Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சூதாட்டத்தில் தொடர்புடைய வீரர்கள் யார்?

Posted: 11 Feb 2014 06:51 AM PST

6வது ஐபிஎல் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் 6 இந்திய வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முகுல் கமிட்டி அறிக்கையில் கூறியிருப்பதாவது, வீரர்களுக்கும், சூதாட்ட தரகர்களுக்கும் இடையே நடந்த பேரம் தொடர்பான […]

யுவராஜ் உள்ளே! இஷாந்த் சர்மா வெளியே

Posted: 11 Feb 2014 06:50 AM PST

dhoni_esanthsharma_002

dhoni_esanthsharma_002ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 25ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை நடைபெறுகிறது. அதேபோல 20 ஓவர் உலக கோப்பை போட்டி மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரையிலும் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான இந்திய அணி பெங்களூருவில் இன்று அறிவிக்கப்பட்டது. 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார், மேலும் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து ரெய்னா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய கோப்பை அணி

டோணி (அணித்தலைவர்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கோலி, புஜாரா, அம்பதி ராயுடு, ரஹானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது சமி, வருண் ஆரோன், ஸ்டூவட் பின்னி, அமீத் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே.

20 ஓவர் உலக கோப்பை அணி

டோணி (அணித்தலைவர்), தவான், ரோகித் சர்மா, வீராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரஹானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது சமி, வருண் ஆரோன், ஸ்டூவட் பின்னி, அமீத் மிஸ்ரா, மோகித் சர்மா.

This posting includes an audio/video/photo media file: Download Now

இதைப் பார்த்தால் ஊருக்கே சிரிப்பு வரும் ஆனால் இவங்களுக்கு மட்டும் ஏன் சிரிப்பே வரல……

Posted: 11 Feb 2014 06:48 AM PST

sricha_pochu_001.w245

sricha_pochu_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இணையத்தை ஆக்கிரமித்து வரும் தாய், மகனின் கலக்கல் நடனம்……

Posted: 11 Feb 2014 06:47 AM PST

mum_son_001.w245

mum_son_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னா ஒரு வில்லத்தனம் பாருங்க இவருக்கு……

Posted: 11 Feb 2014 06:45 AM PST

plane_man_001.w245

plane_man_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படி கூட ரோடு போடலாமா?……

Posted: 11 Feb 2014 06:44 AM PST

road_make_001.w245

road_make_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆவேசமாக சண்டையிடம் பாம்புகளின் மிக அரிதான காட்சி…….

Posted: 11 Feb 2014 06:43 AM PST

snake_fight_001.w245

snake_fight_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏன்டா! இப்படி ஒரு மனுசனை சாவடிக்கிறீங்க…. தைரியமிருந்தால் பாருங்க!…

Posted: 11 Feb 2014 06:42 AM PST

funny_game_001.w245

funny_game_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

DragonBox Pyra எனும் புதிய ஹேமிங் சாதனம் அறிமுகம்

Posted: 11 Feb 2014 06:40 AM PST

தொழில்நுட்ப வளர்ச்சியானது ஹேம் துறையையும் வெகுவாக ஆக்கிரமித்து வருகின்றது. இதன் பயனாக தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய DragonBox Pyra எனும் புதிய ஹேமிங் சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. 5 அங்குல தொடுதிரையினை உடைய இச்சாதனமானது 1.7GHz வேகம் கொண்ட ARM Cortex-A15 Processor, பிரதான நினைவகமாக 2 GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 140 x 84 x 29 mm அளவுடைய இச்சாதனத்தில் 4200mAh கொண்ட சார்ஜர் மின்கலம், புளூடூத் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

iPhone 6 இன் அம்சங்களை வெளிப்படுத்தும் வீடியோ வெளியீடு

Posted: 11 Feb 2014 06:38 AM PST

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கைப்பேசியாக iPhone 6 காணப்படுகின்றது. இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைப்பேசி தொடர்பான தகவல்கள் கடந்த வாரங்களிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது இக்கைப்பேசியின் அம்சங்களை வெளிப்படுத்தக்கூடிய முப்பரிமாண (3D) வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர 5 அங்குல அளவுடைய தொடுதிரையைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதோடு, இதன் திரையில் சோலார் மூலம் மின்கலத்தை சார்ஜ் செய்யும் வசதியும் காணப்படுவதாக தகவல்கள் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

