Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இவங்க உண்மையிலே சாப்பிடத் தான் வந்தாங்களா?…

Posted: 22 Feb 2014 07:19 AM PST

restaurant_fight_001.w245

restaurant_fight_001.w245      

This posting includes an audio/video/photo media file: Download Now

பீட்சா கடையில் அரங்கேறிய கூத்து…. சமையலறை சிங்க்கில் சிறுநீர் கழித்த ஊழியர்!…

Posted: 22 Feb 2014 07:14 AM PST

pizza_toilet_001.w245

pizza_toilet_001.w245அமெரிக்காவில் சமையலறையின் சிங்க்கில் ஊழியர் ஒருவர் சிறுநீர் கழித்து விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவில் சார்ஸ்ன் நகரில் பீட்சா கடை ஒன்று உள்ளது. இந்த கடையை சேர்ந்த ஊழியர் ஒருவர் சமையலறையின் சிங்க்கில் சிறுநீர் கழித்து விட்டார். இந்த செயல் ரகசிய கமெராவில் பதிவானதால், உடனடியாக அவரை டிஸ்மிஸ் செய்து விட்டனர். இந்த கொடுமை என்னவென்றால் சிறுநீர் கழித்தவர் அந்த கடையின் மேனேஜர் என்பதுதான். இதுகுறித்து பீட்சா நிறுவன செய்தித் தொடர்பாளர் டோக் டெர்பர் கூறுகையில், இந்த வீடியோ காட்சியைப் பார்த்ததும் அந்த ஊழியர் நீக்கப்பட்டு விட்டார், கடையும் காலவரையின்றி மூடப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆண்டிபிளவர்?

Posted: 22 Feb 2014 07:08 AM PST

f9180ca2-38fa-43f2-81bb-c9156e20f6bc_S_secvpf

f9180ca2-38fa-43f2-81bb-c9156e20f6bc_S_secvpfநியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட தோல்வியால் கேப்டன் டோனி, பயிற்சியாளர் பிளட்சர் ஆகியோர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.

இதையொட்டி காயத்தை காரணமாக காட்டி டோனி ஆசிய கோப்பையில் இருந்து விலகினார். அந்தப் போட்டிக்கு வீராட் கோலி கேப்டனாக பணிபுரி கிறார்.

இதற்கிடையே பயிற்சியாளர் பிளட்சரை நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது. அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே அணி முன்னாள் கேப்டனும் இங்கிலாந்து முன்னாள் பயிற்சியாளரான ஆண்டி பிளவரை பயிற்சியாளராக நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அவரை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து உள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறியதாவது:–

இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்குமாறு ஆண்டி பிளவரை தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான தகவல் தவறானது. இதில் எந்த உண்மையும் இல்லை. இது தொடர்பாக எந்தவித விவாதமும் நடைபெறவில்லை.

அடுத்த மாதம் தான் பயிற்சியாளர் தேர்வு நடைபெறுகிறது. இதுவரை யாரை நியமிக்குவது என்று இதுவரை முடிவு செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

This posting includes an audio/video/photo media file: Download Now

19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா திணறல்

Posted: 22 Feb 2014 07:03 AM PST

5d157c38-b47d-4f3e-9124-24059cf0db18_S_secvpf

5d157c38-b47d-4f3e-9124-24059cf0db18_S_secvpf19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

துபாயில் இன்று நடந்த கால் இறுதியில் இந்தியா– இங்கிலாந்து அணிகள் மோதின. கடுமையான பனியால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விஜய் ஜோல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

2.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது.அடுத்து களமிறங்கிய கேப்டன் விஜய் ஜோல், தீபக் ஹூடா தலா 29 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி 25.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசிய தலாய் லாமா

Posted: 22 Feb 2014 06:59 AM PST

thalai

thalaiதிபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால் 1959-ம் ஆண்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா(78), இங்கிருந்தவாறே சீனாவை எதிர்த்து திபெத்தின் விடுதலைக்காக போராடி வருகிறார். திபெத்தியர்களுக்கான நாடு கடந்த அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் அவர், சீனாவின் பிடியில் இருந்து திபெத்தை விடுவிக்க உலக நாட்டு தலைவர்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.

தாய்நாட்டின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் தொண்டினை பாராட்டி அமைதிக்காக வழங்கப்படும் உலகின் உயரிய நோபல் பரிசு தலாய் லாமாவுக்கு அளிக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தலாய் லாமா நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசினார்.

முன்னதாக, தலாய் லாமாவுடனான ஒபாமாவின் இந்த சந்திப்புக்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த சந்திப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் அமெரிக்க அரசை சீனா கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங், 'திபெத் விவகாரம் சீனாவின் உள்நாட்டு பிரச்சினையாகும். இதில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது'.

மதத்தின் பெயரால் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தலாய் லாமாவை ஒபாமா சந்தித்து பேசுவது சீனாவின் உள்நாட்டு விவகாரங்களுக்கு நியாயமற்ற இடையூறை ஏற்படுத்தி விடும். அமெரிக்கா-சீனாவுக்கிடையிலான நட்புறவுக்கு இந்த சந்திப்பு 'பெரும் சேதம்' விளைவித்து விடும். சர்வதேச நாடுகளுக்கு இடையில் பேணப்பட வேண்டிய நல்லுறவு கோட்பாடுகளை மீறும் வகையிலான இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை அமெரிக்க அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாத பராக் ஒபாமா, திட்டமிட்டபடி தலாய் லாமாவை சந்தித்து பேசினார். முக்கிய பிரமுகர்களை வழக்கமாக முட்டை வடிவ (ஓவல் ஷேப்) அலுவலகத்தில் சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், தலாய் லாமாவுடனான ஒபாமாவின் இந்த சந்திப்பு அவரது இல்லத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திபெத்தியர்களின் விடுதலைக்காக வன்முறையின்றி அமைதிப் பாதையில் தொண்டாற்றி வரும் அவரது நடுநிலை கொள்கையை ஒபாமா பெரிதும் பாராட்டினார். சீனாவில் வாழும் திபெத்திய மக்களின் சமய, கலாசார, மொழி சார்ந்த உரிமைகளை பாதுகாப்பதில் அமெரிக்கா பெருந்துணையாக இருக்கும் எனவும் ஒபாமா உறுதியளித்தார்.

இதற்கிடையே, சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்க உயர் தூதரை வரவழைத்த சீன வெளியுறவு துறை மந்திரி இந்த சந்திப்புக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய வகை மலேரியா வைரஸ் கிருமிகள் : ஆப்பிரிக்க மனித குரங்குகளில் இருந்து பரவ‌ல்

Posted: 22 Feb 2014 06:53 AM PST

worker_inselt_gorilla_001

worker_inselt_gorilla_001மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. ஆனால் தற்போது புதிய வகை மலேரியா வைரஸ் கிருமிகள் ஆப்பிரிக்காவில் உள்ள மனித குரங்குகளில் இருந்து பரவி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் முடித்து விட்டு ஐரோப்பா திரும்பிய பயணி ஒருவர் கடுமையான மலேரியாவால் அவதிப்பட்டார். அவரை பரிசோதனை நடத்தியதில் புதிய வகையான 'பிளாஸ்மோடியம் விவாஸ்' என்ற வைரஸ் கிருமி தாக்கியது தெரிய வந்தது.

இது குறித்து பென்சில் வேனியா பல்கலைக் கழகத்தில் உள்ள பேரல்மான் மருத்துவ பள்ளியின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில் மனிதர்களின் உடலில் 5 வகை பிளாஸ் மோடியம் வைரஸ்கள் மலேரியாவை உருவாக்கும்.

அவற்றில் பி விவாஸ் எனப்படும் பிளாஸ்மோடியம் விவாஸ் வைரஸ் கிருமி மூலம் ஐரோப்பிய சுற்றுலா பயணிக்கு மலேரியா தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் கிருமிகள் ஆப்பிரிக்காவின் அடர்ந்த வனப்பகுதிகளில் வாழும் மனித குரங்குகளின் உடலில் உள்ளது. அவற்றின் மூலம் மனிதர்களுக்கும் பரவி நோய் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேரியா நோயை பரப்பும் வைரஸ்களில் இது மிகவும் கடுமையானது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போது இதன் மூலம் ஏற்படும் மலேரியா ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தானின் புனெர் மாவட்டத்தில் இன்று குண்டுவெடிப்பு : அரசியல் தலைவர் உள்பட 3 பேர் பலி

Posted: 22 Feb 2014 06:45 AM PST

Pakistan

Pakistanவடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம், புனெர் மாவட்டத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாயினர். இது குறித்து போலீசார் கூறுகையில், "பாகிஸ்தானின் தேசியவாத குவாமி வாடன் கட்சித்தலைவர் அடலத் கானின் வாகனத்தை குறிவைத்து,  ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அடலத் கானுடன், உடனிருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில், பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பு ஒன்று அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தலிபான் எதிர்ப்பு அமைப்பு நடத்திய மாநாட்டிற்கு அடலத் கான் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இவ்வமைப்பின் தலைவர் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தலிபான்கள் இக்குண்டுவெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீவிரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் 2007ம் ஆண்டு முதலே பாகிஸ்தான் அரசுக்கெதிராக குண்டிவெடிப்புகள் மற்றும் பல தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் இந்த அமைப்பின் மீதும் சந்தேகம் எழுகிறது.

