Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் சரவணன் இயக்கத்தில் ஜெய்!

Posted:

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன், அடுத்தப்படியாக அதிரடி ஆக்ஷ்ன் கலந்த காதல கதையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். சென்னையின் ஒரு பகுதியை மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய்க்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ...

இந்தி கோச்சடையான் டிரைலரை அமிதாப் வெளியிட்டார்! காலில் விழுந்து ஆசி பெற்றார் ரஜினி!!

Posted:

ரஜினியின் கோச்சடையான் டிரைலர் ஏற்கனவே தமிழில் வெளியாகி உள்ள நிலையில், இந்தியில் அப்படத்தின் டிரைலரை, அமிதாப் பச்சன் வெளியிட்டார். முன்னதாக அமிதாப்பின் காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்றார். ரஜினியின் இளையமகள் செளந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த், தனது அப்பாவை கொண்டு இயக்குநராக களமிறங்கியுள்ள படம் கோச்சடையான். இந்தியாவில் ...

பூலோகம் படத்தில் நடித்த வெளிநாட்டு வில்லன் நடிகருக்கு சம்பள பாக்கி!

Posted:

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி - த்ரிஷா நடிக்கும் படம் - பூலோகம். ஜனநாதனின் உதவியாளரான என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தில் பாக்சராக நடிக்கிறார் ஜெயம் ரவி. குத்துச்சண்டை போட்டியில் அவருடன் வெளிநாட்டு வீரர்களும் சிலரும் மோதுவதுபோன்ற காட்சிகள் பூலோகம் படத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அப்படி மோதுகிற வெளிநாட்டு ...

தமிழை புறக்கணிக்கவில்லை! தவறாக செய்தி பரப்பி விட்டனர்!! -ஸ்ருதிஹாசன்

Posted:

தமிழில் ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன் அதன்பிறகு நிறைய தமிழ்ப்படங்களில நடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையடுத்து தெலுங்கு, இந்தி படங்களில் அதிகமாக நடித்த ஸ்ருதி, கிட்டத்தட்ட தமிழை மறந்தே விட்டார். அவரைத்தேடிச்சென்ற பல படங்களை திருப்பி விட்டு வந்தார். இதனால் அவர் தமிழில் நடிக்க ஆர்வம் இல்லாமல் ...

தமிழ் 3டியில் ரிலீசாகிறது அமேசிங் ஸ்பைடர்மேன் 2!

Posted:

உலகம் முழுவதும் உள்ள குட்டீஸ் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அமேசிங் ஸ்பைடர் மேன் 2. கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கி உள்ள இந்தப் படத்தை இந்தியாவில் சோனி நிறுவனம் வெளியிடுகிறது.

முதல் பாகத்தில் ஸ்டைபர் மேன் பீட்சா கம்பெனியில் ஹோம் டெலிவரி பாயாக வேலை செய்தார். 2ம் ...

போக்குவரத்து நெரிசல் காரணமாக கத்தி படப்பிடிப்பை நிறுத்திய முருகதாஸ்!

Posted:

துப்பாக்கி படத்தையடுத்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படம் கத்தி. இதன்பிடப்டிப்பு கொல்கத்தா, சென்னையில் நடைபெற்றதையடுத்து தற்போது ஐதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு விஜய்-சமந்தா சம்பந்தப்பட்ட டயலாக் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவிலுள்ள ...

அடுத்த மங்காத்தா ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் வெங்கட்பிரபு!

Posted:

பாலா இயக்கிய நந்தா படத்தில் நடிக்க வேண்டியவர் அஜீத்குமார்தான். ஆனால் படம் தொடங்கியிருந்த நேரத்தில் பாலா, அஜீத்திற்கிடையே ஏற்பட்ட சலசலப்பினால் அப்படத்திலிருந்தே வெளியேறினார் அஜீத். அதனால் அதையடுத்து சூர்யா கமிட்டானார். அப்படம் அவரது கேரியரில் முக்கிய இடம்பிடித்தது. ஆக்ஷன் ஹீரோவாகவும் உயர்த்தியது.

இந்த நிலையில், ...

டபுள் மீனிங் வசனங்களுக்கு கட்டிங் போடும் காமெடி சூரி!

Posted:

தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை பழம்பெரும் காமெடியன்கள் யாருமே காமெடி வசனங்களில் ஆபாசம் கலந்து பேசியதில்லை. வெண்ணிற ஆடை மூர்த்தி மட்டும்தான் அவ்வப்போது அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசி முகம் சுழிக்க வைத்து வருகிறார். அவரைத் தொடர்ந்து சந்தானமும் அந்த வளையத்திற்குள் சிக்கிக்கொண்டார். டயமிங் காமெடி என்ற பெயரில் நான் ...

கொச்சினில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான இன்னொரு நடிகை ஆராத்யா!

Posted:

கேரளாவில் இருந்து வரிசைகட்டி கோடம்பாக்கத்திற்கு இறக்குமதியாகிக்கொண்டிருக்கும் நடிகைகளில் இன்னொரு புதுவரவு ஆராத்யா. தாவணிக்காற்று என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். லட்சுமிமேனன் பிறந்த அதே கேரளாவில் உள்ள கொச்சினில் இருந்துதான் இவரும் வந்திருக்கிறார். அவர் ஒன்பதாவது படித்தபோதே வந்தார். ஆனால் இவர் ப்ளஸ்-2 ...

மும்பையில் ஆர்ப்பாட்டம்: அஞ்சான் படப்பிடிப்பு ரத்து

Posted:

இனம் படத்தை திரையிட்டதற்காக இயக்குனர் லிங்குசாமிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. லிங்குசாமி தற்போது மும்பையில் சூர்யா, சமந்தா நடிக்கும் அஞ்சான் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். நேற்று மும்பை வி.டி பகுதியில் உள்ள பலார்ட் ஸ்டேட் என்ற இடத்தில் அஞ்சான் படப்பிடிப்பு நடந்தது. சூர்யா வில்லன்களோடு மோதும் சண்டை ...

