மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- துண்டுதுண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: காதலை எதிர்த்த பெண் வீட்டாரின் வெறிச்செயல்
- கொல்கத்தாவில் நாளை நரேந்திர மோடி கூட்டம்: 7 லட்சம் தொண்டர்கள் குவிகிறார்கள்
- அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை: நடத்தை விதிகளை கடுமையாக்க முடிவு
- திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்
- கெஜ்ரிவால் வழியில் ராஜஸ்தானில் பழைய பஸ்கள் ஏழைகளின் இரவு வீடாகிறது: முதல்–மந்திரி வசுந்தரா திட்டம்
- டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கு குற்றவாளிகள் மீது ஜெயில் அதிகாரிகள் தாக்குதல்: உறவினர்கள் உண்ணாவிரதம்
- தேர்தல் முடிந்த பிறகு 3-வது அணி ஆட்சி அமைத்தால் நான் பிரதமர் ஆவேன்: முலாயம்சிங் யாதவ்
- புனே அருகே லாரி மோதி பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பயணிகள் பலி
- நரேந்திர மோடி மீதான தாக்குதல் காங்கிரசின் தோல்வியை காட்டுகிறது: நிர்மலா சீத்தாராமன்
- சட்டவிரோத காலனிக்கு அனுமதி அளித்தது எப்படி?, ஏன்? என்று ஷீலா தீட்சித்தை விசாரிக்க ஜனாதிபதிக்கு கெஜ்ரிவால் கடிதம்
- வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது: ப.சிதம்பரம் பேட்டி
- உ.பி.யின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் கலவரத்தை பா.ஜ.க. தூண்டியது: முலாயம் சிங்
- ஜெர்மனி அதிபர் இன்று ஆறு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை
- மதநல்லிணக்கதுடன் வாழ இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்: சீனாவிற்கு தலாய்லாமா அறிவுறுத்தல்
- டெல்லி மாநில அமைச்சரவை ஜன் லோக்பால் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது
- மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது: பயணிகள் பத்திரமாக மீட்பு
- பீகாரில் காவலாளியை கொன்று ரூ.50 லட்சம் வங்கிப்பணம் கொள்ளை
- கடந்த மூன்று வருடங்களில் 2 லட்சம் கண்டுபிடிப்புகள்: ஜெய்பால் ரெட்டி பெருமிதம்
- இரண்டு வார தடைக்குப் பின்னர் ஸ்ரீநகர்-முசாபர்பாத் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
- காதலியின் தந்தை மீது ஆசிட் வீசிய வாலிபர் கைது
| துண்டுதுண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: காதலை எதிர்த்த பெண் வீட்டாரின் வெறிச்செயல் Posted: 03 Feb 2014 09:44 PM PST மகளின் காதலால் குடும்ப கவுரவம் பாழாகி விடும் என்று நினைத்து அவள் காதலித்த வாலிபரை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், பஸ்தி மாவட்டத்தில் உள்ள சடவுனா கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (20) பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை உயிருக்குயிராக காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் |
| கொல்கத்தாவில் நாளை நரேந்திர மோடி கூட்டம்: 7 லட்சம் தொண்டர்கள் குவிகிறார்கள் Posted: 03 Feb 2014 09:26 PM PST பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். நாளை (5–ந் தேதி) அவர் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்துக்கு 7 லட்சம் தொண்டர்களை திரட்டும் வகையில் மாநில பாரதீய ஜனதா விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணி வகுப்பு மைதானத்தில் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த மைதானத்தில் முதல்–மந்திரி மம்தாபானர்ஜி |
| அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை: நடத்தை விதிகளை கடுமையாக்க முடிவு Posted: 03 Feb 2014 09:09 PM PST பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் மே மாதம் 31–ந்தேதியுடன் முடிகிறது. இதனால் பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல் – மே மாதங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை நியாயமாகவும் சுமூகமாகவும் நடத்தி முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை |
| திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Posted: 03 Feb 2014 08:49 PM PST கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கல்பத்தை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லீலெட் (வயது 19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 2003–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது. 2004 ஜனவரியில் திருமணம் |
| கெஜ்ரிவால் வழியில் ராஜஸ்தானில் பழைய பஸ்கள் ஏழைகளின் இரவு வீடாகிறது: முதல்–மந்திரி வசுந்தரா திட்டம் Posted: 03 Feb 2014 08:43 PM PST டெல்லி குடிசைப் பகுதியில் வசிக்கும் ஏழைகள் நிறையப் பேர் இரவில் தூங்குவதற்கு கூட இடம் இல்லாத நிலையில் தெரு ஓரங்களில் சாலையில் படுத்து தூங்குகிறார்கள். அவர்களுக்கு இடம் கொடுக்கப்படும் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் |
| டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கு குற்றவாளிகள் மீது ஜெயில் அதிகாரிகள் தாக்குதல்: உறவினர்கள் உண்ணாவிரதம் Posted: 03 Feb 2014 08:42 PM PST கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி புரட்சிகர கம்யூனிஸ்டு என்ற கட்சியை தொடங்கியவர் டி.பி.சந்திரசேகரன். இதனால் அவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதலில் கடந்த 2002–ம் ஆண்டு டி.பி.சந்திரசேகரன் படுகொலை செய்யப்பட்டார். |
| தேர்தல் முடிந்த பிறகு 3-வது அணி ஆட்சி அமைத்தால் நான் பிரதமர் ஆவேன்: முலாயம்சிங் யாதவ் Posted: 03 Feb 2014 08:27 PM PST உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள கோண்டா நகரில் சமாஜ்வாதி கட்சியின் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு காங்கிரஸ், பா.ஜ.க. அணிகளில் இல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து 3–வது அணியாக ஆட்சி அமைக்கும். 3–வது அணியில் சமாஜ்வாதி கட்சி இடம் பெறாமல் நிச்சயமாக ஆட்சி அமையாது. |
