Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வடக்கிலிருந்து இராணுவம் திரும்பபெறப்பட மாட்டாது: அமெரிக்காவின் கோரிக்கைக்கு இலங்கை மறுப்பு

Posted: 17 Jan 2014 11:08 PM PST

army

armyவடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தினரை திரும்ப அழைக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தினரை திரும்ப பெறுதல் உட்பட ஆறு விடயங்களை நிறைவேற்றினால், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள யோசனையை விலகிக்கொள்வதாக அமெரிக்க விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான யோசனையை திரும்பபெறுவதற்காக இலங்கையின் தேசிய பாதுகாப்பை காட்டிக்கொடுக்க போவதில்லை என அமெரிக்காவுக்கு பதிலளித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பின் தகவல்கள் தெரிவித்தன.

அமெரிக்காவின் இந்த கோரிக்கைககளுக்கு இணங்கினால் மீண்டும் பிரிவினைவாத்திற்கு வழி திறக்கப்படும் என அரசாங்கம், அமெரிக்காவிடம் கூறியுள்ளது.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல், வடக்கில் இராணுவம் கைப்பற்றியுள்ள நிலங்களை விடுவித்தல், போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான சுயாதீன விசாரணை நடத்துதல், அரசசார்பற்ற நிறுவனங்கள் எவ்விதமான தடைகளும் இன்றி நாட்டில் செயற்பட அனுமதித்தல், கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தல் அல்லது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தல் போன்ற விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா, இலங்கை அரசிடம் கேட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இறுதிப்போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்பதை கணக்கெடுப்பு உறுதிப்படுத்தும்!- அமைச்சர் சமரசிங்க

Posted: 17 Jan 2014 10:35 PM PST

warcrime-picture

warcrime-pictureவடக்கு கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்த கணக்கெடுப்புகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவல் பிழை என்பதை இந்த கணக்கெடுப்பு உறுதிப்படுத்தும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு திணைக்களம் தற்போது வடக்குகிழக்கில் கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது. இறுதிப்போர் இடம்பெற்ற வேளையில் யாரும் அங்கு சென்று எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதை யாரும் கணக்கிடவில்லை. எனவே ஐக்கிய நாடுகளின் அறிக்கை பிழையானது. இந்தநிலையில் எதிர்வரும் மார்ச்சில் சவால்களை சந்திக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பௌத்த அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்: விக்ரமபாகு

Posted: 17 Jan 2014 10:13 PM PST

vikrama

vikramaகிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தலங்களை தாக்கி வரும் தீவிரவாத பௌத்த அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுபல சேனா மற்றும் இராணுவ பலய மற்றும் சிஹல ராவய என்ற இந்த அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடனேயே இயங்கி வருகின்றன.

எனினும் அதிகாரம் அற்ற பொலிஸ்துறையினால் இந்த அமைப்புக்களுக்கு எதிராக செயற்படமுடியாமல் உள்ளது.

இந்தநிலையில் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் டியு குணசேகர போன்றவர்கள் மாக்ஸிஸத்தை மறந்து அரசாங்கத்தின் குற்றங்களை மறைக்கும் செயல்களுக்கு துணைப் போவதாக விக்ரமபாகு குற்றம் சுமத்தியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் புள்ளி விபரத் தகவல்கள் சமர்ப்பிக்கப்படும்

Posted: 17 Jan 2014 09:54 PM PST

mahintha samara

mahintha samaraஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் புள்ளி விபரத் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் திரட்டப்பட்ட புள்ளி விபரத் தகவல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பெதுமக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதனை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் புள்ளி விபரத் திணைக்களம் கணக்கெடுப்பு நடாத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் இலங்கைக்கான வதிவிடப் பிரதிபிதி கோர்டன் வைஸினால் எழுதப்பட்ட நூலின் அடிப்படையிலேயே இறுதிக் கட்ட யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற தருணத்தில் எவராலும் சென்ற புள்ளி விபரத் தகவல்களை திரட்டியிருக்க முடியாது, அது சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதனை மறுப்பதற்கில்லை என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கப் படையினர் நடத்திய தாக்குதல்களிலிருந்து மீள்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர் எனவும் இதன் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்களை இலக்கு வைத்து யுத்தம் நடத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரயோகிக்கப்பட உள்ள அழுத்தங்களையும் சவால்களையம் எதிர்நோக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் வாரிசு மரணம்

Posted: 17 Jan 2014 09:31 PM PST

amilagam-

amilagam-இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கர் 26 ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தார். போரின் இறுதியில் மன்னரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவானார்கள்.

அவர்களை சிறைபிடித்த ஆங்கிலேயர்கள் வேலூர் கோட்டையில் 16 1/2 ஆண்டுகள் சிறை வைத்தனர். 1832ல் விக்கிரம ராஜசிங்கர் மரணம் அடைந்தார். அவர் புதைக்கப்பட்ட இடத்தில் பாலாற்றங்கரையில் 1990ல் முத்து மண்டபம் கட்டபட்டது.

இலங்கையில் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்த தமிழ் மன்னரின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த மண்டபம் கம்பீர சின்னமாக நிற்கிறது.

மன்னரின் வம்சத்தினர் இன்றும் வேலூரில் வாழ்ந்து வருகின்றனர். வேலூர் சாய்நாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்த மன்னரின் 3–வது வாரிசு பிருதிவிராஜ் நேற்று மரணம் அடைந்தார்.

இவரை இளவரசன் என்று அப்பகுதி பொதுமக்கள் அழைத்து வந்தனர். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இவருக்கு புஷ்பா என்ற மனைவி, விக்கிரமன், விஜயகுமார் என்ற மகன்கள் உள்ளனர். இறந்த பிருதிவிராஜ் மன்னர் விக்கிரம சிங்கரின் மகன் வயிற்று பேரன் என்று தெரிவித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் இலங்கை அரசுக்கு மன்னார் ஆயர் சவால்!

Posted: 17 Jan 2014 09:22 PM PST

Mannar-Bishop-e1355020473664

Mannar-Bishop-e1355020473664அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை முடிந்தால் சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய்யென்று நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ள மன்னார் ஆயர், அவ்வாறு செய்த பின்னர் எங்களைக் கைது செய்வது தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். "நாங்கள் பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை' என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு கடந்த 8 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள விசேட போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் வந்திருந்தார். இவருடன் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோர் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். இறுதிக் கட்டப் போரில் நிகழ்த் தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் கொத்துக்குண்டுகள், இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்ற ஆதாரங்கள் இந்தச் சந்திப்பில் ஆயர்களால் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்டன.

அரசின் மீது பொய்க் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி வரும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இவர்கள் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்ததாகப் பொய்யான தகவல்களை வழங்கியுள்னர்.

இதனாலேயே ஸ்ரீபன் ராப் இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டுமென்று தெரிவித்துள்ளார். எனவே பொய்யான தகவல்களை வழங்கிய இரு ஆயர்களையும் கைது செய்ய வேண்டும்' என்று இராவண பலய என்ற சிங்கள பெளத்த கடும் போக்கு அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளது. இது தொடர்பில் மன்னார் ஆயரை உதயன் தொடர்பு கொண்டு கேட்ட போது, நாங்கள் கொடுத்த ஆதாரங்களை முடிந்தால் பொய்யென்று இவர்கள் நிரூபிக்கட்டும். அவ்வாறு செய்த பின்னரே எங்களைக் கைது செய்வது தொடர்பில் கதைக்க முடியும்.

எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இறுதிக் கட்டப் போரில் சிக்குண்ட மக்கள், பங்குத் தந்தையர்கள் எல்லோருடனும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். அவர்கள் எங்களுக்குப் பல தகவல்களை வழங்கியுள்ளனர். அதனையே நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். அந்த மக்களிடம் வெளியாள்கள் சென்று தகவல் பெற முடியாது. அவர்கள் எம்மை நம்பியே வெளிப்படுத்தியுள்ளனர். இறுதிப் போரில் நடந்த உண்மைகளைப் பலர் இரகசியமாக ஐ.நாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நாங்கள் பகிரங்கமாகச் சொன்னதால் எங்களை எதிர்க்கின்றனர் என்றார் அவர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

MicroSoft XP பாவனையாளர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி

Posted: 17 Jan 2014 03:11 AM PST

windows_001

windows_001மைக்ரோசொப்ட் நிறுவனம் தான் அறிமுகப்படுத்திய விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 இயங்குதளங்களில் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளது.

இதற்காக முன்னர் அறிமுகப்படுத்திய MicroSoft XP இயங்குதளத்திற்கான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குவதை இந்த வருடம் ஏப்ரல் மாதம் 8ம் திகதியுடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது.

