Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அமீர்கானுக்கு தேர்தல் கமிஷன் அளித்த கவுரவம்!

Posted:

2014 லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய சின்னங்கள் என்ற பட்டியலில் பாலிவுட் நடிகர் அமீர்கானையும் தேர்தல் கமிஷன் இணைத்துள்ளது. தேர்தல் கமிஷன் தனது வாக்காளர் விழிப்புணர்வு பணியில் அமிர்கானையும் இணைத்துக் கொள்ள உள்ளது. இதற்காக, சிறப்பு குறும்படம் ஒன்றையும் அமீர்கான் தயாரித்து, நடித்து ...

மே மாதம் உன் சமையல் அறையில் ரிலீஸ்...!

Posted:

ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியாகி, மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த சால்ட் என் பெப்பர் படம், தமிழில் ''உன் சமையல் அறையில்'' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வருகிறது. பிரகாஷ் ராஜ் இப்படத்தை இயக்கி, தயாரித்து, அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா நடிக்கிறார். இவர்கள் தவிர்த்து ஊர்வசி, ஐஸ்வர்யா, தம்பி ராமையா ...

மணிரத்னம் படம் மூலம் மீண்டும் வருகிறார் அசின்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி இந்தி ரீமேக்கிலும் நடித்த அசினுக்கு அதன்பிறகு இந்தியில் மார்க்கெட் சூடு பிடிக்கவே, தென்னிந்திய சினிமாவை மறந்து விட்டு முழுநேர பாலிவுட் நடிகையாகி விட்டார். சில கோலிவுட் டைரக்டர்கள் அழைத்தபோதும் வராதவர், விஜய் நடித்த காவலன் படத்தில் மட்டுமே நடித்தார். அதையடுத்து மறுபடியும் பாலிவுட்டுக்கு ...

பாலாவின் படத்துக்காக தாடி மீசையை தியாகம் செய்த சசிகுமார்!

Posted:

எப்படி டி.ஆரையும், தாடியையும் பிரிக்க முடியாதோ, அதேபோல்தான் சசிகுமாரையும், தாடியையும் பிரிக்க முடியவில்லை. கிராமத்து கதைகளாக இருந்தாலும் சரி, நகரத்து கதைகளாக இருந்தாலும் சரி, இதுவரை தான் நடித்த எல்லா படங்களிலுமே தாடியுடன்தான் காட்சி கொடுத்தார் சசிகுமார்.

ஆனால், இப்போது பாலாவின் பட்டறைக்குள் அவர் ...

வடிவேலு படத்துக்கு எதிராக முற்றுகை போராட்டம் வெடிக்கிறது!

Posted:

வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். ஏற்கனவே சிம்புதேவன் இயக்கத்தில் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தைப்போன்று இந்த சரித்திர படத்திலும் கிருஷ்ண தேவராயர், தெனாலிராமன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் வடிவேலு. தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படம், கோடை விடுமுறையில் ரசிகர்களை ...

குறளரசன் இசையில் பாடும் டி.ஆர்., சிம்பு!

Posted:

ஏற்கனவே தான் இயக்கி, இசையமைத்து நடித்த பல படங்களில் தனக்குத்தானே பின்னணியும் பாடியவர் டி.ராஜேந்தர். குறிப்பாக தங்கையை நினைத்து உருகிப்பாடும் பாடல்களென்றால் அதை கேட்கும் அத்தனை அண்ணன்மார்களையும் கரைய வைத்து விடுவார் மனிதர்.

அப்படிப்பட்ட டி.ஆர்., தனது மகன் சிம்புவுக்காகவும் அம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தறியாடி -என்று ...

விஜய்யிடம் கதை சொல்லி ஓ.கே பண்ணிய சமுத்திரகனி!

Posted:

நிமிர்ந்து நில் படத்தில் நடித்து வந்தபோது, சமுத்திரகனியிடம் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாலும் சமுதாயத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார். அவர் மூலமாக நிறைய நாட்டு நடப்புகளை நான் தெரிந்து கொண்டேன் என்று அமலாபால் கூறிவந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், நிமிர்ந்து நில் படத்தை சமுதாயத்துக்கு தேவையான கதையில் இயக்கி, ...

வடிவேலு - சிங்கமுத்து மீண்டும் மோதலா?

Posted:

காமெடி நடிகர்களான வடிவேலுவும், சிங்கமுத்துவும் மீண்டும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம் 'நாடோடி வம்சம்'. கோயம்புத்தூர் ஆர்.விஸ்வநாதன் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

நாடோடி ...

பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவி!

Posted:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்னர் சில காலம் காணாமல் போன அவரை, தனது முதல் படமான 16 வயதினிலே படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க தேடிப்பிடித்துக் கொண்டு வந்தார் பாரதிராஜா. ஆக, அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார் ஸ்ரீதேவி.

தென்னிந்திய ...

திருமணத்திற்கு பிறகும் மனைவியை கதாநாயகியாகவே பார்க்கும் ஆஷிக் அபு!

Posted:

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஆஷிக் அபு குறிப்பிடத்தக்கவர். மம்மூட்டி நடித்த டாடி கூல் என்ற படத்தில் அறிமுகமானவர் இவர், அதையடுத்து சால்ட் என் பெப்பர், 22 பீமேல் கோட்டையம் என சில ஹிட் படங்களை கொடுத்தார். இந்நிலையில், தனது படத்தில் கதாநாயகியாக நடித்த ரீமா கல்லிங்கலையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ...

குத்துச்சண்டையில் இறங்கிய ஜெயம்ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன்!

