Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை-வழிபாடு நீண்டவரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

Posted: 01 Jan 2014 12:25 PM PST

வேலூர்,

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை-வழிபாடு நடந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டு நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி பொது மக்கள் கோவில்களுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர்.

அத்துடன் பலர் தங்களுடைய உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

சிறப்பு பூஜை-வழிபாடு

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேசுவரர் கோவில் நடை நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. பின்னர் 4 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. சண்முகர்-வள்ளி, தெய்வானைக்கு தங்ககவசம் சாத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகத்தில், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நாதஸ்வரம், தவில், கிளாரிநெட் மற்றும் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி காலை 7 மணிக்கு தொடங்கி, விடிய, விடிய நடைபெற்றது. அதுபோல காலை 6 மணிக்கு தொடங்கிய அன்னதானம் இரவு 9 மணிவரை நடைபெற்றது. (அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் பகலில் கோவில் நடை சாத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

கலெக்டர்

நேற்று பகலில் கலெக்டர் நந்தகோபால் தனது குடும்பத்தினருடன் ஜலகண்டேசுவரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜலகண்டேசுவரர் தர்ம ஸ்தாபனம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பழனி ஆண்டவர் கோவில்

வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் நடை நேற்று காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதுபோல அந்த கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் சன்னதியில் குருசாமி மாணிக்கம் தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சாமிக்கு மலர் அங்காரம் செய்யப்பட்டது. கோவிலுக்கு சென்ற ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து திரும்பினார்கள்.

சிவசுப்பிரமணிய சாமி கோவில்

வேலூர் பேரிப்பேட்டையில் உள்ள சிவ சுப்பிரமணியசாமி கோவிலில் நடை நேற்று காலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 6.30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். கோவிலில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய அன்னதானம் பகல் 12 மணிவரை நடைபெற்றது.

தேவஸ்தானம்

வேலூர் டவுனில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல்மையத்தில் உள்ள வெங்கடாஜலபதி சன்னதியிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அங்கும் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து திரும்பினார்கள்.

வீர ஆஞ்சநேயர் கோவில்

வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் சன்னதியிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விஜய், மாநகராட்சி மண்டல குழு தலைவர் குமார் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வழக்கமாக புத்தாண்டையொட்டி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு தரிசன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று புத்தாண்டுடன் அனுமன்ஜெயந்தி விழாவும் சேர்ந்து கொண்டதால் கோவிலுக்கு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் சென்று இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து திரும்பினார்கள். அனைத்து பக்தர்களுக்கும் கோவிலில் பிரசாதம் வழங்கப்பட்டது.

ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

வேலூரை அடுத்த ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலிலும் நேற்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பின்னர் சாமிக்கு மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. 6 மணிக்கு பாமுருகனடிமை சுவாமிகள் பாலமுருகனுக்கு தீபாராதனை செய்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நந்தகோபால் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதுபோல கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 6 மணிக்கு தொடங்கிய அன்னதானம் மாலைவரை நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும்...

சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், அரக்கோணத்தில் உள்ள கோதண்டராமர் கோவில், சுந்தரவிநாயகர் கோவில், தக்கோலத்தில் உள்ள ஜலநாதீஸ்வரர் கோவில், உப்பு குளத்தில் உள்ள பிள்ளையார் கோவில், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில்,குடியாத்தம் பிச்சனூர் பலமனேர் ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களிலும் புத்தாண்டை யொட்டி நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு தின சிறப்பு பிரார்த்தனை

Posted: 01 Jan 2014 12:16 PM PST

ஊட்டி,

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெற்றன. இதில் ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கடுங்குளிர்

புத்தாண்டு தினத்தை முன் னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது. ஊட்டியில் கடந்த சில தினங்களாக கடுங்குளிர் நிலவிய போதிலும் இந்த குளி ரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கிறிஸ்தவர்கள் நள்ளிரவில் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டனர்.

ஊட்டி தூய இருதய ஆண் டவர் ஆலயத்தில் நீலகிரி மறை மாவட்ட பிஷப் அமல் ராஜ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது.

வாழ்த்து

இந்த பிரார்த்தனையில் மறை மாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி நற்செய்தி வழங்கினார். இதில் ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மேலும் ஒருவருக் கொருவர் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த னர்.

நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு பொது மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் இனிப்பு கள், கேக்குகளை வழங்கி மகிழ்ந்தனர்.

