Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அதிபர் ஆசாத் ஆதரவாளரான ஷியா பிரிவு நபர் தலை துண்டித்து கொல்லப்படும் பரபரப்பு வீடியோ காட்சி வெளியீடு

Posted: 02 Feb 2014 07:12 AM PST

847b6fea-4731-4941-b033-7440ae8f51e8_S_secvpf

847b6fea-4731-4941-b033-7440ae8f51e8_S_secvpfசிரியாவில் அதிபர் பஷர்அல்–ஆசாத் பதவி விலக வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

அதில் சுமார் 1¼ லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளனர்.

போராட்டம் இன்னும் முடிவுக்கு வராததால் வன்முறை சம்பவங்கள் பெருகி வருகின்றன. அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ஷியா பிரிவினர் உள்ளனர். எனவே சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் அல் கொய்தாவினருடன் சேர்ந்து படுகொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அண்டை நாடான ஈராக்கில் இருந்து சிரியா வந்து போராட்டக் காரர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிபர் ஆசாத் ஆதரவாளரான ஷியா பிரிவு நபர் தலை துண்டித்து கொல்லப்படும் பரபரப்பு வீடியோ காட்சி சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஒரு நபரை இழுத்து செல்லும் தீவிரவாதி தர தரவென புல் தரையில் இழுத்து சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்கிறான். அப்போது அவன் துடிதுடித்து இறப்பதை சக தீவிரவாதிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.

இந்த காட்சியை பார்த்து அங்கு கூடியிருக்கும் சிறுவர்கள் சிரித்து மகிழ்கின்றனர். கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சியை போட்டோ எடுத்தனர். இக்காட்சிகள் சுமார் 3 நிமிடங்கள் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

Microsoft Surface Pro அறிமுகம்

Posted: 02 Feb 2014 07:10 AM PST

surface-pro_001

surface-pro_001பல்வேறு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் டேப்லட்கள் வரிசையில் புதிதாக Microsoft Surface Pro இணைந்துள்ளது.

இந்த டேப்லட் ஆனது 128GB சேமிப்பு கொள்ளளவுடைய இந்த டேப்லட்டின் விலையானது 499.99 டொலர்களில் இருந்து 400 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

10.6 அங்குல அளவுடையதும் 1920 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் Windows 8 Pro இயங்குதளம், Intel Core i5 மூன்றாம் தலைமுறை Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பனவும் தரப்பட்டுள்ளன

This posting includes an audio/video/photo media file: Download Now

செல்போன் கோபுரங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலி

Posted: 02 Feb 2014 07:08 AM PST

katrina-4

katrina-4மேற்கு விர்ஜினியா அருகேயுள்ள கிளர்க்ஸ்பக் பகுதியில் செல்போன் கோபுரங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். கிளர்க்ஸ்பக் பகுதியில் உள்ள 300 அடி உயரமுள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் பழைய பாகங்களை மாற்றி நவீன உபகரணங்களை பொருத்தும் பணியில் நேற்று பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இடுப்புகளில் தற்காப்பு பட்டைகளை கட்டியபடி கோபுரத்தின் 60 அடி உயரத்தில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தரையின் கடைக்காலை பெயர்த்துக் கொண்டு கோபுரம் கீழ்நோக்கி சரியத் தொடங்கியது. எகிறி குதித்து தப்பிக்கவும் வழியின்றி, இடுப்பு பட்டையை கோபுரத்துடன் இணைத்து கட்டியிருந்த 2 பணியாளர்கள் கீழே விழுந்த கோபுரத்தின் அடியில் சிக்கி, உடல் நசுங்கி பலியாகினர். கீழே விழுந்த கோபுரம், அருகில் இருந்த மற்றொரு சிறிய செல்போன் கோபுரத்தின் கம்பி மீதும் விழுந்ததால் அந்த கோபுரமும் தரையை விட்டு பெயர்த்துக் கொண்டு கீழே விழ தொடங்கியது. இதை கவனிக்காமல் அவ்வழியாக சென்ற தீயணைப்பு வீரர் மீது அந்த சிறிய கோபுரம் விழுந்து நசுக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். பெரிய கோபுரத்துக்கடியில் சிக்கி படுகாயம் அடைந்த மேலும் 2 பணியாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

HTC M8 Mini ஸ்மாட் கைபேசி விரைவில் அறிமுகம்

Posted: 02 Feb 2014 07:04 AM PST

htc_one_mini_rogers_001

htc_one_mini_rogers_001HTC நிறுவனமானது M8 Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது கைப்பேசி சந்தையில் ஏனைய நிறுவனங்களுக்கு ஈடாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள இந்த நிறுவனம் M8 Mini எனும் புதிய அம்சங்களைக் கொண்ட கைப்பேசியினை வெளியிடவுள்ளது.

இக் கைப்பேசியானது 5 அங்குல தொடுதிரை, Snapdragon 800 SoC Processor மற்றும் 2GB RAM, என்பனவற்றுடன் 16GB சேமிப்பு கொள்ளளவை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ளது.

மேலும் கூகுளின் Android 4.4 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியில் 2,900 mAh மின்கலமும் இணைக்கப்படவுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அச்சச்சோ அதனால தான் கன்னம் இப்படி சிவப்பா இருக்குதா……

Posted: 02 Feb 2014 07:03 AM PST

baby_game_001.w245

baby_game_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பாரீஸ் ஓபன் டென்னிஸ்: ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

Posted: 02 Feb 2014 07:01 AM PST

Maria-Sharapova

Maria-Sharapovaபாரீஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஷரபோவா (ரஷியா), அதிர்ச்சிகரமாக தோற்றார். அனஸ்டசியா 4–6, 6–3, 6–4 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்

This posting includes an audio/video/photo media file: Download Now

அடேங்கப்பா!… கென்யா நாட்டின் உயரம் தாண்டுதலைப் பாருங்க….

Posted: 02 Feb 2014 07:00 AM PST

high_jump_001.w245

high_jump_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

கிரிக்கெட்டுக்கு அழிவு காலம்! இயான் சேப்பல்

Posted: 02 Feb 2014 06:58 AM PST

ian_7

ian_7டுவென்டி- 20 போட்டிகளால் கிரிக்கெட்டுக்கு பேரழிவு என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் டெஸ்ட்(5 நாள்), ஒருநாள் போட்டி(50 ஓவர்) மற்றும் டுவென்டி- 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் 3 மணிநேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியை தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள்.

துடுப்பாட்ட வீரர்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், இதனால் 20 ஓவர் போட்டிக்கு அதிக அளவில் ஆதரவு காணப்படுகிறது.

இது கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பேரழிவு என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 20 ஓவர் போட்டியில் பந்துகள் சிக்சர், பவுண்டரிகளாய் பறக்கிறது.

இந்தப் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, பேட்டிங்கும், பந்துவீச்சும் சமநிலையில் இருக்க வேண்டும்.

ஆனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்ற வகையில் மட்டுமே 20 ஓவர் போட்டி உள்ளது, பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

இதே நிலை நீடித்தால் கிரிக்கெட் விளையாட்டுக்கு அழிவு காலம் தான், போட்டி மற்றும் பொழுதுபோக்குக்கு இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேருந்து நிலையத்தில் பெண்களின் அசத்தலான குத்தாட்டம்……

Posted: 02 Feb 2014 06:54 AM PST

busstation_dance_001.w245

busstation_dance_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

திடீரென ஆர்ப்பரித்த ஆறு…… இதில் பயணித்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?…..

Posted: 02 Feb 2014 06:52 AM PST

river_car_001.w245

river_car_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

100% சிரிப்பிற்கு நாங்க உத்தரவாதம்…. மிஸ் பண்ணாமல் பார்த்து சிரிங்க!….

Posted: 02 Feb 2014 06:50 AM PST

chair_fail_001.w245

chair_fail_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இரண்டே நிமிடங்களில் விமானத்திற்கு வர்ணம் பூசுவது எப்படி?….

