Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


என் மகள் சவுந்தர்யா என்பதற்கு பெருமைப்படுகிறேன்: விருது வாங்கிய மகளுக்கு ரஜினி வாழ்த்து!

Posted: 30 Apr 2014 08:14 AM PDT

Ndtv-mittuma

Ndtv-mittumaகோச்சடையான் படம் பார்த்தேன். அதை உருவாக்கிய உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறேன் மகளே என்று வாழ்த்தியுள்ளார் அவர் தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கோச்சடையான் படத்தை மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கியதன் மூலம், இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த சவுந்தர்யா ரஜினிக்கு என்டிடிவியின் சிறந்த இந்தியர் விருது நேற்று வழங்கப்பட்டது. நடிகர் ரன்பீர் கபூர் இந்த விருதினை அவருக்கு வழங்கினார். விருது வழங்கியதும் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்த்துச் செய்தியை ஒளிபரப்பினர். அதில், "கோச்சடையான் படத்தை நான் பார்த்தேன். பார்த்து முடித்ததும் என் மகளிடம், 'சவுந்தர்யா.. உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறேன்' என்றேன். நிச்சயம் அவருக்காக நம் நாடே பெருமைப்படும்," என்று கூறியுள்ளார். கோச்சடையான் படம் வரும் மே 9 -ம் தேதி 6 மொழிகளில், உலகமெங்கும் 6000 திரைகளில் (5000 தியேட்டர்கள்) வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 800 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவில் ஓபாரா தொடங்கிய டீ விற்பனை!

Posted: 30 Apr 2014 07:53 AM PDT

sherlin-chopra

sherlin-chopraஅமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி பிரபலமான ஓபரா வின்ப்ரே கடந்த 2012 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்திருந்தார். அப்போது, மும்பை சேரி வாழ் தம்பதியரான பார்வதி, ராஜேஷ் ஹெக்டே இந்திய மசாலாப் பொருட்கள் கலந்த மொகலாய மசாலா டீ ஒன்றை அவருக்கு அளித்து உபசரித்தனர். அந்த டீயின் நறுமணத்திலும், சுவையிலும் மயங்கிய வின்ப்ரே அமெரிக்காவில் ஒரு புதிய வர்த்தக விற்பனைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அங்குள்ள சியாட்டிலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ஸ்டார்பக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து நேற்று அங்கு புதிய "ஓபரா சாய் டீ" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டில் அட்லாண்டாவின் டீ சில்லறை வர்த்தக நிறுவனமான டீவானாவை 620 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இந்த நிறுவனம் சமீபத்தில் இந்தியாவின் டாடா நிறுவனத்துடனும் விற்பனையில் இணைந்துள்ளது. புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தும்போது இந்தியத் தம்பதியனரைப் பற்றியும் குறிப்பிட்ட வின்ப்ரே டீவானாவின் நிபுணருடன் தன்னுடைய தனிப்பட்ட தேர்வும் கலந்து இலவங்கப்பட்டை, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு கருப்பு தேயிலை இலைகள் போன்றவற்றின் சுவையுடன் கூடிய புதிய தயாரிப்பு என்று குறிப்பிட்டார். இது பற்றி மும்பை தம்பதியரிடம் கேட்கப்பட்டபோது தாங்கள் இதயபூர்வமாக உபசரிப்பதாகவும், தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்: கலெக்டர் ராஜேந்திர ரத்னுக்கு சக்திவேல் என்ற வாலிபர் மனு!

Posted: 30 Apr 2014 07:31 AM PDT

sakthivel

sakthivelகாட்பாடி புதிய திருவலம் ரோடு தாராபடவேடை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 17) என்ற வாலிபர் கலெக்டர் ராஜேந்திர ரத்னுவை சந்தித்து மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:– எனது தந்தை சக்திவேல் மூட்டை தூக்கும் தொழிலாளி. நான் தாய் தந்தையுடன் இருந்து வருகிறேன். 10–ம் வகுப்பு வரை படித்துள்ளேன். என்னுடையே குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. 3 அண்ணன், அக்கா உள்பட 6 பேர் குடும்பத்தில் உள்ளனர். இந்நிலையில் எனக்கு திடீரென்று உணவு குழாயில் புற்று நோய் தாக்கியது. இதற்காக நான் காஞ்சீபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் 4 மாதம் தங்கி சிகிச்சை பெற்று வந்தேன். இந்நிலையில் அங்கிருந்து திடீரென என்னை டிஸ்ஜார்ஜ் செய்தனர். என்னுடைய தந்தை சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டேன்லி மருத்துவமனைக்கு என்னை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அந்த மருத்துவமனை டாக்டர்களும் என்னை அனுமதிக்கவில்லை. என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் அரசு பொது மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கூறினர். வேலூர் டாக்டர்களை சந்தித்து இதனை கூறினால் அவர்களும் எனக்கு சிகிச்சை அளிக்க முடியாது நீங்கள் வேண்டுமானால் சென்னைக்கு சென்று பணம் செலவு செய்து பிழைத்து கொள் என்கின்றனர். ஆனால் சென்னையில் உள்ள மருத்துவர்கள் நீ உங்கள் ஊரில் உள்ள மருத்துவமனைக்கு செல் என்கின்றனர். இந்த புற்றுநோய் 10 லட்சம் பேரில் அபூர்வமாக எனக்கு வந்துள்ளது. இந்த நோய் மிகவும் கொடூரமானது. இதுவரை இந்தியாவில் இந்த 17 வயதில் யாரும் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. கொடூர நோய்க்கு நான் எங்கு சென்றாலும் எந்த மருத்துவர்களும் எனக்கு சிகிச்சை அளிக்கவில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி, வினாடியும், மரணத்தை சந்தித்து கொண்டு இருக்கிறேன். எனக்கு மரணம் மிக அருகாமையில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். இதனால் என்னை தயவு செய்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆகிய தாங்கள் எனக்கு சிகிச்சை யாரும் அளிக்காததால் என்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு வாலிபருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கூகுளின் ரோபோ டாக்சி கார்கள்! கலிபோர்னியா சாலைகளில் சோதனை ஓட்டம்!

Posted: 30 Apr 2014 06:16 AM PDT

google-robo-taxi

google-robo-taxiஇணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக 'கூகுள்', 'யாஹூ' உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் (சர்ச் என்ஜின்) உதவுகின்றன. இவற்றில் 'கூகுள்' தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர். அவ்வகையில், உலகளாவிய அளவில் இணையதளங்களுக்கான 'சர்ச் என்ஜின்'களில் ஜாம்பவானாக 'கூகுள்' திகழ்ந்து வருகிறது. இது தவிர ரோபோட்டிக் தொழில்நுட்ப துறையிலும் கூகுள் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2010–ம் ஆண்டில் கார்களில் தானியங்கி தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த தொழில் நுட்பத்துடன் ஏதாவது ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து டிரைவர் இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க நினைத்து, அதற்காக சில கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 'கூகுள்' வலை வீசியது. கார் உற்பத்தி தொழில் நுட்ப ரகசியங்களை கூகுளுக்கு தர விரும்பாத முன்னணி நிறுவனங்கள் அதனுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. எனவே, தாமாகவே கார் உற்பத்தி செய்ய கூகுள் முடிவு செய்தது. அதன்படி, டிரைவரே இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டது. இவை டிரைவர் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் திறன் படைத்தவை. அதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் போன்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களை தனது சொந்த நிறுவனம் மூலம் கூகுள் பொருத்தியுள்ளது. இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த கார்கள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து, தற்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா சாலைகளில் சோதனை ஒட்டம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, தானியங்கி தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், அசம்பாவித சூழ்நிலைகளை கையாள்வதற்கு ஏற்ற வகையில் காரின் முன் இருக்கையில் தேர்ச்சி பெற்ற ஒரு டிரைவரும் அமர்ந்து செல்கிறார். வெகு விரைவில், மனிதர்களின் தலையீடே இல்லாமல், முற்றிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கார்கள் இயங்கக் கூடிய சாதனை குறியீட்டை எட்டி விடுவோம் என்று இந்த அதிநவீன கார் தயாரிப்பின் திட்ட இயக்குனர் க்ரிஸ் அர்ம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டுக்குள் அனைத்து வகையான சோதனை கட்டங்களும் நிறைவடைந்து, இந்த டிரைவர் இல்லா கார்கள் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைக்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறைவேறி விட்டால், கம்ப்யூட்டர் மூலம் போக வேண்டிய இடத்தின் பெயரை சொல்லி கட்டளையிட்டு விட்டு, காரின் உரிமையாளர்கள் உள்ளே படித்துக் கொண்டோ, டி.வி. பார்த்தபடியோ, அரை தூக்கத்தில் பகல் கனவு கண்டபடியோ பாதுகாப்பாக செல்லும் அந்த அதிசய அனுபவம் நிகழத்தான் போகிறது. இவ்வகையிலான தொழில்நுட்பம் அனைத்து ரக வாகனங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் போது, காலப்போக்கில் சாலை விபத்து தொடர்பான மரணங்கள் வெகுவாக குறையும் என்று நிச்சயமாக நம்பலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடலுக்கு உகந்த பாகற்காய்!