மீண்டும் பழைய பெயருக்கு திரும்பினார் சுனைனா!

Posted:

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சுனைனா, மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை படங்களில் நடித்தார். காதலில் விழுந்தேன் படத்திற்கு பிறகு பெரிய ஹிட் எதுவும் அவருக்கு அமையவில்லை. அதனால் குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படி தனது பெயரை அனுஷா என்று மாற்றினார்.

சுனைனா என்ற பெயர் இருந்தபோது படம் ஓடாவிட்டாலும் ...

மீண்டும் வருகிறார் ஆர்.கே.,

Posted:

எல்லாம் அவன் செயல் படத்தின் மூலம் ஹீரோவானவர் ஆர்.கே. ஷாஜி கைலாஷ் இயக்கிய இந்தப் படம் 100 நாட்கள் ஓடியது. அதன் பிறகு பி.வாசு இயக்கிய புலிவேசம், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கிய அழகர்மலை படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. அனைத்தும் சொந்தப் படங்கள். அவன் இவன், ஜில்லா படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

இப்போது தனக்கு ஒரே வெற்றியைக் ...

அகிலா முதலாம் வகுப்பு: குழந்தையின் கதை

Posted:

சுரேஷ்-சரண் என்ற இரட்டையர்கள் இயக்கி உள்ள படம் அகிலா முதலாம் வகுப்பு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழந்தையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம். பேபி பிரஷிதா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குழந்தையால் உறவுகள் பிரிவதும், பிறகு அதே குழந்தையால் உறவுகள் இணைவது மாதிரியான கதை. முதலாளியம்மா, அஞ்சலி படங்களில் குழந்தை நட்சத்திரமாக ...

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா

Posted:

சென்னையில் வருகிற ஏப்ரல் 2ந் தேதி முதல் 11ந் தேதி வரை 19வது ஐரோப்பிய திரைப்பட விழா நடக்கிறது. இதில் 19 நாடுகளைச் சேர்ந்த 19 விருதுபெற்ற படங்கள் திரையிடப்படுகிறது. இளைஞர்களின் குரல் என்பது திரைப்பட விழாவின் டைட்டில். இதன் துவக்க விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் நடக்கிறது. ஹங்கேரி நாட்டின் தூதர் டாக்டர் ஜனோஸ் துவக்கி ...

தயாரிப்பாளராகிறார் இனம் பட ஹீரோயின்

Posted:

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இனம் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் சுகந்தா ராம். மை நேம் இஸ் கான், தேரே பின்லேடன் படங்களில் நடித்துள்ளார். ஜக்னி, காஃபி புளு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தொடர்ந்து நடிக்க ஆர்வமுடன் இயக்கும் சுகந்தா படம் தயாரிக்கவும் தயாராக உள்ளார்.

இதுபற்றி அவர் ...

அரசியல் கட்சி தொடங்கினார் ராக்கி சாவந்த்

Posted:

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் வட இந்திய நடிகைகள் தேர்தலில் அதிக அளவில் போட்டியிடுகிறார்கள். அடிக்கடி பரபரப்பபை கிளப்பி வரும் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், பாரதிய ஜனதாக கட்சியின் சார்பில் மும்பையில் போட்டியிட விரும்பினார். ஆனால் பாரதிய ஜனதா கட்சி அவருக்கு மேற்கு வங்கத்தில் சீட் கொடுத்தது. எனக்கு ...

கர்ப்பிணியாக நடிக்கிறார் கங்கனா ரணாவத்

Posted:

வித்யா பாலன் கர்ப்பிணியாக நடித்த கஹானி ஹிட்டானதைத் தொடர்ந்து அதன் இயக்குனர் சுஜய் கோஷ் மீண்டும் ஒரு கர்ப்பிணி பெண்ணை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இது சஸ்பென்ஸ் த்ரில்லர். இதில் கங்கனா ரணாவத் கர்ப்பிணியாகவும், 14 வயது பக்கவாத நோய் பாதிப்பு சிறுமியின் தாயாகவும் நடிக்கிறார். கங்கனா தற்போது நடித்து வரும் ரிவால்வார் ...

தப்புமா முத்தம்...? - நெருக்கடியில் விஷால்...!

Posted:

விஷால் - லட்சுமி மேனன் நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. பாண்டியநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷால் நடிக்கும் படம் என்பதால், நான் சிகப்பு மனிதன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வெள்ளி அன்று நான் சிகப்பு மனிதன் படத்தை ...

சினிமா ஹீரோவானார் சாய்சக்தி

Posted:

நாதஸ்வரம், தொடரில் நடிகராகவும், ஜோடி நம்பர் 1 சீசன் 7ல் தொகுப்பாளராகவும் இருப்பவர் சாய்சக்தி, தற்போது தன் பெயரை சாசு என்று சுருக்கி வைத்துக் கொண்டு சினிமா ஹீரோவாகிவிட்டார். படத்தின் பெயர் பணமில்லாமல் படம் எடுக்கப்போறோம். "சினிமாவுக்கு சின்ன பெயராக இருந்தால்தான் எடுப்பாக இருக்கும் என்பதால் சாசு என்று மாற்றிக் கொண்டேன். ...

கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி!!

Posted:

கலைத்துறையில் சாதனை புரிந்ததற்காக நடிகர் கமல்ஹாசன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகளை வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பத்மவிருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான, பத்ம விருதுக்கு, 127 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில், தமிழ் சினிமாவின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™