Posted:

எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி என்ற படத்திலேயே குத்துச்சண்டை வீரராக நடித்தவர் ஜெயம்ரவி. அதையடுத்து இப்போது பூலோகம் படத்தில் வடசென்னையைச்சேர்ந்த குத்துச்சண்டை வீரராக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்திற்காக கடும் சிரத்தை எடுத்து உடல்கட்டை மாற்றி ஹாலிவுட் வில்லனுடனும் மோதியிருக்கிறார் ஜெயம்ரவி.

இதேபோல், யான் ...

தேசிய கட்சியில் சேரப்போகிறாராம் குஷ்பூ?

Posted:

திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள குஷ்பூ கடந்த தேர்தல் வரை சூறாவளி பிரசாரம் செய்தார். ஆனால், இந்த முறை அவர் கட்சியில் இருக்கிறாரா? இல்லையா? என்பதே தெரியவில்லை. அநத அளவுக்கு சத்தமே இல்லாமல் இருக்கிறார் நடிகை.

குறிப்பாக, மு.க.ஸ்டாலின் பற்றி அவர் சொன்ன சில கருத்துக்கள் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் ...

ஏ.எம்.ரத்னத்துக்கு இரண்டாவதுமுறையாக அஜித் ஏன் கால்ஷீட் கொடுத்தார்? - புதிய தகவல்கள்..!

Posted:

அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள் ஒரு தடவை கால்ஷீட் கொடுத்தாலே கடவுளின் வரம் கிடைத்த மாதிரி என்பார்கள் தயாரிப்பாளர்கள். ஏ.எம்.ரத்னத்துக்கோ அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் அஜித். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஆரம்பம் படத்தில் நடித்த அஜித், தற்போது அதே நிறுவனத்தின் தயாரிப்பில் ...

நியாயம் கேட்டு வந்த நடிகையை மிரட்டி அனுப்பிய நடிகர் சங்க நிர்வாகி..!

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கம் பல விஷயங்களில் தங்களுக்கு எதிராகவே நடந்து கொள்வதாக நடிகர் நடிகைகளின் மத்தியில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது.. நடிகர் மாதவன், உட்பட பல நடிகர்களின் சம்பள பிரச்னையில் பஞ்சாயத்து நடந்தபோது நடிகர் சங்கம் நடிகர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உண்டு.

இந்நிலையில் ...

கானும் லாலும் என் படத்தில் நடிக்கட்டும்! - காமெடி பண்ணும் தயாரிப்பாளர்

Posted:

பேராசை பெரும் நஷ்டம் என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஹரிதாஸ் படத்தைத் தயாரித்த டாக்டர்.ராமதாஸுக்கு மிகச்சரியாய் பொருந்தும். சீசெல்ஸ் என்ற வெளிநாட்டில் வசிக்கும் இந்தத் தமிழர், சில வருடங்களுக்கு முன் பல கோடிகளோடு கோலிவுட்டுக்கு வந்தார். பரத் நடித்த யுவன் யுவதி என்ற படத்தைத் தயாரித்தார். அதில் 3 கோடி நஷ்டம். அடுத்து ...

இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: செந்தில்

Posted:

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் செந்தில். தவமாய் தவமிருந்து படத்தில், ராஜ்கிரணின் மூத்த மகனாக நடித்தார். அதன்பிறகு செங்காத்து பூமி படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலில் பிசியாக நடித்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவர் நடித்துள்ள பப்பாளி அடுத்த வாரம் ...

அமலா பால் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்..!?

Posted:

அமலா பால் ஆட்டம் ஓவராக இருக்கிறது..! என்ற அதிருப்தி குரல்கள் தயாரிப்பாளர்கள் மத்தியில் வேகமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. மைனா படத்துக்கு முன்புவரை ஒரு துணை நடிகை ரேன்ஜில் இருந்தவர்தான் அமலா பால். மைனாவின் வெற்றி இவரை முன்னணி நடிகையாக்கியது. அதற்குள் பழசை மறந்துவிட்டாரே என்று புலம்புகிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள். அம்மா, ...

விஜய் ஆண்டனிக்கு வொர்க் அவுட்டாகாத விஜய் ராசி!

Posted:

திருமணம் ஆகும் வரை தன் பெற்றோருடன் நடிகர் விஜய் குடியிருந்த வீடு சென்னை, சாலிகிராமத்தில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு நீலாங்கரையில் குடியேறினார் விஜய். அவரது பெற்றோர் பெசன்ட் நகர் பக்கம் இடம் பெயர்ந்தனர். எனவே விஜய்யின் சாலிகிராமம் வீடு சும்மாவே பூட்டிக் கிடந்தது. சில மாதங்களில் அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறினார் ...

ஹீரோவாகிறார் கானா பாலா!

Posted:

தனது கானா பாடல்கள் மூலமும், அக்மார்க் சென்னை முகச்சாயல் மூலமும் திடீர் புகழ்பெற்றவர் கானா பாலா. அட்டகத்தியில் ஆடி போனா ஆவணி அவள் ஆளை மயக்கும் தாவணி என்று பாடி வந்தவருக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. "என்னைய ஹீரோவோ போட்டு யாராவது படம் எடுங்களேன்" என்று மேடைக்கு மேடை தமாஷ் பண்ணிக் கொண்டிருந்தவர் இப்போது நிஜமாகவே ...

வருகிறது கோச்சடையான் ரதம்...!!

Posted:

கோச்டையான் ரிலீசுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் கோச்சடையான் ரத யாத்திரை நடத்த அவரது திருப்பூர் ரசிகர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™