4TamilMedia செய்திகள் | |
- ஹெச்டிசி ஒன் எம் 8 ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்
- தேவேந்திர சிங் புல்லரின் தூக்குத் தண்டனை ரத்து! : உச்ச நீதிமன்றம்
- மேல் மாகாண சபைக்கு ஜ.ம.மு.வின் சார்பில் மனோவும், குகவரதனும் தெரிவு!
- மேல் மாகாண சபையின் முதலமைச்சராக மீண்டும் பிரசன்ன ரணதுங்க தெரிவு(?)
- மலேசிய விமானத்தை தேடுவதற்கு கால எல்லை நிர்ணயிக்க முடியாது : ஆஸ்திரேலிய பிரதமர்
- பயணம்
- இன்று 'உகாதி' எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாட்டம்!
- சர்ச்சைக்குரிய 'இனம்' திரைப்படம் இன்று முதல் தமிழகத் திரையரங்குகளில் திரையிடப்பட மாட்டாது! : லிங்குசாமி
- ஆட்சியில் அமர்வது என்பது குழந்தைகள் விளையாட்டல்ல : அர்விந்த் கேஜ்ரிவால் மீது சோனியா தாக்கு
- 'சோனியா, ராகுல் காந்தி இருவரையும் ஆடை களைந்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும்' : பாஜக வேட்பாளர்
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி : யுவராஜ் மறுபடி ஃபோர்மில்
- மேல் மாகாணத்தில் தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாக ஜ.ம.மு.வுக்கு அங்கீகாரம்: மனோ கணேசன்
- ஐ.ம.சு.கூ அரசாங்கத்தின் வெற்றி; நாட்டிற்கு எதிராக செயற்படுவோருக்கான பதிலடி: மஹிந்த ராஜபக்ஷ!
- வில்லியம் - கேட் , ஜோர்ஜ்ஜும், அவர்களது செல்ல நாய்க்குட்டியும் புகைப்படம்
- தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிக்க முடியாது!:தேர்தல் ஆணையம்
- பாஜகவினர் வாய்ச்சொல் வீரர்கள்:சோனியாகாந்தி
- வவுனியா மாமடுக்குளத்தில் படகு மூழ்கியதில் மூவர் உயிரிழப்பு!
- ஒரு ஊர்ல / விமர்சனம்
- சிரியாவில் கடத்தப் பட்ட இரு ஸ்பானிய பத்திரிகையாளர்களும் விடுவிப்பு
- உயிரிழந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு 10 லட்சம் உதவித் தொகை!:தமிழக முதல்வர்
- தூத்துக்குடி வந்த 3 கப்பல்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பொருட்கள்?
- மு.க அழகிரியை சந்தித்துள்ளார் எஸ்.வி சேகர்
- பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அனுமன் கோயில் தீக்கிரை
- உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்கள் இணைந்து கொண்டாடிய ஏர்த் ஹவர்! வீடியோ
| ஹெச்டிசி ஒன் எம் 8 ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம் Posted: |
| தேவேந்திர சிங் புல்லரின் தூக்குத் தண்டனை ரத்து! : உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| மேல் மாகாண சபைக்கு ஜ.ம.மு.வின் சார்பில் மனோவும், குகவரதனும் தெரிவு! Posted:
மேல் மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் மனோ கணேசனும், சிரேஷ்ட உறுப்பினர் சண். குகவரதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். Read more ... |
| மேல் மாகாண சபையின் முதலமைச்சராக மீண்டும் பிரசன்ன ரணதுங்க தெரிவு(?) Posted:
மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான பிரசன்ன ரணதுங்க, மீண்டும் முதலமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read more ... |
| மலேசிய விமானத்தை தேடுவதற்கு கால எல்லை நிர்ணயிக்க முடியாது : ஆஸ்திரேலிய பிரதமர் Posted:
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிப்பதற்கு கால எல்லையை நிர்ணயிக்க முடியாது என ஆஸ்திரேலிய பிரதமர் டானி அபோட் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஒரு நீண்ட பேருந்துப் பயணத்தின்போது, ஆரம்பத்திலேயே தூங்கிப் போய்விடுபவர்களைப் பார்க்கும்போது, சற்றே பொறாமையாக இருக்கும். அது ஒரு திறமைதான். அதிலும் எந்தத் தயக்கமோ, தயவு தாட்சண்யமோ இன்றிப் பக்கத்திலிருப்பவர் தோள்மீது சாய்ந்து தூங்குவதென்பது ஒரு வரம். வரம் அபூர்வமாகவே கிடைக்குமாயினும், நம்மிடையே ஏராளமான அபூர்வப் பிறவிகள் இருக்கிறார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள முடிகிறது. Read more ... |
| இன்று 'உகாதி' எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாட்டம்! Posted:
தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் இந்த 'உகாதி'த் திருநாளை இன்று வெகு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். Read more ... |
| Posted:
Read more ... |
| ஆட்சியில் அமர்வது என்பது குழந்தைகள் விளையாட்டல்ல : அர்விந்த் கேஜ்ரிவால் மீது சோனியா தாக்கு Posted:
முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலை நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ளார் சோனியா காந்தி. Read more ... |
| 'சோனியா, ராகுல் காந்தி இருவரையும் ஆடை களைந்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும்' : பாஜக வேட்பாளர் Posted:
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனிப்பட்ட நபர்களை கடுமையாக தாக்கிப் பேசும் அரசியல் வாதிகளின் பேச்சுக்களும் குறைவில்லாமல் தொடர்கிறது. Read more ... |
| ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி : யுவராஜ் மறுபடி ஃபோர்மில் Posted: இன்று ஞாயிற்றுக்கிழமை வங்காள தேசத்தின் மிர்ப்பூரில் பாகிஸ்தான் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற 27 ஆவது T20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் 50 ரன்களாலும் அவுஸ்திரேலியா இந்தியா அணிகளுக்கிடையே நடைபெற்ற 28 ஆவது போட்டியில் இந்தியா 73 ரன்களாலும் வெற்றி பெற்றுள்ளன. Read more ... |
| மேல் மாகாணத்தில் தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாக ஜ.ம.மு.வுக்கு அங்கீகாரம்: மனோ கணேசன் Posted:
ஜனநாயக மக்கள் முன்னணியை மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது தலைமைக் கட்சியாக அங்கீகரித்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.ம.சு.கூ அரசாங்கத்தின் வெற்றி; நாட்டிற்கு எதிராக செயற்படுவோருக்கான பதிலடி: மஹிந்த ராஜபக்ஷ! Posted:
Read more ... |
| வில்லியம் - கேட் , ஜோர்ஜ்ஜும், அவர்களது செல்ல நாய்க்குட்டியும் புகைப்படம் Posted:
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் - கேட் தம்பதியினரின் புதல்வரான ஜோர்ஜ்ஜின் உத்தியோகபூர்வ புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளது பிரித்தானிய அரச மாளிகை நிர்வாகம். Read more ... |
| தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிக்க முடியாது!:தேர்தல் ஆணையம் Posted:
தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புக்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க முடியாது என்று, தலைமைத் தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறது. Read more ... |
| பாஜகவினர் வாய்ச்சொல் வீரர்கள்:சோனியாகாந்தி Posted:
பாஜகவினர் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் என்று, அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார். Read more ... |
| வவுனியா மாமடுக்குளத்தில் படகு மூழ்கியதில் மூவர் உயிரிழப்பு! Posted: வவுனியா மாமடுக்குளத்தில் படகொன்று மூழ்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more ... |
| Posted:
சேது, காதல், வெயில், அழகி மாதிரி சில படங்கள்தான் நம்மை உறங்கவிடாமல் அடிக்கும். ‘ஒரு ஊர்ல’ அப்படிப்பட்ட படம். மண் சார்ந்த கதைகளா? மண்ணுக்குள்ளேயே போட்டு புதை... உறவின் அற்புதத்தை உருக்கமாக சொல்கிறார்களா? அப்படியே எழுந்து ஓடு என்கிற அளவுக்கு கொடூரமான மனநிலையோடு படங்களை ரசிக்க தொடங்கிவிட்டான் நவீனத் தமிழன். இந்த இக்கட்டான நேரத்தில் தீயில் விழுந்த பட்டுத்துணி போல ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாமல் தந்திருக்கிறார் டைரக்டர் கா.ச. வசந்தகுமார். படமும் பிழைக்கட்டும்... இவரும் பிழைக்கட்டும்... உலகின் உன்னதமான உறவுகளில் ஒன்று சித்தப்பன்- மகள் உறவு. அதைதான் இந்த படத்தில் கதையாக வைத்திருக்கிறார் டைரக்டர். எந்நேரமும் குடி குடியென கிடக்கும் ஹீரோ வெங்கடேஷ், தனது அண்ணனுக்கு ஒரு மகள் பிறக்க, அந்த பிஞ்சு விரல்களை பற்றிக் கொண்டு நடப்பதற்காகவே குடியை விடுகிறான். அவளை குளிக்க வைப்பதிலிருந்து பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் செல்வது வரை எல்லாமே அவன் வேலைதான். சிடுமூஞ்சி அண்ணியை பொருத்துக் கொள்கிற அவன், தனது உலகமே அந்த குழந்தைதான் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் போது வருகிறது வினை. ஒரு நிமிடத்தில் குழந்தை காணாமல் போகிறது. தேடுகிறான் தேடுகிறான். தேடிக் கொண்டேயிருக்கிறான். அந்த கடைசி நிமிடம், உடம்பின் மொத்த ரத்தத்தையும் இதயத்திற்கு பாய்ச்சி உதறலெடுக்கும்படி ஒரு க்ளைமாக்சுடன் படத்தை முடிக்கிறார் வசந்தகுமார். கதைன்னா ஒரு நீதி வேணாமா? ஏன் இல்லை. ஒழுக்கம் தவறுகிற எவனுக்கும் எங்கிருந்தாவது இடி விழும் என்பதுதான் அது. படத்தின் ஹீரோ வெங்கடேஷ் எங்கே இன்னுமொரு பருத்தி வீரனாக மாறி ‘ரம்பம்’ போடுவாரோ என்று நினைத்திருந்தால், முற்றிலும் வேறு திசையில் அவரை நகர்த்திக் கொண்டு போகிறார் டைரக்டர். இத்தனைக்கும் அந்த ஊருக்கு அழகான நர்ஸ் ஒருத்தி வருகிறாள். அவளுக்கும் இவன் மீது ஒரு பார்வை இருக்கிறது. இருந்தாலும் தமிழ்சினிமாவின் வழக்கப்படி ஒரு கனவு டூயட்டாவது வேண்டுமே, ம்ஹும். துளி சமரசமில்லை இயக்குனருக்கு. வெங்கடேஷுக்கும் அந்த குழந்தை குட்டிம்மாவுக்கான சம்பாஷணைகளை மிகவும் ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார் டைரக்டர். அதிலும் படிக்கவே தெரியாத சித்தப்பனுக்கு அந்த குழந்தை பாடம் சொல்லிக் கொடுக்கிற அழகு இன்னமும் கிராம புறங்களில் மிச்சமிருக்கும் சந்தோஷங்கள் ஒன்று. தவிர்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் குடித்துவிட்டு, புல் மப்பில் சாலையில் விழுந்து கிடக்கும் அவனது அருகில் படுத்துறங்கிவிடுகிறது குழந்தை. போதை தெளிந்து எழுகிறவன் யய்யோ... உன்னையும் ரோட்ல படுக்க விட்டுட்டனே’ என்று கதறி அழுகிறான். பல காட்சிகளில் இது படம் என்பதையெல்லாம் மறந்து காட்சிகளுடன் கரைந்து போயிருக்கிறார் அறிமுக ஹீரோ வெங்கடேஷ். மிக மிக இயல்பாக நடித்திருக்கிறாள் குழந்தை சௌந்தர்யா. சின்னஞ்சிறு குழந்தைகளை நடிக்க வைப்பது கடினம். அந்த வகையிலும் ஆச்சர்யம் கிளப்புகிறார் இயக்குனர். வெங்டேஷின் அண்ணனாக நடித்திருக்கும் நபர், ஊரில் வெள்ளை வேட்டி படபடக்க புல்லட்டில் சுற்றும் வியாபாரி. ஊரடங்குகிற நேரத்தில் அவருக்கும் தேவைப்படுகிறது ஒரு துணை. அங்குதான் ஆரம்பிக்கிறது வினை. சொந்த மெழுகுவர்த்தியை அடுத்தவர்களுக்காக எரிய வைக்கும் மாம்ஸ்கள் நிறைந்த உலகமாச்சே? இங்கும் அப்படியொரு மாம்ஸ். அண்ணனுக்கும் இந்த புருஷனுக்கும் நடுவிலிருக்கிற அந்த கிளி, சரியான கிராமத்து கட்டை. ‘சொல்லிட்டு போறதே பெருசு. இதுல எங்க போறேன்னு வேற சொல்லிட்டு போறாங்களாக்கும்?’ -வீட்டு திண்ணையில் முடங்கிவிடுகிற பெரிசுகளின் புலம்பலையும் மிக இயல்பாக கேட்க முடிகிறது. கொழுந்தனை எந்நேரமும் பூச்சியை போல கேவலமாக பார்க்கும் அண்ணிக்கு க்ளைமாக்சில் டயலாக் கொடுக்கவில்லையே தவிர, அவள் எண்ண நினைத்து அழுகிறாள் என்பதையும் வசனமில்லாமலே புரிய வைக்கிறார் டைரக்டர். அந்த க்ளைமாக்சுக்கு முந்தைய சண்டை, கலங்கடிக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர் ஆக்ஷன் ஜி க்கு பாராட்டுகள். இசை இளையராஜா. இதுபோன்ற அழுத்தமான கதைகளுக்கு இவரை விட்டால் ஆளேது? பின்னணி இசையிலேயே ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தவும் செய்கிறார். சீராக்கவும் செய்கிறார். பாடல்களில் தாயே வந்தாயே... ராஜா ஸ்பெஷல். இந்த சினிமாவெல்லாம் ஓடவில்லை என்றால் தமிழ்சினிமா நாசமாக போய் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்! வேறென்ன சொல்ல? -ஆர்.எஸ்.அந்தணன் மேலும் சில சினிமா செய்திகள்: நயன்தாரா நினைத்தால்தான் நண்பேன்டா... இல்லேன்னா? சினிமா கேலரி: kottampatti-thodakka-palli-movie-launch actor-karan-at-jeevan-foundation-eye-donation-camp-photos Read more ... |
| சிரியாவில் கடத்தப் பட்ட இரு ஸ்பானிய பத்திரிகையாளர்களும் விடுவிப்பு Posted:
இஸ்லாமிய கிளர்ச்சிப் படையால் கடத்தப் பட்டு சுமார் 6 மாத காலமாக சிரியாவில் தடுத்து வைக்கப் பட்டிருந்த தனது (ஸ்பானிய) இரு பத்திரிகையாளர்களும் விடுதலை செய்யப் பட்டு வீடு திரும்பியிருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினின் எல் முன்டோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read more ... |
| உயிரிழந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு 10 லட்சம் உதவித் தொகை!:தமிழக முதல்வர் Posted:
தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் அந்தோணி நிர்மல் ராஜ் குடும்பத்துக்கு, உதவித் தொகையாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். Read more ... |
| தூத்துக்குடி வந்த 3 கப்பல்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பொருட்கள்? Posted:
தூத்துக்குடி வந்த 3 கப்பல்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை மற்றும் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| மு.க அழகிரியை சந்தித்துள்ளார் எஸ்.வி சேகர் Posted: |
| பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அனுமன் கோயில் தீக்கிரை Posted: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தெற்கே உள்ள நகரான ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்துக்களின் கடவுளான ஹனுமான் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் வடிவில் உள்ளே புகுந்திருந்த இனம் தெரியாத 3 நபர்கள் திடீரென ஹனுமான் சிலையைத் தாக்கி உடைத்ததுடன் கோயிலுக்குத் தீ மூட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர் ஊடகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. Read more ... |
| உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்கள் இணைந்து கொண்டாடிய ஏர்த் ஹவர்! வீடியோ Posted: இன்று (மார்ச் 29) இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை உலகெங்கும் Earth Hour நிகழ்வு கொண்டாடப்படுகிறது. குறைந்தது இந்த ஒரு மணிநேரத்திற்கு உங்களது வீட்டு மின் விளக்குகளை அணைத்துவிடுங்கள், உங்கள் தெருவில் உள்ள அனைவருக்கும் இத்தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் இணைந்து இந்த Earth Hour நிகழ்வை கொண்டாடுவோம் என்கிறது இவ்வலைத்தளம். இதுவரை மில்லியன் கணக்கான மக்கள் இந்நிகழ்வில் இணைந்து கொண்டுள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
ஹெச்டிசி ஒன் எம் 8 ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது HTC நிறுவனம்.
தேவேந்திர சிங் புல்லரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.




இன்று முதல் தமிழகத் திரையரங்குகளில் இனம் திரைப்படம் திரையிடப்பட மாட்டாது என்று, இயக்குனர் லிங்குசாமி அறிக்கை விடுத்துள்ளார்.










