Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சோனியாவுக்கு கோயில்...

Posted: 08 Jan 2014 11:28 AM PST

- ஐதராபாத்: ஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் அமைக்கவிருப்பதாக இங்குள்ள காங் எம்.எல்.ஏ., ஒருவர் ஏற்பாடுகள் செய்து வருகிறார். தெலுங்கானா அமைப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவரது சொந்த செலவில் தெலுங்குத்தாய் போன்று அம்மன் உருவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டவுள்ளதாகவும் கூறியுள்ளார். 9 ஏக்கர் நிலத்தில் இந்த கோயில் : இது குறித்து காங்., எம்.எல்.ஏ., டாக்டர் சங்கர் ராவ் கூறுகையில்: தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை சோனியா நிறைவேற்றினார். ...

நம் காதல் என்றும் பிரியாது

Posted: 08 Jan 2014 10:41 AM PST

(காதல் என்றும் பிரியாது)
!
"உன் அன்பிள் சிக்கிய நானும் என் இதயத்தில் சிக்கிய நீயும்
நம்
இதய துடிப்பு அடங்கும் வரை நம் காதல் பிரியாது.....!!!
!
!
(kaathal piriyaadhu)
!
"un anpil sikkiya naanum en ithayaththil sikkiya niyum
nam
ithaya dhudippu adankum varai nam kaathal piriyadhu.....!!!
!
¥~~~¤~~~¤~~~¤~~~¤~~~¤~~~¤~~~+¥

by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை

பிளாஸ்டிக்....என்னும் எமன் உருவான விதம்....

Posted: 08 Jan 2014 09:29 AM PST

வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று பிளாஸ்டிக் என்றால் மிகையில்லை.இன்று பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து நம் இயற்கை சூழ்நிலையையே பாழ்படுத்திவருகிறது. பாழ்படுத்தி வருகிறோம்.ஆனால் பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு நம்மில் நிறைய பேருக்கு தெரியாது !! இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை ...

ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் - பிறந்த தினம் ஜனவரி 8

Posted: 08 Jan 2014 09:24 AM PST

ஜனவரி 8: ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம் ஜனவரி எட்டு. இதே தினத்தில் எழுபத்தி ஒரு வருடங்களுக்கு முன் பிறந்தார் அவர் ;பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள் அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . அப்பா மருத்துவம் படிக்க சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி ...

குசும்பு - ஒரு பக்க கதை

Posted: 08 Jan 2014 09:24 AM PST

வைதேகி, கடலில் நான் கட்டிய பாலத்தை பார். அதில் ஆர்ப்பரித்து மோதும் அலைகள் எவ்வளவு அழகாக காட்சியளிக்கின்றன என்று இராமன் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு போகும்போது சீதா தேவியிடம் பாலத்தை காட்டி சொன்னதாக ரகுவம்சத்தில் மகாகவி காளிதாசன் எழுதியிருக்கிறார். - இராமர் பாலம் பற்றிய ஆதாரம் இராமாயணம் தவிர வேறு எதாவது காவியத்தில் இருக்கிறதா? சந்தேகம் தெளிதல் நிகழ்ச்சியில் ஆன்மிக உபாசகர் கிரிதர ஸ்வாமியிடம் யாரோ கேட்ட கேள்விக்கு பதில் கூறி விட்டு அடுத்து .. என்று கூட்டத்தை பார்த்தார். - எந்த ...

சவுதி அரசின் புதிய கட்டுப்பாட்டால் 28 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்..!

Posted: 08 Jan 2014 09:23 AM PST

சவுதி அரேபியாவில் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் மட்டுமே தங்கி பணிபுரிய முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் 28 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புதிய திட்டத்தை கொண்டு வர சவுதி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டவரைவை அந்நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இந்த சட்டவரைவின்படி ...

பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி

Posted: 08 Jan 2014 09:21 AM PST

பூமியின் மையப்பகுதியில் (CORE) எரிமலைக் குழம்பு போல் வெப்பமான லாவா காணப்படுகின்றது. இதன் வெப்பநிலை முன்னர் அதாவது 1990 ஆண்டு முதல் 5000 டிகிரி எனக் கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் நவீன ஆய்வுகளின் மூலம் இது தவறு என்றும் இதன் உண்மையான வெப்பநிலை 6000 டிகிரி என விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த மையப்பகுதியின் வெப்பநிலையான 6000 டிகிரி சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலைக்குச் சமமானது. எக்ஸ் ரே (X-RAY) கதிர்களைப் பயன்படுத்தி இரும்புத் துகள்களை அதி அழுத்தத்தில் வெப்பமாக்கி அது எவ்வாறு ...

திருபள்ளியெழுச்சி

Posted: 08 Jan 2014 09:07 AM PST

சின்னதோ பெரியதோ
வீட்டுக்கு வீடு
ஓர் பகை.

அப்பாவிற்கு அம்மா
அம்மாவிற்கு அப்பா
குழந்தைக்கு இருவரும் பிடிக்கவில்லை.

காலம் மாறிபோச்சு
ஆடு மாடு மேய்த்ததுபோய்
நாய்கள் மேய்க்கிறார்கள்.

யார் பாடுவதோ
திருபள்ளியெழுச்சி
தூங்கும் அரசை தட்டியெழுப்பி.

"நீங்களே செய்து பாருங்கள்' வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்

Posted: 08 Jan 2014 08:56 AM PST

வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. "நீங்களே செய்து பாருங்கள்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் புதன்கிழமை (டிச.18) தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் ...

க.ப. அறவாணன் மற்றும் தாயம்மாள் அறவாணன் ஆகியோருடன் - ஆதிரா

Posted: 08 Jan 2014 08:51 AM PST

மனோமன்ணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர். க.ப. அறவாணன் சுமார் 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். அவரது துணைவியாரும் அன்னை தெரசா பல்கலைகழகத்தில் பேராசிரியாகப் பணிநிறைவு செய்தவருமான முனைவர். தாயம்மாள் அறவாணன் இவர் 20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். மற்றும் ஃப்ரான்சு முகநூல் நண்பர் சாம் விஜய் ஆகியோருடன். பிரான்சு நண்பருக்கு க. ப. அவர்களை அறிமுகப் படுத்தி க.ப. அவர்களின் புத்தகங்களை வாங்கிக் கொடுத்த போது.. க.ப. அறவாணன் ஐயா அவர்களது இல்லத்தில்.

உண்ணும் முன் ஒரு கணம் எண்ணுங்கள் - பரோட்டா

Posted: 08 Jan 2014 08:44 AM PST

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது  அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடி நீக்கிப்பிறத்தல்........ என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் பாடினார்.பெறுவதற்கு அரிய இந்த உடம்பை நாம் பேணிக்காக்க நமது முன்னோர்கள் சீரான உணவுப்பழக்க வழக்கங்களினை ஏற்படுத்தியிருந்தனர்.அதனால் தான் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தனர்.தற்போது நாம் அதிலிருந்து விலகி தீமை தரும் உணவுகளினை சாப்பிடுகிறோம்.தமிழகம் எங்கும் இனிப்புக்கடைகளும் புரோட்டாக்கடைகளும் பெருகிவருகின்றன.அதன் விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் எச்சரிக்கை! தினமும் ...

உண்ணும் முன் ஒரு கணம் எண்ணுங்கள் -சர்க்கரை

Posted: 08 Jan 2014 08:40 AM PST

உண்ணும் முன் ஒரு கணம் எண்ணுங்கள் -சர்க்கரை (சீனி) நாள் தோறும் நாம் உண்ணும் பொருள்களான காப்பி,தேநீர்,சாக்லேட்,இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றில் சீனி என்றும் சர்க்கரை என்றும் அழைக்கப்படுகின்ற அஸ்கா சர்க்கரை பயன்படுத்துகின்றோம்.ஆனால் இந்த வெள்ளைச்சீனி நமது உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று எண்ணிப்பார்ப்பதில்லை.சீனியின் வரலாற்றினையும் அது பிறக்கும் முன் எத்தனை விதமான ரசாயனக்கலவைகளில் குளித்து வருகிறது என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.அப்போது ...