எனினும் தற்போது இக்கால எல்லையை 2015ம் ஆண்டு ஜுலை 14ம் திகதி வரை நீடித்துள்ளது.

இதேவேளை அடுத்த வருடம் விண்டோஸ் 9 இயங்குதளத்தினை அறிமுகம் செய்ய மைக்ரோசொப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

Plastic Surgery ஹேம் அதிரடியாக நீக்கம்

Posted: 17 Jan 2014 03:09 AM PST

plastic_surgery_001

plastic_surgery_001சிறார்களுக்காக சத்திரசிகிச்சையினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹேம் Plastic Surgery.

இக்ஹேமில் தோன்றும் உடல் பருமானன பெண்ணை சத்திர சிகிச்சையின் மூலம் மெலிந்த பெண்ணாக மாற்ற வேண்டும் என்பதே மையக்கருத்து.

இது சிறுவர்களில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அப்பிளின் அப்பிளிக்கேஷன் ஸ்டோர் மற்றும் கூகுளின் அப்பிளிக்கேஷன் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

LG G2 கைப்பேசியில் Android 4.4 KitKat இயங்குதளம்

Posted: 17 Jan 2014 03:07 AM PST

lg_g2_kitkat_002

lg_g2_kitkat_002LG G2 ஸ்மார்ட் கைப்பேசியில் கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினை நிறுவிக்கொள்ள முடியுமென LG-ன் இத்தாலிக்கான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி இம்மாத இறுதியில் சவுதி அரேபியாவில் உள்ள LG G2 பாவனையாளர்களும், மார்ச் மாத இறுதியில் இத்தாலியிலுள்ள LG G2 பாவனையாளர்களும் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அப்டேட் செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் Android 4.4 KitKat இயங்குதளமானது இதுவரையில் மொபைல் பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்திரனில் உருவாகும் வீடுகள்! நாசா அறிவிப்பு (வீடியோ இணைப்பு)

Posted: 17 Jan 2014 03:06 AM PST

mars_house_001

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, சந்திரனில் வீடுகளை கட்டுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சந்திரனை பற்றி ஆராய்ந்து வருகிறது.

mars_house_001இந்நிலையில் முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை(3D Printing) பயன்படுத்தி, வீடுகள் கட்டுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.

சந்திரனில் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான கட்டமைப்பை உருவாக்குவதே நாசாவின் முக்கிய இலக்காக உள்ளது.

இத்தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை, கணணி மூலம் இயக்கப்படும் ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி சந்திரனின் மேற்பரப்பில் 24 மணிநேரத்தில் வீடுகளை நிர்மாணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இதற்காக அமெரிக்காவின் தென் கலிபோர்னியா பல்கலைகழகத்திற்கு நாசா நிதியுதவி அளித்துள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இயற்கை சீற்றங்களினால் பேரழிவுக்கு உள்ளான இடங்களில் மிக எளிதாக வீடுகளை கட்ட முடியும் என பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் பெஹ்ரோன் கொஷ்ருனவிஸ் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சபாஷ் சரியான போட்டி….

Posted: 17 Jan 2014 03:01 AM PST

dance_girl_001.w245

dance_girl_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

வாலிபரை கொன்று சமைத்து சாப்பிட்ட வாலிபரால் பரபரப்பு…..

Posted: 17 Jan 2014 02:59 AM PST

man_murder_eat_001.w245

man_murder_eat_001.w245மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், வாலிபரை கொன்று சமைத்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் நடந்த மதக்கலவரத்தில், 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் பெங்குயில் நடந்த கலவரத்தில் நபர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி, மனைவியின் தங்கை மற்றும் குழந்தை கொலை செய்யப்பட்டனர்.

மனைவி இழந்த துக்கம் தாங்காததால், கொலை செய்த நபர் மீது வெறியுடன் இருந்தார்.

இதற்கிடையே அவர் பேருந்தில் செல்வதை பார்த்தவர், தனது ஆதரவாளர்களுடன் சென்று கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார்.

இருப்பினும் ஆத்திரம் தாங்காமல், அவரது சடலத்தை வேக வைத்ததுடன், மாமிசத்தை சாப்பிட்டுள்ளார்.

மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட நபர், தன்னை தானே பைத்தியக்கார நாய் எனவும் பெயரிட்டுக் கொண்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக ஆக்கி லீக்: 5–வது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் இந்தியா மோதல்

Posted: 17 Jan 2014 02:57 AM PST

images (1)

images (1)உலக ஆக்கி லீக் போட்டி புதுடெல்லியில் நடந்து வருகிறது. கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 2–7 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி 5 முதல் 8–வது இடத்துக்கான ஆட்டங்களில் மோதுகிறது.

இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை எதிர் கொள்கிறது. அரை இறுதி போட்டிகளில் இங்கிலாந்து– நியூசிலாந்து, ஆஸ்திரேலியா– நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன

This posting includes an audio/video/photo media file: Download Now

நடுவர்களை கண் கலங்க வைத்த பெண்ணின் நடனம்…..

Posted: 17 Jan 2014 02:55 AM PST

dance_girl_002.w245

dance_girl_002.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

கரடியைப் பதம்பார்த்த கழுகு…. அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!….

Posted: 17 Jan 2014 02:53 AM PST

bear_eagle_001.w245

bear_eagle_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டி: இங்கிலாந்து 300 ரன் குவிப்பு

Posted: 17 Jan 2014 02:51 AM PST

c4db187f-1555-4a74-b883-1542b1d14012_S_secvpf

c4db187f-1555-4a74-b883-1542b1d14012_S_secvpfஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய 2–வது ஒரு நாள் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி 5 விக்கெட்டுக்கு 178 ரன் எடுத்து திணறியது. அதன் பின் மார்கன் அதிரடியாக விளையாடி சதம் அடித்து சரிவில் இருந்து மீட்டார். அவரது சதத்தில் 4 பவுண்டரி, 6 சிக்சர் அடங்கும்.

50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்தது. மார்கன் 106 ரன்னிலும், பட்லர் 49 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

பின்னர் 301 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உச்சக்கட்ட கோபத்தில் ஆணைத் தாக்கும் பெண்கள்…..

Posted: 17 Jan 2014 02:49 AM PST

girls_fight_001.w245

girls_fight_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

குழந்தையைக் காப்பாற்றி ரியல் ஹீரோவான மனிதர்…..

Posted: 17 Jan 2014 02:46 AM PST

child_safe_hero_001.w245

child_safe_hero_001.w245      

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா, லீ நா 4–வது சுற்றுக்கு தகுதி

Posted: 17 Jan 2014 02:45 AM PST

download

downloadகிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 5–வது நாளான இன்று பெண்கள் ஒன்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) – ஹன்ட்சோவா (சுலோவாக்கியா) மோதினர். இதில் செரீனா 6–3, 6–3, என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்குள் நுழைந்தார். அத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் புதிய சாதனையாக, 61 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். மற்ற 3–வது சுற்று ஆட்டங்களில் கெபர் (ஜெர்மனி) 6–3, 6–4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்க்கை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார். சீனா வீராங்கனை லீ நா 1–6, 7–6 (7–2), 6–3, என்ற செட் கணக்கில் சபரோவாவை (செக்குடியரசு) போராடி வென்று 4–வது சுற்றுக்கு முன்னேறினார். இத்தாலி வீராங்கனை பென்னட்டா 6–1, 7–5 என்ற செட் கணக்கில் ஜெர்மனியை சேர்ந்த மோனா பார்தெல்லை வீழ்த்தி 4–வது சுற்றுக்குள் நுழைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3–வது சுற்றில் மேயர் (ஜெர்மனி) –ஜானேவிச் (போலந்து) பலப்பரீட்சை நடத்தினர். இதில் மேயர் 7–5, 6–2, 6–2, என்ற செட் கணக்கில் வென்று 4–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3–வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 6–2, 7–6, (7–5), 6–2 என்ற செட் கணக்கில் பிரான்சின் சார்டியை வீழ்த்தினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நாசா வடிவமைத்துள்ள‌ செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்கலம்

Posted: 17 Jan 2014 02:40 AM PST

nasa-launch

nasa-launchசெவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்து அதற்கான விண்கலத்தையும் அது வடிவமைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் இந்த விண்கலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் முதல் சோதனை ஓட்டம் 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை இது தாங்கிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்படும். மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் இது உருவாகும். நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது. தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து இதுவரை எந்த விண்கலமும் சுமந்திராத 143 டன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் முதல் விண்கலமாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™