Tamil Star |
- இவரோட திறமைக்கு நிச்சயம் ஒரு சல்யூட் போடணும்!
- ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி மோடி பேசாதது ஏன்! – பழ.நெடுமாறன் கருத்து!!
- கனடாவின் நிதியுதவி நிறுத்தம்: கவலையில் கமலேஷ் சர்மா!
- மொஸ்கோவில் நடைபெறவுள்ள கூட்டத்தைப் பகிஸ்கரிப்பு! கனடா ஆட்டிக் கவுன்சில் கூட்டம்!!
- நிர்வாகக் குழு கவுன்சிலர்களின் வேதனம் அதிகரிப்பு: கனடிய ரொறன்ரோ நகர சபை தகவல்!
- ஒன்ராறியோ லிபரல் கட்சி: 29-பில்லியன் டாலர்களை செலவு செய்யவும் தயார்!!
- சந்திர கிரகணம் இன்று நள்ளிரவில் செம்மஞ்சள் நிறத்தில் காணலாம்!
- பிறந்த 7 குழந்தைகளை கொன்ற அமெரிக்க பெண்!
- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்: நாளை கோலாகல துவக்கம்!
- சச்சின் டெண்டுல்கருக்கு கால்பந்து கற்றுதருவேன்: சவுரவ் கங்குலி கலாட்டா!
- புஜ்சுக் குட்டி…செல்லக்குட்டி….கொஞ்சி விளையாடும் கடல் சிங்கங்கள் !
- பெரிய முதலை….பதறியடித்து ஓடும் கிராம மக்கள்!
- WOW..இவங்க திறமைய பாராட்டாம இருக்கவே முடியாது……
- ஏழைக்கேத்த ஏசி! நாமே செய்யலாம் பாக்குறீங்களா..
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் அஜீத்தின் அமர்க்களம்!
- எனக்கு முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்கள் யாரும் தேவையில்லை! – சந்தானம் அதிரடி
- இயற்கையின் கொடையான அன்னாசி பழம்
- தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம்
| இவரோட திறமைக்கு நிச்சயம் ஒரு சல்யூட் போடணும்! Posted: 15 Apr 2014 11:06 PM PDT |
| ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி மோடி பேசாதது ஏன்! – பழ.நெடுமாறன் கருத்து!! Posted: 15 Apr 2014 10:56 PM PDT
ஈழத் தமிழர் பிரச்னைகுறித்து பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் மோடி எதுவும் கூறாதது ஏமாற்றமளிக்கிறது என்று உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் தினமணி செய்தியாளரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்தோ, ராஜபக்ச மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பதையோ, மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது குறித்தோ எதுவும் குறிப்பிடவில்லை. இப்பிரச்சினைகளை பா.ஜ.க. தலைமை அடியோடு புறக்கணித்துவிட்டது. தமிழ்நாட்டுக்குப் பிரசாரம் செய்ய வந்த மோடியும் இந்த பிரச்சினை குறித்து எதுவும் நேரடியாகப் பேசவில்லை. இது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்றார் பழ.நெடுமாறன். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவின் நிதியுதவி நிறுத்தம்: கவலையில் கமலேஷ் சர்மா! Posted: 15 Apr 2014 10:49 PM PDT
இலங்கையின் மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி காமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியமை குறித்து அவ்வமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார். காமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை தலைமை தாங்கும் அடுத்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான காமன்வெல்த் நிதியத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக கனடா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த பரஸ்பர மற்றும் தன்னார்வ நிதியம் காமன்வெல்த் நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான காமன்வெல்த் நிதியத்துக்கு கனடா நீண்டகாலமாக பெறுமதிமிக்க உதவிகளை அளித்து வந்துள்ளது என்பதையும் கமலேஷ் சர்மா நினைவுபடுத்தியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மொஸ்கோவில் நடைபெறவுள்ள கூட்டத்தைப் பகிஸ்கரிப்பு! கனடா ஆட்டிக் கவுன்சில் கூட்டம்!! Posted: 15 Apr 2014 10:40 PM PDT