2014ம் ஆண்டில் வரும் அபூர்வமான நாட்கள் !

Posted: 08 Jan 2014 08:31 AM PST

• 2014ம் ஆண்டு ஜனவரி 1 மற்றும் டிசம்பர் 21ம் தேதிகளில் இரண்டு முறை அனுமன் ஜெயந்தி வருகிறது. • 2014 ஆங்கில புத்தாண்டில் அமாவாசை இருந்தது போல தமிழ்ப்புத்தாண்டில் (ஏப்ரல் 14) பவுர்ணமி தினமாகும். • சித்திரை மாதம் கடைசிநாளில் சித்ரா பவுர்ணமி வருகிறது. • ஜனவரி 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி சனிக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது. • ஜனவரி மாதமும், மார்ச் மாதமும் 2-முறை அமாவாசை தினம் வருகிறது. • ஜனவரி 30ம் தேதி அமாவாசை தினத்தன்று திருவோணமும் வருகிறது. • ஜனவரி 11ம் தேதி ஏகாதசி தினத்தன்று ...

இயற்கை வேளாண்மை

Posted: 08 Jan 2014 08:30 AM PST

மண்ணை வேதியியல் உரங்கள் இட்டு மலடாக ஆக்கி கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் இயற்கை வேளாண்மை செய்து வெற்றி பெற்று அனைவருக்கும் உதாரணமாக விளங்கிக்கொண்டிருக்கின்ற திரு செல்வராஜ் அவர்களின் தோட்டங்களினை பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. திரு செல்வராஜ் அவர்களினைப்பற்றி கூற வேண்டும் எனில் மண்ணை பொன் போல பாதுகாக்கின்றார்.மண்புழு கொண்டு உரம் தயாரித்து பயன்படுத்துகிறார்.செயற்கை குளம் அமைத்து நீர் தேக்கிகுறைந்த மின்சாரத்தினை பயன்படுத்தி  பாசனத்திற்கு பயன்படுத்துகிறார்.நீர் ...

கிராமங்கள்

Posted: 08 Jan 2014 08:26 AM PST

வசதி இல்லாத
கிராமங்கள்தான்
வாழ வசதியானவை..!!

வேலன்:-2014-ம் வருட காலண்டர் நாமே தயாரிக்க

Posted: 08 Jan 2014 08:15 AM PST

 புத்தாண்டு பிறந்துவிட்டது. நீங்கள் உங்களுக்கான காலண்டரை நீங்களே தயாரிக்கலாம்.இதன் முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும். இதில் உள்ள சாப்ட்வேரினை டவுண்லோடு செய்து ஓப்பன் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Yearly Planner.6-Month Planner.Monthly Planner.Picture Calendar என 12 விதமான டேம்ள்ளேட்டுகள் கொடுத்துள்ளார்கள். இதில் முதலில் உள்ள வருடாந்திர பிளானரில் நாம் அந்த வருடத்திய பிளான்களை பதிவிறக்கம் செய்து குறித்துவைத்துக்கொள்ளலாம். அதுபோல 6 மாதம் மற்றும் மாத ...

காமுகரும் கழிசறை நாய்களும்

Posted: 08 Jan 2014 08:14 AM PST

காம வேடர்களின் கட்டுக்கடங்கா ஆசை கழிசறை நாய்களின் சாமி பூசை -இரண்டும் காலத்தை ஏமாற்றி ஞாலத்தை கா மாற்றும் வன்புணர்வு எனும் தீனிக்கு மெய்யுணர்வு அற்றவனின் காட்டேரிச் செயல் ஈனமான உன் சிந்தனை ஊனமான உன் வஞ்சனை உதிர உண்ணியாக - ஏன் குழந்தைகள் மேல் படர வேண்டும்? இந்த சின்னஞ்சிறு பூக்கள் புற்று நோயா தருகிறது? புன்னகையை தானே பூக்கிறது!! புரிந்து கொள்ளாத பூர்வீகமே!! தாய் - பிள்ளைகள் என்றாவது பிரித்தறிய மாட்டீர்களா? (ஒரு தந்தை தனது 9 வயது மகளை வன்புணர்வுக்கு ...