வயதானவர்களுக்கான ஜப்பானின் அபார கண்டுபிடிப்பு

Posted: 11 Feb 2014 06:36 AM PST

அதி கூடிய வயதானவர்களைக் கொண்டுள்ள ஜப்பான் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக உலகெங்கும் உள்ள வயதானவர்களுக்கு பயன்படக்கூடிய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது முதியவர்கள் பயன்படுத்தும் Diaper துண்டினை அடிக்கடி மாற்றம் செய்ய வேண்டிய நிலை காணப்படுவதனால் அவர்கள் பிறரின் உதவியை நாட வேண்டி இருந்தது. ஆனால் ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று மீள்தன்மை கொண்டதும், குறித்த கால இடைவெளியில் மாற்றம் செய்வதற்கனா சமிக்ஞையை வழங்கக்கூடிய மின்சுற்றைக் கொண்டதுமான நவீன Diaper துண்டினை […]

This posting includes an audio/video/photo media file: Download Now

முன்னாள் கணவரின் காதை கிழித்த மனைவி

Posted: 11 Feb 2014 06:35 AM PST

பிரிட்டனில் நன்றாக தூங்கி கொண்டிருந்த முன்னாள் கணவரின் காதை கிழித்த மனைவி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரிட்டனின் குளூசெஸ்டர்ஷயர் பகுதியில் உள்ள சின்டர்போர்டில் வசிப்பவர் ஜூலி ஆன் இவான்ஸ், இவரது மாஜி கணவர் ஜேம்ஸ் இவான்ஸ். விவாகரத்தான இவர்கள், ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ஜேம்ஸ் வீட்டில் இருப்பதை விரும்பாத ஜூலி, அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். ஆனால் ஜேம்ஸ் வெளியே செல்லவில்லை, எனவே ஆத்திரமடைந்த ஜூலி தூங்கிக் கொண்டிருந்த ஜேம்சின் மீது தண்ணீரை ஊற்றியுள்ளார். […]

This posting includes an audio/video/photo media file: Download Now

மெக்சிகோ பொலிசாரின் சாதனை

Posted: 11 Feb 2014 06:30 AM PST

மெக்சிகோவின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னனை பொலிசார் கைது செய்துள்ளனர். மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக அதிகளவான போதைப்பொருட்கள் அமெரிக்காவுக்கு கடத்தப்படுகின்றன. இதில் மெக்சிகோவை சேர்ந்த மார்டினாஸ் சான்ஷேஸ் என்பவன் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டான், இவனது தலைமையில் பெரிய கூட்டமே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது. கடந்த 2000- 2003ம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் சுமார் 76 டன் போதைப்பொருளை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தல் மன்னனை பிடித்துக் கொடுத்தாலோ, அவனைப் பற்றி […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இரத்த வெள்ளத்தில் மிதந்த தம்பதியினர்

Posted: 11 Feb 2014 06:29 AM PST

canadian_couple_murdered_002

canadian_couple_murdered_002கனடாவை சேர்ந்த தம்பதியினர் மெக்சிகோவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் ஓய்வு பெற்ற வெளிநாட்டவர்கள் தங்கும் மிக பிரபலமான இடத்தின் வீடொன்றில் நீனா டிஸ்கொம்பே(72) எட்வேட் குலார்(84) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வார இறுதிநாட்களில் இத்தம்பதியினர் மர்ம நபர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டனர் என மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்களது வீடு சூறையாடப்பட்டதுடன், கார்களும் களவாடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தோட்டக்காரனால் தகவலளிக்கப்பட்டு, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இவர்களை அடையாளம் காட்டியுள்ளனர் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அரசு வழக்கறிஞர்கள் மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கனடிய அரசாங்கம், இது ஒரு நாடு தழுவிய ஆலோசனை இல்லை என்றாலும் மெக்சிக்கோவிற்கு பயணம் மேற்கொள்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பயணிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி ஒபாமா- பிரபல பாடகி காதல்!

Posted: 11 Feb 2014 06:26 AM PST

obama_beyonce_002

obama_beyonce_002அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவும், பிரபல பொப் பாடகி பியான்சும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்துக்கும், நடிகை ஜூலியட் கேயட்டுக்கும் இடையேயான ரகசிய உறவுகள் அம்பலமாகின.