| புனே அருகே லாரி மோதி பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பயணிகள் பலி Posted: 03 Feb 2014 07:58 PM PST மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரில் இருந்து நேற்றிரவு ஒரு தனியார் பேருந்து பயணிகளுடன் புனே- பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. மேற்கு மலைத் தொடர்ச்சியை ஒட்டியுள்ள கோடைவாச ஸ்தலமான கண்டாலா அருகே பின்புறத்தில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி அந்த பஸ்சை முந்திச் செல்ல முயன்ற போது அந்த லாரி பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர் |
| நரேந்திர மோடி மீதான தாக்குதல் காங்கிரசின் தோல்வியை காட்டுகிறது: நிர்மலா சீத்தாராமன் Posted: 03 Feb 2014 07:17 PM PST காங்கிரஸ் கட்சி, எவ்வித யோசனையுமின்றி குஜராத் அரசு மற்றும் நரேந்திர மோடியை கண்மூடித்தனமாக தாக்குவதிலேயே குறியாக இருக்கிறது. இது காங்கிரஸ் கட்சியின் தோல்வியை வெளிச்சம்போட்டு காட்டுவதாகவே அமைந்துள்ளது. வறுமைக்கோட்டு நிலையை நிர்ணயிப்பது மத்திய அரசின் வேலையாகும். குஜராத் அரசு இதனை நிர்ணயிக்கவில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது குறித்து குஜராத் மாநில அரசு, 2004-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசுக்கு எழுதிய எந்தக் கடிதத்துக்கும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. |
| Posted: 03 Feb 2014 01:38 PM PST டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், கடந்த 2008-ம் ஆண்டு அரசியல் லாபம் பெறும் நோக்கில் கிட்டத்தட்ட 1000 காலனி வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கினார். 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சட்டவிரோதமாக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று லோக் ஆயுக்தா நீதிபதி ஷீலா தீட்சித் மீது கடந்த நவம்பர் மாதம் குற்றம் சாட்டினார். |
| வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது: ப.சிதம்பரம் பேட்டி Posted: 03 Feb 2014 01:22 PM PST வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். இந்த பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால், புதிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வது வரையிலான மாதங்களுக்கு |
| உ.பி.யின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் கலவரத்தை பா.ஜ.க. தூண்டியது: முலாயம் சிங் Posted: 03 Feb 2014 12:46 PM PST மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கி பேசிவருகின்றனர். இந்நிலையில் கோண்டாவில் ' நாட்டை காப்பாற்றுவோம் - நாட்டை அமைப்போம் ' என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சமாஜ்வாதி கட்சி்த்தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் பேசினார். |
| ஜெர்மனி அதிபர் இன்று ஆறு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை Posted: 03 Feb 2014 11:01 AM PST ஜெர்மனி அதிபர் ஜோச்சிம் குவாக் இன்று ஆறு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர்கள் இங்கு தலைவர்களை சந்தித்து பேசவுள்ளனர். இதுகுறித்து இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெயினர் கூறியதாவது:- |
| மதநல்லிணக்கதுடன் வாழ இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்: சீனாவிற்கு தலாய்லாமா அறிவுறுத்தல் Posted: 03 Feb 2014 10:28 AM PST 1951-ம் ஆண்டு திபெத்தை சீன ஆக்கிரமித்து கொண்டது. இதையடுத்து திபெத் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. பின்னர் திபெத்தை ஆட்சி செய்த புத்த மதத்தலைவர் தலாய்லாமா, 1959-ம் ஆண்டு இந்தியாவின் தர்மசாலா பகுதிக்கு வந்து அடைக்கலமானார். |
| டெல்லி மாநில அமைச்சரவை ஜன் லோக்பால் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது Posted: 03 Feb 2014 08:34 AM PST டெல்லி மாநில அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி மாநிலத்தில் அமுல்படுத்த ஒப்புதல் |
| மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது: பயணிகள் பத்திரமாக மீட்பு Posted: 03 Feb 2014 07:46 AM PST குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் பயணிகள் விமானம் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தது. |
| பீகாரில் காவலாளியை கொன்று ரூ.50 லட்சம் வங்கிப்பணம் கொள்ளை Posted: 03 Feb 2014 07:39 AM PST பீகார் மாநிலம் பெகுசாராயில் யூகோ வங்கியின் பிரதான கிளையில் இருந்து, ரூ.50 லட்சம் பணத்தை சாவுராகி கிளைக்கு ஊழியர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் வந்த வேன், வங்கியை நெருங்கியபோது பின்தொடர்ந்து |
| கடந்த மூன்று வருடங்களில் 2 லட்சம் கண்டுபிடிப்புகள்: ஜெய்பால் ரெட்டி பெருமிதம் Posted: 03 Feb 2014 06:55 AM PST ஜம்முவில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜெய்பால் ரெட்டி பேசியதாவது:- |
| இரண்டு வார தடைக்குப் பின்னர் ஸ்ரீநகர்-முசாபர்பாத் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது Posted: 03 Feb 2014 06:05 AM PST இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிக்கும் இடையில் உள்ளது எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியாகும். கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி ஏற்பட்ட |
| காதலியின் தந்தை மீது ஆசிட் வீசிய வாலிபர் கைது Posted: 03 Feb 2014 05:58 AM PST உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள காக்ரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை யோகேஷ் என்ற வாலிபர் காதலித்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |