Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மாம்பழம் பழுக்க ராமதாஸ் புதுக்கணக்கு: பா.ஜ.,வில் சேரும்படி அன்புமணி நிர்பந்தம்

Posted:

மாம்பழம் சின்னத்தை தக்க வைக்கவே, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், சமுதாய கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், பா.ஜ.,வுடன் கட்டாயம் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தும், அக்கட்சியில் வலுத்து வருகிறது.தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை, அரசியல் கட்சிகள் பெற, பல நிபந்தனைகள் உள்ளன. ஒரு கட்சி மாநில கட்சிக்குரிய, அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், 6 சதவீத ஓட்டுகளைப் பெறுவதோடு, குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும்.சின்னம் பறிபோகும்:தேர்தல் கமிஷனின் இந்த ...

பொங்கலில் பொங்கிட முடிவு: அழகிரிக்கு விஜயகாந்த் பதிலடி

Posted:

'தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., கூட்டணி சேர்ந்தால் உருப்படாது'என, தி.மு.க., தென்மண்டலஅமைப்பு செயலர், அழகிரிஅளித்த பேட்டிக்கு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், வரும், 12ம் தேதி, பதில் அளிப்பார் என, அவரது கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., பெரிதும் விரும்புகிறது.'தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தால் மகிழ்ச்சி' என, கருணாநிதி கூறி வருகிறார்.ஆனால், கடந்த, 5ம் தேதி நடந்த, தே.மு.தி.க., பொதுக்குழுவில் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா, 'தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட ரணங்கள் இன்னும் ஆறவில்லை' என்று, மிகவும் ஆதங்கப்பட்டார். ...

முதல்வர் ஜெயலலிதாவின் கனவுக்கு முட்டுக்கட்டை போடும் கவுன்சிலர்கள்

Posted:

பெரும்பாலான மாவட்டங்களில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, உள்ளாட்சி பிரதிநிதிகளின செயல்பாடு, லோக்சபா தேர்தலில், 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற, முதல்வரின் கனவுக்கு, முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக உள்ளது.அ.தி.மு.க., தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருப்பதோடு, உள்ளாட்சி பதவிகளிலும், 80 சதவீதத்திற்கும் அதிகமாகவே, ஆளும் கட்சியினர் உள்ளனர். கூட்டுறவு சங்கங்களிலும், அனைத்து பதவிகளிலும், அ.தி.மு.க., வினரே உள்ளனர்.மக்களிடம் அதிருப்தி ஏற்படாத வகையில், மக்களின் தேவைகளை நிறைவேற்றும்படி, அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவரது லோக்சபா கனவுக்கு, தடை ...

2004ல் ஆதரவு; 2014ல் எதிர்ப்பா? ஜெ.,க்கு கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை : "எம்.ஜி.ஆர்., ஆதரித்த, சேது சமுத்திர திட்டத்தை, இப்போது, முதல்வர் ஜெயலலிதா மறுக்கிறாரா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், ஒரு மூத்த வழக்கறிஞரை, தமிழக அரசின் சார்பில் முறையாக, வாதாட வைக்க முன்வராத, அ.தி.மு.க., அரசு தான், "சேது சமுத்திர திட்டத்தை, எந்த வழியிலும் துவங்கக் கூடாது' என, மீண்டும், சுப்ரீம் கோர்ட்டில் மனு கொடுத்திருக்கிறது.கடந்த, 2004 லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "சேது சமுத்திரத் திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் ...

அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

Posted:

புதுடில்லி : அமெரிக்காவில், நம் நாட்டின், பெண் தூதர், தேவயானி, அந்நாட்டு போலீசாரால், மோசமாக நடத்தப்பட்டதற்கு, பதில் நடவடிக்கையாக, 'அமெரிக்க தூதரகங்களில், எவ்வித வர்த்தக நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது' என, மத்திய அரசு நேற்று, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.பதிலடி:பெண் தூதர், தேவயானி தொடர்பான அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அந்நாட்டு தூதரகங்களில் பணியாற்றும், அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த, பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.அவர்கள் எளிதாக சென்று வர, சாலைகளில் வைக்கப்பட்டிருந்த ...

நிலக்கரி சுரங்க முறைகேடு: சுப்ரீம் கோர்ட் 'நெத்தியடி'

Posted:

புதுடில்லி:'பல லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளனர் என்பதற்காக, சட்டவிரோதமாக உரிமம் பெற்ற நிலக்கரி சுரங்கங்களை செயல்பட அனுமதிக்க முடியாது. முறையான அனுமதியின்றி, அந்த நிறுவனங்கள் முதலீடு செய்ததற்கு, நிறுவனங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.நாட்டின், பல மாநிலங்களில், நிலக்கரி சுரங்கங்களை தோண்ட, தனியார் நிறுவனங்களுக்கு, மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி அளித்ததில், பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்தது என, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன.அந்த ...

ராகுல் 'இமேஜை' உயர்த்த ரூ.500 கோடியா? அலறும் காங்.,

Posted:

புதுடில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலின், 'இமேஜை' மேம்படுத்த, ஜப்பானிய நிறுவனம் ஒன்று அமர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை, காங்கிரஸ் மறுத்துள்ளது. 'எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை' என, அக்கட்சித் தலைவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.சமீபத்தில் நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் தலைமையில் பிரசாரம் நடந்தது. தேர்தல் முடிவில், நான்கு மாநிலங்களில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.இதனால், ராகுலின் மதிப்பு, கவுரவம், இமேஜ் குறைந்துள்ளதாகவும், அதை சரி செய்ய, ஜப்பானின், 'டென்சு' என்ற நிறுவனம் ...

'ஆம் ஆத்மி' கட்சியின் டில்லி தலைமையகம் மீது தாக்குதல்: சம்பவத்திற்கு பின் கட்சித் தலைவர் கெஜ்ரிவால் 'நாடகம்'

Posted:

டில்லி அருகே, உ.பி.,யின், காசியாபாத் நகரில் உள்ள, குசாம்பி நகர் என்ற இடத்தில், 'ஆம் ஆத்மி' கட்சியின் தலைமை அலுவலகம், 'இந்து ரக்ஷா சமிதி' என்ற அமைப்பை சேர்ந்தவர்களால், நேற்று தாக்கப்பட்டது. இதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்த, கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், பழம்பெரும் அரசியல் தலைவர்கள் போல், 'என்னை கொல்ல சதி; எதையும் சந்திக்கத் தயார்' என, அரசியல் நாடகம் ஆடினார்.'காஷ்மீரில், ராணுவத்தினர் நீடிக்க, பொதுமக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான, பிரஷாந்த் பூஷன் கூறியிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ...

தி.மு.க.,வுடன் கூட்டு சேர தே.மு.தி.க.,வில் எதிர்ப்பு வலுக்கிறது : அழகிரி கதி விஜயகாந்திற்கும் வரும் என அச்சம்

Posted:

தி.மு.க.,வில் அழகிரி நடத்தப்பட்ட விதத்தால், "அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால், விஜயகாந்திற்கும் அதே நிலை ஏற்படலாம்' என்ற கருத்து, தே.மு.தி.க.,வினர் மத்தியில் பரவி உள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க.,விடம் அவமானப்பட்ட தே.மு.தி.க.,வினர், அழகிரி விவகாரத்தால், லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க.,வுடன் கூட்டணி சேர விரும்பாத நிலை உருவாகி உள்ளது. "2016ல் என்ன நடக்கும்?': தே.மு.தி.க.,வின் பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக, ஆவேசமாக பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் கருத்துக்கு, எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™