Posted: 30 Apr 2014 03:41 AM PDT

Pakarkaay

Pakarkaayபாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

முக்கனிகளில் ஒன்றான பலாப் பழம்!

Posted: 30 Apr 2014 03:35 AM PDT

Pala-Pazham

Pala-Pazhamமுக்கனிகளில் ஒன்றான பலா சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமேக் காய்க்கக் கூடியது. ஆனால் பலாப் பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு சுவையான பலாப் பழத்தில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன. கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும். அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும். பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. சில இடங்களில் சின்ன சின்ன பலாக்காய்களை விற்பனைக்கு வைப்பார்கள். அது எதற்கு என்று பலருக்கும் தெரியாது. அந்த பலாக்காயை வாங்கி வந்து கூட்டு செய்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும். பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது. பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும். எனவே அடுத்த முறை பலாக்காயை எங்கு பார்த்தாலும் வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுங்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏசர் நிறுவனம் 7 இன்ச் Iconia B1-720 டேப்லெட் வெளியீடு!

Posted: 30 Apr 2014 03:25 AM PDT

Iconia-B1-730

Iconia-B1-730ஏசர் நிறுவனம் 7 இன்ச் Iconia B1-720 டேப்லெட்டை இந்தியா போன்ற சந்தையில் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. Iconia B1-730 எச்டி டேப்லெட்டில் இருந்து Iconia B1-720 புதுப்பிகப்படும் என்று நம்பப்படுகிறது, மற்றும் ஏப்ரல் மாதம் ஏசர் அதிகாரப்பூர்வ செய்தியாளர் நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. Iconia B1-730 எச்டி குறிப்புகள்: Iconia B1-730 எச்டி டேப்லெட்டில் 7 இன்ச் (1280x800 பிக்சல்) டிஸ்ப்ளே, 1.6GHz டூயல் கோர் இண்டெல் ஆட்டம் Z2560; PowerVR SGX544MP2 ஜி.பீ.யூ.; ரேம் 1GB; 3700mAh பேட்டரி; 8GB/16GB உள்ளடிக்கிய விரிவாக்கத்தக்க சேமிப்பு ஆதரவு மற்றும் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா ஆகியவை அடங்கும். துரதிருஷ்டவசமாக, Iconia டேப் B1-720 எச்டி டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு ஒஎஸ் பதிப்பு பற்றி எந்த குறிப்பும் இல்லை. Iconia B1-720 எச்டி குறிப்புகள்: ஏசர் Iconia டேப் B1-720 டேப்லெட், வட அமெரிக்காவில் ஏற்கனவே கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2.1 இயங்குகிறது. இது ஒரு 7 இன்ச் OGS (ஒன் கிளாஸ் சொல்யூஷன்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் ரேம் 1GB இணைந்து ஒரு 1.3GHz டூயல் கோர் மீடியாடெக் MT8111 பிராசசர் உள்ளது. டேப்லெட்டில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. ஏசர் டேப் 7: முன்னதாக, ஏசர் டேப் 7 பட்ஜெட் அண்ட்ராய்டு டேப்லெட் சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் பட்டியலிடப்பட்டுள்ளது. இது 1024x600 பிக்சல் தீர்மானம் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்கும். ரேம் 1GB உடன் இணைந்து சாதனத்தில் 1.5GHz டூயல் கோர் Cortex A9 பிராசசர் மூலம் இயங்குகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

முள்ளியவளை பாரதி சிறுவர் இல்ல நிறைவு விழா!

