Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


விபச்சாரி மீது வாலிபர் பரபரப்பு புகார்

Posted: 26 Feb 2014 02:17 AM PST

sex_worker_002

sex_worker_002லண்டனில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவருக்கு எதிராக வாலிபர் புகார் பதிவு செய்துள்ளார். லண்டனில் சில தினங்களுக்கு முன் வாலிபர் ஒருவர் விலைமாதர் விடுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு கிழக்கு ஐரோப்பிய பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க எண்ணினார், அப்போது அந்த பெண் அதற்கு மறுத்துள்ளார்.

இதனை அடுத்து அதிருப்தி அடைந்த அந்த வாலிபர் பாலியல் தொழிலாளிக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.

தனக்கு நடந்தது குறித்து தொழில் நடைமுறையில் நடவடிக்கை எடுக்க கோரி ஹரோவ் கவுன்சிலுக்கு(Harrow Council) மெயில் அனுப்பியுள்ளார்.

வாலிபர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டதாவும், அவர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் அப்படி நடந்துகொள்ள முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார் என்று கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹரோவ் கவுன்சிலின் தலைவரான சுசான் ஹால், விபச்சாரம் உலகின் பழைய தொழிலாக இருக்கலாம், ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக எங்களுக்கு புகார் வந்துள்ளது புதியது, இது வர்த்தக தரத்தில் அடங்காது என்று தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சூரிய வெடிப்பால் 44 மைல் வேகத்தில் பாயும் விண்வெளி கதிர்வீச்சு (வீடியோ இணைப்பு)

Posted: 26 Feb 2014 02:14 AM PST

சூரியனில் நேற்று ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பால் 44 லட்சம் மைல் வேகத்தில் விண்வெளி கதிர்வீச்சு வெளியாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது. இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். இந்த அணு இணைப்புகளின்போது வெளிப்படும் சக்தி தான் வெப்பமாக வெளிப்படுகிறது. அப்போது உருவாகும் மிக அதிக சக்தி கொண்ட […]

ஜெனிவா பிரேரணையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் செல்வரட்னம் சிறிதரன்

Posted: 26 Feb 2014 02:08 AM PST

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் 2014 ஆம் ஆண்டு கொண்டு வரப்படவுள்ள அமெரிக்க பிரேரணையானது, அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடியதாகவும், காரமானதாகவும் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் அந்தப் பிரேரணையின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் அதில் என்னென்ன உள்ளடக்கப்படப் போகின்றது என்பது பற்றி அறிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அதேநேரம், இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களுக்கு உரமூட்டக் கூடிய வகையில் தேவையான தகவல்களையும் விபரங்களையும் களத்தில் இருந்து […]

அதிவேக கார் (வீடியோ இணைப்பு)

Posted: 26 Feb 2014 02:04 AM PST

fast_car_002

fast_car_002அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர்கள் அதிகபட்சமாக மணிக்கு 435 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேகமான காரை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹென்னெஸ்ஸே என்ற நிறுவனம் வெனோம் ஜீ.டி லோட்டஸ் எக்ஸீஜ் என்ற 7 ஆயிரம் சிசி என்ஜின் திறன் கொண்ட காரை வடிவமைத்துள்ளது.

இந்த கார் மணிக்கு 435 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.

இதற்கு முன்னர் மணிக்கு 431 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய "புகாட்டி வெய்ரோன் சூப்பர் ஸ்போர்ட் காரே' உலகின் அதிவேக கார் என்ற சாதனையைப் பெற்றிருந்தது.

இதன் சோதனை ஓட்டம் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்றது.

ஒரு திசையில் பயணித்த வெனோம் காரால், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முடியவில்லை.

இரு திசைகளிலும் குறிப்பிட்ட கார் பயணம் செய்ய வேண்டும் என்பது கின்னஸ் சாதனைக்கான விதிமுறையாகும்.

ஆனால் ஒரு திசையில் மட்டுமே வெனோம் பயணம் செய்துள்ளதால் அது கின்னஸ் சாதனையில் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பண்டார வன்னியன், காத்தவராயன் கூத்து நடாத்த கூடாது: பொலிஸார் எச்சரிக்கை

Posted: 26 Feb 2014 01:58 AM PST

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஊர்காவற்துறை தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நாளையதினம் மேடையேற்ற இருந்த காத்தவராயன் நாட்டுக் கூத்து மற்றும் பண்டார வன்னியன் தென் மோடி நாட்டுக் கூத்து ஆகியவற்றை நடத்தக் கூடாதென இன்று இரவு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கலைஞர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் இத்தகைய நாடகங்களை நடத்தக் கூடாதென்று பொலிஸார் விடுத்துள்ள அச்சுறுத்தலுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வன்மையான கண்டனம் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™