அபூர்வ கானங்கள்

Posted: 08 Jan 2014 08:09 AM PST

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ...

‘காமராஜர் சென்ட்!’ காங்கிரஸின் சர்வரோக நிவாரணி

Posted: 08 Jan 2014 08:06 AM PST

நாற்பது ஆண்டுகால வரலாற்றில், முதன்முதலாக தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்போது நடுக்கம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி இருக்கும் திசையின் பக்கமே திரும்பவில்லை அ.தி.மு.க.. ஏதோ, அவர்களைப் பார்ப்பதே பாவம் என்பதைப்போல கழுத்தைத் திருப்ப ஆரம்பித்திருக்கிறது தி.மு.க.. இனி எந்த இறைத்தூதன் வந்து காங்கிரஸ் தலைவர்களை இந்தத் தேர்தலில் காப்பாற்றுவானோ தெரியவில்லை! ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனும், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேசும் பேச்சைப் பார்த்தால், அத்தனை தொகுதிகளிலும் ...

வேலன்:-காலரி கணக்கிட்டு உணவு உண்ண

Posted: 08 Jan 2014 08:01 AM PST

நாம் சாப்பிடும் உணவுப்பொருளுக்கு ஒவ்வொரு சத்துக்கள்உள்ளது. அதுபோல ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் காலரி சத்துக்கள் கொழுப்பு சத்துக்கள் உள்ளது. உணவுப்பொருட்களின் காலரி சத்துக்களை நாம் எளிதில் அறிந்து கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் ஆணா பெண்ணா என தேர்வு செய்யவும். ஆணாக இருக்கும் பட்சத்தில உங்களுக்கு ஓரு நாளைக்கு 2500 காலரிகளும். பெண்ணாக இருக்கும் பட்சத்தில் 2000 ...

மண் ஜாடி!

Posted: 08 Jan 2014 07:56 AM PST

மருதூர் என்ற நாட்டை விமலன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு அபூர்வ வேலைப்பாடுகள் கொண்ட ஜாடிகளை சேகரித்து வைப்பது பொழுதுபோக்கு. அவ்வகையில் முப்பது ஜாடிகளை சேகரித்து வைத்து, பத்திரமாக பாதுகாத்து, அவற்றை தினமும், பார்த்துப் பார்த்து ரசிப்பான். ஒருநாள் அரண்மனைப் பணியாளன் ஒருவன் அந்த மண் ஜாடிகளை தூசு துடைக்க எடுத்தான். அப்போது கைத் தவறுதலாக ஒரு ஜாடியை உடைத்து விட்டான். மண் ஜாடி உடைந்து போனதை அறிந்த மன்னன், அந்த அரண்மனைப் பணியாளனை ஒரு மாதம் சிறையில் அடைத்து, அதன்பிறகு அவனுக்கு மரண தண்டனை விதிக்குமாறு ...

கருஞ்சீரகம் !

Posted: 08 Jan 2014 07:43 AM PST

கருஞ்சீரகத்தின் பலன்கள் :- * தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். * புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். *பால் சுரப்பைக் கூட்டும். * சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும். * கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையிëல் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும். ...

திடக்கழிவு மேலாண்மை -அறிந்து கொள்வோம்

Posted: 08 Jan 2014 07:06 AM PST

அறிந்து கொள்வோம் குப்பைகளினை கையாளும் விதங்களினை "மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் வானையளப்போம் கடல் மீனையளப்போம் சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித்தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்" என்றான் முண்டாசுக்கவிஞன் பாரதி.பாரதியின் கூற்றுப்படி இன்றைய காலகட்டத்தில் சந்தித்தெருப்பெருக்கும் சாத்திரங்களினை குப்பைகளினை கையாளும் விதங்களினை கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் உள்ளோம். நம் நாடு பல்வேறு இயற்கை வளங்களினை தன்னகத்தே கொண்டது.காடுகள்,மலைகள்,நீர்வீழ்ச்சிகள்,ஆறுகள்,விலங்கினங்கள்,ஏரிகள்,குளங்கள்,நீர்வீழ்ச்சிகள்,தாவரவகைகள் ...