கனடா மொஸ்கோவில் நடைபெறவுள்ள Artic Council ஆட்டிக் கவுன்சில் சம்பந்தமான கூட்டத்தைப் பகிஸ்கரிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் றுஸ்யாவானது கிருமியன் தீவில் மேற்கொண்ட நடவடிக்கையே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல்துறை அமைச்சரான Leona Aglukkaq என்பவரே குறிப்பிட்ட கூட்டம் சம்பந்தமான விடையங்களுகுப் பொறுப்பாகவிருந்திருக்கின்றார் எனவும் அவர் இந்தக் கிழமையின் இறுதிப்பகுதியல் நடைபெறவிருக்கின்ற கூட்டத்திற்கு கனடாவானது சமுகமளிக்க மாட்டாது எனத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அமைச்சர் குறிப்பிடுகையில் கனடாவினது இந்த கடுமையான நிலைப்பாடானது றுஸ்யாவிற்கு எதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையின் ஒரு பகுதியெனவும் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் அவர் கனடாவானது தொடர்ந்தும் ஆட்டிக் சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் எனவும் தெரிவித்திருக்கின்றார். குறிப்பிட்ட விடையம் சம்பந்தான 3 கிழமைகளுக்கு முன்பாக எனுமிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் றுஸ்யா கனடா உட்பட எட்டு நாடுகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கிழமையின் ஆரம்பத்தில் கனடியப் பிரதமர் ஹாப்பர் றுஸ்யா நாட்டினது உக்கிரைனுக்கு எதிரான நடவடிக்கையை "கொடுரமான, இராணுவ, மற்றும் ஏகாதிபத்திய நடவடிக்கை" என வர்ணித்திருந்தார். அத்துடன் றுஸ்யாவினது நடவடிக்கையானது உலக சமாதானத்திற்கு பாரிய அச்சுறுத்தலை விழைவிக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நிர்வாகக் குழு கவுன்சிலர்களின் வேதனம் அதிகரிப்பு: கனடிய ரொறன்ரோ நகர சபை தகவல்! Posted: 15 Apr 2014 10:31 PM PDT
கனடிய ரொறன்ரோ நகரசபையின் நிர்வாகக் குழ தமது கவுன்சிலர்களது வேதனத்தை 13, 628 டொலர்களாகவும் மேயரது வேதனத்தை 200,0123 டொலர்களாகவும் அதிகரிப்பது பற்றி தீர்மானிக்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தீர்மானத்தை கவுன்சிலராகிய Frank Di Giorgio என்பவர் தெரிவித்திருக்கின்றார் எனவும் தெரியவருகிறது. தற்போது ரொறன்ரோ கவுன்சிலர்கள் அவர்களது சலுகைகளைகத் தவர (benefits ) கிட்டத்தட்ட 105, 397 டொலர்களைப் பெற்றுக்கொள்கின்றார்கள் எனவும் அவர்களுக்கான அதிகரிப்பு 119, 025 ஆகவிருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. அதே போல மேயரின் தற்போதைய வேதனம் 177, 499 டொலர்கள் எனவும் அவரது வேதனம் 200, 013 டொலர்களாக உயர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த வேதன அதிகரிப்பிற்கான பிரேரணையை சில கவுன்சிலர்கள்ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் தெரியவருகிறது. சில கவுன்சிலர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தும் உள்ளார்கள் என ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோ லிபரல் கட்சி: 29-பில்லியன் டாலர்களை செலவு செய்யவும் தயார்!! Posted: 15 Apr 2014 04:30 AM PDT
ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் ஹமில்ரன் பகுதிகளிற்கு 15-பில்லியன் டாலர்கள் வரை கிடைக்குமென முதல்வர் கத்லின் வின் கூறியுள்ளார். மிகுதி தொகை ஏனைய மாகாணங்களிற்கு கிடைக்குமெனவும் தெரிவித்துள்ளார். புதிய நிதி திரட்டல், தற்போதுள்ள வருவாயை திருப்புதல், green bonds உட்பட கடன் நிதி போன்றனவற்றின் மூலம் பணம் பெறப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். புதிய வருவாயை எப்படி திரட்டுவார்கள் என்பதன் விபரத்தை வெளியிடவில்லை விபரங்கள் வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப் படுமென தெரிவித்துள்ளார். ஏற்கனவே எரிவாயு வரிகளில் சேகரிக்கப்பட்ட 130-மில்லியன் டொலர்களை இத்திட்டத்திற்கு பயன்படுத்தலாமென கருதுவதாகவும் தெரியவருகின்றது. ஒன்ராறியோவின் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து உள்கட்டுமான பணிகளிற்காக அடுத்த 10-ஆண்டு காலப்பகுதியல் 29-பில்லியன் டொலர்களை செலவழிக்க போவதாக ஆளும் லிபரல் கட்சி உறுதிமொழி அளித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சந்திர கிரகணம் இன்று நள்ளிரவில் செம்மஞ்சள் நிறத்தில் காணலாம்! Posted: 15 Apr 2014 04:16 AM PDT
சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு (செம்மஞ்சள்) நிறத்தில் தெரியும் என்று அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மெக்டொனால்ட் ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த கிரகணம் இன்று நள்ளிரவில் 1 மணி 58 நிமிடத்தில் ஏற்பட தொடங்கும். பின்னர் 1 மணி நேரம் சென்றபின் நிலவு முழுவதுமாக மறைந்து சந்திர கிரகணம் ஏற்படும். இந்த நேரத்தில் நிலவு ஆரஞ்சு, சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும். இந்த கிரகணம் 3 மணிநேரம் தொடர்ந்து நீடித்து அதிகாலை 5 மணி 33 நிமிடங்கள் வரை இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். வளிமண்டலத்தில் காணப்படும் எரிமலை துகள்கள் மற்றும் பிற வாயுக்களின் அளவை கொண்டு நிலவின் நிறம் மாறுபடும். சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் சந்திர கிரகணம் ஆனது வருடத்திற்கு 2 அல்லது 3 முறை ஏற்படும். அமெரிக்காவில் இன்று ஏற்படும் சந்திர கிரகணம் அதன் பின்பு வருகிற 2019ம் ஆண்டு தான் தெரியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இங்கிலாந்து மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் இந்த கிரகணம் தெரியும். இந்த சந்திர கிரகணத்தை நேரடியாக காண்பதற்கு வசதியாக திட்டமிட்டுள்ள நாசா நிறுவனம், அதற்காக நாசா டி.வி. மற்றும் நாசா.கவ் இணையதளம் ஆகியவற்றின் வழியாக அதனை பார்க்க ஏற்பாடு செய்துள்ளது. இதனை தவிர்த்து ஜார்ஜியா மாகாணத்தின் கொலம்பஸ் மாநில பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கோகா கோலா அறிவியல் மையம் மற்றும் ஸ்லூ.காம் ஆகிய இணையதளங்கள் வழியாகவும் நேரடியாக சந்திர கிரகணத்தை காணலாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிறந்த 7 குழந்தைகளை கொன்ற அமெரிக்க பெண்! Posted: 15 Apr 2014 04:05 AM PDT
அமெரிக்காவின் உடா மாகாணத்தில் வசித்து வரும் ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று காவல்துறையினருக்குப் போன் செய்து தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தை சுத்தம் செய்தபோது குழந்தையின் சடலம் ஒன்று இருந்ததாகக் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறைஅங்கு அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ஏழு குழந்தைகளின் சடலங்களைக் கைப்பற்றியுள்ளது. புகார் செய்தவரின் மனைவியான மேகன் ஹுன்ட்ஸ்மன் (39) என்பவருக்கு இந்தக் குழந்தைகள் பிறந்திருக்கக்கூடும் என்று குறிப்பிட்ட காவல்துறை தற்போது தனியாக வசித்து வரும் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளது. ஆனால் விசாரணையின் விபரம் வெளித் தெரிவிக்கப்படவில்லை. ஹுன்ட்ஸ்மன் தனது கணவருடன் அந்த வீட்டில் வசித்து வந்த காலத்தில் கடந்த 1996-ம் ஆண்டிலிருந்து 2006-ம் வருடம்வரை தனக்குப் பிறந்த குழந்தைகளைக் கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அதுகுறித்து அவரது கணவருக்கு ஏதும் தெரியவில்லை என்பது விந்தையாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்தக் குழந்தைகளின் சடலங்கள் ஆய்வுக்காக உடா மருத்துவ ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் இவர்கள் இருவரின் டிஎன்ஏ மாதிரிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தலைவர் கேப்டன் மைக்கேல் ராபர்ட்ஸ் தெரிவித்தார். குழந்தைகளின் சடலங்கள் இருந்த வீட்டில்தான் ஹுன்ட்ஸ்மனின் மூன்று பெண்கள் வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அவர்களுக்கு முறையே 20, 18, 13 வயதிருக்கும் என்று அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான ஷரோன் சிப்மன் என்பவர் குறிப்பிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்: நாளை கோலாகல துவக்கம்! Posted: 15 Apr 2014 03:18 AM PDT
