Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தெலுங்குதேசத்துடன் சேர பாஜகவில் எதிர்ப்பு: 8 மாவட்ட தலைவர்கள் ராஜினாமா

Posted: 05 Apr 2014 10:35 PM PDT

ஆந்திராவில் பாரதீய ஜனதா–தெலுங்கு தேசம் இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தை நேற்று இரவு இறுதி கட்டத்தை எட்டியது. சந்திரபாபு நாயுடு வீட்டில் தெலுங்கு தேசம் தலைவர்களுடன் பா.ஜனதா தேசிய தலைவர் ஜவதேக்கர், அகாலிதள எம்பி, நரேஷ் குஜ்ரால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதிஷ் ஆகியோர் நடத்திய தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதியில் 8

திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு: பக்தர்கள் கடும் அவதி

Posted: 05 Apr 2014 10:34 PM PDT

திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு இப்போது தலைதூக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் நிலைமை மேலும் மோசமாகும் என கருதப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவது உண்டு. இவர்களுக்கு தினமும் 32 லட்சம் கலோரி தண்ணீர் தேவைப்படுகிறது. மழை காலங்களில் 1369 மில்லி மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 1056 மில்லி மழையே பெய்தது. இதனால் திருமலையில் உள்ள பல நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைந்து வருகிறது. ஆகாய கங்கை வறண்டு விட்டது. கோகர்ப்பம் நீர்த்தேக்கம் குட்டைபோல் காட்சி அளிக்கிறது. பாபவிநாசனம், பகபுதாரா நீர்த்தேக்கத்தில்

நடிகர் பவன்கல்யாண் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 05 Apr 2014 10:24 PM PDT

மத்திய மந்திரி சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் 'ஜனசேனா' என்ற புதிய கட்சியை சமீபத்தில் தொடங்கினார். ஆந்திர மக்களை பிரித்த காங்கிரசை அழிப்பேன்'' என்று பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து தள்ளினார். சந்திரபாபு நாயுடுவால்தான் சிறந்த ஆட்சியை தர முடியும் என்றும் புதிய மாநிலத்தை நிர்வகிக்க அனுபவம்

மோடியின் 3டி பிரசாரம் ஆரம்பம்: டெல்லி பிரசாரம் ரத்து

Posted: 05 Apr 2014 05:14 PM PDT

தேர்தல் நெருங்குவதால் நேரமின்மை காரணமாக பிரசாரத்தில் 3டி தொழில்நுட்பத்தை கையாள பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. அதன்படி, 7 ஆம் தேதி முதல் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3டி தொழில்நுட்பத்தில் தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

பா.ஜ.க. தலைவர்களில் அதிகமானோர் அசைவம்: நிதிஷ்குமார்

Posted: 05 Apr 2014 04:36 PM PDT

''நமது நாட்டுக்கு பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சிதான் தேவை. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, 'இளஞ்சிவப்பு புரட்சி' குறித்து கவலைப்படுகிறது. கால்நடைகளின் இறைச்சி ஏற்றுமதியை ஆதரிக்கிறது. இதனால் உரியகாலத்தில் மழை பெய்யாத நிலை ஏற்பட்டால், கால்நடைகள் இன்றி கிராமப்புற பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்''

ஆப்கானிஸ்தான் தேர்தல் குறித்து இந்தியா கருத்து

Posted: 05 Apr 2014 03:18 PM PDT

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அன்னிய சக்திகளின் கீழ் தேர்தல் நடத்தப்படுவதை நிராகரித்த இஸ்லாமிய அமைப்பினர் தலைநகர் காபூலில் தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் காலை 7

கந்தகார் விமான கடத்தல் வழக்கு: யூசுப் நேபாளி விடுதலை

Posted: 05 Apr 2014 01:13 PM PDT

1999ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், ஐ.சி.- 814 லக்னோ மீது பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் காத்மாண்டு நகரிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் விமானத்தை கடத்தினர். பின்னர் விமானம் கந்தகாருக்கு கொண்டு செல்லப்பட்டது. கந்தகார் விமான நிலையத்தில் விமானம் ஐந்து நாட்களுக்கு வைக்கப்பட்டிருந்தது.

மோடி அலை தணிந்துவிட்டது: நாராயண் ரானே பேட்டி

Posted: 05 Apr 2014 12:06 PM PDT

''நாட்டில் தற்போது மோடி அலை தணிந்துவிட்டது, இன்னும் சில நாட்ளில் அது காணாமல் போய்விடும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்'' என மகாராஷ்டிர மாநில தொழிற்துறை மந்திரி நாராயண் ரானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாராயண் ரானே இதுகுறித்து மேலும் கூறியதாவது:-

குஜராத் மாடலை விட மேற்கு வங்காள மாடல் சிறந்தது: மம்தா

Posted: 05 Apr 2014 10:42 AM PDT

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் 'குஜராத்' மாடலை விட 'மேற்கு வங்காள' மாடல் சிறந்தது என மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார். இதுகுறித்து ராஞ்சியில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பேசியதாவது:-

வேட்பாளரின் வாகனத்தில் இருந்து ரூ.1.84 கோடி பணம் பறிமுதல்

Posted: 05 Apr 2014 08:46 AM PDT

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விதிகளை மீறி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் மதுபானங்களை அதிகாரிகள் கைப்பற்றி வருகின்றனர். அந்த வகையில், அருணாச்சல பிரதேச மாநிலம் யாசாலி நகரில் ஒரு வேட்பாளரின் காரில் இருந்து ரூ.1.84 கோடி பணத்தை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு அந்த வேட்பாளர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றிருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவரது பெயரையோ, அவர்

அத்வானியின் சொத்து மதிப்பு ரூ.7 கோடி

Posted: 05 Apr 2014 08:36 AM PDT

குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.7 கோடி என குறிப்பிட்டுள்ளார். இது கடந்த தேர்தலில் அவர் அறிவித்த சொத்தின் மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். குர்கான் பகுதியில் உள்ள அத்வானியின் 2 வீடு மற்றும் காந்திநகரில் உள்ள ஒரு வீட்டின் மதிப்பு ரூ.5.57 கோடியாகும். கடந்த தேர்தலில் அவற்றின் மதிப்பு ரூ.2.35 கோடி என அறிவித்திருந்தார்.

பா.ஜ.க.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது ராகுல்காந்தி தாக்கு

Posted: 05 Apr 2014 07:43 AM PDT

கேரளா மாநிலம் காசர்கோட்டில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பா.ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாகத் தாக்கி பேசினார். அவர் பேசுகையில், "மத்தியில் இடதுசாரிகள் எந்த முக்கிய பங்களிப்பும் பெறப்போவதில்லை என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறைமுகமாக பா.ஜ.க.விற்கு உதவி செய்கிறது. பிரிவினை அரசியலைத் தொடர்வதால் பா.ஜனதா கீழே வந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியோ, அனைத்து சமூகத்தினருடன் இணைந்து அதன்மூலம் நாட்டை முன்னேற்ற பாடுபடுகிறது" என்று குறிப்பிட்டார். மேலும் நரேந்திர மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய ராகுல்காந்தி, "ஒரு தலைவர், தான் இந்தியாவின் காவலாளியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியதை கேள்விப்பட்டேன். ஆனால், அனைத்து மக்களும் நாட்டின்

வானளாவிய வாக்குறுதி அளிப்பவர்களை மக்கள் நம்பக்கூடாது: சோனியா காந்தி

Posted: 05 Apr 2014 05:42 AM PDT

வானளாவிய வாக்குறுதிகளை அளிக்கும் கட்சிகளிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் பின்தங்கிய பகுதியான காரியரில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், "நாடு மிகவும் முக்கியமான காலகட்டத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. சிலர் வானளாவிய வாக்குறுதிகளுடன் வாக்காளர்களை அணுகுகின்றனர்.

கேரளா: காரும்–பஸ்சும் மோதி வாலிபர் பலி

Posted: 05 Apr 2014 05:26 AM PDT

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அருகேயுள்ள சுணக்கம்பாறையை சேர்ந்தவர் சேதுமாதவன். இவரது மனைவி அம்பிகா (வயது 47). இவர்களது மகன் மிதுன் (19). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். 3 மாத விடுமுறையில் பெற்றோரை பார்ப்பதற்காக மிதுன் கேரளாவுக்கு வந்தார்.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை விழாவை டெலிவிஷனில் ஒளிபரப்ப தடை: தேர்தல் கமிஷன்

Posted: 05 Apr 2014 04:05 AM PDT

பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வருகிற 7–ந் தேதி (திங்கட்கிழமை) வெளியிடுகிறது. முதல் கட்ட தேர்தல் அன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுவதால் இதை விளம்பரப்படுத்த முடியாத நிலை பா.ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழு ஈடுபட்டது. எதிர்பார்த்த அளவுக்கு அதில்

மொய்லி-அம்பானி மீது வழக்கு தொடர கெஜ்ரிவாலுக்கு அதிகாரமில்லை: சொலிசிட்டர் ஜெனரல்

Posted: 05 Apr 2014 03:52 AM PDT

இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக பெட்ரோலிய மந்திரி வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா ஆகியோர் மீது டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்தபோது அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

பழிவாங்க விரும்புகிறீர்களா? பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா சர்ச்சை பேச்சு

Posted: 05 Apr 2014 03:16 AM PDT

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு உரியவரான அமித் ஷாவிடம் அக்கட்சியின் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பிரச்சார பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் உ.பி.யில் கலவரம் நடந்த பகுதியான முசாபர் நகரில் பேசிய அவர், "நமது தாயையும், சகோதரிகளையும் தரக்குறைவாக நடத்தியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இத்தேர்தல் அமைந்துள்ளது. நம்மை அவமானப்படுத்தியவர்களுக்கு உதவிய இம்மாநில அரசை தூக்கியெறியும் நேரம் நெருங்கிவிட்டது. மோடி பிரதமரான அடுத்த நாளே

தண்ணீர் தர மறுத்த சந்திரசேகரராவை சிறையிலடைக்க வேண்டும்: கிரண்குமார்

Posted: 05 Apr 2014 02:39 AM PDT

ஆந்திராவை பிரித்து தெலுங்கானாவை மத்திய அரசு உருவாக்கிய போது சீமாந்திர பகுதி தண்ணீர் தேவைக்காக போலாவரம் நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போலாவரம் நீர்த்தேக்கத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட விடமாட்டோம் என்று தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கூறி வருகிறார். தங்கள்

மோடியுடன் சென்று மனு தாக்கல் செய்தார் அத்வானி

Posted: 05 Apr 2014 02:06 AM PDT

குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் தொகுதியில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி போட்டியிடுகிறார். அத்தொகுதியில் இன்று அவர் மனு தாக்கல் செய்தார். மோடிக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு ஏதும் கருத்து வேறுபாடில்லை என்று நிரூபிக்கும்

விசா சர்ச்சையில் சிக்கிய தேவயானி ஆதர்ஷ் வழக்கிலும் சிக்கினார்

Posted: 05 Apr 2014 01:33 AM PDT

அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கிய இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் தேவயானி கோப்ரகடேவிற்கு வீடு ஒதுக்கியது தொடர்பாக அவர் மீதும், அவரது தந்தை மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ முடிவு செய்துள்ளது. வீடு ஒதுக்குவதற்காக தவறான ஆவணங்களை தேவயானி தாக்கல் செய்துள்ளது குறித்து சி.பி.ஐக்கு தற்போது தகுந்த ஆதாரம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™