Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காங்கிரசில் இருந்து விலக கிரண்குமார் ரெட்டி முடிவு

Posted: 05 Jan 2014 11:13 PM PST

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க சீமாந்திரா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதில் தீவிரமாக இருக்கும் மத்திய அரசு இதற்கான மசோதாவை தயார் செய்து ஆந்திர சட்டசபையின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. ஆனால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், ஆந்திர மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மசோதா மீது மாநில சட்டசபையின் கருத்தை 23–ந்தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி ஜனாதிபதி கெடு விதித்து உள்ளார்.

ரெயில்வே கேட் மூடப்பட்டதால் கம்யூ. தொண்டரின் ஆட்டோவில் பயணம் செய்த கேரள முதல்வர்

Posted: 05 Jan 2014 10:35 PM PST

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குமார நல்லூரில் புகழ்பெற்ற யோக ஷேமா சபை உயர் நிலைப்பள்ளி உள்ளது. நேற்று இந்தப்பள்ளிக் கூடத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்–மந்திரி உம்மன் சாண்டி அரசு காரில் போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தார்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தமிழக அரசு நிர்வாக அதிகாரியை நியமித்தது ரத்து: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Posted: 05 Jan 2014 10:22 PM PST

சிதம்பரம் நடராஜர் கோவில் காலம் காலமாக பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கோவிலை கட்டிய சோழ மன்னர்கள் பொது தீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட அனுமதித்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கோவில் நிர்வாகத்தை தமிழக அரசு கையில் எடுத்து கொண்டது. அதைத் தொடர்ந்து கோவிலை நிர்வகிப்பதற்காக செயல் அதிகாரி

டெல்லியில் கடுமையான பனி மூட்டம்: 150 விமான சேவைகள் பாதிப்பு

Posted: 05 Jan 2014 09:30 PM PST

தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனி பெய்து வருகிறது. இரவு முழுவதும் இடைவிடாது பெய்யும் பனியினால் ஏற்படும் மூட்டம் காலை 10 மணி வரையிலும் விலகாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேர்ந்துள்ளது. ரெயில் பாதைகளிலும் தொலை தூரத்தில் உள்ள காட்சிகளை தெளிவாக காண இயலவில்லை. இதே போல், டெல்லி விமான நிலைய

அவசர கால ஒதுக்கீடு: ரெயில் டிக்கெட் மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை

Posted: 05 Jan 2014 07:39 PM PST

அவசர கால ஒதுக்கீடு ரெயில் டிக்கெட்டுகளை மோசடியாக விற்பனை செய்த ஊழலில் சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. ரெயில்வேயில் 'இ.கியூ.' என்ற பெயரில் அவசர கால பயணத்துக்காக ரெயில் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதை வி.ஐ.பி. இட ஒதுக்கீடு, தலைமையிட இட ஒதுக்கீடு என்றும் கூறுவது உண்டு. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து சராசரியாக ஒரு நாளுக்கு 35 ஆயிரம் டிக்கெட்டுகள் இந்த இ.கியூ. ஒதுக்கீட்டின்கீழ் வழங்கப்படுகின்றன.

பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும்: தேர்தல் கமிஷன் தீவிர பரிசீலனை

Posted: 05 Jan 2014 07:30 PM PST

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவில் தற்போது 15-வது பாராளுமன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் பதவிக்காலம், வரும் ஜூன் 1-ந்தேதி முடிகிறது. புதிய 16-வது பாராளுமன்றம் மே 31-ந்தேதிக்குள் அமைக்கப்படவேண்டும். இதற்கு ஏற்ற வகையில் புதிய பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க

இந்தியாவின் மிகப்பெரிய போர்கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா அரேபிய கடல் எல்லைக்குள் நுழைந்தது

Posted: 05 Jan 2014 03:28 PM PST

ரஷ்யாவின் செவெரோட்வின்ஸ்க் நகரின் செவ்மாஷ் கப்பல் கட்டும் தளத்தில் பெறப்பெட்ட இந்தியாவின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, கடந்த நவம்பர் மாதம் தனது பயணத்தை தொடங்கியது. நீண்ட கால கடல் பயணத்திற்கு பிறகு அந்த கப்பல் நேற்று இந்தியாவின் அரேபியக்கடல் எல்லைக்குள் இறுதியாக நுழைந்தது.

சோனியாகாந்திக்கு அருண் ஜெட்லி கண்டனம்: “வீரபத்ரசிங்கின் ஊழலை மறைப்பதா?”

Posted: 05 Jan 2014 02:33 PM PST

இமாச்சலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக உள்ள வீரபத்ர சிங், மாநில அரசுடன் தொடர்பு வைத்துள்ள மின் நிறுவனம் ஒன்றில் இருந்து வட்டியில்லா கடன் வாங்கி

மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை உயராது: மத்திய மந்திரி பனபாக லட்சுமி பேட்டி

Posted: 05 Jan 2014 01:14 PM PST

மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய மந்திரி பனபாக லட்சுமி தெரிவித்தார். மத்திய பெட்ரோலியத் துறை இணை மந்திரி பனபாக லட்சுமி, நேற்று

மும்பையில் ரூ.118 கோடி போதைப்பொருளை கடத்திய சென்னை ஆசாமி கைது

Posted: 05 Jan 2014 11:17 AM PST

மும்பையில் ரூ.118 கோடி போதைப்பொருளை கடத்திய சென்னை ஆசாமி கைது

கர்நாடகாவில் மந்திரிபதவி வேண்டி மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

Posted: 05 Jan 2014 11:05 AM PST

கர்நாடகாவில் கடந்த மே மாதம் முதல் முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செலுத்திவருகிறது. இந்த அரசின் மந்திரி சபை சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இதில் கரைபடிந்த எம்.எல்.ஏ.க்களான டி.கே. சிவக்குமார் மற்றும் ரோஷன் பெய்க் ஆகியோரை சித்தராமையா தனது கேபினட் மந்திரிசபையில் சேர்த்துகொண்டார்.

