Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சட்டம் சகலருக்கும் ஒரேவிதமாக அமுல்படுத்தப்பட வேண்டும்

Posted: 19 Mar 2014 11:11 PM PDT

சட்டம் நாட்டின் அனைவருக்கும் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறிரங்கா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட மகனை விடுதலை செய்யுமாறு கோரும் தாயை கைது செய்வது நியாயமாகுமா? பருவமடைந்து 14 நாட்கள் ஆன மகளுடன் குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது எவ்வளவு அநீதியானது? நாட்டின் அனைத்து சட்டங்களும் அனைவருக்கும் ஒரே விதமாகவே அமுல்படுத்தப்பட வேண்டுமென சிறிரங்கா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்கா ஒவ்வொரு நாளும் இரவில் ஜனாதிபதியை சந்திக்கின்றார் என […]

பிரபாகரன் தப்பிச் செல்ல வழியமைத்துக் கொடுத்தவர்கள் தேசப்பற்றாளர்களா?-

Posted: 19 Mar 2014 11:09 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்ல வழியமைத்துக் கொடுத்தவர்களை தேசப்பற்றாளர்கள் என கூற முடியுமா என ஜனநாயக்க் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். இன்று தேசப்பற்றாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர், அன்று பிரபாகரன் தப்பிச் செல்ல வழியமைத்துக் கொடுத்தார்கள். இறுதிக் கட்ட போர் நடைபெற்று வந்த வேளையில் 48 மணித்தியால போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இந்த போர் நிறுத்த அறிவிப்பானது பிரபாகரன் தப்பிச் செல்வதற்காகவேயாகும். குறிப்பிட்ட காலப்பகுதியில் நாம் […]

சந்திரிக்காவை சந்திக்க மஹிந்த இணக்கம்

Posted: 19 Mar 2014 11:05 PM PDT

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளார். நாட்டின் மத ஒற்றுமை தொடர்பில் பேச்சு நடத்த சந்தர்ப்பம் தருமாறு சந்திரிக்கா விடுத்த வேண்டுகோளுக்கே ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார். முதல் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணங்காத போதும் இரண்டாம் முறை விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கே மஹிந்த இணக்கம் வெளியிட்டுள்ளார். முதல் தடவையாக சந்திரிக்கா ஜனாதிபதியின் செயலாளர் மூலமே சந்திக்கும் வாய்ப்புக்கான வேண்டுகோளை விடுத்திருந்தார். எனினும் அந்த வேண்டுகோள் கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என்று ஜனாதிபதியின் […]

நான் தவறிழைத்துவிட்டேன் – பசில் ராஜபக்ஷ

Posted: 19 Mar 2014 11:02 PM PDT

தாம் தவறிழைத்துவிட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேல் மாகாணசபையின் முதலமைச்சர் பதவி குறித்து எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிட்டிருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.மேல் மாகாண முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்கவே மீண்டும் தெரிவு செய்யப்படுவார் என அண்மையில் பிரச்சாரக் கூட்டமொன்றில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.இந்த கருத்து கட்சி வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களிலும் இவ்வாறு முதலமைச்சர் பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.எனினும், கொழும்பு வாழ் மக்கள் தமது ஊகத்தை சரியானது […]

காணாமல் போன விமானத்தின் இரு பொருட்கள் கண்டுபிடிப்பு

Posted: 19 Mar 2014 11:00 PM PDT

மாயமாகியுள்ள மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தினது என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பொருட்கள், செயற்கைக் கோளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பொருட்களுக்கும் மாயமான மலேசிய விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் டொனி ஆபொட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூறுகையில், 'மலேசிய விமானம் மாயமாகி இரண்டு வாரங்கள் கழித்து புதியது மற்றும் நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. இரண்டு பொருட்கள் கிடைத்துள்ளன. அதற்கும் மாயமான விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம். அவுஸ்திரேலிய […]

அத்துமீறும் இந்திய படகுகளை அரச உடைமையாக்க தீர்மானம்

Posted: 19 Mar 2014 10:59 PM PDT

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்க தீர்மானித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் அத்துமீறிய மீன்பிடித்தலைத் தடுக்கும் வகையில், எதிர்வரும் காலங்களில் அவர்களின் படகுகளை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

சுவையுடன் சுகம் தரும் பிளம்ஸ்!