Posted: 30 Apr 2014 03:01 AM PDT

mulivayal-children-home

mulivayal-children-homeமுல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி , நிறைவுவிழா நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணிக்கு ஆரம்பமாகிய இவ்விழாவானது இல்லச் சிறுமிகளின் மிக அழகான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இவ்விழாவில் இல்லத்தின் தந்தையும், நெர்டோ நிறுவன செயலருமான திரு.பத்மநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பித்த பெருமக்கள்: வைத்திய கலாநிதி திரு.ஜெயகுலராஜா, முள்ளியவளை தண்ணீர் ஊற்று ஆலய தலைமை குருக்கள், அருட்தந்தை திரு.வின்சன் அடிகளார், லண்டனைச் சேர்ந்த திரு.சண்முகசிவம், கிராம சேவையாளர் திரு.கிருஸ்ணமூர்த்தி, முள்ளியவளை சைவப்பாடசாலை அதிபர் திருமதி.கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இடம் பெற்ற நிர்வாகிகள்: மேலும், வித்தியானந்தாக் கல்லுாரி ஆசிரியர் திரு.கோகிலதாஸ், கோசலா ஜவுளிக்கடை உரிமையாளர் திரு.தேவராஜா, முள்ளியவளையின் தலைமை காவல்துறை அதிகாரி திலகரட்ண, சிறுவர் இல்லத்தின் ஆங்கில ஆசிரியர் திரு.வன்னியசிங்கம், பாரதி, செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுமிகள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். விளக்குடன் தொடக்கம்: கும்பம், விளக்கேற்றி வரவேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றப்பட்டது. குத்து விளக்கினை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்கள் ஏற்றிவைத்தனர். கடவுள்வணக்கம்: இதனைத் தொடர்ந்து கடவுள் வணக்கத்தின் பின்னர் ஆசியுரையை தண்ணீரூற்று ஆலய குருக்களும், அருட்தந்தை திரு.வின்சன் அவர்களும் வழங்கினர். இவர்கள் தமது ஆசியுரையில் இல்லத்தின் பணிகள் மேன்மேலும் சிறக்கவும், சிறுவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்தியதுடன் இவ்வாறான ஒரு இல்லம் உருவாகி சிறுவர்கள் இனிதே பராமரிக்கப்படுவதற்கும், சிறுவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமான திரு.பத்மநாதன் அவர்களை பாராட்டினர். வரவேற்புரை: தொடர்ந்து பாரதி இல்லத்தின் சிறுமிகளால் பாரதி இல்லத்தின் பாடல் இசைக்கப்பட்டு, அழகான வரவேற்பு நடனத்தை தொடர்ந்து வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. வரவேற்புரையை பாரதி சிறுவர் இல்லத்தின் முதன்மை செயலாளர் திரு.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் வழங்கினார். தலைமை உரை: தொடர்ந்து மருத்துவர் திரு.ஜெயகுலராஜா அவர்கள் தலைமையுரையை வழங்கினார். அவர் தனது உரையில் மிக நெருக்கடிகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்த இல்லமானது இரண்டாம் வருட முடிவில் மிக உன்னதமாக வளர்ந்துள்ளது கண்டு தான் பெருமைப்படுவதாக உரையாற்றினார். தாயாய் கவனிக்கும் இல்லம்: இந்த இல்லமானது பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, உறவினர்களுக்கு நிகராக பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறது எனப் பாராட்டினார். இவை எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாக பல சிரமங்களுக்கு நடுவில் நிதிகளை பெற்று இந்த இல்லத்தை ஒழுங்கமைத்து நடத்திவரும் திரு.பத்மநாதன் அவர்களை வாழ்த்தினார். பிள்ளைகளின் வளர்ச்சியில் பங்குகொள்ளும் அனைவரையும் பாராட்டினார். குறிப்பாக இல்லத்தின் நிர்வாகிகளை வாழ்த்தினார். சிறப்புரை ஆற்றிய பத்மநாதன்: அடுத்து பாரதி இல்ல சிறுமியின் ஆங்கில கவிதையைத் தொடர்ந்து சிறப்புரையை திரு.பத்மநாதன் அவர்கள் வழங்கினார். இது சிறுவர்களுக்கான அறிவுரைகளாக அமைந்தது. குழந்தைகளின் பாதுகாப்பு: தொடர்ந்து பெற்றோர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணிகளால் சமூகத்தில் காணப்படும் முக்கிய பிரச்சனையாக சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தன்னால் முடிந்தவரை இப்படியான குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கென்று ஒரு எதிர்காலத்தை உருவாக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டார். சிறுவர்களின் வளர்ச்சி: அதனைத்தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த திரு.சரத் சந்திரதாஸ் அவர்களால் சிறப்புரை ஆற்றப்பட்டது. இவர் தனது உரையில் சிறுவர்களின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு உரையாற்றினார். மாணவர்கள் நம்பிக்கையாக செயல்பட வேண்டும் என சுட்டிக்காட்டி உரையாற்றியதுடன் அருமையான கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கினார். நேர்த்தியான நடனம்: அதனைத் தொடர்ந்து சிறுமி சுசானியின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. மிக நேர்த்தியாக நடனத்தை வழங்கிய சிறுமியின் திறமையை பலரும் பாராட்டினர். இச்சிறுமியை பாரட்டிய இல்லத்தின் தந்தையான திரு.பத்மநாதன் அவர்கள் சிறுமியை பாராட்டி பரிசும் வழங்கினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் செய்த அனைவரையும் திரு.பத்மநாதன் அவர்களும், திரு.ஜெயகுலராஜா அவர்களும் பாராட்டினர். கர்ணன் நாடகம்: தொடர்ந்து கர்ணன் நாடகம் இடம்பெற்றது. கர்ணனின் வள்ளல் தன்மையை பெருமைப்படுத்துவதாக அமைந்த இந்நாடகத்தில் சிறுமிகள் தமது திறமையை வெளிப்படுத்தி உரிய ஆடை அலங்காரத்துடன் சிறப்பாக நடித்தனர். குறிப்பாக குந்தி, கர்ணன், கண்ணன் பாத்திரங்களை ஏற்ற சிறுமிகள் சிறப்பாக நடித்தனர். அனைவரும் இந்த நாடகத்தை பாராட்டினர். நன்றியுரையுடன் விழா நிறைவு: தொடர்ந்து இல்லத்தின் நிர்வாகி திருமதி.மகேஸ்வரி அவர்களின் நன்றியுரையுடன் விழாவானது மாலை 6.15 அளவில் இனிதே நிறைவுபெற்றது.  

This posting includes an audio/video/photo media file: Download Now

கொழும்பு வந்த விமானத்தின் பணிப்பெண்ணிடம் சில்மிசம்: துனீசிய பிரஜை ஒருவர் கைது!

Posted: 30 Apr 2014 02:54 AM PDT

arest

arestஇத்தாலியின் ரோம் நகரில் இருந்து கொழும்பு வந்த விமானத்தின் பணிப்பெண்ணின் கடமைகளுக்கு தடையேற்படுத்திய துனீசிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானத்தின் தலைமை பணிப்பெண்ணினால் கைது செய்யப்பட்ட இந்த நபர் கட்டுநாயக்க விமான நிலைய போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நபர் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவரது கடவுச்சீட்டை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். வர்த்தக நடவடிக்கை ஒன்றுக்காக இலங்கை வந்துள்ள இந்த நபர், பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், கொழும்பில் உள்ள துனீசிய தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விமான நிலைய போலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொழும்பில் மிதக்கும் சந்தை!

Posted: 30 Apr 2014 02:34 AM PDT

market

marketகொழும்பு நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் மிதக்கும் வர்த்தக சந்தை அடுத்த மாதம் மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. கொழும்பு ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இந்த மிதக்கும் சந்தை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் திட்டத்திற்கு அமைய இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த மிதக்கும் சந்தையை நிர்மாணித்து வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சித்தார்த்தை நான் காதலிப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை! ஹன்சிகா விளக்கம்

Posted: 30 Apr 2014 02:14 AM PDT

Hansika_motwani

Hansika_motwaniஜெயப்பிரதா உறவினரும் தெலுங்கு நடிகருமான சித்தார்த்தை தான் காதலிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை ஹன்சிகா. உயிரே உயிரே என்ற தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. சித்தார்த் வேறு யாருமல்ல, பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயப்பிரதாவின் நெருங்கிய உறவினர். இந்தப் படத்தில் நடிக்கும்போது சித்தார்த்துக்கும் ஹன்சிகாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டதால்தான், சிம்பு கோபித்துக் கொண்டார் என்று கொளுத்திப் போட்டவர்களும் உண்டு. இதுகுறித்து ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "சித்தார்த்தை நான் காதலிப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. இது முழுக்க வதந்தி. சித்தார்த் என்னுடன் நடிப்பவர் என்பதோடு எங்கள் தொடர்பு நின்றுவிட்டது. அந்தப் படப்பிடிப்பு கூட பல மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. அதன் பிறகு எனக்கும், சித்தார்த்துக்கும் தொடர்பே இல்லை. நான் தற்போது ஒன்பது படங்களில் நடித்து வருகிறேன். அடுத்த இரண்டு வருடங்கள் முழுக்க, சினிமாவில்தான் கவனம் செலுத்துவேன். காதலிப்பதற்கு எனக்கு ஏது நேரம்?", என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினிக்காக படத்தை தள்ளிப் போட்ட கன்னட நடிகர் சுதீப்!

Posted: 30 Apr 2014 01:51 AM PDT

rajini

rajiniகே.எஸ். ரவிக்குமார் என் படத்தை முதலில் இயக்கட்டுமே என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து கூறியதால் தனது பட வேலையை தள்ளிப் போட்டதாக கன்னட நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக உள்ளவர் நான் ஈ படத்தில் நடித்த சுதீப். அவர் இயக்கிய மானக்யா படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. இதையடுத்து அவரை கே. எஸ். ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. இந்நிலையில் அந்த படம் தள்ளிப் போயுள்ளது. கே.எஸ். ரவிக்குமாருடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் அந்த பட வேலை தற்போது தள்ளிப் போடப்பட்டுள்ளது. அவர் ரஜினி சார் படத்தில் வேலை செய்து வருகிறார் என்றார் சுதீப். ரஜினி சார் எனக்கு போன் செய்து உங்கள் படத்திற்கு முன்பு ரவிக்குமார் என் படத்தை இயக்கட்டுமா என்று கேட்டார் என்று சுதீப் தெரிவித்தார். அவ்வளவு பெரிய மனிதர் எனக்கு போன் செய்து கேட்கும் போது மறுக்க மனமில்லை. அதனால் சந்தோஷமாக சரி என்று அவரிடம் தெரிவித்தேன் என்றார் சுதீப். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் சுதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விமானத்திலுள்ள அனைத்து வசதிகளுடன் இந்தியாவில் ஓடும் சொகுசு பஸ்!

Posted: 30 Apr 2014 01:02 AM PDT

AirBus

AirBus

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த ட்ரிக்!

Posted: 30 Apr 2014 12:56 AM PDT

Cut-Tomatoes

Cut-Tomatoes

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த வினோத குட்டியின் ரகசியத்தை நீங்கள் தெரிஞ்சிக்க வேணாமா?

Posted: 30 Apr 2014 12:49 AM PDT

zibra

zibra

This posting includes an audio/video/photo media file: Download Now

நெருப்பு மற்றும் சாம்பலுடன் வாழ்ந்து வரும் வினோத மனிதர்!

Posted: 30 Apr 2014 12:25 AM PDT

ash_man

ash_man

This posting includes an audio/video/photo media file: Download Now

கரைபுரண்டோடும் தண்ணீரில் நண்பர்களைக் காப்பாற்ற நடக்கும் போராட்டம்……..

Posted: 30 Apr 2014 12:22 AM PDT

Brave-dog

Brave-dog

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சை ! முத்கல் கமிட்டி விசாரிக்க கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு!!

