Tamil News | Online Tamil News |
- ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை எதிர்த்த வழக்கில் உத்தரவு: அரசியல் சட்ட பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
- நாட்டை வகுப்பறை ஆக்கிவிட்டார் மோடி: பிரியங்கா
- லோக்சபா தேர்தலுக்காக 2வது தேர்தல் அறிக்கை வெளியிட்டது காங்.,
- ராஜா, கனிமொழி, தயாளு உட்பட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: ரூ.200 கோடி விவகாரத்தில் அமலாக்க பிரிவு அதிரடி
- கேப்டனின் வெற்றிக்கணக்கு தப்பாது: தே.மு.தி.க.,வினர் அதீத நம்பிக்கை
- தி.மு.க., - காங்., வேட்பாளர்கள் 'லபோதிபோ': பணம் பட்டுவாடாவில் கடும் பாகுபாடு
- தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் மின் தடை அமல்
- பிரதமராவதை தடுக்க சதி: பிரசாரத்தில் மோடி கோபம்
- 'ஓட்டு எண்ணிக்கை முடிய தாமதம் ஏற்படலாம்'
| Posted: புதுடில்லி: 'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவை தடை செய்து, பிப்ரவரியில் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும்' என, நேற்று அறிவித்த சுப்ரீம் கோர்ட், 'கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை அரசியல் சாசன பெஞ்ச் ஆராய்ந்து முடிவு செய்யும்' என தெரிவித்து, வழக்கை அந்த பெஞ்சுக்கு மாற்றியது.காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் ராஜிவ், 1991ல், தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த போது, ஸ்ரீபெரும்புதூரில், விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு உதவியதாக, பேரறிவாளன், முருகன் ... |
| நாட்டை வகுப்பறை ஆக்கிவிட்டார் மோடி: பிரியங்கா Posted: ரேபரேலி: ''குஜராத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை, தனக்கு நெருக்கமானவர்களுக்கு குறைந்த விலைக்கு, முதல்வர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார். இது தான் குஜராத் மாடல் வளர்ச்சியா... நாட்டை வகுப்பறை போல் மோடி நடத்துகிறார்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா சாடினார்.வசைபாடுவதை...: சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி., மாநிலம், ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் தன் தாய் சோனியாவுக்கு ஆதரவாக, பிரியங்கா, தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவரின் பிரசாரத்தில், அந்த தொகுதியில் சோனியா மேற்கொண்ட வளர்ச்சி ... |
| லோக்சபா தேர்தலுக்காக 2வது தேர்தல் அறிக்கை வெளியிட்டது காங்., Posted: புதுடில்லி: லோக்சபா தேர்தல் முக்கால்வாசி முடிந்து, மூன்று கட்ட ஓட்டுப்பதிவு பாக்கி உள்ள நிலையில், 'சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக' என தெரிவித்து, இரண்டாவது தேர்தல் அறிக்கையை, காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது.லோக்சபா தேர்தல், ஒன்பது கட்டமாக நடந்து வருகிறது. இதில், நேற்று முன் தினத்துடன், ஆறு கட்ட ஓட்டுப்பதிவுகள் முடிந்துவிட்டன. இன்னும், மூன்று கட்ட ஓட்டுப்பதிவுகள் மட்டும் பாக்கியுள்ளன. இந்நிலையில், சிறுபான்மையின மக்களில், குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு, 4.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்படும்' என, காங்கிரஸ் நேற்று தேர்தல் ... |
| Posted: புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், பண மோசடியில் ஈடுபட்டதாக, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, கட்சித் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு உள்ளிட்ட, 19 பேர் மீது, அமலாக்க இயக்குனரக அதிகாரிகள், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி: '2 ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் ஏற்கனவே, ராஜா மற்றும் கனிமொழி மீது, சி.பி.ஐ., தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்க இயக்குனரகம் சார்பிலும் நேற்று குற்றப் ... |