Posted: 02 Feb 2014 06:49 AM PST

plane_paint_001.w245

plane_paint_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

லண்டனில் ரூ.5 கோடி மதிப்புள்ள கடிகாரங்களை கொள்ளையடித்த மர்ம கும்பல்

Posted: 02 Feb 2014 06:42 AM PST

epcp_1103_01_o+spyker_watches_db18_drophead_coupe_more+watch

epcp_1103_01_o+spyker_watches_db18_drophead_coupe_more+watchலண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெரு எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் ஒரு இடமாகும். இங்குள்ள ஒரு வாட்ச் கடையில் 3 மர்ம மனிதர்கள் ரூ.5 கொடி மதிப்புள்ள வாட்சுகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸ்போர்டு தெருவில் 'சுவிட்சர்லாந்து' என்ற பிரபல வாட்ச் கடை உள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்த கடைக்குள் திடீரென மூன்று மர்ம மனிதர்கள் நுழைந்தனர். அதில் ஒருவன் கையில் துப்பாக்கி வைத்திருந்தான். மற்ற இருவர் இரும்பியால் ஆன பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். அவர்கள் கடையில் உள்ள ஊழியர்களை மிரட்டி கண்ணாடிகளை உடைத்து ஏராளமான வாட்சுகளை திருடிச் சென்றுவிட்டனர். அதன் மதிப்பு சுமார் 5 லட்சம் பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.5 கோடி) இருக்கும் என கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ''கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதற்கான அறிகுறியில்லை. மேலும், ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்தனர். இதுவரை யாரையும் கைது செய்யவில்லை'' என்றனர். இதை நேரில் பார்த்த மாணவி ஒருவர் ''இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். முகமூடியுடன் கடைக்குள் 3 பேர் வந்ததை என் கண்களால் பார்த்ததையே நம்பமுடியவில்லை'' என்றார்.
 

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை ; ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மூன்றாவது தீர்மானத்தை கொண்டு வருவோம் – நிஷா பிஸ்வால்

Posted: 02 Feb 2014 06:24 AM PST

download

downloadசிறிலங்காவில் நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் மூன்றாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரும் என்று, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

தனது இரண்டு நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் நேற்றுமாலை செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

அனைத்துத் தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்களை நடத்தியுள்ளேன்.

சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால உறவு என்பது, இருநாட்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமல்ல, இருநாட்டு மக்களுக்கும் இடையிலானது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

சிறிலங்காவில் நடந்த சந்திப்புகள் ஆக்கபூர்வமானவையாகவும் ஒத்துழைப்பு சார்ந்ததாகவும் அமைந்தன.நீதி, நல்லிணக்கம், போரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்கா போதுமான முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்ற அமெரிக்காவின் கவலைகளை சிறிலங்கா அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

போரின் விளைவாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா சொந்தமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதற்கே அமெரிக்கா எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது.

ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களில் சிறிலங்கா முன்னேற்றம் காட்டவில்லை என்பதால் பொறுமை இழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவில் மனிதஉரிமைகளுக்கான மதிப்பு மோசமடைந்து வருகின்றமை, மதச் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்கள், சட்டத்தின் ஆட்சி சீர்கெட்டு – ஊழல்களும் சட்டத்தின் பிடியில் குற்றவாளிகள் சிக்காததன்மையும் சிறிலங்காவின் ஜனநாயக பாரம்பரியத்தின் பெருமையை சீரழிக்கிறது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை ஏற்கமுடியாது.

எனவே சிறிலங்காவில் நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் மூன்றாவது தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டு வரும்.

அந்த தீர்மானத்தில் எந்தவகையான வாசகங்கள் இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது.

எனினும், அது சிறிலங்கா மக்களின் நட்புணர்வுடன் இசைந்து போவதாக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தெற்கு சூடானில் ராணுவ மருத்துவமனைகளில் இந்திய மருத்துவர்களின் சேவை: ஐ.நா. பாராட்டு

Posted: 02 Feb 2014 06:18 AM PST

13496003-grunge-flag-of-united-nations-image-is-overlaying-a-detailed-grungy-texture

13496003-grunge-flag-of-united-nations-image-is-overlaying-a-detailed-grungy-textureதெற்கு சூடானில் ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வரும் இந்திய மருத்துவர்களின் சேவை பாராட்டத்தக்கது என்று ஐ.நா. கூறியுள்ளது.

தெற்கு சூடானில் முகாமிட்டுள்ள ஐ.நா. அமைதிப்படை சார்பில் மலாக்கல் நகரில் இந்திய ராணுவ மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி வரை 976 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 134 முக்கிய அறுவை சிகிச்சைகளும் அடங்கும். தவிர, 23 பிரசவங்களும் பார்க்கப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

உலகின் புதிய நாடான தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் தலைமையிலான அரசுத் துருப்புகளுக்கும், முன்னாள் துணை அதிபர் ரீக் மாச்சர் தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதியிலிருந்து மோதல் நிகழ்ந்து வருகிறது.

இரு தரப்பு மோதலில் அப்பாவி மக்களும் பலியாகி வருவதைத் தடுக்கும் வகையில், ஐ.நா. அமைதிப்படை தெற்கு சூடானுக்கு அனுப்பப்பட்டது.

அங்கு அமைதிப்படையினர் முகாம் அமைத்து மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்த ஐ.நா. அமைதிப்படையில் இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த மோதலில் இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து விட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலும், 1,25,000 பேர் வெளிநாடுகளுக்கும் புலம் பெயர்ந்துள்ளனர். டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்

This posting includes an audio/video/photo media file: Download Now

50ஆவது உலகப் பாதுகாப்பு உச்சி மாநாடு : சிரியா மக்களின் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை

Posted: 02 Feb 2014 06:14 AM PST

Teaser_Opening-Gauck_Kleinschmidt_MSC2014_CI

Teaser_Opening-Gauck_Kleinschmidt_MSC2014_CIசிரியாப் போரில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் மக்கள் உயிர் இழந்ததைத் தடுக்க முடியாத நிலையிலும், உக்ரைனில் புதிய போரிற்கான சூழலைத் தடுக்க வழி தெரியாத நிலையிலும், ஜம்பதாவது உலகப் பாதுகாப்பு உச்சி மாநாடு முன்ஷனில் நடைபெறுவது அந்த மாநாட்டை சற்று அசிங்கப் படுத்துவதாக மாநாட்டின் ஒருங்கமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். சிரியாவின் கள நிலமையை முடிவிற்கு கொணர்ந்து அங்கே அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள் இதுவரையில் திருப்பங்கள் எதையும் தரவில்லயென அந்த உச்சிமாநாட்டை வழி நடத்திய பிரகிமி முன்ஷனில் தெரிவித்தார்.

ஜ-நா சபையின் பொதுச் செயலர் பன் -கீ–மூனால் முன்வைக்கப்பட்ட உக்ரைனின் பிரச்சனைத் தீர்வுக்கான உதவித் திட்டத்தை நிராகரித்து விட்டு, ஜரோப்பிய ஒன்றியத்தின் நேரடி செயல் திட்டத்தை எதிர்பார்த்த உக்ரைனின் எதிர்க்கட்சியினர் ஏமாற்றமடைந்தனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட உக்ரைன் நாட்டு அரசுருமைக்குள் தலையிடும் அதிகாரம் NATO விற்கும், ஜரோப்பிய ஒன்றியத்திற்கும் கிடையாதென பாதுகாப்பு உச்சி மாநாட்டில் குறிப்பிடப்பட்டது.

ஜேர்மன் வெளிவிவகார செயலரை சந்தித்து உரையாடிய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன்கெரி, தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்ட சம்பவத்திற்காக வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்கவில்லை. மாறாக அப் பிரச்சனை பற்றிப் தொடர்ந்து பேசுவதை, ஜேர்மன் அரசியல் நிகழ்ச்சி நிரலிலிருந்து அகற்றுவதே சிறந்ததெனக் குறிப்பிட்டுள்ளார். ஜேர்மன் அரசும் ஜரோப்பாவும் இராணுவ செலவீனத்திற்குத்  தேவையான பொருளாதார நிதியை, கணிசமாகக் குறைந்திருக்கும் நிலையில், உலகப் பாதுகாப்பு அலுவல்களில் நேரடியாக செயற்படும் சாத்தியக் கூறு குறைவாகவே உள்ளதாகவும், ஜேர்மன் துருப்புக்களின் உபகரணங்கள் நவீனத்துவப் படுத்தப் படாமல், வருடா வருடம் 900 கோடி யூரோ சேமிக்கப் படுவதாகவும் கூறி நிலவும் அரசியல் உண்மையை எடுத்துரைத்தார். ஒரு நாடு தன் பாதுகாப்பில் முறையான கரிசனை எடுக்கத் தவறுவது அந்த நாட்டின் அரசியலில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டுவதாகக் கூறித் தன் உரையை வலுப்படுத்தினார்