பெங்களூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் தடம் புரண்டது

Posted: 05 Jan 2014 10:29 AM PST

பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தின் 4-வது மற்றும் 5-வது பிளாட் பாரத்திற்கு இடையே ரெயில்களை நிறுத்துவதற்கான 'ஷெட்' உள்ளது. அந்த ஷெட்டில் இருந்து நேற்று காலையில் ரெயில் என்ஜினை மட்டும்

வரும் தேர்தல் ஒரு மக்கள் இயக்கமாக மாறும்: டெல்லியில் மோடி பேச்சு

Posted: 05 Jan 2014 10:13 AM PST

யோகா குரு பாபா ராம்தேவின் 'பாரத் ஸ்வாபிமான் டிரஸ்ட்' திறப்பு விழா நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடந்தது. இதில் பாரதியஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தலைவர் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நரேந்திர மோடி பேசியதாவது:-

டெல்லி மெட்ரோ ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ. 1 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த பாதுகாப்பு படை வீரர்

Posted: 05 Jan 2014 07:29 AM PST

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த நபர் தவற விட்ட 1 லட்சம் ரூபாயை கண்டெடுத்த மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் அதனை உரியவரிடம் சேர்ப்பிக்க உதவி செய்துள்ளார். டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஒன்றான சவ்ரி பஜார் நிலையத்தில் நேற்று மாலை பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் பணியில் சுதிர் குமார் என்ற மத்திய தொழில் பாத்காப்பு படையை (சி.ஐ.எஸ்.எஃப்.) சேர்ந்த போலீஸ்காரர் ஈடுபட்டிருதார். அப்போது சோதனை இயந்திரத்தின் அருகே வெகு நேரமாக

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெண் அமைச்சர் கார் மீது தாக்குதல்

Posted: 05 Jan 2014 07:21 AM PST

புதுடெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கட்சியில் 6 மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். 6 பேரில் ஒருவர் ராக்கி பிர்லா என் பெண்ணும் ஒருவர். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். இன்று இவர் டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது. அப்போது கூடட்டதில் இருந்த அடையாளம் தெரியாத நபர்களால் அவர் கார் தாக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி வளர்ந்த கட்சிகளுக்கான எச்சரிக்கை: மத்திய மந்திரி ஆரூடம்

Posted: 05 Jan 2014 06:29 AM PST

நாடு முழுவதிலும் தலை தூக்கி வரும் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியால் வளர்ந்த கட்சிகள் அழிந்துப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். குஜராத் மாநிலம், நடியாட் அருகே புற்றுநோய் சிறப்பு மருதுவமனையை துவக்கி வைத்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், 'ஆம் ஆத்மி கட்சியின் வருகையால் நாட்டின் அரசியல் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அடைந்த வெற்றி மக்களின் உரிமைக்குரலுக்கு கிடைத்த வெற்றியாகும். தற்போது டெல்லி அளவில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவிலும் தலை தூக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற வளர்ந்த கட்சிகள் இனியும் மக்களின் குரல்களுக்கு செவி சாய்த்து மதிப்பளிக்க தவறினால்

மாரத்தானில் பங்கேற்று 30 கி.மீட்டர் சைக்கிள் மிதித்த உ.பி. முதல் மந்திரி அகிலேஷ் யாதவ்

Posted: 05 Jan 2014 05:30 AM PST

சமாஜ்வாதி கட்சியின் சார்பில் உத்தர பிரதேசத்தில் இன்று அக்கட்சி தொண்டர்களுக்கான மாரத்தான் சைக்கிள் போட்டி நடைபெற்றது. எடாவா மாவட்டத்தில் உள்ள சிக்கோஹாபாத் ராம்லீலா மைதானத்தில் இன்று காலை தொடங்கிய இந்த போட்டி 52 கிலோ மீட்டர்களை கடந்து சஃபாய் என்ற இடத்தில் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது. போட்டியை தொடங்கி வைக்க வந்த முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், சற்றும் எதிர்பாராத விதமாக, 'நானும் இந்த போட்டியில் பங்கேற்று சைக்கிள் ஓட்டப் போகிறேன்' என்று கூறினார். அவரது அறிவிப்பை கேட்டு குதூகலம் அடைந்த கட்சி தொண்டர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ‘ஆம் ஆத்மி’ வியூகம்: 10-ம் தேதி முதல் நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்ப்பு

Posted: 05 Jan 2014 03:18 AM PST

டெல்லியில் ஆட்சியில் அமர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இது பற்றி ஆலோசிக்க டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.- டி5 ராக்கெட்

Posted: 05 Jan 2014 03:06 AM PST

தகவல் தொடர்பு சேவைக்கு பயன்படும் 1,982 கிலோ எடை கொண்ட ஜி சாட்-14 என்ற செயற்கை கோளை ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. 160 அடி உயரமும் 414 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி டி-5, முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது.

டெல்லியில் கடுமையான மூடுபனி: விமான சேவைகள் தாமதம்

Posted: 05 Jan 2014 02:47 AM PST

தலை நகர் டெல்லியில் பெய்து வரும் கடுமையான் பனியால் இன்று அதிகாலை பல பகுதிகள் பனி மூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தன. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™