Tamil Star |
- இதுல எதாவது வித்தியாசம் தெரியுதா?…
- இப்படி ஒரு ரிஸ்க் தேவைதானா?….
- இடைவிடாமல் சிரிக்கவும், சிந்திக்கவும் இந்த சிறுவனின் பேச்சை மிஸ் பண்ணிடாதீங்க….
- பூனையிடமிருந்து நாயை காப்பாற்ற போராடும் பெண்…. எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா?.
- முஸ்லிம் இளைஞர்கள் பிரிட்டனை தாக்கலாம்!
- என்னவிலை கொடுத்தாலும் கிடைக்காத “அம்மாவின் பாசம்”
- வடமாகாணத்தில் பிரபல பாடசாலைகளை அழிப்பதற்குத் திட்டம்!
- சர்வதேசத்திடம் செல்லவேண்டிய நிலையை அரசாங்கமே உருவாக்கியது: த.தே.கூ
| இதுல எதாவது வித்தியாசம் தெரியுதா?… Posted: 26 Jan 2014 08:10 AM PST |
| Posted: 26 Jan 2014 07:59 AM PST |
| இடைவிடாமல் சிரிக்கவும், சிந்திக்கவும் இந்த சிறுவனின் பேச்சை மிஸ் பண்ணிடாதீங்க…. Posted: 26 Jan 2014 07:41 AM PST |
| பூனையிடமிருந்து நாயை காப்பாற்ற போராடும் பெண்…. எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா?. Posted: 26 Jan 2014 07:24 AM PST |
| முஸ்லிம் இளைஞர்கள் பிரிட்டனை தாக்கலாம்! Posted: 26 Jan 2014 06:05 AM PST சிரியாவுக்கு செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் பிரிட்டனில் வந்து தாக்குதல் நடத்தக்கூடும் என அதிகாரி ஒருவர் அச்சம் வெளியிட்டுள்ளார். சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சிரியாவில் போராடுவதற்காக பிரிட்டனிலிருந்து செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியதும், பிரிட்டனிலும் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக் கூடும் என்று முன்னணி பிரிட்டிஷ் முஸ்லிம் விவகார அவதானி மொஹமட் அன்சார் […] |
| என்னவிலை கொடுத்தாலும் கிடைக்காத “அம்மாவின் பாசம்” Posted: 26 Jan 2014 05:58 AM PST தள்ளாத வயதிலும், படுத்தபடுக்கையாய் கிடக்கும் மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறார் சீனாவை சேர்ந்த மூதாட்டி. கிழக்கு சீனாவின் அன்ஹீய் மாகாணத்தில் வசிப்பவர் 98 வயது மூதாட்டி ஸ்ழாங். இவரது 60 வயது மகன், கடந்த 20 ஆண்டுகளாக பக்கவாத நோயால்(பெரலைஸிஸ்) பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாக கிடக்கிறார். இத்தனை ஆண்டுகளாகவும் தாயன்பு என்ற உன்னத மந்திரம் மட்டும் தான் அவரை வாழ வைத்து வருகிறது. மகனுக்கு உணவு ஊட்டுவது, அவரது மல-ஜலத்தை துடைத்து சுத்தம் செய்வது என இந்த […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடமாகாணத்தில் பிரபல பாடசாலைகளை அழிப்பதற்குத் திட்டம்! Posted: 26 Jan 2014 05:37 AM PST வடக்கு மாகாணத்தின் கல்விநிலை சற்று உயரத் தொடங்கியுள்ளது. இதனை ஏற்றக்கொள்ள முடியாத சில விசமிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் பிரபல பாடசாலைகளை அழிப்பதற்கு சுற்று நிருபங்களைக்கூட தவறாகப் பயன்படுத்துவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரி மிகவும் புகழ் பூத்த கல்லூரி. இதுவொரு 1AB பாடசாலையாகும். இதற்கு அதிபராக நியமனம் பெறுபவர் கல்வி நிர்வாக சேவையைச் சார்ந்தவராகவும், அதிபர் சேவைத் தரம்:1இல் உள்ளவராகவும் இருக்க […] |
| சர்வதேசத்திடம் செல்லவேண்டிய நிலையை அரசாங்கமே உருவாக்கியது: த.தே.கூ Posted: 26 Jan 2014 05:33 AM PST
'2011ஆம் ஆண்டுக்குப் பின்னரிலிருந்து இதுவரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 18 தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இருப்பினும் எந்தவிட தீர்வும் எட்டப்படவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு, திருப்பளுகாமம் இந்து கலாமன்றத்தின் 35ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'இலங்கை பிரச்சினையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏன் சர்வதேசத்துக்கு கொண்டு சென்றது என்றும் அவ்வாறு சர்வதேசத்திடம் செல்வதால் எவ்வித பயனும் கிட்டப்போவதில்லை என்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர்' என்று குறிப்பிட்டார். 'நாம், தீர்வு தேடி சர்வதேசத்திடம் போகவில்லை. அவ்வாறு போக வேண்டிய நிலைமையை அரசாங்கமே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உருவாக்கிவிட்டது' என்றும் அவர் கூறினார். 'இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கடந்த 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசாங்கத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. குறிப்பாக 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 18 தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த சந்திப்புக்களில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா தலைமையில் கூட்டமைப்பிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 14 பேரில் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இருப்பினும், இந்த பிரச்சினைக்கு இதுவரையில் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. அதனாலேயே சர்வதேசத்திடம் செல்ல வேண்டிய நிலை உருவாகியது' என்று அரியநேத்திரன் எம்.பி மேலும் கூறினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கருத்து தெரிவிக்கையில், 'நாங்கள் கேட்பது அதிகாரப் பரவலாக்களே தவிர வேறு எதனையும் நாம் கேட்கவில்லை. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் அரசாங்கம் இன்னமும் தீர்வு பெற்றுக்கொடுக்காமல் காலத்தை இழுத்தடித்துக்கொண்டே இருக்கின்றது' என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