எதைப் பற்றியும் பேசுவது சிறந்தது, பேசியதை செய்து முடிப்பது அதைவிட சிறந்தது எனும் சீரான கொள்கையோடு இயங்கும் பண்பு ஜேர்மன் அரசியல் வட்டாரங்களில் காணபடும் விஷேச குணங்களில் ஒன்றாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தோனேசியாவில் எரிமலை குமுறல்: பள்ளி சிறுவர்கள் உள்பட 14 பேர் பலி

Posted: 02 Feb 2014 06:07 AM PST

b2a7a6b5-df53-431b-b1f3-bbe5030e07bc_S_secvpf

b2a7a6b5-df53-431b-b1f3-bbe5030e07bc_S_secvpfஇந்தோனேசியாவின் சினாபங்க் எரிமலை சனிக்கிழமை குமுறியதில் பள்ளிச் சிறுவர்கள் 4 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுகமெரியா கிராமத்தின் சாலையோரத்தில் சாம்பல்களால் மூடப்பட்ட உடல்கள் கிடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 14 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டன. சிறுவர்கள் 4 பேரும் எரிமலையை வேடிக்கை பார்க்கச் சென்றபோது அதில் சிக்கிக் கொண்டது தெரிய வந்துள்ளது.

விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

""இந்த எரிமலைச் சீற்றத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. எரிமலைக்கு அருகில் உள்ள பாதைகளில் அதிக அளவு வெப்பம் கொண்ட சாம்பல்கள் பரவிக் கிடப்பதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது" என்று தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நக்ரோஹோ தெரிவித்தார். இது, இந்தோனேசியாவில் சமீபத்தில் நிகழ்ந்த எரிமலைச் சீற்றங்களில் மிகவும் பயங்கரமானது என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிங்கள, முஸ்லிம் மக்கள் குடியேற்றத்தை அமெரிக்காவினால் தடுக்க முடியாது!- விமல் வீரவன்ஸ

Posted: 02 Feb 2014 06:00 AM PST

3107Vimal

3107Vimalஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டோரும் வடக்கில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை நிறுத்துமாறு கூறியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்றது. அப்போது வாழ்ந்த தமிழர்களை மட்டுமே கொழும்பில் குடியேற்ற வேண்டும் என்ற யோசனையை மேல் மாகாணத்தில் உள்ள எந்த சிங்கள அரசியல்வாதியும் கொண்டு வரவில்லை. 83 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை காரணமாக கொழும்பில் இருந்த தமிழர்கள் கொழும்பை விட்டு செல்ல வேண்டிய நிலைமை உருவாகியது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் விடுமுறையை வழங்கி, தமது குண்டர்களை பயன்படுத்தி தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிடுவதற்காக மக்களை தூண்டி விட்டு கறுப்பு ஜூலை என்ற பாரிய அனர்த்தம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கொழும்பில் அன்று வாழ்ந்த பெருந்தொகையான மக்கள் கொழும்பை விட்டு வெளியேறினர். 83 ஆம் ஆண்டு கொழும்பில் வாழ்ந்த எண்ணிகையிலான தமிழர்களே இங்கு வாழ வேண்டும் என எந்த அரசியல் கட்சியை சேர்ந்த சிங்கள அரசியல்வாதிகளும் கூறவில்லை. எனினும் வடக்கு மாகாண சபை 80 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் பிரகாரமே வடக்கில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இருக்க வேண்டும் எனக் கூறுகின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வடக்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் அங்கிருந்த மக்கள் தொகை என்ன என்பது தெரியாது. வடக்கில் தமிழர்கள் மட்டுமே இருக்க வேண்டும் வேறு எவரையும் குடியேற்ற கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிடோரும் கூறுகின்றனர். சிங்களவர்களை குடியேற்றவே முடியாது. முஸ்லிம் மக்கள் இருந்த எண்ணிகையை தவிர அதிகளவில் குடியேற்ற முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். வடக்கில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படுவதை அமெரிக்கா உள்ளிட்ட எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இலங்கையில் அமைதி ஏற்படுவதை விரும்பாத பல சக்திகள் உள்ளன. இந்திய வம்சாவளியான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைக்கு வந்துள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவர் , அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து விட்டு வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திக்க யாழ்ப்பாணத்திற்கு சென்றார். விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தாலும் அவர் கொழும்பைச் சேர்ந்தவர். வடக்கு மக்களின் மீதான உண்மையாக கரிசனையிலா பிஸ்வால் அங்கு செல்கிறார்?. மக்கள் இன்று பேதங்களை மறந்து ஐக்கியமாக முன்னோக்கி செல்கின்றனர். அதனை சீர்குலைக்கவே இவர்கள் இங்கு வருகின்றனர். வடக்கில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கு மக்கள் துன்பத்தை அனுபவித்த போது அமெரிக்காவின் எந்தப் பிரதிநிதியும் அங்கு செல்லவில்லை என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாவது நாட்டை காப்பாற்ற நான் தயார் – ரணில்