| கேப்டனின் வெற்றிக்கணக்கு தப்பாது: தே.மு.தி.க.,வினர் அதீத நம்பிக்கை Posted: 'தே.மு.தி.க., போட்டியிட்ட சில தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதால், விஜயகாந்தின் வெற்றிக்கணக்கு தப்பாது' என, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற, தே.மு.தி.க., 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், ஐந்து தொகுதிகளில், தே.மு.தி.க., வெற்றி பெறும் என, அக்கட்சி தலைமை கணித்தது. ஆனால், தொகுதிகளில் இருந்து வந்த தகவல்களும், ஊடகங்களில் வெளியான செய்திகளும், தே.மு.தி.க.,வுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தன. இந்நிலையில், தே.மு.தி.க., போட்டியிட்ட சில தொகுதிகளில், அதிக அளவில் ஓட்டுகள் ... |
| தி.மு.க., - காங்., வேட்பாளர்கள் 'லபோதிபோ': பணம் பட்டுவாடாவில் கடும் பாகுபாடு Posted: லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு, தேர்தல் செலவுக்கென, முதல்கட்டமாக, கட்சி சார்பில், பணம் வழங்கப்பட்டதோடு சரி; இரண்டாம் கட்டமாக, பணம் தர முடியாது என, ஸ்டாலின் கைவிரித்து விட்டதால், மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களும், வேட்பாளர்களுக்கு, கடைசி கட்ட செலவுகளை சமாளிக்க, தவித்துப் போனதாக, தகவல் வெளியாகி உள்ளது.கொதிப்பு: அதேபோல், காங்., கட்சியில், தேர்தல் செலவுக்கு, வேட்பாளர்களுக்கு பணம் வழங்கியதில், பாகுபாடு காட்டப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் கொதிப்படைந்து உள்ளனர். லோக்சபா தேர்தலை ஒட்டி, ... |
| தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் மின் தடை அமல் Posted: தேர்தல் நாளில், தடையில்லா மின்சாரம் வழங்கிய நிலையில், தேர்தல் முடிந்த கையோடு, மீண்டும் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், கடந்த ஆறு ஆண்டுகளாக, மின் பற்றாக்குறை நிலவுகிறது; இதை சமாளிக்க, மின் தடை செய்யப்படுகிறது. தற்போது, கோடை காலத்திற்கு முன்னதாக, மின் தேவை அதிகரித்துள்ளது. அணைகள் வறண்டு கிடப்பதால், நீர் மின் நிலையங்களில், மின் உற்பத்தி செய்ய முடியவில்லை. மேட்டூர் மற்றும் வட சென்னை விரிவாக்க புதிய அனல் மின் நிலையங்களில், அடிக்கடி பழுது ஏற்படுவதாலும், மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. காற்றாலை மூலமாகவும், எதிர்பார்த்த அளவிற்கு மின்சாரம் ... |
| பிரதமராவதை தடுக்க சதி: பிரசாரத்தில் மோடி கோபம் Posted: பதன்கோட்: ''என் தலைமையில், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைப்பதை தடுக்க சதி செய்யப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் துணையுடன், காங்கிரஸ் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேசினார்.பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளரும், பாலிவுட் சினிமா நடிகருமான வினோத் கன்னாவை ஆதரித்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது: பொதுவாக, எதிர்க்கட்சிகள் தான், பல முக்கிய சக்திகளுடன் இணைந்து, ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பது வழக்கம். இங்கு, அதற்கு மாறான நிலை காணப்படுகிறது. ... |
| 'ஓட்டு எண்ணிக்கை முடிய தாமதம் ஏற்படலாம்' Posted: சென்னை: ''தமிழகத்தில் இந்த முறை, அதிக எண்ணிக்கையில் ஓட்டுகள் பதிவாகி உள்ளதால், மே 16ம் தேதி, இவற்றை எண்ணி முடிக்க, கால தாமதம் ஏற்படலாம்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், நேற்று முன்தினம் அமைதியாக, ஓட்டுப் பதிவு நடந்தது. அன்று நள்ளிரவே, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, கொண்டு செல்லப்பட்டன. அவை, அறைக்குள் வைத்து பூட்டப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. அறையின் முன்புறம், துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் பணியில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 26,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |