Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தெலுங்கானா விவகாரம்: ஆந்திர சட்டசபையில் கடும் அமளி

Posted: 02 Jan 2014 11:19 PM PST

ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா மசோதா மீதான விவாதம் இன்று தொடங்குவதாக இருந்தது. சபை கூடியதும் ஆந்திர மாநில பிரிவினை குறித்து கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வற்புறுத்தினர். சபாநாயகர் இதற்கு அனுமதி மறுத்தார். உடனே எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்குதேசம், ஒஸ்.எஸ்.ஆர்.

ஓரினச் சேர்க்கை தொடர்பான தீர்ப்பை விமர்சிப்பதா?: மத்திய மந்திரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

Posted: 02 Jan 2014 11:16 PM PST

ஓரினச் சேர்க்கையாளர்கள் சம்மதத்துடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது குற்றச்செயல் அல்ல என்று டெல்லி ஐகோர்ட்டு கூறிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி ரத்து செய்தது. இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம். இதற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு இருப்பது செல்லும் என்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் கருத்து தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் கூறும்போது,

கோவாவின் சூதாட்ட கிளப்புகளில் குழந்தைக் காப்பகங்கள்

Posted: 02 Jan 2014 10:53 PM PST

அமெரிக்காவில் இந்தப் புத்தாண்டு தினத்தன்று சூதாட்ட மோகத்தால் தனது நான்கு வயது குழந்தையை ஒரு பெண் பூட்டிய காருக்குள் எட்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தவிக்கவிட்டுச் சென்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தியாவில் கேளிக்கைகளுக்குப் பெயர்போன சுற்றுலா நகரமான கோவாவிலோ இந்தப் பிரச்சினைக்கு சாதுர்யமாக வழி வகுத்துள்ளனர். இங்குள்ள கேளிக்கை விடுதிகளில் குழந்தைகள் காப்பகமும் இயங்கத் தொடங்கியுள்ளது. அவர்களுக்கான வீடியோ காட்சிகள், விளையாட்டு பொம்மைகள், புத்தகங்கள், படுக்கைகள் மற்றும் உணவு

மீண்டும் பிரதமராகமாட்டேன்: டெல்லியில் மன்மோகன்சிங் பேட்டி

Posted: 02 Jan 2014 09:59 PM PST

பிரதமர் மன்மோகன்சிங் இன்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு 9 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளது. பட்டினி, ஊழலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு பாதுகாப்பு மசோதா அனைவருக்கும் உணவு கிடைக்க வலி செய்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கிராமப்புற வளர்ச்சி தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை

கேரளாவில் இன்று ஓட்டல்கள் முழு அடைப்பு போராட்டம்: கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம்

Posted: 02 Jan 2014 09:44 PM PST

எண்ணை நிறுவனங்கள் மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலையை அதிரடியாக உயர்த்தியது. இதனால் ஓட்டல்கள், தங்கும் விடுதியில் உள்ள உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதுபற்றி கேரள மாநில ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலத்தில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சொகுசு வாழ்க்கைக்கு கெஜ்ரிவாலும் பலி: 9000 சதுரடியில் 10 படுக்கை அறை கொண்ட இரட்டை பங்களாவில் குடியேறுகிறார்

Posted: 02 Jan 2014 09:35 PM PST

அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, அரசு செலவினங்களில் சிக்கனம், அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை உள்ளிட்ட முற்போக்கு முழக்கங்களுடன் 'ஆம் ஆத்மி' கட்சியை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், முதல் மந்திரி ஆனதும் 9000 சதுரடியில் 10 படுக்கை அறை கொண்ட இரட்டை பங்களாவில் குடியேறும் தகவல் அவரை நம்பி வாக்களித்த டெல்லி வாசிகளிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

சி.பி.ஐ. ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் கூறியும் ஆதர்ஷ் முறைகேட்டில் அரசியல்வாதிகள் விடுவிப்பு

Posted: 02 Jan 2014 09:35 PM PST

கார்கில் போரில் மரணம் அடைந்தவர்களுக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. சி.பி.ஐ. இது பற்றி விசாரணை நடத்தி சுமார் 400 பக்க அறிக்கை தயாரித்து மராட்டிய மாநில அரசிடம் தாக்கல் செய்தது. சி.பி.ஐ. அறிக்கையில் மொத்தம் 25 பேர் முறை கேடாக வீடு ஒதுக்கீடு

வடமாநில டி.வி.–இணைய தளங்களில் கெஜ்ரிவால் வருகையால் மோடி மவுசு குறைகிறது

Posted: 02 Jan 2014 09:27 PM PST

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதும் வடமாநில டி.வி.க்களும், இணைய தளங்களும் அதை பெரிது படுத்தி தகவல்கள் வெளியிட்டன. தினமும் அவரைப் பற்றிய கருத்து கணிப்புகள், பேச்சுகள், செயல்பாடுகள் ஆகியவை பற்றி பரபரப்பாக வெளியாகி வந்தன. 5 மாநில சட்டசபை தேர்தலின் போதும் நரேந்திர மோடிக்கு அதிக

கைதான யாசீன் பத்கலை மீட்க விமானத்தை கடத்த தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 02 Jan 2014 09:24 PM PST

இந்தியாவில் நடந்த பல குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருந்தவன் யாசீன் பத்கல். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் இந்திய கிளைக்குத் தலைவராக செயல்பட்ட அவன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், இந்தியாவில் நாசவேலை திட்டத்தை அரங்கேற்றுவதற்காக நேபாளம் வழியாக வந்து கொண்டிருந்தான். நேபாள எல்லையில் ஆகஸ்டு மாதம் 27–ந்தேதி யாசீன் பத்கலை தேசிய புலனாய்வுப் படையினர் கைது செய்தனர். டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட அவனிடம் மத்திய உளவுப் பிரிவினர் மற்றும் பல மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாரதிய ஜனதாவுடன் எடியூரப்பா கட்சி இணையும் விழா 18-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது

Posted: 02 Jan 2014 08:53 PM PST

கர்நாடகாவில் பா.ஜ.க. முதல் – மந்தியாக இருந்த எடியூரப்பா, ஊழல் குற்றச் சாட்டுக்களில் சிக்கியதால் பதவி இழக்க நேரிட்டது. மீண்டும் அவரை முதல் – மந்திரியாக்க பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் மறுத்ததால், அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார். கடந்த ஆண்டு கர்நாடகா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எடியூரப்பாவின் கட்சி தோல்வி அடைந்தது. அவர் கட்சி ஓட்டுக்களைப் பிரித்த காரணத்தால் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வும் தோல்வியைத் தழுவியது.

திருவிதாங்கூர் புதிய மன்னர் மூலம் திருநாள் ராஜவர்மா இன்று பதவி ஏற்றார்

Posted: 02 Jan 2014 08:34 PM PST

திருவிதாங்கூர் மன்னராக இருந்தவர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்பு திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் கடைசி மன்னராக இருந்தவர். இவர் திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவில் அருகே உள்ள மாளிகையில் வசித்து வந்தார். கடந்த மாதம் இவர் திடீரென மரணம் அடைந்தார். எனவே திருவிதாங்கூர் ராஜ வம்ச வழக்கப்படி அடுத்த திருவிதாங்கூர் மன்னராக மூலம் திருநாள் ராஜவர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெலுங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு: சீமாந்திரா பகுதியில் இன்று முழு அடைப்பு

Posted: 02 Jan 2014 08:25 PM PST

ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா மசோதா – மீதான விவாதம் இன்று தொடங்க உள்ளது. தெலுங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, மற்றும் ஆந்திர மாநில அரசு ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்துக்கு தெலுங்கு தேசமும் மறைமுக ஆதரவு அளித்துள்ளது. முழு அடைப்பையொட்டி சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலையில் இருந்தே இந்த மாவட்டங்களில் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள், வர்த்தக

ஆதர்ஷ் ஊழலில் இடம்பெற்றுள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்னா ஹசாரே

Posted: 02 Jan 2014 07:46 PM PST

ஆதர்ஷ் ஊழல் விசாரணை கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அன்னா ஹசாரே வலியுறுத்தி உள்ளார். காந்தியவாதி அன்னா ஹசாரே தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– புதிதாக கொண்டு வரப்பட்ட ஜனலோக்பால் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் 40 முதல் 50 சதவீத ஊழலை ஒழிக்க முடியும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது நமது கனவு. இந்த சட்டத்தின் மூலம் மட்டுமே இதை நாம் சாதிக்க முடியாது.

நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் சமூக வானொலி நிலையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி

Posted: 02 Jan 2014 07:37 PM PST

முதன்முறையாக நாட்டில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் சமூக வானொலி நிலையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் ஒன்பது வானொலி நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் முதல் நிலையம் சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் என்ற இடத்தில் அமைய உள்ளது. அனுமதி பெற்ற வானொலி நிலையங்கள் துவக்கப்படும்

சமையல் கியாஸ் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய மந்திரி வயலார் ரவி கோரிக்கை

Posted: 02 Jan 2014 07:20 PM PST

மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 220 ரூபாய் உயர்த்தியதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை மந்திரி வயலார் ரவியும் இந்த விலை உயர்வுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்புவது இயற்கையான ஒன்றுதான் என்றும், மக்களின் கவலையை தீர்க்கும் வகையில் இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு

மின்சார ரெயில் சேவைகளை மேம்படுத்த நீண்ட தூர ரெயில்களுக்கு தனி வழித்தடம்

Posted: 02 Jan 2014 07:12 PM PST

மின்சார ரெயில்சேவைகளை மேம்படுத்த நீண்ட தூர ரெயில்களுக்கு தனி வழித்தடம் அமைக்கப்படுவதாக மேற்கு ரெயில்வே பொது மேலாளர் ஹேமந்த் குமார் தெரிவித்துள்ளார். மேற்கு ரெயில் வழிதடத்தில் சர்ச்கேட்டில் இருந்து பாந்திரா, அந்தேரி, போரிவிலி, பயந்தர், விரார், தகானு வரையிலும் ஸ்லோ மற்றும் விரைவு வழிதடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் சேவைகளை தினமும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வழித்தடத்தில் சிறிய

மந்திரிசபையில் ஊழல் கறை படிந்தவர்கள் இல்லை: முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி

Posted: 02 Jan 2014 07:03 PM PST

முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், 'மந்திரிசபையில் ஊழல் கறை படிந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்து உள்ளதே?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து முதல்–மந்திரி சித்தராமையா கூறியதாவது:– "மந்திரிசபையில் ஊழல் கறை படிந்தவர்கள் யாரும் இல்லை. நேர்மையானவர்களே உள்ளனர். மந்திரிசபை விரிவாக்கம் என்பது கட்சி மற்றும் அரசு சம்பந்தப்பட்டது. அரசியல் காரணங்களுக்காகவும், கட்சிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தேவையான நேரத்தில்

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு வாபஸ்

Posted: 02 Jan 2014 03:51 PM PST

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது விபோர் ஆனந்த் என்ற சட்டக் கல்லூரி மாணவர் டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்; கடந்த 2012-ம் ஆண்டு காசியாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்

58 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி

Posted: 02 Jan 2014 03:38 PM PST

நாடு முழுவதும் புதிதாக 58 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான ஒப்புதல், நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபையின் பொருளாதார விவகார குழு கூட்டத்தில் வழங்கப்பட்டது. ஒவ்வொரு கல்லூரியும் தலா ரூ.189 கோடி செலவில் அமைக்கப்படும். இதில் 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசுகளும் வழங்கும்

பிரதமர் மன்மோகன்சிங் இன்று கேரளா பயணம்: அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

Posted: 02 Jan 2014 01:07 PM PST

பிரதமர் மன்மோகன்சிங் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு இன்று இரவு 7.25 மணிக்கு வருகிறார். நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கனகக்குன்னு என்ற இடத்தில் நடக்கும், 33 மாதங்களில் நூறு சதவீதம் கல்வியறிவு திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™