்தான் தேடிகிட்டிருந்தேன்,'' என்று, வழி மறித்த முத்து, தோளில் தொங்கிய கலர் துண்டால், வியர்வையை துடைத்துக் கொண்டார். ''சொல்லுங்க மாமா,'' என்றான் வேல்ராஜ். ''உன்கிட்ட பேசணும்; அவசர வேலை எதுவும் இல்லையே?'' ''அவசர வேல ஒண்ணும் இல்ல மாமா; நீங்க சொல்லுங்க, என்ன விஷயம்ன்னு. உங்களை பாக்கறதே அபூர்வம்; எப்பவும் கட்சிப் பணின்னு, கால்ல சக்கரத்தக் கட்டிகிட்டு ஓடிகிட்டே இருப்பீங்க.'' ''அந்த ஓட்டத்துக்கு, ஒரு அர்த்தம் கொடுக்கணும்ன்னுதான் உன்னை ...

உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்!

Posted: 06 May 2014 07:40 AM PDT

www. rtoaifmvd.com இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, என்ஓசி., சான்றிதறைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. www. consumer.tn.gov.in தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் ...

படித்ததில் பிடித்தது :) - இவர்களுக்கு யார் பாடம் புகட்டுவது?

Posted: 06 May 2014 07:31 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

மழை-ஹைக்கூ

Posted: 06 May 2014 07:26 AM PDT

மழை வேண்டுகிறான்
சம்சாரி
வழிந்தோடும் வியர்வை.


பெருமழை
சப்தம்
பெண்களின் பேச்சு.

கப்பல்விடும் குழந்தை
தெருவெள்ளத்தில்
கனவில்.

சொல்லக் கேள்வி
காணக்கிடைக்கவில்லை
மாதம் மும்மாரி.

இயற்கை வைத்தியக் குறிப்புகள்

Posted: 06 May 2014 06:48 AM PDT

படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர

பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைஸாக அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ஏற்படும்.

நன்றி சொல்லுங்கள்...!! { ஹைக்கூ }.

Posted: 06 May 2014 06:44 AM PDT

* சூரியனை சிறைப் பிடிக்க தாமரையின் முயற்சி முழ்கித் தவிக்கும் மரம். * மௌனத்தில் கசியும் ஆரவாரமற்ற நெஞ்சு இயலாமையற்று சோகம். * பிளவுப்பட்டது ஒன்றுபட்ட வீடு தடை மீறும் குருவிகள். * மலர்ந்தும் மௌனம் இறந்தும் கவனம் நிரந்தரமற்ற உயிர்ப்பு. * நன்றி சொல்லுங்கள் உங்களுக்காய் தவம் பேரூந்து நிழற்குடை. *** ஆதாரம் : jதிரு. செல்லம்மாள் கண்ணனின்" " காலச் சிறகு " – என்ற கவிதை நூல். ***

முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Posted: 06 May 2014 05:32 AM PDT

தலையில் தீட்டினார்கள்
கூா்மையானது
தலையெழுத்து

முழித்தது
பிள்ளையாா் சுழி
தலைவர்களின் கமிசன்.

புல்லரித்தது புல்
நெற்றியில்
பனித்துளி பொட்டு

எறும்புகள் வரிசை
வறுமைக் கோடு
பாதங்களே பராக் பராக்.

வானத்துக்கு கல்மனது
கழுதைகளுக்கு
கல்யாண குணம்.

பித்தம் தணிக்கும் பழைய சோறு!

Posted: 06 May 2014 05:30 AM PDT

'அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்... வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!'' - வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடி பெரிசுகள் பேசும் இந்த டயலாக், வெறும் வார்த்தை மட்டுமல்ல... 100 சதவிகிதம் உண்மை. 'ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில்தான் அத்தனை சத்துகளும் இருக்கின்றன' என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துணைப் பேராசிரியர் உஷா ஆன்டனி. பட்ட ...

முல்லைவாசன் கவிதைகள்

Posted: 06 May 2014 04:45 AM PDT

நொண்டிக் கனவுகள் இலைசீவி இலைசீவி சுருள்வதற்கு வடிவெடுக்கும் பீடியின் அவதாரத்தில் கூலியின் சேதாரம் கண்டுபிடிப்பது யாரோ? துண்டுபீடி காலில் மிதிபடும் போது அணையும் நெருப்புக்கு அடுப்பின் முன்கதைச் சுருக்கம் சொல்வது யாரோ? டீ யில் தொடங்கி டீ யில் முடியும் எல்லா நாள்களிலும் பீடி கணக்கில் ஏறும் எல்லா கணக்கும் சமன்பாடுகளில் அடங்குவதில்லை ஆற்றை சுருட்டியவர்கள் காட்டை சுருட்டியவர்கள் மலையை சுருட்டியவர்கள் ஆல்போல் பெருகினார்கள் அருகுபோல் தழைத்தார்கள் சருகுகளை சுருட்டிய நாங்கள்? நழுவாமல் ...

எம்மைப் பற்றி - கோ. செந்தில்குமார்

Posted: 06 May 2014 02:58 AM PDT

பெயர்: கோ. செந்தில்குமார் சொந்த ஊர்: ஊசூர் (தங்க கோவில் அருகே), வேலூர் மாவட்டம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள் ஆண்டவர் (கூகுள் தேடுபொறி) பொழுதுபோக்கு: ஆன்மீகம், அரசியல், சோதிடம், கைரேகை, எண் கணிதம், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள், மின்னணுவியல், மனையடி கலை, சித்த மருத்துவம் தொழில்: காவல் உதவி ஆய்வாளர் (தொழில் நுட்பம்) மேலும் என்னைப் பற்றி: ஆன்மீகச்சுடர் வலைப்பூவில் காண்க     

நார்கோலெப்சி - Narcolepsy - அதீத தூக்கம்!

Posted: 05 May 2014 10:46 PM PDT

'மூளையில் ஹைபோகிரெடின் (ஆரக்சின் என்றும் அழைக்கப்படும்) என்ற ரசாயனத்தின் சுரப்பு குறைவதால் 'நார்கோலெப்ஸி' ஏற்படும். இது பரம்பரை வியாதியாக வருவதற்கு மிகக் குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் 10 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். சிலருக்கு 50 வயதுக்கு பிறகும்கூட வரலாம். ஏன் இந்த ரசாயனக் குறைபாடு ஏற்படுகிறது என்பதைக் கணிக்கவே முடியாது. நார்கோலெப்ஸி உள்ளவர்களுக்கு, பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமாகத் தூக்கம் வரும். அப்படி தூக்கம் வரும்போது, தங்களைக் கட்டுப்படுத்த ...

தாய்லாந்தில் கடும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

Posted: 05 May 2014 10:34 PM PDT

 தாய்லாந்த் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவு 6.3ஆக பதிவாகியுள்ளது. வடக்கு தாய்லாந்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் விரிசல் அடைந்தது, மேலும் சில வீடுகள் இடிந்து தரை மட்டமானது. இவ்விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், மேலும் ஒருவர் உயிர் இழந்தார் என தகவல் தெரிகிறது.

முகத்தை பாதுகாக்கும் முறைகள்

Posted: 05 May 2014 10:34 PM PDT

ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான சருமம் உள்ளது. அதில் ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எண்ணை வழியும் முகத்திற்கு மருந்து கடைகளில் ஹெர்பல் ஸ்கின் டானிக் கிடைக்கும். இதனை இரவில் முகத்தில் பூசிக்கொள்ளவும். இவ்வாறு செய்து வந்தால் கறுத்துப் போவது, வறண்டு போவது, மற்றும் பருக்களிலிருந்து முகத்தைக் காப்பாற்றலாம். பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே ...

அணில்கள்...!! { ஹைக்கூ }

Posted: 05 May 2014 10:11 PM PDT


*
பசிக்கு அழுகிறது குழந்தை
கொய்யா மரத்தில்
பழம் தின்னும் அணில்.

*
கோபுர சிலையின்
அழகை ரசிக்கின்றன
வெண்புறாக்கள்.
*
எலிகளின் நடமாட்டம்
கண்காணிக்கின்றன
தூங்கும் பாவனையில் பூனை.
888

அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!

Posted: 05 May 2014 09:10 PM PDT

1. மோர்மோன் உள்ளாடைகள் மோர்மோன் கிறிஸ்துவ ஆலயத்தில் பல விந்தையான நடைமுறைகள் உள்ளது. அதில் ஒன்று தான் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிவது. அப்படி செய்வதால் அவர்கள் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். இடைக்காலத்தின் போது இந்த உள்ளாடைகள் உலோகத்தில் செய்யப்பட்டிருந்தது. அம்புகள் மற்றும் நேரடி தாக்குதல்களில் இருந்து அவர்களை இது காத்தது. 2.ஆகாய புதைப்பு இறந்த பின்னரும் கூட மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என சோரோஸ்ட்ரியன்கள் (பார்சி) நம்பினார்கள். அதனால் இறந்த ...

அவன் எப்போது தாத்தாவானான் –விக்ரமாதித்யன்

Posted: 05 May 2014 07:08 PM PDT

1. எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு எப்பொழுதும்போல இருக்கிறேன் எப்பொழுதும்போல என்றால்? எப்பொழுதும் போலத்தான் அதாவது பசித்தால் சாப்பிடுகிறேன் தூக்கம் வந்தால் தூங்குகிறேன் காசு கிடைத்தால் குடிக்கிறேன் வெளியில் சொல்லமுடியாதபடி வாழ்கிறேன் ஏதாவது படிக்கத்தோன்றினால் படிக்கிறேன் எழுதத் தோன்றினால் எழுதுகிறேன் நண்பர்களைப் பார்க்க விரும்பினால் தேடிப்போய் பார்க்கிறேன் அமைதியாக இருக்கலாமெனப் பட்டால் அமைதியாக இருக்கிறேன் ஊர் சுற்றும் எண்ணம் வந்தாக்கால் ஊர் ...

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

Posted: 05 May 2014 07:06 PM PDT

சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை "அக்னி நட்சத்திரம்' என்று சொல்வர். அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறும். இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் ...

ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க

Posted: 05 May 2014 06:33 PM PDT

கண், காது, மூக்கு, வாய் (நாக்கு), மெய் (தோல்) ஆகிய ஐம்புலன்களுக்கும் உடல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே இவற்றுக்குத் தீமை வராமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கல்வி உள்பட வாழ்க்கையில் மேன்மை அடைவதில் எவ்விதத் தடையும் இருக்காது. விண்ணில் பறந்து கொண்டிருக்கும் போதே 1000 அடி கீழே உள்ள கோழிக் குஞ்சைப் பார்த்து "லபக்" கென்று கால்களால் கவ்வும் திறன் படைத்தவை கழுகுகள். இயற்கையிலேயே கழுகுக்கு கண்கள் வரப்பிரசாதம். இதே போன்று இயற்கையிலேயே அனைத்துத் திறனுடன் கிடைத்த கண்களை நாம் பாதுகாக்க வேண்டும். ஒருவரின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™