இந்நிலையில் பிரெஞ்சு போட்டோகிராபர் வெளியிட்டுள்ள படங்களை வைத்து பிரெஞ்ச் மீடியாக்கள் ஒபாமாவுக்கும் பியானஸ்க்கும் இடையே காதல் என வதந்தியை கிளப்பி உள்ளன.

அமெரிக்க செய்தி நிறுவனமும் இதேபோன்றதொரு செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒபாமாவுக்கும், பியாயோன்சுக்கும் இடையே 20 வருட வயது வித்தியாசம் உள்ளது.

ஒபாமாவும் அவரது மனைவி மிக்ஷேல் ஒபாமாவும் தங்களது 21வது திருமண நாளை சமீபத்தில் தான் வெகு சிறப்பாக கொண்டாடினர், இந்த விழாவில் பியாயோன்சும் கலந்து கொண்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் நெல்சன் மண்டேலாவின் மகள் : உரிமை கோரும் பெண்

Posted: 11 Feb 2014 06:22 AM PST

மறைந்த முன்னாள் ஜனாதிபதி மண்டேலாவின் மகள்கள் என இரண்டு பெண்கள் உரிமை கொண்டாடியுள்ளனர். தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி மரணமடைந்தார். இவரது உயில் சமீபத்தில் வெளியிடப்பட்டது, இதில் தனது சொத்துக்களை வாரிசுகள், உதவியாளர்கள் மற்றும் கட்சிக்காக எழுதி வைத்துள்ளார். இதன்படி மண்டேலாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர், இதில் 3 பேர் இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது மகள்கள் என உயிலில் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படாத 2 பெண்கள் உரிமை […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறு பறவைகளை காவெடுத்த ராட்சத புயல்

Posted: 11 Feb 2014 06:18 AM PST

பிரான்ஸில் வீசிய கடும் புயலால் ஆயிரக்கணக்கான பறவைகள் பரிதாபமாக உயிரிழந்தன. பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக அதிகளவில் புயல் வீசி வருகின்றது. பிரான்ஸில் கடந்த 15 நாட்களாக வீசிய கடும் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், 55,000 வீடுகள் இருளில் மூழ்கின. இந்நிலையில் பப்பிம், கியுல்மோட்ஸ்,ரேசர்பில்ஸ் மற்றும் கிட்டிவேக்ஸ் போன்ற 5,000 க்கும் மேற்பட்ட சிறிய இனப்பறவைகள் இறந்துள்ளன. இதுகுறித்து தேசிய பறவை பாதுகாப்பு லீக்(National Bird Protection League) கூறுகையில், இப்புயலானது பாதிப்பின் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரித்தானியாவில் தேம்ஸ் நதி உடைந்தது! ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

Posted: 11 Feb 2014 06:17 AM PST

பிரித்தானியாவில் பெய்து வரும் கனமழையால் தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மிகப்பெரிய தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதைத்தொடர்ந்து கரையோரம் இருக்கும் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டிருப்பதால், தேம்ஸ் நதியின் சில கரைகள் உடைந்து விட்டன. இதனால் லண்டன் அருகேயுள்ள பெர்க்ஷர், சுர்கி ஆகிய நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்தது, அவை மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவ அப்பகுதியில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கு முதல்வர் உரை; ஜனாதிபதி விசாரணை

Posted: 11 Feb 2014 06:12 AM PST

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வரணி மகாவித்தியாலயத்தில் நிகழ்த்திய உரை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவினால் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது. 'கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம்.சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் ஹுசைன்,பாகிஸ்தானின் முஷாரப் ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்' என்று முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­வை […]

மன்னார் நகரப் பகுதியில் பல அபிவிருத்திப் பணிகள்

Posted: 11 Feb 2014 06:10 AM PST

நகர சபை உறுப்பினர் தெரிவிப்பு எதிர்காலத்தில் மன்னார் நகர சபையினால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார் மன்னார் நகரசபையின் ஆளும்கட்சி உறுப்பின ரான இரட்ணசிங்கம் குமரேஸ். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; மன்னார் நகரசபை பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப் பாக போருக்குப் பின்னரான இந்தக் காலப் பகுதியில் நீண்ட காலத்துக்குப் பின்னர் மன் னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படத் தொடங்கியுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™