குருசடி ஆலயம்

ஊட்டி மேரீஸ் ல் பகுதி யில் உள்ள மரியன்னை ஆல யத்தில் பங்கு தந்தை ஜான் ஜோசப் டேனியல் தலைமை யில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் உதவி பங்கு தந்தை இருதய லாரன்ஸ், வில்லியம் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர். பிங்கர்போஸ்ட் திரெசா அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அமல்ராஜ் தலை மையிலும், காந்தல் குருசடி ஆலயத்தில் பங்கு தந்தை பீட்டர் தலைமையிலும் புத் தாண்டு சிறப்பு பிரார்த்தனை கள் நடைபெற்றன.

ஊட்டி எச்.பி.எப். ஆலயம், ரோஸ் மவுண்ட் ஆலயம். எல்க்ல் புனித ஜூட்ஸ் ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த் தனைகள் நடைபெற்றன. இதில் புத்தாடைகள் அணிந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்டீபன் ஆலயம்

ஊட்டி டிரினிட்டி ஆலயத் தில் ரெவரண்ட் ஜெரோம் தலைமையிலும், ஸ்டீபன் ஆலயத்தில் ரெவரண்ட் மல்லி தலைமையிலும், சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயம், ஊட்டி பழைய தபால் நிலைய பகுதியில் உள்ள ஐ.சி.ஆர். எம். சபையில் சகோதரர் ராஜன் சாமுவேல் தலைமை யில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த் தனையில் கலந்து கொண்ட னர்.

ஊட்டி பிங்கர்போஸ்ட் புதுவாழ்வு ஆலயத்தில் சூரி பாஸ்டர் தலைமையில் நடை பெற்ற பிரார்த்தனையில் ஏரா ளமானோர் கலந்து கொண் டனர். கேத்தி ஈ.சி.ஐ ஆலயத் தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதே போல் கூடலூர் பகுதி யில் உள்ள அனைத்து கிறிஸ் தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டை வர வேற்றனர். மேலும் ஒருவருக் கொருவர் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

கோவில்களில் பக்தர்கள் வழிபாடு

Posted: 01 Jan 2014 12:12 PM PST

ஊட்டி,

புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக் தர்கள் நீண்ட வரிசை யில் நின்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.

2014-ம் ஆண்டு

உலகம் முழுவதும் நேற்று 2014-ம் ஆண்டு உதய தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆங்கில புத்தாண்டை முன் னிட்டு நீலகிரி மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜை கள், வழிபாடுகள் நடை பெற் றன. ஊட்டியில் உள்ள புகழ் பெற்ற கோவிலான மாரியம் மன் திருக்கோவிலில் அதி காலை நேரத்திலேயே ஏராள மான பக்தர்கள் குவிந்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு மாரியம்மன் மற்றும் காளி யம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பாலாபிஷேகம், சிறப்பு பூஜை கள், தீபாராதனை நடை பெற்றது. புத்தாண்டு இனிய தாகஅமைய ஏராளமான பக்தர்கள் வழிபட குவிந்ததால் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.

எல்க்ல் முருகன் கோவில்

புத்தாண்டை முன்னிட்டு காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதருக்கு காலையில் பாலாபிஷேகம், பழ அபிஷே கம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட் டது. ஊட்டி எல்க்ல் முரு கன் கோவிலில் நேற்று காலை 5.30 மணி முதல் சிறப்பு பூஜை கள் நடைபெற்றன. கோவிலில் உள்ள முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்யப் பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு சென்ற னர்.

இதேபோல் லோயர் பஜார் சுப்பிரமணிய சுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், முக்குருத்தி அம்மன் கோவில், காந்தல் மூவுலக அரசியம்மன் கோவில் உள் ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன.

அனுமன் கோவிலில் சிறப்பு பூஜை

அனுமன் ஜெயந்தியை முன் னிட்டு ஊட்டி சீனிவாசப் பெருமாள் கோவில் அருகே உள்ள அனுமர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமரை தரிசித்து சென்ற னர்.

இதே போல் ஊட்டி அருகே உள்ள வேல் வியூவில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் உள்ளது. இந்த கோவில் மலை மீது உள்ளதால் ஏராளமான பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று அனுமரை வழிப்பட்டு சென்றனர். அனுமன் ஜெயந்தி யை முன் னிட்டு அனுமருக்கு நேற்று பாலாபிஷேகம், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷே கங்கள் நடைபெற்றன. பக்தர் களின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த கோவிலில் உள்ள ஒரு குகையில் அனுமர் தவம் இருந் ததாக கூறப்படுகிறது. அனுமர் தவம் இருந்த இடத்திற்கு பக் தர்கள் சென்று வழிபட்டனர். மேலும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது.

சாந்தி விஜய் கோவில்

ஊட்டி மார்க்கெட் பஸ் நிலையத்தில் உள்ள சாந்தி விஜய் ஜெயின் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உணவு வழங் கப்பட்டு, சிறப்பு பிரார்த் தனைகள் நடைபெற்றது. ஊட்டி அருகே உள்ள மைனலை கிராமத்தில் கருணை அம்மன் மீனாட்சி அம்மன், காவேரி அம்மன், ஆகிய முப்பெரும் தேவியர்கள் எழுந்தருளி உள்ள கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற் றன.

மஞ்சூர் பகுதியில் உள்ள அவலாஞ்சி பவானி அம்மன் கோவிலில் அம்மனை தரிசிக்க காலை முதல் நூற்றுக்கணக் கான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் தங்களது பாரம்பரிய பாடல்கள் பாடி, நடனமாடி அம்மனை வழிபட்டனர். நூற்றுக்கணக்கான வாகனங் களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தந்தி மாரியம்மன் கோவில்

இதே போல் மஞ்சூர் அன்ன மலை முருகன் கோவில், மஞ்சக்கெம்பை மானிஹாடா ஹெத்தையம்மன் நாகராஜர் கோவில், மஞ்சூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழி பாடுகள் நடை பெற்றன.

குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், அய்யப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மகாலிங்கேஸ்வரர் கோவில்

கொலக்கம்பை அருகே உள்ள தூதூர்மட்டம் மகா லிங்கேஸ்வரர் கோவில், அய் யப்பன் கோவில், பந்தலூரில் உள்ள எருமாடு சிவன் கோவில், பந்தலூர் முருகன் கோவில், டெராமியா சாமுண் டீஸ்வரி கோவில், அய்யப்பன் கோவில், கோத்தகிரி மாரி யம் மன் கோவில் உள்ளிட்ட பல் வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் கூடலூர் சக்தி விநாயகர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நேற்று காலை சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராள மான பொது மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பந்த லூர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

சுமைதூக்கும் தொழிலாளி திடீர் சாவு இழப்பீடு வழங்கக்கோரி சாலைமறியல்

Posted: 01 Jan 2014 12:02 PM PST

திருப்பூரில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் வேலை செய்த போது சுமைதூக்கும் தொழி லாளராக பணியாற்றிய தொழிலாளி திடீரென இறந்தார். அவருக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலா ளர்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற் பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப் பில் கூறப்படுவதாவது:-

சுமைதூக்கும் தொழிலாளி

திருப்பூர் குப்பிச்சிப்பாளை யம் டி.ஆண்டிப்பாளை யத்தைச் சேர்ந்த மாசானியின் மகன் ராமசாமி(வயது 35). இவருடைய மனைவி ரேவதி (30). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ராமசாமி திருப்பூர் காங்கயம் ரோடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் தற்காலிகமாக சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ராமசாமி நேற்று முன்தினம் மாலை கிடங்கில் 100 கிலோ எடை கொண்ட சர்க்கரை மூட் டையை தூக்கியதாக தெரி கிறது. அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்த தொழிலாளர் கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின் னர் மேல் சிகிச்சைக்காக திருப் பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியி லேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

இதுகுறித்து திருப்பூர் புறநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா, ஏட்டு கென்னடி ஆகி யோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். நேற்று மதியம் ராம சாமியின் உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது. மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் இறந்த தாக தெரிவித் தனர். இந்த நிலையில் ராமசாமி யின் உடலை வாங்காமல் சுமை தூக்கும் தொழிலாளர்கள், உறவினர்கள் நேற்று மதியம் 3 மணியளில் திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி முன்புறம் உள்ள தாராபுரம் ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட் டனர். ராமசாமிக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அதனால் அவருடைய குடும் பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் வழங்க வேண்டும். குடும்பத் தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் செய்து கொடுக்க வேண்டும், நுகர் பொருள் வாணிப கழகத்தில் 100 கிலோ எடையுள்ள சர்க் கரை மூட்டையை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

நுகர்பொருள் கழக அதிகாரிகள்

இந்த சாலைமறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஜனநாயக சுமை தூக்குவோர் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், துணைச் செயலாளர் செல்வ ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

