மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அன்புமணிக்கு மந்திரி பதவி: பிரதமர் நரேந்திரமோடி வாக்குறுதி
- ஆனந்த்கீதே பொறுப்பு ஏற்கிறார்: ரெயில்வே இலாகா கேட்டு சிவசேனா கட்சி பிடிவாதம்
- பாராளுமன்றத்தில் சுமித்ரா மகாஜன் புதிய சபாநாயகர் ஆகிறார்
- ஒய்எஸ்ஆர் காங். அடுத்த தேர்தலுக்குள் காணாமல் போய்விடும்: சந்திரபாபு நாயுடு
- காளஹஸ்தி கோவிலில் தமிழக பக்தர்கள் உள்பட 5 பேரை மின்சாரம் தாக்கியது
- பத்மநாபசாமி கோவில் சொத்து கணக்கெடுக்கும் பணி அடுத்த மாதம் தொடக்கம்
- மோடி அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கினர் மீது கிரிமினல் வழங்குகள்
- கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இராணி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லை: அஜய் மக்கான் டுவிட்
- கறுப்பு பண விவகாரத்தில் ஆழமான ஆய்வு நடத்தப்படும்: நீதியரசர் எம்.பி ஷா
- ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரியும் ரெயில்வே அமைச்சரின் தம்பி
- அமைச்சருக்கான துறை ஒதுக்கீட்டில் அதிருப்தி: சிவசேனா நாளை இறுதி முடிவு
- வேலைக்கு வராமல் லீவெடுத்த காவல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார் பாதல்
- பிணைப்பத்திரம் தாக்கல் செய்து கெஜ்ரிவால் சிறையிலிருந்து விடுதலையானார்
- முதல் பேட்டியிலேயே சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
- கருப்பு பண விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
- நாக்பூர் பிளையிங் கிளப்பில் முதல் பெண் பயிற்றுவிப்பாளர் நியமனம்
- இந்தியா-பாக். பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்: நவாஸ் செரீப் உறுதி
- ராஜபக்சே அழைப்பை ஏற்று இலங்கை செல்கிறார் மோடி: வெளியுறவுத்துறை செயலாளர் பேட்டி
- சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை: நிர்மலா சீதாராமன்
- நவாஸ் உடன் மும்பை தாக்குதல் வழக்கு குறித்து மோடி பேசியதாக தகவல்
| அன்புமணிக்கு மந்திரி பதவி: பிரதமர் நரேந்திரமோடி வாக்குறுதி Posted: 27 May 2014 11:02 PM PDT பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரியை நேற்று முன்தினம் பதவி ஏற்றது. அப்போது, பா.ம.க. எம்.பி அன்புமணி மந்திரியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு மந்திரி பதவி கொடுக்கப்படவில்லை |
| ஆனந்த்கீதே பொறுப்பு ஏற்கிறார்: ரெயில்வே இலாகா கேட்டு சிவசேனா கட்சி பிடிவாதம் Posted: 27 May 2014 10:26 PM PDT பா.ஜனதா கட்சியின் நீண்ட நாள் நண்பனாக சிவசேனா கட்சி விளங்குகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் இந்த கூட்டணி பெருவாரியாக வெற்றியை குவித்தது. சிவசேனா மட்டும் 18 எம்.பி.க்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் 2–வது பெரிய கட்சியாக உள்ளது. மோடி மந்திரிசபையில் சிவசேனாவைச் சேர்ந்த ஆனந்த்கீதே என்பவர் மட்டும் மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு கனரக தொழிற் |
| பாராளுமன்றத்தில் சுமித்ரா மகாஜன் புதிய சபாநாயகர் ஆகிறார் Posted: 27 May 2014 10:25 PM PDT 16–வது பாராளுமன்றம் விரைவில் கூடுகிறது. பாரதீய ஜனதாவின் மூத்த தலைவரான அத்வானி, மோடி மந்திரிசபையில் இடம் பெற விரும்பவில்லை. எனவே புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் சபாநாயகராக பதவி ஏற்கவும் அத்வானி விரும்பவில்லை. இதையடுத்து அனுபவம் |
| ஒய்எஸ்ஆர் காங். அடுத்த தேர்தலுக்குள் காணாமல் போய்விடும்: சந்திரபாபு நாயுடு Posted: 27 May 2014 10:09 PM PDT தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மாநாடு ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. மாநாட்டில் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:– ஊழலை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்த தேர்தலில் ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளின் நிலை என்ன வாகும் என்பதற்கு காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை உதாரணமாகும். தேர்தலில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் பாடம் புகட்டியுள்ளனர். நான் ஊழல் செய்து தின்ன மாட்டேன். பிறறையும் தின்ன விட மாட்டேன். ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ஊழல் நடந்தது. அப்படி ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு போய் வந்துள்ளனர். |
| காளஹஸ்தி கோவிலில் தமிழக பக்தர்கள் உள்பட 5 பேரை மின்சாரம் தாக்கியது Posted: 27 May 2014 09:58 PM PDT கோடை விடுமுறை முடியும் தருவாயில் உள்ளதால் திருப்பதி மற்றும் காளஹஸ்தி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தற்போது கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் காளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் நெரிசல் காரணமாகவும் |
| பத்மநாபசாமி கோவில் சொத்து கணக்கெடுக்கும் பணி அடுத்த மாதம் தொடக்கம் Posted: 27 May 2014 09:53 PM PDT பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த பொக்கிஷங்கள் பற்றி கணக்கெடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கணக்கெடுக்கும் பணிக்கு சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட |
| மோடி அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கினர் மீது கிரிமினல் வழங்குகள் Posted: 27 May 2014 08:17 PM PDT இந்தியாவில் சமீபத்தில் பொதுத் தேர்தல் முடிந்து பா.ஜனதா கட்சியின் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 26ஆம் தேதியன்று மத்திய அமைச்சரவைக் குழு பதவிப் பிரமாணம் செய்தது. பிரதமர் உட்பட அன்று பதவியேற்ற மொத்தம் 46 அமைச்சர்களில் 44 பேரின் சுய விபரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் பகுப்பாய்வு செய்து வெளியிட்டுள்ளது. |
| கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இராணி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லை: அஜய் மக்கான் டுவிட் Posted: 27 May 2014 05:20 PM PDT நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அமேதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிரிதி இராணி மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு கல்வி மற்றும் மனித வள மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து |
| கறுப்பு பண விவகாரத்தில் ஆழமான ஆய்வு நடத்தப்படும்: நீதியரசர் எம்.பி ஷா Posted: 27 May 2014 04:52 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று மாலை நடந்தது. பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற மந்திரிகள் பங்கேற்றனர். இதில் மத்திய அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், |
| ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரியும் ரெயில்வே அமைச்சரின் தம்பி Posted: 27 May 2014 01:25 PM PDT பா.ஜ.க சார்பில் கர்நாடகாவில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதல் மந்திரியான சதானந்த கவுடா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரெயில்வே துறை ஒதுக்கப்பட்டுள்ளது. |
| அமைச்சருக்கான துறை ஒதுக்கீட்டில் அதிருப்தி: சிவசேனா நாளை இறுதி முடிவு Posted: 27 May 2014 12:54 PM PDT பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கு மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அக்கட்சி சார்பில் அமைச்சராக ஆனந்த் கீதே அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. |
| வேலைக்கு வராமல் லீவெடுத்த காவல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார் பாதல் Posted: 27 May 2014 11:03 AM PDT பஞ்சாப் மாநில முதலமைச்சரான பிரகாஷ் சிங் பாதல் அம்மாநிலத்தில் ரகசிய ஆய்வு மேற்கொண்டதில் முக்கிய காவல்துறை அதிகாரிகள் பணிக்கு வராமல் இருந்ததை கண்டுபிடித்துள்ளார். இது குறித்து அவர்களிடம் விளக்கம் பெறுமாறு அம்மாநில தலைமை செயலருக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டுள்ளார். |
| பிணைப்பத்திரம் தாக்கல் செய்து கெஜ்ரிவால் சிறையிலிருந்து விடுதலையானார் Posted: 27 May 2014 10:30 AM PDT டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் பிணைப்பத்திரம் தாக்கல் செய்து ஜாமினில் செல்லுமாறு கடந்த சில நாட்களுக்கு முன் நீதிபதிகள் உத்தரவிட்டனர். |
| முதல் பேட்டியிலேயே சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் Posted: 27 May 2014 10:14 AM PDT காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சிறப்பு சட்டத்தால் அம்மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து மத்திய அரசு விவாதத்திற்கு தயாராக உள்ளதாக பிரதமர் அலுவலக இணையமைச்சரான ஜிதேந்திர சிங் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| கருப்பு பண விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு Posted: 27 May 2014 09:26 AM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை தொடங்கியது. பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற மந்திரிகள் பங்கேற்றனர். இதில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் நிதிநிலை அறிக்கை பற்றியும் |
| நாக்பூர் பிளையிங் கிளப்பில் முதல் பெண் பயிற்றுவிப்பாளர் நியமனம் Posted: 27 May 2014 05:24 AM PDT மகாராஷ்டிர மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக விளங்கும் நாக்பூரில் உள்ள பிளையிங் கிளப்பில் முதன்முதலாக ஒரு பெண் பயிற்றுவிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்த தீபிகா செல்வகுமார் என்பது மகிழ்ச்சியைத் தரும் மற்றொரு விஷயமாகும். |
| இந்தியா-பாக். பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்: நவாஸ் செரீப் உறுதி Posted: 27 May 2014 04:56 AM PDT பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் கூட்டம் விரைவில் நடைபெறும். |
| ராஜபக்சே அழைப்பை ஏற்று இலங்கை செல்கிறார் மோடி: வெளியுறவுத்துறை செயலாளர் பேட்டி Posted: 27 May 2014 04:26 AM PDT இந்தியாவின் 15-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி இன்று காலை சார்க் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் சார்க் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் |
| சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை: நிர்மலா சீதாராமன் Posted: 27 May 2014 04:18 AM PDT சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் அறிவித்துள்ளார். சில்லறை வணிக முதலீடு விவகாரத்தில் தேர்தல் அறிக்கைப்படி நடப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். |
| நவாஸ் உடன் மும்பை தாக்குதல் வழக்கு குறித்து மோடி பேசியதாக தகவல் Posted: 27 May 2014 02:44 AM PDT நாட்டின் 15-வது பிரதமராக மோடி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இன்று அவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்தித்தார். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. அப்போது, நவாசிடம் மும்பை தாக்குதல் வழக்கு குறித்து பேசியதாவும், மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை தாமதமாக நடப்பதாக மோடி கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |