Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்தில் ஒரே நாளில் லோக்சபா தேர்தல்: வரும் 29ல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது: நாடு முழுவதும் 9 கட்டமாக ஓட்டுப்பதிவு

Posted:

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே கட்டமாக, ஏப்., 24ம் தேதி வியாழக்கிழமை, லோக்சபா தேர்தலுக்கான, ஓட்டுப்பதிவு நடைபெறும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இம்மாதம் 29ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. மே 16ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள், நேற்று முதல் அமலுக்கு வந்தன.நாடு முழுவதற்குமான, லோக்சபா தேர்தல் தேதி, நேற்று, அறிவிக்கப்பட்டது. மொத்தம், ஒன்பது கட்டமாக, தேர்தல் நடத்தப்படுகிறது. ஆறாவது கட்டமாக, ஏப்ரல், 24ம் தேதி, தமிழகத்தின், 39 தொகுதிகளுக்கும்; புதுச்சேரியின், ஒரு தொகுதிக்கும், தேர்தல் நடக்கும் என, ...

கம்யூனிஸ்டுகளுக்கு 'கல்தா': கழற்றி விட்டது அ.தி.மு.க.,

Posted:

அ.தி.மு.க., - கம்யூ னிஸ்ட் கட்சிகள் இடையேயான கூட்டணி முறிந்தது. தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க.,வே தனித்துப் போட்டியிடுவது என, அக்கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது.அவசர கூட்டம்: அ.தி.மு.க.,வுடனான கூட்டணி முறிந்ததால், லோக்சபா தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதை முடிவு செய்ய, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது. 'லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடும்' என, அக்கட்சியின் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ...

குஜராத்தை ஆய்வு செய்ய சென்ற 'ஆம் ஆத்மி' தலைவர் கெஜ்ரிவாலுக்கு கறுப்புக்கொடி

Posted:

ஆமதாபாத்: குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி அரசின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்யப் போவதாக கூறி, சுற்றுப் பயணம் செய்த, 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கிராம மக்கள் கறுப்பு கொடி காட்டினர். இதனால், கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்தார்.நான்கு நாள் சுற்றுப்பயணம்: குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால், 'குஜராத் மாநிலம், பொருளாதார வளர்ச்சியில், முன்னணியில் உள்ளதாகவும், ஏராளமான வளர்ச்சிப் பணிகள் அங்கு நிறைவேற்றப் ...

'அம்மா' என்பது பொது சொல்லா? ஆய்வு செய்கிறது தேர்தல் கமிஷன்

Posted:

சென்னை: இலவசப் பொருட்கள் வினியோகத்தை நிறுத்தும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தேர்தல் கமிஷன், கடிதம் அனுப்பியுள்ளது.இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகத்தில், இலவசமாக பொதுமக்களுக்கு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவது உட்பட, அனைத்து இலவசத் திட்டங்களையும் நிறுத்தும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, கடிதம் எழுதப்பட்டுள்ளது. 'அம்மா' உணவகங்களில் உள்ள, முதல்வர் படத்தை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 'அம்மா' என்ற வார்த்தை, பொதுவான சொல் என, அ.தி.மு.க.,வினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு, ...

மேம்பால சாலை திட்டத்திற்கு எதிராக அரசு மேல்முறையீடு: தொழில் துறை வர்த்தகர்கள் அதிருப்தி

Posted:

சென்னை: 'சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலைப் பணிக்கு எதிராக, அரசு மேல்முறையீடு நிலை சரியானது அல்ல; இதனால் ஏற்றுமதி வர்த்தகமும், தொழில் வளர்ச்சியும் பாதிக்கும்' என, தொழில் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.மேம்பால சாலை திட்டம்: போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை, 1,800 கோடி ரூபாயில், மேம்பால சாலைத் திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கூவத்தின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் பணிகள் நடப்பதாக, தமிழக அரசு தடைவிதித்தது. இதனால், இரண்டு ஆண்டுகளாக பணிகள் முடங்கிக் கிடந்தன. ...

ஜனநாயக முற்போக்கு கூட்டணி: தி.மு.க., அறிவிப்பு

Posted:

சென்னை: தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, 'ஜனநாயக முற்போக்கு கூட்டணி' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பெயர் சூட்டினார்.லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தவுடன், நேற்று, சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது.இதில், கருணாநிதி பேசியதாவது: நம் கூட்டணியை, 'ஜனநாயக முற்போக்கு கூட்டணி' என, இனி அழைப்போம். கூட்டணியில் இடம் பெற்றவர்கள், முன்வைத்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, அதன்படி நடவடிக்கை எடுப்பேன். 'மாவட்ட அளவிலும், நாங்கள் மதிக்கப்பட வேண்டும்' என, ஒரு சில கருத்துகள் கூறப்பட்டன. மாவட்ட அளவில் மட்டுமல்ல, ...

ஆலந்தூரில் மீண்டும் தே.மு.தி.க.,: அ.தி.மு.க.,வுக்கு பதிலடி தர 'வியூகம்'

Posted:

அ.தி.மு.க.,விற்கு பதிலடி தர, ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், மீண்டும் போட்டியிட, தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது.கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும், கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இத்தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி யைப் பிடிக்க, தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், எதிர்கட்சித் தலைவரானார். ஆனால், அதே ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டதால், கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., வெளியேற்றப்பட்டது. அதன்பின், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. தே.மு.தி.க., - ...

பத்து கோடி புதிய வாக்காளர்களே வருக: வரவேற்கிறார் பா.ஜ.,வின் நரேந்திர மோடி

Posted:

ஆமதாபாத்: ''புதிதாக ஓட்டளிக்க உள்ள, 10 கோடி வாக்காளர்களை வரவேற்கிறேன். பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 272 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி தாருங்கள்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி கூறியுள்ளார்.வரும், 16வது லோக்சபாவுக்கான தேர்தல் தேதி, நேற்று காலை அறிவிக்கப்பட்டதும், அதை வரவேற்று, தேர்தல் கமிஷனின் அறிவிப்புகளை பாராட்டி, 'ட்விட்டர்' இணையதளம் மூலம், மோடி வாழ்த்து செய்திகளை அனுப்பினார்.அதில் அவர், மேலும் தெரிவித்ததாவது: ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழாவான, லோக்சபா தேர்தலில், ...

கல்லூரி மாணவர்கள் கொலை வெறி தாண்டவம்: பெண் பயணிக்கு அரிவாளால் வெட்டு; பேருந்து மீது தாக்குதல்

Posted:

சென்னை: சென்னையில் நேற்று நான்கு இடங்களில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் நடத்திய அராஜகத்தில், ஒரு பெண் பயணிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பள்ளி மாணவன் காயம் அடைந்தான். மாநகர பேருந்து அடித்து நொறுக்கப்பட்டது.சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில், பட்டினப்பாக்கம் சுங்கச்சாவடி வழித்தடம் எண் '6 டி' மாநகர பேருந்து கண்ணகி சிலை அருகே சென்று கொண்டிருந்தது. அதில், மாநில கல்லூரி மாணவர்கள் இருந்தனர். அதையறிந்த, நியூ கல்லூரி மாணவர்கள், திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் இருந்து, அரிவாள் மற்றும் மூட்டையில் கற்களை எடுத்து வந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™