ஏனெனில் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்திருந்த தலிபான் அமைப்பு பழிவாங்கும் உணர்ச்சி காரணமாக ஜனவரி 29 அன்று அவர்கள் கடத்தி வைத்திருந்த 23 ராணுவ வீரர்களை கொன்றுவிட்டனர்" என்று தெரிவித்தனர். தற்போது தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகில் தான், பெண்கல்வி போராளியான மலாலா யூசுப்சாய் தலிபான்களால் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யலாம் – இளங்கோவன்

Posted: 22 Feb 2014 06:34 AM PST

perarivalan

perarivalanஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் இந்த மூவர் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

ஆனால் இதற்கு மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யலாம் என மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், மூவரையும் விடுதலை செய்த 'உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் மோசமான தீர்ப்பு. பேரறிவாளன் மட்டும் பெற்றரி வாங்கிக் கொடுத்தார்; மற்றபடி அவருக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள்.

அதனை விசாரித்த அதிகாரியே அதைத்தான் இப்போது சொல்லியிருக்கிறார். அதனால், பேரறிவாளனை மட்டும் தண்டனை இல்லாமல் செய்தால், அதில் ஓரளவு நியாயம் இருக்கிறது.

அதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், முருகன், சாந்தன் இருவரும் ராஜீவ் காந்தி கொலை செயல் நடக்கும் அந்த இடத்தில் இருந்தவர்கள். இவர்களை விடுதலை செய்யப்போகிறார்கள் என்று சொல்வது, நீதித் துறை மீதே நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய செயல். அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தால்தான் நீதி நிலைக்கும் என்று கூறியுள்ளார்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெனிவா பற்றி கூறினால் ஜனாதிபதி மூலம் எதனையும் செய்து கொள்ள முடியும் -அமைச்சர் தொண்டமான்

Posted: 22 Feb 2014 06:30 AM PST

mahinda rajapaksha

mahinda rajapakshaஜனாதிபதியிடம் ஊடாக எதனையாவது செய்து கொள்ள வேண்டுமாயின் ஜெனிவா பற்றி கூறினால் அவர் எதை வேண்டுமானாலும் செய்து கொடுப்பார் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

அமைச்சர் ஒருவர் நேற்று அதிகாலை தன்னை தொடர்பு கொண்ட போதே தொண்டமான் இதனை கூறியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கம்பளங்களை விரித்து வருமாறு அழைத்தாலும் வாரத ஜனாதிபதி , ஜெனிவாவில் வெல்ல பூஜை ஒன்றை நடத்துவோம் வாருங்கள் எனக் கூறியதும் அதிகாலையிலேயே புறப்பட்டு கொட்டகலைக்கு வந்ததாகவும் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தொண்டமானை நேற்று அதிகாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் ஒருவர், தொண்டா … எங்களுக்கும் நேரம் சரியில்லை. ஏன் எங்களை அந்த பூஜைக்கு அழைக்கவில்லை என வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் தொண்டமான், நீங்கள் ஒரு தொலைபேசி அழைப்பை எடுத்தால் வந்து விடுவீர்கள். தலைவரை அவ்வாறு இலகுவாக அழைத்து வர முடியாது தானே. ஆனால் தற்போது ஜெனிவா பற்றி கூறினால் தலைவர் மூலம் எதனையும் செய்து கொள்ள முடியும். நீங்கள் பூஜைகளை நடத்துங்கள், தலைவர் வேண்டியதை செய்து தருவார் எனக் குறிப்பிட்டதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் தொண்டமான் ஏற்பாடு செய்திருந்த ஜெனிவா பேய் நடன பூஜையில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று கொட்டகலை பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

அமைச்சர் தொண்டமான் இந்தியாவில் உள்ள தனது நண்பர் ஒருவர் ஊடாக கேரளாவில் இருந்து 9 மந்திரவாதிகளை இந்த பூஜைக்கு வரவழைத்திருந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை : முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், பி.பி.சி செய்திச் சேவைக்குத் தெரிவிப்பு

Posted: 22 Feb 2014 06:25 AM PST

0

0இராணுவமே வடக்கின் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது. அவர்கள் இன்னமும் எங்களைப் பயங்கரவாதிகள் என்ற மனோநிலையிலேயே வைத்திருக்கின்றனர்.

ஆனால் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை என்று வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், பி.பி.சி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

"மக்கள் இறுதிக்கட்டப் போரில் பலவற்றை இழந்திருக்கின்றார்கள். அவர்களது உணர்வுகள் இறுதிக் கட்டப் போரில் நடந்தவை தொடர்பில் நீதியான விசாரணை தேவை என்றதாக இருக்கின்றது.

எனவே கடந்த காலத்தை மறக்கச் செய்வதென்பது அவ்வளவு எளிதானதல்ல.  வடக்கில் இராணுவமே சகல விடயங்களையும் கட்டுப்படுத்துகின்றது. தற்போது இராணுவ முகாம்களை அகற்றியதாக இராணுவம் சொல்கின்றது.

ஆனால் இராணுவ முகாம் அகற்றிய பகுதியில் சைக்கிளில் அவர்கள் ரோந்து நடவடிக் கைகளில் ஈடுபடுகின்றனர். தங்களது புலனாய்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.   அவ்வாறு அவர்கள் செய்வதன் எண்ணம், இன்னமும் பயங்கரவாதிகளின் பிரதேசத்தில் பணியாற்றுவதாக எண்ணித்தான். ஆனால் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை' என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு எதிரான தீர்மான நிகழ்வுகளை நேரடியாக காண வாய்ப்பு

Posted: 22 Feb 2014 06:19 AM PST

19-amnestyinternational-300

19-amnestyinternational-300ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்று, இலங்கைக்கு எதிரான தீர்மான நிகழ்வுகளை நேரடியாக காண ஒரு வாய்ப்பு உள்ளது என்று ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

ஆம்னெஸ்டி இந்தியா அமைப்பு தரும் இந்த வாய்ப்பு உங்களில் ஒருவருக்குக் கிடைக்கலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 044 66044770 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கவும் ஆம்னெஸ்டி கேட்டுக்கொண்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனஸ் அகதி முகமை மூடக் கோரி அவுஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted: 22 Feb 2014 06:14 AM PST

aus

ausஅவுஸ்திரேலியா பிரதமர் டோனி அபட்டின் அகதிகளுக்கான புதிய அகதிக் கோட்பாட்டினை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இதன்போது மனஸ் அகதி முகமை மூடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. புகலிடம் கோரும் அகதிகளை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை கண்டித்தும், தற்போது நடைமுறைபடுத்தியுள்ள T.H.V விசாவை தடை செய்து நிரந்தர வதிவிட விசா வழங்க கோரியுமே இந்த அரப்பட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தை அகதிகளுக்காக செயற்ப்படும் அமைப்பான RAC என்னும் அமைப்பு ஏற்ப்பாடு செய்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாதுகாப்பு அமைச்சுக்குள்ளேயே கோத்தாவுக்கு எதிரான ‘உளவாளி‘

Posted: 22 Feb 2014 06:10 AM PST

kottapaya

kottapayaசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் சிறிலங்காவின் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக, இணையத்தளங்களில் பரப்புரைகளை மேற்கொள்ளப்பட்டு வந்த பரப்புரைகளின் பின்னணியில் இருந்தவரை சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இவர் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவரின் சகோதரர் ஆவார்.

இவர், சிறிலங்கா அதிபர் மற்றும், அவரது குடும்பத்தினர் பற்றிய தகவல்களை சட்டவிரோதமாக, பெற்று தமது பரப்புரைக்கு பயன்படுத்தியுள்ளார்.

பொறளையில், விளம்பர முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வரும் இவர், தமது சகோதரியைப் பயன்படுத்தியே சட்விரோதமாக தகவல்களைப் பெற்று பல்வேறு போலியான இணையத்தளங்களுக்கு வழங்கியுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர்க்காலத்தில், பல்வேறு இணையத்தளங்கள் மூலம், பல்வேறு பிரமுகர்களினது நற்பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் இவர் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவோடு மொறிசியசும் இணைவு

Posted: 22 Feb 2014 06:06 AM PST

srilanka flg

srilanka flgஎதிர்வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானவரைவில், அமெரிக்காவுடன் மொறிசியஸ் நாடும் இணைந்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னர் ஐக்கிய ராஜ்ஜியம், சியரலியோன், மசிடோனியா மற்றும் மண்டினீக்ரோ (United kingdom, Sierra Leone, Macedonia and Montenegro )) ஆகிய நாடுகள், அமெரிக்காவுடன் கூட்டாக குறித்த தீர்மானத்தினை வரைய பங்கெடுத்திருந்த நிலையில், தற்போது மொரிசியஸ் நாடும் இணைந்துள்ளது. கூட்டாக வரையப்படும் இத்தீர்மானத்தின் முதல்நகல் வரும் வாரம் வரையப்பட்டவுடன், அவ்வரைவில் உள்ளடக்கப்பட்ட வாசகங்கள் மற்றும் இதரவிடயங்கள் ஆகியன பல்வேறு நாடுகளுடன் உரையாடப்பட்டு, அந்நாடுகளின் அனுசரணை பெறப்படும். 2012ம் ஆண்டு 40 நாடுகளும் 2013ம் ஆண்டில் 41 நாடுகள் இணை அனுசரணை  வழங்கியிருந்தன என்பது குறிப்பிடதக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™