சம்பவம் பற்றி அறிந்ததும் தெற்கு உதவி கமிஷனர் முத்துச் சாமி, இன்ஸ்பெக்டர் பத் ருன்னிசா பேகம், சப்-இன்ஸ் பெக்டர் சசிகலா ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர் களை சமாதானம் செய்த னர். இதனால் 10 நிமிடத்துக் குள் சாலை மறியல் கைவிடப் பட்டது. சுமைதூக்கும் தொழிலா ளர்கள் சங்கத்தின் கோரிக் கையை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரியிடம் தெரிவிப்பதாக போலீசார் கூறினார்கள். இந்த சம்பவத்தால் திடீர் பர பரப்பு ஏற்பட்டது.

விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி செய்யும் பணி தீவிரம் கைத்தறி துறை உதவி இயக்குனர் தகவல்

Posted: 01 Jan 2014 11:50 AM PST

ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரம் விசைத்தறிகளில் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் கூறினார்.

பொங்கல் பண்டிகை

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏழை-எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வேட்டி மற்றும் சேலைகள் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், திருச்செங்கோடு பகுதியிலும் உள்ள விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான விலையில்லா வேட்டி ஒரு கோடியே 72 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உற்பத்தி தொடங்கி உள்ளது. இதில், தற்போது ஒரு கோடியே 56 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. மேலும், சேலைகள் பல நிறங்களில் நெசவு செய்யப்படுகிறது. இதற்காக பல நிறம் கொண்ட நூல்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள விசைத்தறி சங்கங்களுக்கு அரசின் மூலம் வழங்கப்பட்டு உள்ளது.

10,922 தறிகள்

இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தில் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்யும் பணிகள் குறித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் சந்தானம் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு விசைத்தறி கூட்டுறவு சங்கம், அறிஞர் அண்ணா விசைத்தறி கூட்டுறவு சங்கம், வீரப்பன்சத்திரம் விசைத்தறி கூட்டுறவு சங்கம் உள்பட மொத்தம் 33 கூட்டுறவு சங்கங்களில் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இந்த சங்கங்களில் உள்ள மொத்தம் 10 ஆயிரத்து 922 விசைத்தறிகளில் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் நெசவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தரம் உயர்வு

விலையில்லா வேட்டியின் நீளம் 3¾ மீட்டர், அகலம் 50 அங்குலம் ஆகும். ஒரு வேட்டிக்கு கூலியாக 20 ரூபாய் 40 காசு வழங்கப்படுகிறது. சேலையின் நீளம் 5½ மீட்டர். அகலம் 45 அங்குலம் ஆகும். தற்போது சேலையின் தரத்தை '40' கவுண்ட்டில் இருந்து '60' கவுண்ட்டாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு சேலைக்கு கூலியாக 39 ரூபாய் 27 காசு வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 75 லட்சத்து 30 ஆயிரம் விலையில்லா வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 69 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு விட்டது. 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன.

5 நிறங்கள்

அதேபோல் விலையில்லா சேலைகள் 72 லட்சத்து 30 ஆயிரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 20 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பிஸ்கட், மெரூன், ஆலிவ் கிரே, சிமெண்டு, பர்ப்புள் நீலம் ஆகிய 5 நிறங்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் சந்தானம் கூறினார்.

category:

அனுமன் ஜெயந்தி விழா

Posted: 01 Jan 2014 11:42 AM PST

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

பெருந்துறை

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருந்துறையை அடுத்த தோட்டாணிசத்திரம் சீதேவி, பூதேவி, கரியபெருமாள் கோவிலில் உள்ள 8 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது.

இதேபோல், கரியபெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு வெண்ணெய் காப்பு, வடை மாலை, பேரீச்சம்பழம் மாலை, திராட்சை பழம் மாலை, துளசி உள்பட பல்வேறு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடந்தது. இதையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று அமாவாசை தினம் என்பதால் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சத்தியமங்கலம்

இதேபோல் சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் அனைவரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சிவகிரி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கனககிரி வேலாயுதசாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அந்தியூர்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயர் சன்னதி, பேட்டை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி, தேர்வீதி முத்தாரம்மன் ஆஞ்சநேயர் கோவில், தவுட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், அத்தாணி ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாமிக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம், செந்தூரான் அலங்காரம், வெற்றிலை அலங்காரம், பூரணகும்ப அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 5 நாட்கள் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகமும், பூஜையும் நடக்கிறது.

