Tamil Star |
- அத்துமீறும் போர் விமானங்கள்: சீனா கடும் எச்சரிக்கை
- அனைவரையும் வாய் பிளக்க வைத்த சாப்பாட்டு ராமன்
- மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மரணதண்டனை! பாகிஸ்தானில் கொடூரம்
- சிஎன்என்-னின் சமூக வலைத்தளங்களில் ஹேக்கர்கள் ஊடுருவல்
- கடவுள் தந்த பரிசு “இன்டர்நெட்”
- படையினர் மூலம் சிங்களவர்களின் சனத்தொகையை அதிகரிக்கும் கோத்தாவின் திட்டம் வெற்றி
- அனந்தி சசிதரனை அமெரிக்க தூதுவர் சிசன் யாழில் சந்தித்து பேச்சு!
- மன்னார் மனித புதைகுழி: சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம்
- ராதிகாவின் இலங்கை பயணத்தை மல்கெயார் நியாயப்படுத்தியுள்ளார்!
- `ஒன்றாரியோ பிரதமர் விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்பு முக்கியஸ்தரை சந்தித்தார்!
- ஆஸி பிரதமர் பயணித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கொழும்பில் தரையிறக்கப்பட்டது
- ஜெனிவா அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக சிரியா அச்சுறுத்தல்
- இலங்கைக்கு வந்து உடனடியாக திரும்பி சென்ற ஆஸி. பிரதமர்
- கனடாவில் தீ விபத்து! ஐவர் பலி
- நரியை பாசமாக வளர்த்து வரும் தம்பதியினர்
- பின்லேடனை காட்டிக் கொடுத்தவருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும்: பாகிஸ்தான்
- நீதிமன்ற வளாகத்தில் இரட்டை கொலை
- புதிய கோணத்தில் ஆண் பெண் உறவுகள்
- 6 பேரை காப்பாற்றிய சிறுவன் தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்
- பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட காரணம்
| அத்துமீறும் போர் விமானங்கள்: சீனா கடும் எச்சரிக்கை Posted: 24 Jan 2014 11:36 PM PST தென் சீனக் கடலில் உள்ள குடியேற்றமில்லாத தீவுகளின் உரிமைப் பிரச்சினை உட்பட ஜப்பான் தனது அண்டை நாடுகளான சீனா, தென் கொரியா ஆகியவற்றுடன் தொடர்ந்து எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டுவருகின்றது. கடற்பரப்பு எல்லைகளிலும் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் உரிமை மீறல் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் கிழக்கு சீனக் கடலில் தனது பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய சீனா அந்த பகுதியின் மேலே பிற நாட்டு ராணுவ விமானங்கள் பறப்பதற்குத் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அனைவரையும் வாய் பிளக்க வைத்த சாப்பாட்டு ராமன் Posted: 24 Jan 2014 11:26 PM PST சீனாவில் 15 நிமிடத்திலேயே 40 பிளேட் நூடுல்ஸை சாப்பிட்டு நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். மத்திய சீனாவில் ஹுனான் மாகாணத்தின் லியூயங் என்ற பகுதியை சேர்ந்தவர் பான்யிஷ்காங்(வயது 45). இவர் வசிக்கும் அதே பகுதியில் உள்ள குங்பு பள்ளி ஒன்றில் 'நூடுல்ஸ்' சாப்படும் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆனால், போட்டி தொடங்கிய 15 நிமிடத்தில் பான்யிஷ்காங், 40 பிளேட் நூடுல்ஸ் சாப்பிட்டு முடித்ததுடன் "Big Stomach King" என்ற பட்டத்தையும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மரணதண்டனை! பாகிஸ்தானில் கொடூரம் Posted: 24 Jan 2014 11:17 PM PST பாகிஸ்தானில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் வாழ் இங்கிலாந்து நாட்டவரான முகமது அஸ்கர், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கடிதம் எழுதியதாக கடந்த 2010ம் ஆண்டு ராவல்பிண்டியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணையின் போது, அஸ்கர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், உண்மையில் இவ்வழக்கு சொத்து பிரச்சினை தொடர்பானது என்றும் அவரது வழக்கறிஞர் வாதாடினார். இங்கிலாந்து மருத்துவமனை மருத்துவருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அஸ்கர் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிஎன்என்-னின் சமூக வலைத்தளங்களில் ஹேக்கர்கள் ஊடுருவல் Posted: 24 Jan 2014 11:12 PM PST