ஐபிஎல் கிரிக்கெட்டின் 7வது சீசன் கோலாகலமாக நாளை துவங்குகிறது. உலக அளவில் கிரிக்கெட் மீது ரசிகர்களின் கவனத்தை திருப்பியதில் ஐபிஎல்லின் பங்கு அதிகம். 2008 முதல் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதத்தில் கோடை கொண்டாட்டமாக ஐபிஎல் சீசன் விருந்து படைத்து வருகிறது. 2014ம் ஆண்டின் ஐபிஎல் 7வது சீசன் நாளை ஆரம்பமாகிறது. இந்தியாவில் தேர்தல் நடப்பதால் இரண்டு கட்டமாக போட்டிகள் நடக்கின்றன. அதாவது முதல் கட்ட போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் நடக்கின்றன. நாளை நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பி யன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா அணியை எதிர் கொள்கிறது. முதல் 20 ஆட்டங்கள் இந்த நாடுகளில் நடக்கிறது. 2வது கட்டமாக 21வது ஆட்டத்தில் இருந்து இறுதி ஆட்டம் வரை இந்தியாவில் நடக்கின்றன. மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. ஜூன் 1ம் தேதி மும்பையில் இறுதி ஆட்டம் நடக்கிறது. ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் 2 முறை மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும். இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், ஜூன் 1ம் தேதி மும்பையில் சாம்பியன் பட்டத்துக்கு மல்லுக்கட்டும். இந்த தொடரைப் பொறுத்தவரை டெல்லி அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் சதீஸ்வர் புஜாரா, பெங்களூர் அணியின் யுவராஜ் சிங் (இந்த தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்), டெல்லி வீரர் தினேஷ் கார்த்திக் (இவர் அதிக தொகைக்கு ஏலம் போன 2வது வீரர்), கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் ஆகியோர் உள்ளனர். இதில்லாமல் அதிரடிக்கு கோரி ஆண்டர்சன், மேக்ஸ்வெல், டூபிளஸ்சிஸ், டேரன் சம்மி, கெயில், டேவன் ஸ்மித், டோனி, ரெய்னா, மெக்குல்லம், டிவில்லியர்ஸ், கோஹ்லி, சே வாக் என மற்றொரு படை பேட்டிங்கில் விருந்து படை க்க தயாராக உள்ளது. இதே போல் சுழல் பவுலிங்கில் நரேன், அஸ்வின், மெண்டிஸ் ஆகியோரும் மிரட்டுவர். ஐபிஎல் சூதாட்டம் கடந்த ஆண்டு பரபர ப்பை ஏற்படுத்தி தொடரை பஞ்சர் ஆக்கினாலும், பல நாட்டு வீரர்கள் ஒரே அணியில் சேர்ந்து விளை யாடுவது கிரிக்கெட் ரசிகர் களுக்கு வரப்பிரசாதமான ஒன்றே. விமர்சனங்கள் விசனப்பட வைத்தாலும், நாளை தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை கிரிக்கெட் ரசிகர் களுக்கு தினமும் இரவு விருந்துதான் என்பதில் சந்தேகம் இல்லை.நாளை முதல் போட்டி யில் களமிறங்கும் மும்பை, கொல்கத்தாஅணிகள் குறித்து ஒரு பார்வை:நடப்பு சாம்பியனான மும்பை அணி, இந்த முறை ரோஹித் சர்மா தலை மையில் களமிறங்குகிறது. அணியில் மைக்கேல் ஹஸ்ஸி, ராயுடு, ரோஹித், பொல்லார்டு, கோரே ஆண்டர்சன் ஆகியோர் பேட்டிங்கில் மிரட்டுவர். பந்து வீச்சில் டுவெண்டி 20 உலக கோப்பையில் கலக்கிய மலிங்கா, ஜாகீர் கான், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங் ஆகியோர் பவுலிங்கில் அசத்துவர். இதேபோல் கொல்கத்தா அணி கேப் டன் காம்பீர் தலைமையில் களமிறங்கு கிறது. அதிரடிக்கு உத்தப்பா, கேப்டன் காம்பீர், காலிஸ், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ஷாகிப் அல் ஹசன் உள்ளனர். பந்து வீச்சில் மந்திர பவுலர் சுனில் நரேன், வினய் குமார், பியூஸ் சாவ்லா, மோர்னே மார்கல், உமேஷ் யாதவ் உள்ளனர். முதல் போட்டியில் முத்திரை பதிப்பது யார்? என்று நாளை தெரிந்து விடும். அபுதாபியில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சச்சின் டெண்டுல்கருக்கு கால்பந்து கற்றுதருவேன்: சவுரவ் கங்குலி கலாட்டா! Posted: 15 Apr 2014 03:09 AM PDT