நேற்று அமாவாசை தினம் என்பதால் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதையொட்டி அம்மனுக்கு சிவப்பு பட்டு அணிந்து அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

category:

1½ லட்சம் பேருக்கு விலையில்லா மின்சாதன பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் கே.பி.முனுசாமி தகவல்

Posted: 01 Jan 2014 11:35 AM PST

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டத் தில் இதுவரை 1½ லட்சம் பேருக்கு விலையில்லா மின் சாதன பொருட் கள் வழங்கப்பட்டுள் ளதாக அமைச்சர் கே.பி.முனுசாமி கூறி னார்.

விலையில்லா மின்சாதன பொருட்கள்

தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2 ஆயிரத்து 360 பெண்களுக்கு ரூ.94 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சி குப்பட்டி, கோட்டூர், ஒசபுரம் கிராமங்களில் நடந் தது.

விழாவிற்கு கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங் கினார். விழாவில் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு, விலையல்லா மின் சாதன பொருட்களை வழங்கி பேசியதாவது:-

பயனாளிகள்

தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு நல திட்ட உதவி களையும், சமூக நலப்பணி களையும் செய்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 414 பயனாளிகளுக்கு ரூ. 74 கோடியே 56 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள மின் சாதன பொருட்கள் வழங்கப் பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சிக்காக எண் ணற்ற திட்டங்களை தீட்டி, உபகரணங்களை தமிழக முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். நமது மாவட்டத்தின் அருகில் உள்ள கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட இவ்வாறு வழங்கியதில்லை. இன்று ஆண்டு ஒன்றுக்கு 92 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி உதவி தொகைகளை பெற்று வருகிறார்கள். வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு அனைத்து வசதி களும் கிடைக்க தமிழக முதல்- அமைச்சர் நல திட்டங்களை வழங்கி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.முனுசாமி பேசினார்.

விழாவில் மாவட்ட வரு வாய் அலுவலர் பாலசுப்பிர மணியன், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஓசூர் உதவி கலெக்டர் பிரவீன் பி.நாயர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அசோக்குமார், பேரூ ராட்சி தலைவர்கள் நாகேஷ் (தேன்கனிக்கோட்டை), சையத் அசேன் (கெலமங்கலம்) மற்றும் பலர் கலந்து கொண் டனர். முன்னதாக துணை கலெக்டர் ஜீனத்பீபீ வர வேற்றார். முடிவில் தாசில்தார் மாதேஸ்வரி நன்றி கூறினார்.

கோவில்கள், தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 01 Jan 2014 11:31 AM PST

கிருஷ்ணகிரி,

ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கோவில்கள் மற் றும் கிறிஸ்தவ தேவாலயங் களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆங்கில புத்தாண்டு

2014 ஆங்கில புத்தாண்டு நேற்று பிறந்ததையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங் களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. கிருஷ்ணகிரி சந்திர மவுலிஸ்வரர் கோவில், வர சித்தி விநாயகர் கோவில் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், சென்னை சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், புதுப்பேட்டையில் உள்ள கிருஷ்ணர் கோவில், வேணுகோபாலசாமி கோவில், அய்யப்பன் கோவில், பர்கூர் சாந்தகாளியம்மன் கோவில், அய்யப்பன் கோவில், வரட் டனப்பள்ளி லெட்சுமி நரசிம்ம சாமி கோவில், ஊத்தங்கரை காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் மத்தூர், காவேரிப்பட் டணம், வேப்பனப்பள்ளி உள் ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களில் நேற்று அதிகாலையில் நடைதிறக்கப் பட்டு, சாமிக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது. திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்கள்.

தேவாலயம்

இதேபோல் கிருஷ்ணகிரி பாத்திமா அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், ஓசூர் சி.எஸ்.ஐ. தேவாலயம், ஆர்.சி.தேவாலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டை முன் னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந் தது. இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய் தனர். பின்னர் ஒருவருக்கொரு வர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு, நண்பர் கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந் தனர். இதேபோல் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங் களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

புத்தாண்டையொட்டி இளைஞர்கள் நள்ளிரவில் பட் டாசு வெடித்தும், வாழ்த்துக் களை பரிமாறியும் கொண்டா டினர். இதையொட்டி முக்கிய பகுதிகளில் போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது.

ஓசூர்

ஓசூர் கோட்டை மாரியம் மன் கோவில், பெரியார் நகர் முருகன் கோவில், வரசித்தி விநாயகர் கோவில், மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர் கோவில் என அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமியை வழிபட் டனர். இதே போல சூளகிரி அருகே கோபசந்திரத்தில் தட்சிணதிருப்பதி என்றழைக் கப்படும் வெங்கடேஸ்வர சாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந் தது. சூளகிரி பிரசன்ன வரத ராஜ சுவாமி கோவில், காசி ஈஸ்வரர் கோவில்களில் புத் தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பேட்டராய சுவாமி கோவிலில் காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய் தனர். மேலும் கவி நரசிம்மர் கோவில், ராமாஞ்சநேய சுவாமி கோவில், காசி ஈஸ் வரன் கோவில், மற்றும் பல் வேறு கோவில்களில் விசேஷ பூஜைகள் நடந்தது. இதே போல உத்தனப்பள்ளி அகரம் முருகன் கோவில், ராயக் கோட்டை, கெலமங்கலம் பகுதிகளில் உள்ள கோவில் களிலும் பூஜைகள் நடந்தது.

அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Posted: 01 Jan 2014 10:58 AM PST

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல் - மோகனூர் ரோடு சித்தர்மலை அடிவாரத்தில் உள்ள சக்தி விநாயகர், சித்தேஸ்வரர், வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். இதேபோல் நேற்று நாமக்கல் நகரில் உள்ள பிற ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டது.

குமாரபாளையம்

குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் 36 அடி உயர பக்த ஆஞ்சநேயர் சுவாமி சிலை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று அனுமன் ஜெயந்தி, புத்தாண்டு மற்றும் மார்கழி அமாவாசை தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதில் 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. சுவாமிக்கு வடைமாலையும் சாத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். விழாவையொட்டி சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் காவேரி கரை முருகன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெண்ணெய் காப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன. இதையொட்டி காலை முதல் மாலை வரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வணங்கி சென்றனர்.

திருச்செங்கோடு

அனுமன் ஜெயந்தி, ஆங்கில புத்தாண்டு, மார்கழி அமாவாசை ஆகியவற்றை முன்னிட்டு திருச்செங்கோடு அக்ரகார தெருவில் உள்ள சஞ்சீவிராய பெருமாள் என்ற ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அதிகாலை சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், முத்தங்கி அலங்காரம், 1008 வடைமாலை சாற்றி ராமநாம பாடல்களுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோல திருச்செங்கோடு குமரேசபுரம் அனுக்கிரக ஆஞ்சநேயர் கோவிலிலும் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு யாக வேள்விகளுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்

ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சுவாமிக்கு பால் அபிஷேகம், வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெற்றது. ராமர் பாதம் மற்றும் நவ மாருதி சுவாமிக்கு திருமஞ்சனம் அபிஷேகமும் நடைபெற்றது. மேலும் விஷ்வக்ஷேன ஆராதனை, கலச ஆவாஹணம், ஆஞ்சநேய ஸகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது. நேற்று ஹோமங்கள் நடத்தப்பட்டு, தீபாராதனை, மேல் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிக்கு விசேச திருமஞ்சன அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு தங்கக்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராசிபுரம் - சேலம் ரோட்டில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஹோம நிகழ்ச்சிகள், மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிசேகம், அலங்காரம் மற்றும் ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையும், அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் சுவாமி வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ராசிபுரம் சிவானந்த சாலை இ.பி. காலனியில் வலம்புரி விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதேபோல ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் அலங்காரங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் காவிரி ஆற்றின் கரையில் எழுந்தருளி உள்ள காவேரி ஆஞ்சநேயருக்கு 12-ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை கணபதி ஹோமம், தொடர்ந்து பால், தேன், சந்தனம், இளநீர், கரும்புசாறு, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்களும் நடைபெற்றது. பின்னர் காவேரி ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர். விழா ஏற்பாடுகளை பரமத்திவேலூர் காவேரி ஆஞ்சநேயர் கோவில் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.இதேபோல வேலூர் புதுமாரியம்மன் ஆலயம் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகா பகுதியில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களிலும் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

மோகனூர்

மோகனூர் வெங்கட்டரமண பெருமாள் கோவில் முன்புறம் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 7 நாட்களாக சந்தனகாப்பு, வெண்ணை காப்பு, புஷ்ப அங்கி, காய்கறி, கனி, சர்வாபரணம், செந்தூரகாப்பு என தினசரி ஒரு அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

image: 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™