Posted: 19 Mar 2014 10:57 PM PDT

நமது நாட்டில் மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் பழங்களில் ஓன்று பிளம்ஸ். நல்ல சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்த பழம் இனிப்பு, புளிப்பு என இரண்டும் கலந்த சுவையுடன் இருக்கும். மனிதனின் செயல்பாட்டிற்கு இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும். சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் காணப்படும். கோபம், பயம் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

Sony அறிமுகம் செய்யும் Xperia Z2 டேப்லட் (வீடியோ இணைப்பு)

Posted: 19 Mar 2014 10:56 PM PDT

தனது புத்தம் புதிய டேப்லட் ஆன Xperia Z2 இனை சோனி நிறுவனம் வெகு விரைவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது. இந்த டேப்லட் ஆனது 10.1 அங்குல அளவுடையதும், 1920 x 1200 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 2.3Ghz வேகத்தில் செயற்படக்நுடிய Quad Core Qualcomm Snapdragon 801 Processor, 3GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது. மேலும் கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினைக் கொண்டுள்ள இந்த டேப்லட்டில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கையடக்கமான போட்டோ பிரிண்டர் அறிமுகம் (வீடியோ இணைப்பு)

Posted: 19 Mar 2014 10:54 PM PDT

iOS மற்றும் Android சாதனங்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை உடனுக்குடன் பிரிண்ட் எடுத்துக்கொள்ள உதவும் கையடக்கமான வயர்லெஸ் பிரிண்டர் அறிமுகமாகின்றது. LifePrint எனப்படும் இச்சாதனம் தற்போது மேம்படுத்தல்களுக்கான நிதியினைத் திரட்டும்பொருட்டு Kickstarter தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாக காணப்படும் இச்சானத்தில் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தினை ஒரு முறை சார்ஜ் செய்து அதன் மூலம் 30 புகைப்படங்களை பிரிண்ட் எடுக்கக்கூடியதாக காணப்படுகின்றது. மேலும் இதில் காணப்படும் WiFi வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் 60 செக்கன்களில் பிரிண்ட் செய்யக்கூடியதாக இருக்கின்றமையும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இங்கிலாந்தை வென்றது இந்தியா

Posted: 19 Mar 2014 10:52 PM PDT

india_vs_england_t20_002

india_vs_england_t20_002ரெய்னா மற்றும் விராட் கோஹ்லி அதிரடியாக அரைசதம் விளாச இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது. வழக்கம் போல தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஜோடி மீண்டும் சொதப்பியது. இந்திய அணி 38 ஓட்டங்களில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால் அடுத்து களமிறங்கிய கோஹ்லி, ரெய்னா இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை எடுத்தது. கோலி 74 ஓட்டங்களுடனும், டோனி 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

179 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 158 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மொயிம் அலி 46 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் மூலம் இந்திய அணி 20 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி

Posted: 19 Mar 2014 10:50 PM PDT

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கிண்ண போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. வங்கதேசத்தில் டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரின் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே- நெதர்லாந்து அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்தது, இவ்வணியின் TLW கூப்பர் அதிகபட்சமாக 72 ஓட்டங்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தீவிர பயிற்சியில் ஷேவாக்

Posted: 19 Mar 2014 10:49 PM PDT

sehwag002

sehwag002இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் பார்ம் இழந்ததால், வாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருக்கிறார். ஒருகாலத்தில் எதிர் அணியினரின் பந்தை துவம்சம் செய்தவர் ஷேவாக்.

டெஸ்ட் அரங்கில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முச்சதம் அடித்தார், ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசினார்.

இப்படி பல சாதனைகள் படைத்தவர், பார்ம் இழந்ததால் வாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்.

உள்ளூர் போட்டிகளிலும் கூட ஓட்டங்கள் எடுக்கத் தவறியதால், ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி புறக்கணித்தது.

இந்நிலையில் தனது எதிர்காலம் குறித்து ஷேவாக் கூறுகையில், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடக்கூடிய திறமை என்னிடம் உள்ளது. தற்போது பிரிமியர் தொடரில் சிறப்பாக விளையாடி, பஞ்சாப் அணிக்கு பட்டம் பெற்று தருவதை இலக்காக கொண்டுள்ளேன்.

தவிர, உடற்தகுதியிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். பந்துவீச்சை துல்லியமாக கணித்து விளையாடுவதற்காக தினமும் பல மணி நேரம் பயற்சி மேற்கொள்கிறேன்.

வருகிற 2015ம் ஆண்டில் நடக்கும் உலக கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கலாம், பங்கேற்காமலும் போகலாம், எனினும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடி வருவதாக தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறுமியை பதம்பார்த்த நாய்கள்

Posted: 19 Mar 2014 10:46 PM PDT

dog_cat_001

dog_cat_001கனடாவில் இரு நாய்களால் கடித்துக்குதறப்பட்டு 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கனடாவின் வின்னிபேக் மாகாணத்தில் 7 வயது சிறுமி, கடந்த 16ம் திகதி குடும்ப நண்பர்கள் வளர்க்கும் இரண்டு அலாஸ்கா நாய்களால் கடித்துக் குதறப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்கு முன்பே உயிர் பிரிந்துள்ளார் என்றும், அச்சிறுமி அவரது குடும்ப நண்பர்களின் வீட்டிலிருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவ்விரண்டு அலாஸ்கா நாய்களையும் விலங்கு கட்டுப்பாடு பிடித்து சென்றுள்ளது.

மேலும் இச்சிறுமி செயிண்ட் ஆன்ட்ரூஸ் பகுதியை சேர்ந்தவர் என்பதை தவிர வேறு விவரங்கள் ஒன்றையும் பொலிசார் வெளியிடவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஷ்யாவுடன் இணைந்தது கிரிமீயா!

Posted: 19 Mar 2014 10:43 PM PDT

உக்ரைனிலிருந்து தனியாக பிரிந்த கிரிமீயா தங்களுடன் இணைக்கப்பட்டு விட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த காரணத்தால், ஐரோப்பிய யூனியனுடன் இணையக்கோரி உக்ரைனில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஜனாதிபதியாக இருந்த விக்டர் யானுகோவிச் இதற்கு உடன்படவில்லை, இந்நிலையில் போராட்டங்கள் வன்முறை சம்பவங்களாக மாறவே விக்டர் தலைமறைவானார். இந்நிலையில் கிரிமீயா மாகாணத்தில் ரஷ்யர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர், எனவே இம்மாகாணத்தை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பிலும் மக்கள் ஆதரவு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறுவர்களின் ஆபாச படங்களை வெளியிட்ட நபர்கள் கைது

Posted: 19 Mar 2014 10:40 PM PDT

msi_computer_001

msi_computer_001அமெரிக்காவில் ஒன்லைனில் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் "ஆப்ரேசன் ரவுண்ட் டேபிள்" என்ற பெயரில் நடைபெற்ற புலனாய்வில் குழந்தைகளை செக்ஸ் ரீதியாக ஏமாற்றும் செயல் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குழந்தைகள் செக்சில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதால், இதை பார்க்கும் குழந்தைகள் தங்களது ஆபாச புகைப்படங்களையும் எடுத்து ஒன்லைனில் வெளியிடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக 13 முதல் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

இதில் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், இங்கிலாந்து, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளை சேர்ந்த சுமார் 250 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் 2012ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு ஜூன் வரையில் மட்டும், மொத்தம் 27 ஆயிரம் பேர் இந்த ஓன்லைன் ஆபாச பரிமாற்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டவிரோதமான செயலில் முக்கிய குற்றவாளியான ஜோனாதன் ஜான்சன் என்ற நபர் உட்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதுதொடர்பான வழக்கு வரும் 27ம் திகதி விசாரணைக்கு வருகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மலேசிய விமானம் தைவான் காட்டில் கண்டுபிடிப்பு?

Posted: 19 Mar 2014 10:35 PM PDT

மலேசிய விமானத்தை தைவான் பல்கழைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலேசியாவின் ஏர்லைன்ஸ் MH370 விமானம் கடந்த 8ம் திகதி மாயமாய முறையில் காணாமல் போனது, அதுமுதல் அந்த விமானம் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க 26 நாடுகள் சேர்ந்த குழுக்கள் முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தைவான் பல்கலைக்கழக மாணவர்கள் தற்செயலாக கூகுள் வரைபடத்தில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தைவான் காடுகளுக்கு இடையே ஒரு விமானம் மறைந்து நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்கள் அந்த […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறுமிகளை வைத்து ஆபாசபடம் எடுத்த கும்பல் கைது

Posted: 19 Mar 2014 10:30 PM PDT

us_customs_001

us_customs_001அமெரிக்காவில் 250க்கும் மேற்பட்ட சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரித்த 14 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுவர்-சிறுமியரை பாலுறவில் ஈடுபடுத்தி, அந்த காட்சிகளை படமாக்கி சிலர் இணையதளங்களின் மூலம் உலக நாடுகளில் வெளியிட்டு வந்தனர். இது தொடர்பாக வந்த புகார்களையடுத்து, நாட்டின் அனைத்து பிரிவு பொலிஸாரின் துணையுடன் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையினர் கண்காணித்து வந்தர்ன்.

இந்த பின்னணியில் பெரிய கும்பலை சேர்ந்த 14 பேரை கைது செய்துள்ளனர்.

13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமியரை சம வயதுடைய சிறுவர்களுடன் பாலுறவில் ஈடுபடுத்தி, அந்த காட்சிகளை பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இணையத்தளம் மூலம் வெளியிட்டு வந்துள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த இந்த இணையதளத்திற்கு உலகின் பல நாடுகளை சேர்ந்த சுமார் 27 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளதையும் கண்டுபிடித்த பொலிஸார், அவர்கள் தொடர்பான விபரங்களை வெவ்வேறு நாட்டு பொலிஸாரின் துணையுடன் சேகரித்து வருகின்றனர்.

இந்த ஆபாச படங்களில் நடிப்பதற்காக அமெரிக்காவின் 39 மாநிலங்கள் மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற 5 வெளி நாடுகளில் இருந்து சிறுவர்-சிறுமியரை தேர்வு செய்துள்ளதும் பொலிஸ் விசாரனையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஜொனாதன் ஜான்சன் என்பவரும் ஒருவர். இந்த ஆபாச தளத்தின் இயக்குனரான இவர், அழகிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் புகைப்படங்களை இணையதளங்களில் போலியாக வெளியிட்டு காதல் வலை விரிப்பார்.

அதில் மயங்கி விழும் சிறுவர்- சிறுமியரின் மனதை மாற்றி, பாலுறவில் ஈடுபடுத்தி, அந்த காட்சிகளை படமாக்கியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெர்முடா முக்கோணப் பகுதியில் மலேசிய விமானம்!

Posted: 19 Mar 2014 10:27 PM PDT

ஒரு பெரிய அழிவு, இயற்கை சீற்றங்கள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும்போது அது தொடர்பான தகவல்களை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர். இன்றைய காலத்தில் தான் கைக்குள் உலகத்தை அடக்கி விடலாமே… ஒரு நொடியில் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதை தவறாக பயன்படுத்துவதற்கு என்றே, ஒரு கூட்டம் இருக்கிறது. கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமான மலேசிய விமானம் பற்றி தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதற்கு நடுவே பீதியை கிளப்பும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™