என்னுடைய பனித்துளியில் பனைமரம் (ஹைக்கூ) நூலின் ஆய்வுரை

Posted: 08 Jan 2014 06:13 AM PST

கவிதை புத்தகங்களை வாங்க http://www.kaviaruviramesh.com/ http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from= பனைமரத்தின் கீழ் பால் குடித்தேன்…! தமிழ் ஹைக்கூ கவிதைகளைச் சிற்றிதழ்களும் வணிக இதழ்களும் வெளியிட்டு வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கவிஞர்கள் பலரும் ஆர்வ மேலீட்டால் ஹைக்கூ கவிதை தொகுப்புகளை வெளியிட்டு அறிமுகமாகி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹைக்கூ நூல்கள் வெளிவருகின்றன. ஹைக்கூ கவிதை மீதான விமர்சனக் கணைகள் இன்னும் வீசிக்கொண்டுதான் ...

மரபு சாரா எரிசக்தி -சூரிய மின்சக்தி மானியம் பெற

Posted: 08 Jan 2014 06:07 AM PST

சோலார் பேனல் மான்யத்திற்கு ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம். வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் ...

சுற்றுச்சூழல் பற்றிய எனது வலைப்பூ

Posted: 08 Jan 2014 06:06 AM PST

சுற்றுச்சூழல் பற்றிய எனது வலைப்பூ
பாருங்கள்
இணையுங்கள்
இயற்கையினை பாதுகாக்க கை கோருங்கள்
neernilammanithan.blogspot.in

வெல்லம் !

Posted: 08 Jan 2014 05:55 AM PST

இனிப்பு ஆபத்தானது என்பதை ஈராயிரம் முறைகள் சொல்லக் கேட்டிருப்போம். ஆரோக்கிய வாழ்க்கைக்கு இனிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே  மருத்துவம் சொல்லும் முதல் தகவல். பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவர்கள் விதிக்கிற  தடைப்பட்டியலில் முதன்மையானது இனிப்பு. ஆனால், இத்தனை பழிகளும் சர்க்கரைக்கே. சர்க்கரைக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படுகிற வெல்லத்தில்  பெரிய வில்லங்கம் எதுவும் இல்லை! இன்னமும் கிராமப்புறங்களில் காபி, டீ உள்பட எல்லாவற்றுக்கும் சர்க்கரைக்குப் பதில் ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -83)

Posted: 08 Jan 2014 05:54 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

அவள் அவ்வளவு முக்கியமல்ல

Posted: 08 Jan 2014 02:09 AM PST

அவள் அவ்வளவு முக்கியமல்ல... கிழவிதான் பெரிதாய் ஏதும் வரலாறு இல்லை பறையனின் மனைவி பிள்ளைகள் பெறாததால் மலடி... என் குடும்பம் அவளை ஒருபோதும் வீட்டிற்குள் அனுமதித்ததில்லை புன்னகைக்க வாய்ப்பளிக்கபடாதவள் எங்களின் எந்த வசவுகளுக்கும் அவள் சங்கடப்பட்டதில்லை.. மழையானாலும் வெயிலானாலும் அவளுக்கு உபசரிப்பு மட்டும் வெளியில்தான்... அத்தனை பெரியவளாயிருந்தும் என்னை முதலாளி என்றே அழைத்தாள்.. அன்பானவள்தான் இருந்தும் அனுமதிக்கவில்லை.. தீண்டதகாதவளென்று..!! அது மழைக்காலம் அடைமழை விட்டிருந்த அடுத்த ...

செந்தில் அவர்களை அறிமுகப் படுத்துகிறேன்.