சச்சின் டெண்டுல்கர்-சவுரவ் கங்குலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்ட போதிலும், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்கான அணிகளை அவர்கள் வாங்கியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் கொச்சி அணியையும், சவுரவ் கங்குலி கொல்கத்தா அணியையும் வாங்கி உள்ளனர்.கங்குலி தனது கல்லூரி நாட்களில் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். தனக்கு கால்பந்துதான் வாழ்க்கை என்று அப்போது அவர் கருதிக் கொண்டிருந்தார். ஆனால், பின்னர் கிரிக்கெட்டில் கால் பதித்து சாதித்தார்.இந்நிலையில், சவுரங் கங்குலி நேற்று அளித்த பேட்டியொன்றில் டெண்டுல்கரை கலாய்த்துள்ளார். ''நாங்கள் இப்போது ஆடுகளத்துக்கு வெளியே எதிரெதிர் அணிகளாக உள்ளோம். நான் டெண்டுல்கருக்கு கால்பந்து கற்றுக் கொடுக்கப் போகிறேன். அவருக்கு நன்றாக கால்பந்து விளையாடத் தெரியாது. கிரிக் கெட் பந்தை பேட்டால் வெளுத்து வாங்கும் டெண்டுல்கருக்கு, கால்பந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வித்தை தெரியாது. அவர் இப்போது கால்பந்து அணியை வாங்கியுள்ளதுடன், கொல்கத்தா அணியுடன் மோதவும் போகிறார்.கால்பந்தாட்டத்தை அவர் விரைவாக கற்றுக் கொள்வாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால், கால் பந்தை கற்றுக் கொள்ள அவருக்கு நிச்சயம் 15 ஆண்டுகள் தேவைப்படாது. ஏனென்றால் 15 ஆண்டுகளுக்கு பின்னர் அவரால் கால்பந்து விளையாட்டு களத்தில் விளையாடி பார்க்க முடியாது. இதனால், அவர் கால்பந்தை விரைவாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்'' என்று கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| புஜ்சுக் குட்டி…செல்லக்குட்டி….கொஞ்சி விளையாடும் கடல் சிங்கங்கள் ! Posted: 15 Apr 2014 02:10 AM PDT |
| பெரிய முதலை….பதறியடித்து ஓடும் கிராம மக்கள்! Posted: 15 Apr 2014 02:01 AM PDT |
| WOW..இவங்க திறமைய பாராட்டாம இருக்கவே முடியாது…… Posted: 15 Apr 2014 01:57 AM PDT |
| ஏழைக்கேத்த ஏசி! நாமே செய்யலாம் பாக்குறீங்களா.. Posted: 15 Apr 2014 01:40 AM PDT |
| 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் அஜீத்தின் அமர்க்களம்! Posted: 15 Apr 2014 12:31 AM PDT
கடந்த 1999 ஆம் ஆண்டுஅஜீத்தின் 25-வது படமாக வெளிவந்தது 'அமர்க்களம்'. சரண் இயக்க, பரத்வாஜ் இசையமைத்திருந்தார். ஒரு மென்மையான காதல் ஹீரோவாக வலம் வந்த அஜீத்துக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜைத் தந்தது இந்தப் படம். அது மட்டுமின்றி இந்தப் படத்தில் திரையில் தனக்கு ஜோடியாக வந்த ஷாலினியையே நிஜ வாழ்விலும் பின்னர் அஜீத் கரம் பிடித்து தனது வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார். இந்தப் படத்தில் அஜீத்துக்காக எஸ்பி பாலசுப்பிரமணியன் மிக உணர்ச்சிப்பூர்வமாகப் பாடிய சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.. பாடல் படு பிரபலம், அன்றைக்கு. ஷாலினி தன் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருந்தார் இந்தப் படத்தில். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இப்போது டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு மீண்டும் வெளியாகிறது. அஜீத்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தை வரவேற்க இப்போதே தயாராகி வருகின்றனர் அஜீத் ரசிகர்கள். This posting includes an audio/video/photo media file: Download Now |
| எனக்கு முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்கள் யாரும் தேவையில்லை! – சந்தானம் அதிரடி Posted: 15 Apr 2014 12:19 AM PDT
முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் யாரும் எனக்குத் தேவையில்லை. நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறத உள்ளங்கள் இருந்தா போதும், என்றார் நடிகர் சந்தானம், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில். கெட்ட நேரம் சொல்லிக் கொண்டு வருவதில்லை... அது அவரவர் நாக்கிலேயே எப்போதும் உட்கார்ந்திருக்கிறது, என்பார்கள். இது எல்லாருக்கும் பொருந்தும், அதுவும் சினிமாக்காரர்களுக்கு சொல்லவே வேண்டாம்! சந்தானத்துக்கு கிட்டத்தட்ட அப்படியொரு நேரம் ஆரம்பமாகப் போகிறது என்பதுதான் நேற்று அவர் பேச்சைக் கேட்ட அத்தனை பேரின் கமெண்ட்ஸும். அவர் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தேவி தியேட்டரில் நடந்தது. ஏதோ ரசிகர் மன்ற மாநாடு மாதிரி ஆட்களைக் குவித்திருந்தார் சந்தானம். தெலுங்கு தேசத்திலிருந்து இயக்குநர் ராஜமவுலியையும் அழைத்திருந்தார். இவர் எடுத்த மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக்தான் இந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்! திரையில் சின்ன வேடத்தில் வந்தாலும், பேசியே கொல்லும் ஸ்ரீநாத்-தான் இந்தப் படத்தின் இயக்குநர். மைக்கைப் பிடித்தவர் நான்கைந்து படங்களுக்குச் சேர்த்தே பேசிவிட்டுத்தான் இறங்கினார்! அடுத்துப் பேசிய சந்தானம், " எவ்ளோ காலத்துக்குதான் ஹீரோவோட லவ்வுக்கு உதவி பண்ற மாதிரியே நடிக்கிறது... அதான் இப்போ நானே ஹீரோவா களமிறங்கிட்டேன். என் ரசிகர்கள் என்னை நீண்ட நாட்களாக 'தலைவா.. தனி ஹீரோவா நடிங்க'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. எனக்குன்னு ஒரு மார்க்கெட் வேல்யூ வரும் வரை காத்திருந்தேன். இப்போ அது வந்துருச்சி... என் ரசிகர்களுக்காகத்தான் இந்தப் படம் பண்றேன். என் ஏரியால அடிக்கடி பசங்க வந்து, மச்சான் அவன் என்னைக் கலாய்ச்சிட்டான்.. வாடா அவனை ஒரு கை பாக்கலாம்னு கூப்பிடுவாங்க. நான் சொல்வேன், 'டேய் உங்களுக்கு தில் இருந்தா தனியா போய் மோதுங்கடா.. அடுத்தவனை எதுக்கு இழுக்கறே'-ன்னு. நான் என்னை மட்டுமே இந்த சினிமால நம்பியிருக்கேன். அப்படி நம்பித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன். இந்தப் படத்துல இருக்கற ஒரு டெக்னீஷியன் பேரு கூட தயாரிப்பாளருக்குத் தெரியாது. அவங்ககிட்ட நான் சொன்னதே, என்னை மட்டும் நம்புங்க.. இந்தப் படத்தை முடிச்சித் தர்றேன்-ன்னு சொன்னேன். பெரிய பெரிய டெக்னீஷியன்களை நம்பவில்லை. நான் என்னை மட்டுமே நம்பி இறங்கியிருக்கேன். இந்த விழாவுக்குக் கூட முன்னணி ஹீரோக்களையோ இயக்குநர்களையோ நான் கூப்பிடவில்லை. அவர்களைவிட, நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்கதான் எனக்கு வேணும். அவர்களைத்தான் இங்கே அழைச்சிருக்கேன்," என்று பேசிக் கொண்டே போனார்!This posting includes an audio/video/photo media file: Download Now |
| இயற்கையின் கொடையான அன்னாசி பழம் Posted: 15 Apr 2014 12:00 AM PDT
இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும். அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது. தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம் Posted: 14 Apr 2014 11:38 PM PDT
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர். தேனில் அடங்கியுள்ள பொருட்கள்: 1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம். 2. பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம். 3. திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம். 4. கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம். மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது. தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்: 1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும். 2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும். 3. தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும். 4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம். 5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும். 6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும். 7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும். 8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும். 9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது. 10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

















