மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வேட்பாளர்–தொண்டர்கள் வராததால் பிரசாரத்தை ரத்து செய்த சிரஞ்சீவி
- தெலுங்கானாவில் இன்று ஓட்டுப்பதிவு: காங். வேட்பாளர் தற்கொலை முயற்சி
- வாரணாசியில் காங். வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்பு ஆதரவு
- திருவனந்தபுரம் அருகே கோவையை சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர் பலி
- லல்லு-நிதிஷ்குமாரை வீழ்த்த மோடி பீகாரில் 10 நாள் பிரசாரம்
- 437 பொதுக்கூட்டங்களில் பேசி நரேந்திர மோடி சாதனை
- மத்தியில் ஆட்சி அமைக்க 3–வது அணியை ஆதரிக்க மாட்டோம்: காங்கிரஸ்
- சபரிமலையில் பெண் பக்தர்களிடம் சில்மிஷம்: சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
- பத்மநாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் தொல்பொருள் அதிகாரிகள் ஆய்வு
- ஏழை மக்களின் வீடுகளில் சோலார் விளக்குகள் பொருத்தும் திட்டம்: அரசு ஆய்வு
- காஷ்மீரில் கொல்லப்பட்ட தமிழர் மேஜர் முகுந்துக்கு மோடி மரியாதை
- கேரள மாநிலம் ஆல்வாவில் ஓவியர் தேவன் காலமானார்
- மனித வெடிகுண்டு மூலம் மோடியை கொல்ல திட்டம்
- 7-வது கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
- பிரசாரம் ஓய்ந்த பின்னும் காட்சிகளை ஒளிபரப்பிய 5 தனியார் டி.வி. மீது வழக்கு
- தியாகிகளை களங்கப்படுத்துவதை விட அரசியலை விட்டே விலகுவேன்: மோடி உருக்கம்
- கார்கில் தியாகி பத்ராவின் பெயரை கூறி மோடி பிரச்சாரம் செய்வதா? குடும்பத்தினர் அதிருப்தி
- உ.பி.யில் அரசு பஸ் மீது பள்ளி வாகனம் மோதல்: 14 மாணவர்கள் காயம்
- ஜம்முவில் சி.ஆர்.பி.எப். ஜவான் தூக்குப்போட்டு தற்கொலை
- உமர் அப்துல்லா பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட வாலிபருக்கு பளார் விட்ட மந்திரி
| வேட்பாளர்–தொண்டர்கள் வராததால் பிரசாரத்தை ரத்து செய்த சிரஞ்சீவி Posted: 29 Apr 2014 10:49 PM PDT ஆந்திரா பிரிவினையால் சீமந்திரா பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் பலர் போட்டியிட விரும்பவில்லை. எனினும் கட்சித் தலைமை வலுக்கட்டாயமாக வேட்பாளர்கள் நிறுத்தி உள்ளது. ஓங்கோல் பாராளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக பவண்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பேசுவதற்காக சிரஞ்சீவி ஓங்கோல் வந்தார். |
| தெலுங்கானாவில் இன்று ஓட்டுப்பதிவு: காங். வேட்பாளர் தற்கொலை முயற்சி Posted: 29 Apr 2014 10:39 PM PDT தெலுங்கானா, வராங்கல் மாவட்டம் வரதன் பேட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீதர் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். நேற்று மாலை அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பென்னாலி லட்சுமியையாவை சந்தித்து விட்டு பாதுகாவலர்களுடன் காரில் வந்தார். அப்போது நண்பர் ஒருவரை போனில் பேசி மோட்டார்சைக்கிளில் வர வழைத்தார். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை வாங்கிய ஸ்ரீதர் |
| வாரணாசியில் காங். வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்பு ஆதரவு Posted: 29 Apr 2014 10:28 PM PDT பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தொகுதியில் களம் இறங்கி உள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக அஜய்ராய் போட்டியிடுகிறார். தற்போதைய எம்.எல்.ஏ.வான இவருக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. |
| திருவனந்தபுரம் அருகே கோவையை சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர் பலி Posted: 29 Apr 2014 10:24 PM PDT கோவையை சேர்ந்தவர் பூபதி (வயது 52). பறவை ஆராய்ச்சியாளரான இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள உயரமான அகஸ்தியர் மலைக்கு ஆராய்ச்சி செய்வதற்காக சென்றிருந்தார். அவருடன் திருவனந்தபுரம் பறவை ஆராய்ச்சி மாணவர்கள் 2 பேரும் சென்றிருந்தனர். அப்போது ஒரு செங்குத்தான பாறையில் இருந்து எதிர்பாராதவிதமாக பூபதி கால் தவறி கீழே விழுந்தார். இதில் மரக்கிளை அவரது கண்ணிலும், |
| லல்லு-நிதிஷ்குமாரை வீழ்த்த மோடி பீகாரில் 10 நாள் பிரசாரம் Posted: 29 Apr 2014 10:02 PM PDT பீகாரில் நரேந்திரமோடி 10 நாட்கள் தொடர்ந்து முகாமிட்டு தினமும் பொதுக் கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டுகிறார். பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 10–ந் தேதி 6 தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. 17–ந் தேதி, 24–ந் தேதி, 30–ந் தேதி (இன்று) ஆகிய நாட்களில் தலா 7 தொகுதிகளுக்கு அடுத்தடுத்த கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடந்தது. இன்னும் மே 7–ந் தேதி 7 தொகுதிகளுக்கும், மே 12–ந் தேதி 6 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே பீகாரில் பிரசார கூட்டங்களில் பேசிய நரேந்திரமோடி மீதம் உள்ள நாட்களில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் முடியும் வரை பீகாரிலேயே தங்கி இருந்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். |
| 437 பொதுக்கூட்டங்களில் பேசி நரேந்திர மோடி சாதனை Posted: 29 Apr 2014 09:53 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 9 கட்ட தேர்தலில் இதுவரை 438 தொகுதிகளில் 7 கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்த தொகுதிகள் அடங்கிய மாநிலங்களில் நரேந்திர மோடி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டியுள்ளார். |
| மத்தியில் ஆட்சி அமைக்க 3–வது அணியை ஆதரிக்க மாட்டோம்: காங்கிரஸ் Posted: 29 Apr 2014 09:34 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. இதனால் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களிடையே கடும் சோர்வு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை சுமார் 100 இடங்களில் தான் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே மாநில கட்சிகளை கூட்டணியில் சேர்த்தாலும் காங்கிரசால் ஆட்சி அமைக்க இயலாது என்று கூறப்படுகிறது. இதையடுத்து மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை தடுக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தலைவர்கள் இப்போதே தொடங்கி விட்டனர். அதன் ஒரு கட்டமாக மத்தியில் 3–வது அணி ஆட்சி அமைக்க ஆதரவு |
| சபரிமலையில் பெண் பக்தர்களிடம் சில்மிஷம்: சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு Posted: 29 Apr 2014 09:05 PM PDT சபரிமலையில் உள்ள சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலைக்கு பெண்கள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் 50 வயதுக்கு மேலான பெண்களும் மட்டுமே சபரிமலையில் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய முடியும். |
| பத்மநாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் தொல்பொருள் அதிகாரிகள் ஆய்வு Posted: 29 Apr 2014 08:15 PM PDT திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவிலை சுற்றிலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக கோவில் வடக்கு வாசலில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் சாலையை ஒட்டி |
| ஏழை மக்களின் வீடுகளில் சோலார் விளக்குகள் பொருத்தும் திட்டம்: அரசு ஆய்வு Posted: 29 Apr 2014 05:10 PM PDT எரிபொருள் பயன்பாட்டிற்காக இந்தியாவில் தற்போது 59 மில்லியன் டன் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. இது இங்கு உபயோகப்படுத்தப்படும் டீசலைவிட சற்றே குறைவான அளவாகும்.கடந்த 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 47 சதவிகித மக்கள் தங்கள் வீடுகளில் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணையைப் பயன்படுத்துகின்றனர். |
| காஷ்மீரில் கொல்லப்பட்ட தமிழர் மேஜர் முகுந்துக்கு மோடி மரியாதை Posted: 29 Apr 2014 03:48 PM PDT ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் விக்ரம்சிங் ஆகியோருக்கு பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், ''மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் விக்ரம்சிங் ஆகியோரின் தியாகத்தை இந்த நாடு |