Posted: 08 Jan 2014 02:07 AM PST



எனது உடன் பிறவா அருமைத் தம்பி செந்தில் ஈகரையில் இணைந்துள்ளார். பெங்களூருவைச் சார்ந்த இவர் தீவிர நடிகர் திலகத்தின் அபிமானி. இளம் வயது கொண்ட இவர் நடிகர் திலகத்தின் மீது உயிரையே வைத்துள்ளார். நடிகர் திலகம் திரியில் (The Hub) மிகச் சிறப்பாக பங்காற்றி வருபவர். அவரை ஈகரையின் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன். நமது உறுப்பினர்களும் அவரை அன்புடன் வரவேற்பார்கள் என்பதில் ஐயமென்ன?

தே.மு.தி.க. குறிவைக்கும் 15 தொகுதிகள்!

Posted: 08 Jan 2014 01:58 AM PST

நாடாளுமன்றத் தேர்தல் கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது. கூட்டணி மேகங்கள் சூழ ஆரம்பித்திருக்கின்றன. தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தே.மு.தி.க. மீது பார்வைகள் படர்ந்திருக்கின்றன. 'விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவார்?' என்ற பட்டிமன்றம் பட்டிதொட்டி எங்கும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், விஜயகாந்த்தின் பலம் என்ன, தே.மு.தி.க-வுக்கு செல்வாக்கான தொகுதிகள் எவை என்று ஓர் அலசல் ரிப்போர்ட்!   தே.மு.தி.க-வுக்கு இது மூன்றாவது தேர்தல் களம். 2005-ல் தே.மு.தி.க. உதயமான பிறகு 2006-ல் சட்டசபைத் ...

சவுதி அரசின் புதிய கட்டுப்பாட்டால் 28 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்..!

Posted: 08 Jan 2014 01:24 AM PST

சவுதி அரேபியாவில் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் மட்டுமே தங்கி பணிபுரிய முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் 28 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புதிய திட்டத்தை கொண்டு வர சவுதி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டவரைவை அந்நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இந்த சட்டவரைவின்படி வெளிநாடுகளை ...

ஆரோக்கியப் பெட்டகம் சோயா !

Posted: 07 Jan 2014 11:51 PM PST

உடல் வளர்ச்சிக்கு புரதமே அடிப்படை. உடலில் புதிய திசுக்களைக் கட்டமைக்கவும், அழிந்த திசுக்களுக்குப் பதிலாக புதிய திசுக்களை உருவாக்கவும் புரதம் அவசியம். ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு ஒவ்வொரு கிலோ கிராம் எடைக்கும் ஒரு கிராம் என்ற விகிதத்தில் புரதம் தேவை என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், நம் எல்லோருக்கும் அந்தளவு புரதம் கிடைக்கிறதா என்றால் சந்தேகம்தான். நல்ல புரதம் என்று பார்த்தால், எப்போதும் விலங்குகளிடம் இருந்து பெறப்படுகிற புரதம்தான் சிறந்தது. அத்தியாவசிய அமினோ அமிலமான ஒமேகா 3 ...

பால்வழியில் பாவையிவள்

Posted: 07 Jan 2014 09:56 PM PST

[center] வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிட்டு பறந்துவர நட்போடு என்னை அழைத்துச்சென்று இறக்கிவிட்டன வெண்பஞ்சு வானமென்னும் மெத்தையிலே நானும் விழ புகை மண்டல தேவதைகள் கைப்பிடித்து அழைத்துச்செல்ல வானவில்லால் கட்டிய நிலவு ஊஞ்சலில் இவளை அமரவைத்தன நட்சத்திரங்கள் என்னருகமர்ந்து ஒன்றுகூடி ஒளி வீச சூரியனும் தூர நின்று கடும் குளிரை மறையச் செய்ய பூமி வந்து அருகமர்ந்து பசுமைஎன்னும் விசிறி வீச கோள்களெல்லாம் என்னை சுற்றிவந்து கோலாக்கலமூட்ட பால்வழி அண்டத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™