சிஎன்என் நிறுவனத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களில் அத்துமீறி நுழைந்த 'சிரியன் எலக்ட்ரானிக் ஆர்மி' பெயரிலான ஹேக்கர்கள், சில தவறான தகவல்களைப் பதிவு செய்தனர். "பொய் சொல்வதை நிறுத்துங்கள். உங்களின் செய்திகள் அனைத்தும் பொய்யானவை" என்று அவர்கள் பதிவிட்டனர். பின்னர், அப்பதிவுகள் உடனடியாக நீக்கிய சிஎன்என் நிறுவனம், தற்போது தங்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியிட்டது. சிரியாவுக்கு எதிரான செய்திகளைத் தொடர்ந்து சிஎன்என் நிறுவனம் வெளியிட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, சிரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் இந்த இணையதள அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடவுள் தந்த பரிசு “இன்டர்நெட்” Posted: 24 Jan 2014 10:55 PM PST உலகத்தையே குடும்பமாக மாற்றியுள்ள இன்டர்நெட் கடவுள் தந்த பரிசு என பாராட்டியுள்ளார் போப் பிரான்சிஸ். கத்தோலிக்க தேவாலயங்களில் கடந்த 1967ம் ஆண்டு முதல் உலக தொலைதொடர்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள தகவலில், இண்டர்நெட் என்பது கடவுளின் பரிசு, அதன் மூலம் உலகமே ஒரு குடும்பம் போல் உருவாகிறது. ஆனால் அதை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது சாத்தானின் வேலை. இவற்றை மக்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள், ஒருவரையொருவர் திட்டிக் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| படையினர் மூலம் சிங்களவர்களின் சனத்தொகையை அதிகரிக்கும் கோத்தாவின் திட்டம் வெற்றி Posted: 24 Jan 2014 08:55 PM PST சிங்களவர்களின் சனத்தொகையை உயர்த்தும் நோக்கில், சிறிலங்கா படையினர் மூன்றாவது குழந்தையை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் ஒரே ஆண்டில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மூன்றாவது குழந்தையைப் பெறும் சிறிலங்கா படையினருக்கு ஒரு இலட்சம் ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் திட்டம் 2012ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த வரவுசெலவுத் திட்ட முன்மொழிவில் இடம்பெற்றிருந்தது. இதற்கு நாடாளுமன்றம் அனுமதியளித்ததை அடுத்து, கடந்த ஆண்டு உடனடியாகவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் […] |
| அனந்தி சசிதரனை அமெரிக்க தூதுவர் சிசன் யாழில் சந்தித்து பேச்சு! Posted: 24 Jan 2014 08:34 PM PST வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், அனந்தியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் உள்ள மார்கோசா விடுதியில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராப்போசன விருந்துடன் நடந்த இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் […] |
| மன்னார் மனித புதைகுழி: சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம் Posted: 24 Jan 2014 07:54 PM PST மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான விவகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி பகுதிக்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தனர். முதற்கட்டமாக குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலகர் மற்றும் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர். மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 13ஆவது தடவையாக இன்று வெள்ளிக்கிழமை (24) குறித்த மனித புதைகுழி தோண்டும் […] |
| ராதிகாவின் இலங்கை பயணத்தை மல்கெயார் நியாயப்படுத்தியுள்ளார்! Posted: 24 Jan 2014 07:31 PM PST கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இலங்கைக்கு சென்று வந்த விடயத்தை என்டிபி கட்சியின் தலைவர் டொம் மல்கெயர் நியாயப்படுத்தியுள்ளார் ராதிகா தமது இலங்கை பயணத்தின்போது இலங்கை அரசாங்கத்தை அசௌகரித்துக்கு உள்ளாக்கினார் என்று கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இலங்கை உயர்ஸ்தானிரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். ராதிகா தமது தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு சென்றிருந்த போதும் அங்கு அரசியல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டதாக என்டிபி கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தாம் […] |
| `ஒன்றாரியோ பிரதமர் விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்பு முக்கியஸ்தரை சந்தித்தார்! Posted: 24 Jan 2014 07:21 PM PST கனடா ஒன்றாரியோ மாநில லிபரல் கட்சியின் பிரதமர் கத்லீன் வென்னே அண்மையில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பு பேச்சாளருடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். கனேடிய செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. உலக தமிழர் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் நேரு குணரட்னத்துடன் தாம் சந்திப்பு நடத்தியமையை ஒன்றாரியோ பிரதமரும் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 14 ம் திகதியன்று தைப்பொங்கல் அன்று டொரன்டோவின் கந்தசாமி கோயிலுக்கு ஒன்றுக்கு சென்றிருந்த போதே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. உலக தமிழர் இயக்கம் கனடாவில் பயங்கரவாத […] |
| ஆஸி பிரதமர் பயணித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கொழும்பில் தரையிறக்கப்பட்டது Posted: 24 Jan 2014 07:11 PM PST
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டோனி அப்போட் பயணித்த விமானம் சற்று நேரத்திற்கு தரையிறக்கப்பட்டது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இலங்கையில் சற்று நேரம் தரையிறக்கப்பட்ட விமானத்தில் பயணித்த அவுஸ்திரேலிய பிரதமர் அப்போட், விமான நிலையத்தில் ஓய்வெடுத்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பும் வழியில் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய, அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட்டை, இலங்கை பிரதமர் டி.எம். ஜயரட்ன மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ, நாமல் ராஜபக்ஸ ஆகியோர் சம்பிரதாய அடிப்படையிலும் மரியாதை நிமித்தமும் விமான நிலையத்தில் சந்த்தித்து உரையாடியதாகவும், ஓய்வுக்குப் பின் உடனடியாகவே அவர் புறப்பட்டுச் சென்றார் எனவும் தெரியவருகிறது. வரவேற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதே வேளை பொருயாதார மாநாட்டில் மேற்கத்தேய தலைவர்கள், முக்கியஸ்த்தர்களைச் சந்தித்த அவுஸ்ரேலியப் பிரதமரிடம், மேற்குலகம் மகிந்தவுக்காண செய்தி எதனையும் அனுப்பி வைத்ததா என்ற சந்தேகம் கொழும்பு அரசியல் வானில் சுடர்விட்டு பிரகாசிப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கிறார். குறிப்பாக அவுஸ்ரேலியப் பிரதமரோடு இலங்கை கொண்டுள்ள நட்பின் நிமித்தம் மகிந்தவுக்கான எச்சரிக்கை எதையாவது மேற்குலகம் அனுப்பி வைத்திருக்குமா? என்பதனை சற்று பொறுத்திருந்தே பார்கலாம் எனவும் அத்தகவல் கூறுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெனிவா அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக சிரியா அச்சுறுத்தல் Posted: 24 Jan 2014 08:50 AM PST
பிரஹிமியுடன் சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வலித் அல் மொ-ஆலம் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் அவர் அரசு ஊடகங்கள் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று மாலை சிரியா அரசின் எதிர்த்தரப்பினரை பிரஹிமி சந்தித்துப் பேச உள்ளார். மூன்று நாட்களாகியும் எந்தவித முன்னேற்றமும் காணப்படாத இந்தப் பேச்சுவார்த்தையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையை அரசியல் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இரண்டு பக்கங்களிலுமே பல பிரச்சினைகளை எதிர்த்து நின்றபோதிலும் உள்ளூர் யுத்த நிறுத்தங்கள், கைதிகள் பரிமாற்றம் மற்றும் வெகுவாகத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகள் போன்ற உறுதியான நடவடிக்கைகள் குறித்துப் பேச அவர்கள் விருப்பம் காட்டியுள்ளது நம்பிக்கை தருவதாக இருக்குமென்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைக்கு வந்து உடனடியாக திரும்பி சென்ற ஆஸி. பிரதமர் Posted: 24 Jan 2014 07:53 AM PST
அவர் இன்று (24) முற்பகல் 11.47 அளவில் இலங்கை வந்து மீண்டும் 2.00 மணியளவில் புறப்பட்டுச் சென்றதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், சுவிசர்லாந்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு டொனி அபோட் சென்று கொண்டிருந்போது, அவர் பயணித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த அவுஸ்திரேலிய பிரதமரை வரவேற்க, இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்ன அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜூ.எல்.பீரிஸ், நாமல் ராஜபக்ஷ, இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் ரொபின் முட் ஆகியோரும் கலந்து கொண்டனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 24 Jan 2014 07:39 AM PST
இந்நிலையில் நேற்று கியூபெக் அருகே உள்ள லைஸ் வெர்ட் நகராட்சி முதியோர் இல்லத்தில், நடுஇரவில் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அந்த இல்லத்தில் சக்கர நாற்காலி மற்றும் நடக்கும் கருவிகளை துணைகொண்டு வசிந்து வந்த 70 வயதிற்கும் மேற்பட்ட 60 ஊனமுற்றோர்கள் அந்த தீயில் சிக்கிக்கொண்டனர். மளமளவென பரவிய அந்த தீயானது அப்பகுதியில் வசித்த மற்ற 1400 பேரை பாதிக்காமல் இருக்க உடனே தீயணைப்பு வண்டிகள் அழைக்கப்பட்டன. பல்வேறு வண்டிகளில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களில் இருபதுக்கு மேற்பட்டோரை காப்பாற்றினார். உடல் கருகிய நிலையில் ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மீதமிருந்த 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதில் சிலர் தங்களது