| கேரள மாநிலம் ஆல்வாவில் ஓவியர் தேவன் காலமானார் Posted: 29 Apr 2014 03:24 PM PDT கேரள மாநிலம் தலச்சேரி பண்ணியமனூரைச் சேர்ந்தவர் தேவன். (வயது-86). சிறந்த ஓவியரும், சிற்பியும், எழுத்தாளருமான இவர், நேற்று ஆல்வாவில் காலமானார். கேரள மாநில கலாபீடம் மற்றும் கேரளா லலித் கலா அகாடமியின் தலைவராகவும், சென்னை லலிதா கலா அகாடமியின் செயலாளராகவும், |
| மனித வெடிகுண்டு மூலம் மோடியை கொல்ல திட்டம் Posted: 29 Apr 2014 01:56 PM PDT பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர். கடந்த ஆண்டு பாட்னாவில், புத்த கயாவில் அவரை கொல்ல சதிசெய்து குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் அதில் இருந்து அவர் தப்பித்து விட்டார். |
| 7-வது கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு Posted: 29 Apr 2014 01:20 PM PDT பாராளுமன்றத் தேர்தலுக்கான 9 கட்ட ஓட்டுப் பதிவு கடந்த 7–ந்தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 24–ந்தேதி தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 6–வது கட்ட தேர்தல் நடந்தது. இதன்மூலம் 349 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) 7 மாநிலங்கள், 2 யூனியன் |
| பிரசாரம் ஓய்ந்த பின்னும் காட்சிகளை ஒளிபரப்பிய 5 தனியார் டி.வி. மீது வழக்கு Posted: 29 Apr 2014 12:56 PM PDT தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் ஆந்திர மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தப் பின்னரும் பிரசாரம் தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பிய பிரபல தெலுங்கு தனியார் தொலைக்காட்சிகள் மீது தேர்தல் கமிஷன் நேற்று வழக்குப் பதிவு செய்தது. |
| தியாகிகளை களங்கப்படுத்துவதை விட அரசியலை விட்டே விலகுவேன்: மோடி உருக்கம் Posted: 29 Apr 2014 10:53 AM PDT இமாச்சல பிரதேச மாநிலம் பலம்பூரில் இன்று பிரச்சாரம் செய்த பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கார்கில் போரில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். "போரில் உயிர் நீத்த கேப்டன் விக்ரம் பத்ரா, இந்த உள்ளம் கேட்குதே மோர் (more) என்று கூறுவார். அதையே நானும் கூறுகிறேன். இமாச்சல |
| கார்கில் தியாகி பத்ராவின் பெயரை கூறி மோடி பிரச்சாரம் செய்வதா? குடும்பத்தினர் அதிருப்தி Posted: 29 Apr 2014 08:39 AM PDT இமாச்சல பிரதேச மாநிலம் பலம்பூரில் இன்று பிரச்சாரம் செய்த பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கார்கில் போரில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். |
| உ.பி.யில் அரசு பஸ் மீது பள்ளி வாகனம் மோதல்: 14 மாணவர்கள் காயம் Posted: 29 Apr 2014 08:09 AM PDT உத்தர பிரதேசத்தில் அரசு பஸ் மீது பள்ளி வாகனம் மோதியதில் 10 மாணவர்கள் காயம் அடைந்தனர். உத்தர பிரதேசம் கேட் அருகே அரசு பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் வந்த பள்ளி வாகனம் அந்த பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் 10 பள்ளி மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தலை, கால் மற்றும் கைகளில் பலத்த அடிபட்டது. காயம் அடைந்த |
| ஜம்முவில் சி.ஆர்.பி.எப். ஜவான் தூக்குப்போட்டு தற்கொலை Posted: 29 Apr 2014 07:54 AM PDT ஜம்முவில் சி.ஆர்.பி.எப். முகாமில் பணிபுரிந்த வீரர் தற்கொலை செய்து கொண்டார். ஜம்முவில் உள்ள கிஷ்துவார் பகுதியில் சி.ஆர்.பி.எப். முகாம் உள்ளது. இங்கு தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் விதா ஜன். இவர் நேற்று முகாமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து |
| உமர் அப்துல்லா பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட வாலிபருக்கு பளார் விட்ட மந்திரி Posted: 29 Apr 2014 07:42 AM PDT ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று வடக்கு காஷ்மீரின் ரபியாபாத்தில் பிரச்சாரம் செய்தார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் எழுந்து முதல்வரை நோக்கி கண்டன கோஷமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாநில உயர்கல்வி மந்திரி முகமது அக்பல் லோன், அந்த வாலிபரைப் பிடித்து அடித்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |