Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இனி அரசியல் இல்லை: நடிகர் வடிவேலு புது முடிவு

Posted:

சென்னை: அரசியலுக்கு வந்தது காலத்தின் கட்டாயம்; இனி சினிமா தான் ஒரே வழி, என, நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.


கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால், வடிவேலுவை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் பயந்தனர்; இதனால், அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் ...

கோடை வெளியீடாக வருகிறது திருமணம் எனும் நிக்காஹ்!

Posted:

மிக வித்தியாசமான கதை, வித்தியாசமான கதைக்களம் என்ற வகையில் எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவரும் படம் - திருமணம் எனும் நிக்காஹ். புரிதல் அவசியம் என்ற உன்னத கருத்தை வலியுறுத்தும் இந்த படம் காதலுக்கும் ஊடலுக்கும் இடையே புரிதலின் முக்கியமான பங்களிப்பை பற்றி கூறும் படமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திருமணம் ...

60 படங்கள்: 3 ஹிட்டு, 7 பாராட்டு, 7 ஏமாற்றம் - 2014 முதல் காலாண்டு ரிப்போர்ட்

Posted:

தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டிற்கு 60 படங்கள் ரிலீசான காலம் உண்டு. இப்போது மார்ச் 31 வரைக்குமான முதல் காலாண்டிலேயே 60 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகி அசர வைத்திருக்கிறது. இதே ரீதியில் போனால் 2014ம் ஆண்டு 250 படங்களுக்கு மேல் ரிலீசாகி உலக சாதனை படைக்கும்.

முதல் காலாண்டில் வெளிவந்த 60 படங்களில் வீரம், கோலிசோடா, குக்கூ, தெகிடி படங்கள் ...

இசை ஆல்பத்தில் பிரேம்ஜியுடன் குத்தாட்டம் போடும் அக்ஷயா!

Posted:

கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அக்ஷயா, கலாபகாதலன், உயிரின் ஓசை, எங்கள் ஆசான், உயர்திரு 420 உள்பட பல படங்களில் நடித்தார். ஐம்பதுக்கும் ஆசை வரும், மன்மத ராஜ்யம், பட்டிக்காட்டு மாப்பிள்ளை, தசையினை தீச்சுடினும் படங்களில் நடித்துள்ளார். அவைகள் ரிலீசாகமால் நிற்கிறது. தற்போது புதிய வாய்ப்புகள் எதுவும் இல்லாத அக்ஷயா ஸ்மைல் ...

கோச்சடையான் படத்தில் நான் திணிக்கப்பட்டேன்: ரஜினியின் வெளிப்படையான பேச்சு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தின் இந்தி பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அமிதாப்பச்சன் வெளியிட ஐஸ்வர்யா பச்சன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் ரஜினி பேசியதாவது: இந்த படம் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு தொழல்நுட்பம் பற்றி தெரியாது. இதுபோன்ற ...

நண்பேன்டா படத்திலிருந்து விலக நயன்தாரா முடிவு?

Posted:

இரண்டாம் உலகம் படத்தை முடித்த அனுஷ்கா அதையடுத்து ராணி ருத்ரம்மாதேவி, பாகுபாலி படங்களுக்கு வருடக்கணக்கில் கால்சீட் கொடுத்து ஆந்திராவிலேயே செட்டிலாகி விட்டார். அவரைத் தொடர்ந்து இப்போது நயன்தாராவும் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் கமிட்டாகி 6 மாதங்களுக்கு தொடர்ச்சியாக கால்சீட் கொடுத்துள்ளாராம்.

தமிழில் அவருக்கு ...

600 தியேட்டர்களில் மான்கராத்தே ரிலீஸ்!

Posted:

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள மான்கராத்தே சூப்பர் ஸ்டாரின் பட ரேன்ஞ்சுக்கு எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கிறது. காரணம் சிவகார்த்திகேயனின் தொடர் வெற்றி, ஹன்சிகாவின் காதல் பிரேக்அப்பிற்கு பிறகு வெளிவரும் படம். ஏ.ஆர்.முருதாசின் கதை. எப்படியும் காமெடிக்கு கியாரண்டி இருக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு. படத்தின் தயாரிப்பு ...

ஜி.வி.பிரகாஷ்குமார் மீது பரபரப்பு புகார் கூறும் இலங்கைப் பாடகர்

Posted:

'நான் சிகப்பு மனிதன் படத்தில் தன்னுடைய பாடல் நா.முத்துகுமார் பெயரில் வெளியாகி இருக்கிறது. இதற்கு ஜி.வி. பிரகாஷ்குமார்தான் காரணம் என்று குற்றம்சாட்டி இருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த தினேஷ் ஆர்யன். ராப் பாடல்களுக்காக புகழ் பெற்றுள்ள இவர் ஒரு சில தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். என்னப்பா பஞ்சாயத்து? ...

கானா பாட்டுப்பாட தேவா ரெடி!

Posted:

சினிமாவில் கானா பாடல்களை பாப்புலர் ஆக்கியவர் இசையமைப்பாளர் தேவா. அவர் இசையமைத்த எல்லா படங்களிலும் ஒரு கானா பாடலாவது நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதிலும் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலும் தேவாவின் கானா பாடல்கள் பிரசித்தம். தற்போது மான் கராத்தே படத்தில் தேவா பாடி இருக்கும் "ஓபன் தி டாஸ்மாக்" என்ற ...

விஷாலை விடாமல் கலாய்க்கும் விஷ்ணு!

Posted:

விஷால் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தின் ஆடியோ விழாவிலேயே விஷால், லட்சுமிமேனனை பொத்தி பொத்தி வைத்திருந்தார். படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற எங்களை அவரை ஒரு தடவைகூட பார்க்க அனுமதிக்கவில்லை என்று மேடையிலேயே கலாய்த்தார். ஆனால் அதற்கு விஷால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. விஷ்ணு ஸ்பாட்டுக்கு வந்த அன்று லட்சுமிமேனனே ...

சுஜிபாலாவின் பெற்றோர் என்னை மிரட்டுகின்றனர்! டைரக்டர் ரவிக்குமார் புகார்!!

Posted:

உண்மை என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்து வருபவர் ரவிக்குமார். இப்படத்தில், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக உள்பட பல படங்களில் நடித்த சுஜிபாலா நாயகியாக நடித்து வருகிறார். அப்படத்தில் நடித்தபோது ரவிக்குமாருக்கும், சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்ததாகவும், அதையடுத்து அவர்களது திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த ...

ஏறுமுகத்தில் சென்ற விஜயசேதுபதியின் படக்கூலி இறங்குமுகம் கண்டது!

Posted:

சினிமாவைப்பொறுத்தவரை எத்தனை பெரிய ஹீரோக்களாக இருந்தாலும் அவர்கள் நடிக்கிற படங்களின் வெற்றிதான் அவர்களது மார்க்கெட்டை தீர்மானிக்கிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமான விஜயசேதுபதிக்கு அதன்பிறகு நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா ...

நயன்தாராவுக்கு எதிராக போட்டி நடிகை உருவாக்கும் ஆர்யா!

Posted:

பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று எவ்வளவோ ஆசைப்பட்டார் ஆர்யா. ஆனால், தற்போது தமிழ், தெலுங்கில் பிசியாக விட்ட அவர், மறுபடியும் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்திலும் நடிப்பவர், இப்போது ஆர்யாவை விட்டு விலகி ரொம்ப தூரம் போய் விட்டார்.

முன்பெல்லாம் ஒருநாள் ...

சமந்தாவுக்கு டோஸ் விட்ட முருகதாஸ்!

