Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


புல்லரின் தூக்குத்தண்டணை ஆயுள்தண்டனையாக குறைப்பு

Posted: 30 Mar 2014 10:57 PM PDT

1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதுடெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் காலிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தேவிந்தர் பால்சிங் புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இறுதியில், 2003-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பினார். அதை 8 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ம் ஆண்டு மே 14-ம் தேதி குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

பிரசாரத்தில் நக்மாவை பார்க்க மக்கள் கூட்டம் திரள்கிறது

Posted: 30 Mar 2014 10:55 PM PDT

நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த வாரம் வேட்பு மனுதாக்கல் செய்த அவர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நக்மா பிரசாரத்தை தொடங்கிய மறுநாள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச வந்த அவரை கூட்ட நெரிசலை பயன்படுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் முத்தமிட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. அதை நக்மா

உகாதி பண்டிகை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்

Posted: 30 Mar 2014 10:44 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில் சனிக்கிழமை பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 1 லட்சம், ஞாயிற்றுக்கிழமையான நேற்று ரூ.2 கோடியே 8 லட்சம் வசூலானது.

மோசமான ஆட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது: பிரணாப் பேச்சு

Posted: 30 Mar 2014 10:43 PM PDT

இந்திய பொது நிர்வாகக் கழகத்தின் வைர விழா நேற்று டெல்லியில் நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவில் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:– நல்ல, திறமையான நிர்வாகத்தைத்தான் நாட்டு மக்கள் விரும்புவார்கள். மிகவும் மோசமான ஆட்சியை மக்கள் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

திருப்பதி மலையில் 2-வது நாளாக எரியும் காட்டு தீ

Posted: 30 Mar 2014 10:42 PM PDT

திருப்பதி சேஷாசல மலைப்பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட காட்டு தீயால் பல ஏக்கரில் மரங்கள் கருகியது. ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. நேற்று திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நாராயணகிரி மலையில் தீ விபத்து ஏற்பட்டது. காலையில் பற்றிய தீ தொடர்ந்து எரிந்தது. இதனால் அடர்த்தியான புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் நடைபாதையில் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், வனத்துறை வீரர்

தொண்டர் தாக்கப்பட்டதால் போலீஸ் நிலையத்துக்குள் ரோஜா தர்ணா

Posted: 30 Mar 2014 10:36 PM PDT

ஆந்திராவில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 10 மாநகராட்சி, 145 நகர சபைக்கு நடந்த தேர்தலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மொத்தம் 89.45 சதவீத் வாக்குகள் பதிவானது. ஓட்டுப் பதிவின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக 7 இடங்களில் மட்டும் நாளை

ஆம் ஆத்மி கட்சி தொப்பிக்கு வாரணாசி இந்துக்கள் எதிர்ப்பு

Posted: 30 Mar 2014 10:36 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலும் வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். வாரணாசி தொகுதியில் சுமார் ஒரு மாதம் தங்கி இருந்து பிரசாரம் செய்ய கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் இப்போதே

சீமாந்திராவில் ஜெகன்மோகன் கட்சி ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல்

Posted: 30 Mar 2014 10:28 PM PDT

தெலுங்கானா பகுதியில் ஏப்ரல் 30–ந் தேதியும், சீமாந்திராவில் மே 7–ந் தேதியும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. நேற்று 2 பகுதிகளிலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 89 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். இதன் முடிவு பாராளுமன்ற தேர்தலின் பிரதிபலிப்பாக இருக்கும் என கருதுவதால் 2–ந் தேதி நடக்கும் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சோனியாவால் தான் இந்தியாவை சிறந்த நாடாக மாற்ற முடியும்: ஏ.கே.அந்தோணி

Posted: 30 Mar 2014 10:06 PM PDT

கேரள மாநிலம் காசர்கோடு காங்கிரஸ் வேட்பாளர் சித்திப்புக்கு ஓட்டு கேட்டு மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:– மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். தனிப்பட்ட முறையில் யாரும் இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாது. மாநில கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். கம்யூனிஸ்டு கட்சிகளும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 3-ந்தேதி திறப்பு

Posted: 30 Mar 2014 10:00 PM PDT

கேரளமாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம், சபரிமலையில் புகழ் வாய்ந்த அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைகளுக்காக 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு விமரிசையாக பூஜைகள் நடத்தப்படுகிறது. இது தவிர, அனைத்து மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், திருவிழாவை முன்னிட்டு 10 தினங்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களில் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை-வழிபாடுகள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா,

நிலக்கரி சுரங்க ஊழல் ஆவணங்கள் கண்காணிப்பு ஆணையத்திடம் இன்று ஒப்படைப்பு

Posted: 30 Mar 2014 09:44 PM PDT

பிரதமர் மன்மோகன் சிங், நிலக்கரித்துறை மந்திரி பொறுப்பையும் வகித்த காலத்தில், நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை பல்வேறு தரப்பினருக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. ஜிண்டால் ஸ்டீல் மற்றும் மின் நிறுவனம், ண்டால்கோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. 16 வழக்குகள் பதிவு

13 வருடங்களுக்கு பிறகு வாக்களிக்க இருக்கும் அமர்த்தியா சென்

Posted: 30 Mar 2014 09:42 PM PDT

இந்தியாவை சேர்ந்த பொருளாதார அறிஞரும் அத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தார். வெளிநாட்டில் வசித்து வரும் அவர் அதிகமாக சொந்த ஊரான சாந்திநிகேதனுக்கு வராத காரணத்தால் அவரது பெயர் வாக்காளர்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு

Posted: 30 Mar 2014 09:12 PM PDT

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் சண்டிகார் நகரத்தில் இடைவிடாமல் 5 மணி நேரம் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.

குரானை வைத்து ஓட்டு சேகரித்த உமர் அப்துல்லா கட்சி அமைச்சர்

Posted: 30 Mar 2014 08:48 PM PDT

காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் சகினா ஐட்டூ. வருகிற மக்களவை தேர்தலை முன்னிட்டு இவர் குரானை வைத்து சத்தியம் கேட்டு ஓட்டு சேகரிப்பதை காட்டும் வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 3.11 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் திருமதி.ஐட்டூ ஒரு முதியவரிடம் "நான் உங்களது மகள் போன்றவள். எனவே கடந்த தேர்தலில்

இமாச்சலப்பிரதேச எல்லையில் சந்தேகத்தின்பேரில் 2 சீனர்கள் கைது

Posted: 30 Mar 2014 08:27 PM PDT

இமாச்சலப்பிரதேசத்தில் இந்திய-சீன எல்லைப்பகுதியில் வரும் கடைசி இந்தியக் கிராமம் நம்கியா ஆகும். இதனைத் தாண்டினால் அடுத்து வருவது சீனாவின் எல்லையைச் சேர்ந்த ஷிப்கிலா என்ற கிராமப்பகுதியாகும். சர்வதேச வர்த்தகம் நடைபெறும் இந்த எல்லைப்பகுதியில் தீவிர பாதுகாப்பு கண்காணிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் வர்த்தகர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. நம்கியா பகுதியை அடைவதற்கு முன்னர் அக்பா என்ற இடத்தில் செயல்பட்டுவரும் சோதனைச் சாவடியில் அனைத்து வெளிநாட்டுப்பயணிகளும் சோதனைக்கு

ஒடிசா: காவல்துறையை கண்டித்து தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்

Posted: 30 Mar 2014 08:16 PM PDT

ஒடிசா மாநிலத்தின் மல்கான்கிரி, கோராபுட், நபரங்பூர் போன்ற மாவட்டங்கள் மாவோயிஸ்ட்டு தீவிரவாத இயக்கங்களினால் பாதிப்படைந்துள்ள மாவட்டங்களாகும்.கடந்த சனிக்கிழமை அன்று இந்தப் பகுதிகளில் போக்குவரத்துக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நடைபெற்ற பேருந்து சோதனைகளின்போது அந்தப் பகுதிகளில் வசித்துவரும் குடியேற்ற குழந்தைத் தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றினையும், முறையான ஆவணங்கள்

போர் விதவைகள் வீட்டை அபகரித்தவர்களை சும்மா விட மாட்டேன்: மோடி சபதம்

Posted: 30 Mar 2014 04:42 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடி, மாகாராஷ்டிர முதல் மந்திரியாக இருந்து 'ஆதர்ஷ்' ஊழலில் தொடர்புள்ளதாக எழுந்த குற்றச்சாட்டால் பதவியை பறிகொடுத்த அசோக் சவானின்

கருத்துக்கணிப்புக்கு தடைவிதிக்க முடியாது: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Posted: 30 Mar 2014 02:33 PM PDT

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் வெளியிடுவதும், ஒளிபரப்புவதும் வழக்கம். ஆனால் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பிருந்து, கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது

மோடிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை தேவை: சரத் பவார் ஆவேசம்

Posted: 30 Mar 2014 02:16 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைவரும், மத்திய உணவு மந்திரியுமான சரத் பவார் பேசியதாவது:- காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று குழம்பிப் போய் பேசி வரும் மோடிக்கு

ஆந்திர உள்ளாட்சி தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு

Posted: 30 Mar 2014 01:45 PM PDT

ஆந்திராவில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள 10 மாநகராட்சிகள், 146 நகராட்சிகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™