வீட்டிற்கு சென்று இருக்கலாம். ஆனால் மீதமிருந்த மற்றவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீவிபத்து எப்படி நடந்தது என்று பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமரும், அதிபரும் தீயில் இறந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தீயணைக்கப்பட்ட பிறகு காலை விடிந்தவுடன் அப்பகுதி முழுவதும் பனி உறைந்து விட்டது என்று கூறப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நரியை பாசமாக வளர்த்து வரும் தம்பதியினர் Posted: 24 Jan 2014 07:32 AM PST பிரான்சில் இளம் நரி ஒன்றை தம்பதிகள் ஒருவர் மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகின்றனர். பிரான்சில் கடந்த 2010ம் ஆண்டில் நடந்த கார் விபத்து ஒன்றில் நரி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. அப்போது அவ்வழியே வந்த டைடிய டலேன்ஸ் என்பவர், இறந்த நரியின் அருகிலிருந்த இளம் நரியை தன் வீட்டிற்கு எடுத்து சென்றார். இவரும் இவரது மனைவி ஆனியும், Zouzou என்ற இந்த இளம் நரியை பாசத்துடன் வளர்த்து வந்தனர். இதையறிந்த பிரான்ஸின் வேட்டை மற்றும் காட்டு விலங்குகள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பின்லேடனை காட்டிக் கொடுத்தவருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும்: பாகிஸ்தான் Posted: 24 Jan 2014 07:02 AM PST
பாகிஸ்தானின் அபோதாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கா சீல் படையினர், கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் சுட்டுக் கொன்றனர். இதன்பின் பாகிஸ்தான் நடத்திய விசாரணையில், ஒசாமாவை காட்டிக் கொடுத்தது மருத்துவர் ஷகீல் அப்ரிடி என்பது தெரியவந்தது. இதனையடுத்து தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-இஸ்லாம் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி அப்ரிடி கைது செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் கூறுகையில், அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க அப்ரிடி விடுவிக்கப்பட சாத்தியமே இல்லை. அவரது குற்றத்தை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. அவரது மேல் முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை நிறுத்தி வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீதிமன்ற வளாகத்தில் இரட்டை கொலை Posted: 24 Jan 2014 06:54 AM PST ஜேர்மனில் நீதிமன்ற வளாகத்தில் இருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனின் பிராங்க்பர்ட் நகர நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை திடீரென இருவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கியால் சுடப்பட நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், கத்தியால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து விரைந்து வந்த பொலிசார், சம்பவ இடத்தில் கத்தியும் துப்பாக்கியும் வைத்திருந்த 47 வயது மதிக்கதக்க நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய கோணத்தில் ஆண் பெண் உறவுகள் Posted: 24 Jan 2014 06:45 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| 6 பேரை காப்பாற்றிய சிறுவன் தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம் Posted: 24 Jan 2014 06:41 AM PST
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கிழக்கு ரோசெஸ்டர் பகுதியை சேர்ந்த சிறுவன் டைலர் தூகன்(வயது 8). இவன் பென்பீல்டு நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் நேற்று முன்தினம் தங்கியிருந்தான், அப்போது இரவு நேரத்தில் திடீரென படுக்கை அறையில் தீப்பிடித்தது. இதனையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனடியாக எரிந்து கொண்டிருந்த நெருப்புக்குள் பாய்ந்து சென்ற சிறுவன், தீயில் சிக்கியிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தான். ஆனால் வயதான தாத்தாவால் வெளியே வர முடியவில்லை, அவரை தூக்கி கொண்டு வந்த போது, தீயில் சிக்கியதால் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தான். தூகன் இறுதி சடங்குக்கும், அவனது குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் ஒன்லைனில் நிதி திரட்டுகின்றனர், இதுவரை ரூ. 17 லட்சம் நிதி சேர்ந்துள்ளது. 6 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுவனின் வீரச்செயலால் பெருமை அடைந்த போதிலும், அவனின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட காரணம் Posted: 24 Jan 2014 06:37 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