Posted:

அஜீத் நடித்த, 'தீனா' படத்தில் அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து அவர் நடித்த படங்களில் எத்தனையோ கதாநாயகிகள் நடித்தபோதும் கஜினியில் நடித்த அசின் மீது மட்டும் இன்னமும் உள்ளூர கோபத்திலேயே இருக்கிறார். காரணம், அந்த அளவுக்கு கஜினி படத்தில் நடித்தபோது அவருக்கு டார்ச்சர் கொடுத்தாராம்.

அதே படத்தில் இன்னொரு ...

படப்பிடிப்பில் நயன்தாரா சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை! இமேஜை டேமேஜ் பண்ணும் சேகர் கம்முலா!!

Posted:

இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் நடிப்பில் நயன்தாரா, வித்யாபாலனையே மிஞ்சி விட்டார். அதனால் அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் தகும் என்று அவரைப்பற்றி பெருமையாக பேசி ...

விஷால்-சூரிக்கிடையே மீண்டும் கெமிஸ்ட்ரி!

Posted:

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடித்த படம் பட்டத்து யானை. இந்த படத்தில் சந்தானமும் நடித்திருந்தார். அப்போதைய நிலவரப்படி விஷாலின் மார்க்கெட் திருப்தியாக இல்லாததால் சந்தானத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தது. ஆனபோதும், படம் எதிர்பார்த்த ஹிட்டடிக்கவில்லை. அதனால் அதற்கடுத்து தான் நடித்த பாண்டியநாடு படம் ...

சினிமாவில் நடிக்கத் தயாராகிறார் ஸ்ரீதேவியின் மகள்

Posted:

ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதிகளுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தவரான ஜான்வியை சினிமாவில் நடிக்க வைக்க மணிரத்னம் உள்பட சில இயக்குனர்கள் முயற்சி செய்தனர். தன் மகள்கள் தன்னைப்போன்று அழகாக இல்லை. சினிமாவில் அறிமுகமானால் தன்னோடு ஒப்பிட்டு தன் மகளை பார்ப்பார்கள். தேவையில்லாமல் அவளுக்கு தாழ்வு மனப்பாண்மை ...

நடிப்பு ஆசையில் டாக்டர் பட்டத்தை இழந்த நிஷா

Posted:

ஞாயிறு காலையில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடரில் திரெளபதியாக நடித்து வருகிறவர் நிஷா கிருஷ்ணன். பார்ப்பதற்கு த்ரிஷா கிருஷ்ணன் போல இருக்கிறார். வயதுக்கு மீறிய கேரக்டரில் நடித்து வருவதால் நிஷாவுக்கு செம ரெஸ்பான்ஸ். நடிப்பு ஆசையால் தான் டாக்டர் பட்டத்தை இழந்த சோகத்தை இப்போது கூறியிருக்கிறார்.

"பிளஸ்-2 முடித்துவிட்டு ...

என் மண்ணை பெருமைப்படுத்தும் விருது: பத்மபூஷன் கமல் நெகிழ்ச்சி

Posted:

டில்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பத்மபூஷன் விருது பெற்ற கமலஹாசன் அளித்துள்ள நெகிழ்ச்சி பேட்டியில், இந்த விருது என் மண்ணை பெருமைப்படுத்தும் விருது என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் விருதை வாங்கிய ஜனாதிபதி மாளிகையும், விருது பெற வந்திருந்தவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு இன்னும் பணிவை கற்றுத் ...

மீண்டும் இணைகிறது ஜெயம்ரவி-ஹன்சிகா ஜோடி!

Posted:

ஹன்சிகாவின் முதல் தமிழ் ஜோடி ஜெயம்ரவி தான். பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்தின் மூலம்தான் தமிழுக்கு வந்தார் ஹன்சிகா. இப்போது ஜெயம்ரவி-ஹன்சிகா ஜோடி மீண்டும் இணைகிறது. நிமிர்ந்து நில் படத்திற்கு பிறகு ஜெயம்ரவி தன் அண்ணன் இயக்கி வரும் படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். இதற்கு பிறகு ஜெயம்ரவி நடிக்கும் படத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™