Posted: 30 Apr 2014 12:16 AM PDT

BCCI-Board

BCCI-Boardஐபிஎல் டி20 தொடரில் எழுந்த ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சை பற்றி முகுல் முத்கல் கமிட்டி தொடர்ந்து விசாரணை நடத்த கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது முன்னணி வீரர்கள் பலர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முத்கல் கமிட்டி தனது விசாரணை அறிக்கையை பிப்ரவரி 10ம் தேதி சமர்ப்பித்தது. மேலும், கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து தற்போது விலக்கிவைக்கப்பட்டுள்ள சீனிவாசன் மற்றும் முன்னணி வீரர்கள் பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அந்த குழு கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. சீலிட்ட உறையில் இதற்கான டேப் ஆதாரங்களையும் கொடுத்துள்ளதாக தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு விசாரணையை தொடர கிரிக்கெட் வாரியமே ஒரு குழுவை பரிந்துரை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகவன், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என்.பட்டேல் ஆகியோர் அடங்கிய குழுவை பிசிசிஐ பரிந்துரைத்தது. இவர்கள் மூவரும் கிரிக்கெட் வாரியத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் என்பதால் விசாரணை நேர்மையாக நடைபெறாது என சந்தேகம் எழுப்பப்பட்டதால், வாரியத்தின் பரிந்துரையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், முத்கல் கமிட்டியே தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இது தொடர்பாக நேற்று நடந்த விசாரணையின்போது, முத்கல் கமிட்டியின் அறிக்கையில் பல்வேறு தவறுகள் உள்ளன. அந்த குழு தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க கூடாது. புதிய விசாரணைக் குழுவை அமைக்கவும் தயாராக உள்ளோம் என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. பிசிசிஐ தலைவராக சீனிவாசன் செயல்பட அனுமதிப்பது தொடர்பாகவும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேவையில்லாமல் அடித்து ஆட ஆசைப்பட்டு வாய்ப்பை வீணடித்துவிட்டேன்…

Posted: 29 Apr 2014 11:57 PM PDT

chris-gayle

chris-gayleகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், தேவையில்லாமல் அடித்து ஆட ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்ததுருத்தமளிக்கிறது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிரடி வீரர் கிறிஸ் கேல் கூறியுள்ளார். ஐபிஎல் 7வது சீசனில், பெங்களூர் அணியின் கிறிஸ் கேல் காயம் காரணமாக முதல் 4 ஆட்டத்தில் விளையாடவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த லீக் ஆட்டத்தில் அவர் களமிறங்கியதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கேற்ப, மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரில் அவர் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்  விளாசியதால் பெங்களூர் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால், சந்தீப் ஷர்மா வீசிய அடுத்த ஓவரில் அவர் அவசரப்பட்டு விளையாடி கிளீன் போல்டானது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதே ஓவரில் கேப்டன் விராத் கோஹ்லியும் வெளியேறியதால், அந்த அணியால் சவாலான இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. 125 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, ஒரு கட்டத்தில் 88 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் கேப்டன் பெய்லி - ரிஷி தவான் ஜோடி பொறுப்புடன் விளையாடி 18.5 ஓவரில் வெற்றியை வசப்படுத்தியது. பெய்லி 16, ரிஷி 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்து 10 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மா (3-1-15-3) ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் ஓவரிலேயே 20 ரன் விளாசியும் நல்ல தொடக்கத்தை வீணடித்தது குறித்து கிறிஸ் கேல் நேற்று கூறியதாவது: முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடலாம் என்று அணி நிர்வாகம் எனக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தது. முதல் ஓவரில் 20 ரன் விளாசியதால் சற்று அவசரப்பட்டுவிட்டேன். சந்தீப் போட்ட பந்தை கவனித்து விளையாடாமல் பவுண்டரி விளாச ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தது ஏமாற்றம் அளிக்கிறது. அதை விடவும், எனது அவசரத்தால் அணியின் சரிவுக்கு காரணமாகிவிட்டேன் என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. எனது இயல்பான, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் தான் இதற்கு காரணம். துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து நல்ல வாய்ப்பை வீணடித்துவிட்டேன். இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்காக நிறைய ஊசி போட்டுக்கொள்ள வேண்டி இருந்தது. தீவிர வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டேன். முழு உடல்தகுதி இல்லாவிட்டாலும், அடுத்து இந்தியாவில் நடக்கவுள்ள 2வது கட்ட ஆட்டங்களில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். இவ்வாறு கிறிஸ் கேல் கூறியுள்ளார். கடந்த சீசனில் அவர் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 175 ரன் விளாசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் மே 4ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.பி.எல் சீசன் 7 ! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

Posted: 29 Apr 2014 11:44 PM PDT

Rajasthan-Royals

Rajasthan-Royalsஐ.பி.எல் சீசன் 7 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹானே 72 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி -20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 எடுத்தது. இதனால் போட்டி டை ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறையில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™