Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமனம்

Posted: 31 May 2014 06:31 AM PDT

முன்னாள் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடியரசுத்

சல்மான் கான் மீதான வழக்கை டி.வி.யில் காட்டக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

Posted: 31 May 2014 06:00 AM PDT

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான வழக்கை டி.வி.யில் காட்டக் கூடாது என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2002ம் ஆண்டு பந்த்ரா பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சல்மான் கானின் கார் மோதியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர். இவ்வழக்கின் விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை

உ.பி.யில் வீசிய கடும் புயலுக்கு 14 பேர் பலி

Posted: 31 May 2014 05:31 AM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் மற்றும் கடும் புயல்காற்று தாக்கியது. இதனால் மின்கம்பங்களும் மரங்களும் சாய்ந்தன. இசாவ்லியா கிராமத்தில் மரம் ஒன்று வேருடன் சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் சகோதரிகளான சோனி (10), ரோகினி (4), மோகினி (2) ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர். அவர்களில் தாய் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்.

கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை பஞ்சாப் செல்கிறார்

Posted: 31 May 2014 04:53 AM PDT

மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வேட்பாளர்களை களமிறக்கிய ஆம் ஆத்மி கட்சிக்கு, பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 13 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளும் சிரோமணி அகாலி தளம் 4 தொகுதிகளையும், பா.ஜனதா 2 தொகுதிகளையும் கைப்பற்றியது. சிரோமணி அகாலி தளத்தைவிட ஆம் ஆத்மி 2 சதவீத வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றது

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக பா.ஜ.க. பொதுச்செயலாளர்களுக்கு மோடி வலியுறுத்தல்

Posted: 31 May 2014 04:49 AM PDT

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து பிரதமராக பொறுப்பேற்ற பின் பாரதீய ஜனதா கட்சியின் பொது செயலாளர்களை மோடி இன்று சந்தித்தார். அப்போது மகாராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் அடுத்த வருடம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகுமாறு அவர்களிடம் மோடி வலியுறுத்தினார். மேலும் கட்சி அமைப்புகளை பற்றியும், கட்சியை வலுப்படுத்துவது பற்றியும் மோடி அவர்களுடன் கலந்தாலோசித்தார். தனது இல்லத்தில் வைத்து காலை சிற்றுண்டிக்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 10 பொதுச்செயலாளர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். ஆட்சித்தரத்தை உயர்த்துவது பற்றியும் மோடி அவர்களிடம் கேட்டறிந்தார்.

தலித் சிறுமிகள் கொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அகிலேஷ் அரசு முடிவு

Posted: 31 May 2014 04:31 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் இரண்டு தலித் சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத 2 பேரை தேடி வருகின்றனர். அதிர்ச்சியடைந்த மனித உரிமை அமைப்புகள், இவ்வழக்கில் குற்றவாளிகளை தப்ப விடக்கூடாது என்று வலியுறுத்தினர்.

நஷ்ட ஈடு வேண்டாம்-நீதி வேண்டும்: உ.பி.யில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை

Posted: 31 May 2014 03:13 AM PDT

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பதான் மாவட்டத்திற்குட்பட்ட கத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இரண்டு மைனர் பெண்களை கும்பலாக சேர்ந்து கற்பழித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கா, தங்கைகளான அவர்களில் ஒருவருக்கு 14 வயதும் மற்றொருவருக்கு 15 வயதே ஆகிறது. இந்த மைனர் பெண்களை கற்பழித்த பின் அவர்களை கொலை செய்து அங்குள்ள மாமரத்தில் அவர்களது உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்

உ.பி. சகோதரிகள் கற்பழித்து கொலை: ராகுல்காந்தி நேரில் ஆறுதல்

Posted: 31 May 2014 01:27 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் படான் நகரின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 2 சகோதரிகள் முதல் நாள் திடீர் என்று மாயமானார்கள். அவர்களுக்கு வயது 14, 16 இருக்கும். மறுநாள் இருவரும் அங்குள்ள மரத்தில் பிணமாக தொங்கினர். அவர்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர். அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 2 போலீஸ்காரர்கள் உள்பட 7 பேர் கும்பல் 2 சகோதரிகளையும் கற்பழித்துகொன்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 போலீஸ்காரர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டு பின்னர்

சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: மோடியிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

Posted: 31 May 2014 01:21 AM PDT

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா, சீமாந்திரா என்ற 2 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த தேர்தலில் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், சீமாந்திராவில் தெலுங்கு தேசமும் வெற்றி பெற்றன. புதிய மாநிலமான சீமாந்திராவின் முதல்–மந்திரியாக சந்திரபாபு நாயுடு வருகிற 8–ந்தேதி பதவி ஏற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமரும், கூட்டணி கட்சி தலைவருமான நரேந்திர மோடியை அழைப்பதற்காக தெலுங்கு தேச கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றார்.

ஜம்மு ஓட்டலில் தீவிபத்து: 4 பேர் பலி

Posted: 31 May 2014 01:09 AM PDT

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் 3 மாடி கொண்ட நீலம் என்ற ஓட்டல் உள்ளது. இன்று அதிகாலை இந்த ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் தீயில் கருகி பலியானார்கள். 11 பேர் காயம் அடைந்தனர்.

டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கு மிசோரமில் 19-ந்தேதி தேர்தல்

Posted: 31 May 2014 01:03 AM PDT

மிசோரம் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்–சபைக்கு ஒரு எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஜூன் மாதம் 19–ந்தேதி நடைபெறும் என்று மாநில சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார். தற்போது எம்.பி.யாக இருக்கும் லால் மிங் லியானாவின் பதவி காலம் ஜூலை 18–ந்தேதி முடிவடைவதைத் தொடர்ந்து இந்த தேர்தல் நடைபெறுகிறது. இவர் மிசோ தேசிய முன்னணி கட்சியைச் சேர்ந்தவர். 2002–ல் எம்.பி.யான இவர் 2008–ல் 2–வது முறையாக எம்.பி.யாக தேர்வு பெற்றார். மீண்டும் 3–வது முறையாக போட்டியிடுவாரா, என்று

ஜார்கண்டில் புயல் தாக்கியதில் 7 பேர் பலி

Posted: 31 May 2014 12:38 AM PDT

ஜார்கண்டில் இன்று அதிகாலை வீசிய கடும் புயலில் 7 பேர் பலியானார்கள். பலத்த காற்றால் மின் கம்பங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரொடு சாய்ந்து வீழ்ந்தன. மாநிலத்தின் சத்ரா மாவட்டத்திற்குட்பட்ட கொனா கிராமத்தில் ஒரு மரத்தடியின் கீழ் உறங்கிக்கொண்டிருந்த தந்தை, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகன் உள்ளிட்டோர் அந்த மரம் சாய்ந்து வீழ்ந்ததில் அதன் கீழே சிக்கி பரிதாபமாக

அவதூறு வழக்கில் ஜெகதீஷ் டைட்லர் கோர்ட்டில் ஆஜர்

Posted: 31 May 2014 12:23 AM PDT

1984–ம் ஆண்டு டெல்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் இருந்து முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான ஜெகதீஷ் டைட்லர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் எச்.எஸ்.பூல்கா லூதியானா தொகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளராக போட்டியிட்டார்.

சஸ்பெண்டு ஆன 5 பேர் மீண்டும் பணியில் சேர்ப்பு: ஸ்மிருதிஇரானி நடவடிக்கை

Posted: 31 May 2014 12:16 AM PDT

மத்திய மந்திரிசபையில் முன்னாள் நடிகையும், பா.ஜனதா தலைவருமான ஸ்மிருதி இரானிக்கு மனித வள மேம்பாட்டு துறை இலாகா ஒதுக்கப்பட்டது. பட்டப்படிப்பை முடிக்காத ஸ்மிருதி இரானிக்கு கல்வி மந்திரி பதவி கொடுக்கப்பட்டது முறையா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இதற்கு பா.ஜனதா பதிலடி கொடுத்தது. சோனியா காந்தி என்ன படித்து இருக்கிறார் என்று உமாபாரதி கேள்வி எழுப்பினார்.

திருப்பதி ரெயிலில் கத்திமுனையில் பயணிகளிடம் நகை கொள்ளை

Posted: 30 May 2014 10:59 PM PDT

திருப்பதியில் இருந்து செகந்திராபாத்துக்கு பத்மாவதி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்றது. நேற்று அதிகாலை அனந்தபூர் மாவட்டம் குத்தி அருகே சென்று கொண்டிருந்தது. அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்

விமான நிலையங்களில் சலுகை தேவை இல்லை: பிரியங்கா

Posted: 30 May 2014 10:59 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்காவுக்கும் அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கும் விமான நிலையங்களில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அவர்களிடம் மற்ற பயணிகள் போல எந்த சோதனையும் நடத்தப்படுவது இல்லை. எந்த சோதனையும் இல்லாமல் அவர்கள் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால் சோனியாவுக்கு மட்டுமின்றி அவரது மருமகனும் இந்த சலுகையை கடந்த 10 ஆண்டுகளாக அனுபவித்து வந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க அதி விரைவு ரோந்து கப்பல்

Posted: 30 May 2014 10:52 PM PDT

கேரளா மாநிலம் விழிஞ்சத்தில் துறைமுகம் உள்ளது. இங்கு கப்பல்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் ரோந்து பணிகள் நடந்து வருகிறது. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் போது அவர்களை மீட்கவும் படகுகள் மூலம் கப்பல் படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

திருப்பதி கோவிலுக்கு தலைமுடி விற்பனை மூலம் ரூ.239 கோடி வருமானம்

Posted: 30 May 2014 10:30 PM PDT

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்

திருவனந்தபுரத்தில் வீட்டில் பதுக்கிய 200 கிலோ வெடி மருந்து பறிமுதல்

Posted: 30 May 2014 09:24 PM PDT

திருவனந்தபுரம் அருகே வெள்ளறடை ஆராட்டுகுழி பகுதியில் ஒரு வீடு கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டு கிடந்தது. இந்த நிலையில் சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் அந்த வீட்டிற்கு சில மர்ம மனிதர்கள் வந்து சென்றுள்ளனர். நள்ளிரவில் மட்டும் அந்த வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு இது சந்தேகத்தை

ராகுலை கோமாளி என்றதில் எந்த மாற்றமும் இல்லை: டி.எச்.முஸ்தபா பேட்டி

Posted: 30 May 2014 04:52 PM PDT

ராகுல் காந்தியை பற்றி ஏற்கனவே தான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று காங்கிரசில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட டி.எச்.முஸ்தபா கூறினார். பாராளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள காங்கிரஸ் தலைமையகமான இந்திர பவனில் நடைபெற்றது. கூட்டத்தில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™