Posted: 02 Feb 2014 05:47 AM PST

Ranil wickramasinghe

Ranil wickramasingheவாழ்க்கை செலவு அதிகரிப்பு, கல்வி, சுகாதாரம மற்றும் சட்டத்தின் வீழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதியுடன் பகிரங்கமாக விவாதத்திற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொட்டக்கவெல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்நாட்டுக்காக  சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாவது செய்ய வேண்டிய வேலைகளை செய்து நாட்டை காப்பாற்ற தயாராக இருக்கின்றேன். நாட்டு மக்களின் பிரச்சினைகளை ராஜபக்ச அரசாங்கம் ஜெனிவா மின்சார நாற்காலி என்ற போர்வையில் புறந்தள்ளி வருகிறது. ஜனாதிபதி தயார் என்றால் அவருடன் இந்த விடயங்கள் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன். சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போகின்றனர் என்று எவராவது கூறுவார்களாக இருந்தால், அவர்களுக்காக ஆஜராக நான் தயாராக இருக்கின்றேன். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக எப்படியான தீர்மானம் கொண்டு வரப்படும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் ரோம் உடன்படிக்கையில் நான் கையெழுத்திடவில்லை என்பதால், இலங்கையில் உள்ள எவரையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது. எவ்வாறாயினும் நாட்டு மக்கள் உணரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாத ராஜபக்ச அரசாங்கம், மக்களை பாரிய மின்சார நாற்காலியில் அமர வைத்துள்ளதுடன் அவர்கள் சத்தமிடும் போது, மது அருந்துங்கள், தூளை பயன்படுத்துங்கள் என்று கூறுகிறது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிங்களவர்கள் தலையிட்டே சிறுபான்மையினர் உரிமைகளை பெறவேண்டும் !

Posted: 02 Feb 2014 05:38 AM PST

vikrama

vikramaஇலங்கையின் சிறுபான்மையினர் சுயநிர்ணய உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடி வந்தனர் எனவும் அதனை பெற்றுக் கொடுக்கவும் முன்னோக்கி கொண்டு செல்லும் சிங்கள சமூகம் தலையிட வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபான்மை மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுக்க சிங்கள சமூகம் தலையிடுவதன் ஊடாக உண்மையான சமாதானத்தை உலகத்திற்கு காட்ட முடியும். நாங்கள் பாரிய அர்ப்பணிப்புகளை செய்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களின் ஐக்கிய கூட்டணியை கட்டியெழுப்பி உள்ளோம். இதன் மூலம் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். 1920 ஆம் ஆண்டுகளில் சிலோன் காங்கிரஸ் என்ற ஐக்கிய கூட்டணி கட்டியெழுப்பட்டது. எனினும் அதில் இருந்த சில தமிழ் தலைவர்கள் விலகி சென்றனர். சிங்களவர்கள் சிங்கள இனம் பற்றி மட்டுமே பேசிதால் அன்று அருணாச்சலம் அந்த கூட்டணியை விட்டு வெளியேறினார். வரலாறு முழுவதும் சிங்களவர்கள் சிங்களவர்களை பற்றி மட்டுமே பேசி வந்ததால், இனப்பிரச்சினை ஏற்பட்டது. இந்த தவறை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™