மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பிப்ரவரி முதல் வாரம் பாராளுமன்றம் கூடுகிறது
- இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இந்திய எல்லைக்குள் நுழையும் சீனத்துருப்புகள்
- ஆந்திராவில் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற மாணவி
- சிமோகா தொகுதியில் எடியூரப்பா போட்டி: நாளை பா.ஜ.க.வில் சேர்கிறார்
- சாலை விதிகளை மீறும் தூதரக வாகனங்களுக்கு இனி அபராதம்: அமெரிக்காவுக்கு இந்தியா கிடுக்கிப்பிடி
- நிலக்கரி ஒதுக்கீடு ஊழல்: பா.ஜ.க. ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. 2 புதிய வழக்குப் பதிவு
- 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: கனிமொழி மனு மீது 21–ந்தேதி விசாரணை
- மும்பை-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு
- சபரிமலை வரும் பக்தர்களிடம் போலீசார் கனிவாக நடக்க வேண்டும்: கேரள ஐகோர்ட்டு உத்தரவு
- சுந்தர்வனக் காடுகளில் காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்
- மும்பை அருகே ரெயிலில் தீ விபத்து: 9 பேர் பலி - ரெயில்வே கேட்மேன் தகவலால் பெரும் விபத்து தவிர்ப்பு
- புதிய சட்டங்களை கொண்டுவரும் முன் மக்கள் கருத்தை அறியும் திட்டம்: மத்திய அரசு பரிசீலனை
- மேற்கு தொடர்ச்சி மலை விவகாரம்: கேரள சட்டசபை முன்பு எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
- கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வெளிநாடு இந்தியர்களின் ஆதரவை நாடும் ஆம் ஆத்மி கட்சி
- அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும், 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்: ரிசர்வ் வங்கிக்கு சிபாரிசு
- சேது சமுத்திர திட்ட வழக்கில் இருந்து மத்திய அரசு வக்கீல் திடீர் விலகல்: விசாரணை ஒத்திவைப்பு
- 6 ஆயிரம் கோடி மதிப்பில் செயற்கை போதைமருந்துகளை கடத்த இருந்த கும்பல் கண்டுபிடிப்பு
- தெலுங்கானா போராட்டத்தில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு
- இமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங்கின் வருமானம் 2 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரிப்பு
| பிப்ரவரி முதல் வாரம் பாராளுமன்றம் கூடுகிறது Posted: 07 Jan 2014 11:58 PM PST பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பாராளுமன்றத்தை கூட்டி கூடுதல் செலவுக்கான முன் அனுமதி பெற திட்டமிட்டுள்ளனர். இதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி முதல் வாரம் கூடும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி |
| இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இந்திய எல்லைக்குள் நுழையும் சீனத்துருப்புகள் Posted: 07 Jan 2014 11:47 PM PST இந்தியப் பாதுகாப்புத்துறையின் தகவல்களின்படி கடந்த சில மாதங்களாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையேனும் சீனத் துருப்புகள் இந்திய எல்லைக்குள் நுழைவதாகத் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி இந்திய எல்லையின் சில இடங்களில் சீனப்படையினரின் ஊடுருவல்கள் காணப்பட்டன. அதன்பின் அந்த மாதம் 19, 20 தேதிகளில் சுமரில் உள்ள தெப்சங் சமவெளியிலும், ஜனவரி முதல் வாரத்தில் தக்டிப் பகுதியிலும் சீனத் துருப்புகள் கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. |
| ஆந்திராவில் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற மாணவி Posted: 07 Jan 2014 11:39 PM PST ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் 10–ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றார். பிரசவ வலி அதிகமாக இருந்தபோது அங்குள்ள கழிவறைக்கு சென்று குழந்தையை பெற்றார். உடனே அந்த குழந்தையை ஜன்னல் வழியே வெளியே வீசினார். காயத்துடன் கிடந்த அந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது. |
| சிமோகா தொகுதியில் எடியூரப்பா போட்டி: நாளை பா.ஜ.க.வில் சேர்கிறார் Posted: 07 Jan 2014 11:20 PM PST கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி பி.எஸ். எடியூரப்பா. 2008–ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. அவர் முதல்வர் ஆனார். தென் இந்தியாவின் முதல் பா.ஜனதா முதல்– மந்திரியான எடியூரப்பா சுரங்க நில பேர ஊழல் வழக்கில் சிக்கினார். இதனால் முதல்–மந்திரி பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாரதீய ஜனதாவில் இருந்து விலகி |
| சாலை விதிகளை மீறும் தூதரக வாகனங்களுக்கு இனி அபராதம்: அமெரிக்காவுக்கு இந்தியா கிடுக்கிப்பிடி Posted: 07 Jan 2014 10:58 PM PST அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைதூதராக பணியாற்றியவர் தேவயானி கோப்ரகடே. இவர், விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகவும், இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு மிகக்குறைந்த சம்பளம் அளித்ததாகவும் அமெரிக்க போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். |
| நிலக்கரி ஒதுக்கீடு ஊழல்: பா.ஜ.க. ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. 2 புதிய வழக்குப் பதிவு Posted: 07 Jan 2014 10:46 PM PST மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் இதனால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு எற்பட்டு இருப்பதாகவும் மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது |
| 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: கனிமொழி மனு மீது 21–ந்தேதி விசாரணை Posted: 07 Jan 2014 10:37 PM PST 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி எம்.பி. கைதாகி பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து கனிமொழி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ''2ஜி ஒதுக்கீடு முறைகேடுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து |
| மும்பை-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு Posted: 07 Jan 2014 09:17 PM PST மும்பை-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். தீக்காயம் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் |
| சபரிமலை வரும் பக்தர்களிடம் போலீசார் கனிவாக நடக்க வேண்டும்: கேரள ஐகோர்ட்டு உத்தரவு Posted: 07 Jan 2014 08:39 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்காத அளவில் இருக்கும். இருமுடி கட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் பதினெட்டாம்படி ஏறி சென்று சுவாமி அய்யப்பனை |
| சுந்தர்வனக் காடுகளில் காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் Posted: 07 Jan 2014 08:19 PM PST உலகளவில் பெரிய சதுப்புநிலக் காடுகளான சுந்தரவனக் காடுகளில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறித்த ஆய்வில் இறங்கியுள்ளனர். இந்தக் காடுகளில் மூன்றில் இரண்டு பங்கு வங்காளதேசத்திலும் மீதி இந்தியாவின் மேற்கு வங்கத்திலுமாகப் பரவியுள்ளது. வங்காள தேசத்துக் காடுகளில் தற்போது இந்த ஆய்வு நடைபெற உள்ளது. |
| மும்பை அருகே ரெயிலில் தீ விபத்து: 9 பேர் பலி - ரெயில்வே கேட்மேன் தகவலால் பெரும் விபத்து தவிர்ப்பு Posted: 07 Jan 2014 07:37 PM PST மும்பை டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். மும்பையில் இருந்து டேராடூன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் குஜராத் எல்லையோரம் உள்ள கோல்வாட் ரெயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்பகுதி ரெயில்வே கேட் அருகே பணியில் இருந்த 'கேட் மேன்' ரெயிலின் ஒரு பெட்டி தீ |
| புதிய சட்டங்களை கொண்டுவரும் முன் மக்கள் கருத்தை அறியும் திட்டம்: மத்திய அரசு பரிசீலனை Posted: 07 Jan 2014 02:17 PM PST புதிய சட்டங்களை இயற்றுவதற்கு முன்பாக பொதுமக்கள் கருத்தை அறியும் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மத்திய அரசின் அமைச்சகங்கள் புதிய சட்டங்களை இயற்றுவதாக இருந்தால், அந்த சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிந்து |
| மேற்கு தொடர்ச்சி மலை விவகாரம்: கேரள சட்டசபை முன்பு எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் Posted: 07 Jan 2014 01:42 PM PST மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கஸ்தூரி ரங்கன் கமிட்டி சில சிபாரிசுகளை செய்துள்ளது. இதில், அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கள் |
| Posted: 07 Jan 2014 01:17 PM PST கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்த கோர்ட்டில் தீர்ப்பு வெளியானால், வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்று, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று, நீதிபதிகள் சி.கே.பிரசாத், |
| பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வெளிநாடு இந்தியர்களின் ஆதரவை நாடும் ஆம் ஆத்மி கட்சி Posted: 07 Jan 2014 12:51 PM PST ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு நாட்டின் தலைமையகமான டெல்லி அரியணையில் அமர்த்திருக்கும் கட்சி ஆம் ஆத்மி கட்சி. இது தற்போதைய அரசியல் கட்சிகளின் போக்கு பிடிக்காத மக்களின் மனோநிலையை காட்டுகிறது. டெல்லி அரியணையில் அமர்ந்து 10 நாட்கள் ஆகியுள்ளநிலையில், ஆம் ஆத்மி கட்சி நாட்டின் தேசிய அரசியலிலும் கால்பதிக்க முடிவுசெய்து மிகக் கடுமையாக பணியாற்றி வருகிறது. |
| அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும், 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்: ரிசர்வ் வங்கிக்கு சிபாரிசு Posted: 07 Jan 2014 12:34 PM PST வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி உள்பட அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும், 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் |
| சேது சமுத்திர திட்ட வழக்கில் இருந்து மத்திய அரசு வக்கீல் திடீர் விலகல்: விசாரணை ஒத்திவைப்பு Posted: 07 Jan 2014 12:27 PM PST சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கில் இருந்து மத்திய அரசு வக்கீல் ராஜீவ் தவான் நேற்று திடீரென்று விலகினார். இதனால் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு காரணமாக, அந்த திட்டம் |
| 6 ஆயிரம் கோடி மதிப்பில் செயற்கை போதைமருந்துகளை கடத்த இருந்த கும்பல் கண்டுபிடிப்பு Posted: 07 Jan 2014 12:02 PM PST கனடாவில் வசித்துவரும் ராஜஸ்தானை சேர்ந்த தேவிந்தர் சிங்கை, பன்னாட்டு செயற்கை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பட்டியாலா போலீசாரால் கைதுசெய்தனர். இதையடுத்து நேற்று அவர் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். |
| தெலுங்கானா போராட்டத்தில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Posted: 07 Jan 2014 11:13 AM PST ஐதராபாத் நகரில் தனி தெலுங்கானா போராட்டம் மீண்டும் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று 2-வது நாளாக போலீஸ் தடையை |
| இமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங்கின் வருமானம் 2 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரிப்பு Posted: 07 Jan 2014 10:44 AM PST இமாச்சலப்பிரதேச முதல் மந்திரி வீரபத்ர சிங்கின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. 2010-2011 ஆண்டு வருமான வரிக்கணக்கு தாக்கல்களை ஆராய்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள், அவரது விவசாய வருமானம் 15 லட்சத்திலிருந்து சுமார் 3 கோடி ரூபாயாக உயர்த்துள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து விளக்கமளிக்கவும் வருமானவரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |