Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சவுதியில் எண்ணெய் மேடையின் பராமரிப்பு தளம் கடலில் மூழ்கியது ‍ : 3 பேரை காணவில்லை

Posted: 27 Dec 2013 11:14 PM PST

noble-ronald-hope

noble-ronald-hopeசவுதி அரசுக்கு சொந்தமான ஆரம்கோ என்ற எண்ணெய் நிறுவனத்தின் பராமரிப்பின் கீழ் பல எண்ணெய் மேடைகள் அந்நாட்டின் கடற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான சபானியா சவுதியின் நிலப்பரப்பில் இருந்து 50 கி.மீ தொலைவில் 15 கி.மீ ஆழத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கிருந்து தினமும்1.2 மில்லியன் பேரல்கள் எண்ணெய் எடுக்கப்படுகின்றது. உலகளவில் பெரிய எண்ணெய் மேடையாகக் கருதப்படும் இது சவுதி அரேபியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள தஹ்ரான் நகரிலிருந்து 265 கி.மீ வடக்கே உள்ளது. உற்பத்தி மற்றும் கையிருப்பு அளவில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களின் அடிப்படைத்தளமாக தஹ்ரான் விளங்கி வருகின்றது.  சபானியாவில் உள்ள எண்ணெய் மேடையில் நேற்று பராமரிப்புப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்காக நிறுவப்பட்ட பராமரிப்பு மேடையில் இருந்தவண்ணம் பல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மேடை கடலில் மூழ்கியது. அந்த சமயத்தில் 19 கடல்மைல் தொலைவில் உள்ள ரஸ் அல் கப்ஜி துறைமுகத்தின் அருகே கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். விபத்து குறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த அவர்கள் கடலில் விழுந்தவர்களில் 24 பேரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தனர். அவர்களில் பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழியர்களில் இன்னும் இரண்டு இந்தியர்களையும், ஒரு வங்கதேசத்தவரையும் காணவில்லை என்று கூறப்படுகின்றது. இவர்களைத் தேடும்பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஆரம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த சம்பவம் குறித்த முழுமையான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம் இதனால் எண்ணெய் உற்பத்திப்பணிகள் பாதிக்கப்படவில்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை தமிழ் அகதி ,இந்தியாவில் தீக்குளித்து தற்கொலை!

Posted: 27 Dec 2013 11:04 PM PST

6-year-old-girl-set-on-fire

6-year-old-girl-set-on-fireஇலங்கை தமிழ் அகதி ஒருவர் இந்தியாவில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ் நாட்டின் பெரம்புலூர் மாவட்டம் துறைமங்களம் பிரதேசத்தில் உள்ள அகதி முகாமுக்கு எதிரில் நேற்று இந்த அகதி தனக்கு தானே எரியூட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 40 வயதான கோவிந்தசாமி என்ற இலங்கை அகதியே சம்பவதில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கோவிந்தசாமி தனது தாயாருடன் முகாமில் வசித்து வந்ததுடன் அவரது மூன்று பிள்ளைகள் திருவண்ணாமலையில் உள்ள முகாமில் தனது மாமியாருடன் வசித்து வருகின்றனர். பெரம்பலூர் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

‘‘சொர்க்கத்துக்கு செல்லும் எனக்கு ‘செஸ்’ விளையாட துணை தேவை” : தற்கொலைக்கு முன் கொலை செய்த முதியவர்

Posted: 27 Dec 2013 10:58 PM PST

Suicide-logo

சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர் லியாவோ (54) தொழிலாளி. இவர் 'செஸ்' விளையாடுவதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.

Suicide-logoஇவர் தனது பக்கத்து வீட்டு 57 வயது நண்பருடன் 'செஸ்' விளையாடுவார். இந்த நிலையில் லியாவோவின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

எனவே, அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே இவரது வீட்டின் அருகேயுள்ள காலி நிலத்தில் நண்பரின் பிணமும் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டு இருந்தார்.

அவரது பிணத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்கொலை செய்த லியாவோவின் பிணம் அருகே அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது.

அதில், ''சொர்க்கத்துக்கு செல்லும் நான் அங்கு 'செஸ்' விளையாட எனக்கு துணை தேவை. எனவே நான் தற்கொலை செய்வதற்கு முன்பு நண்பரை கொலை செய்து விட்டேன்.

இனி நாங்கள் இருவரும் சொர்க்கத்தில் ஜாலியாக 'செஸ்' விளையாடுவோம்'' என எழுதியிருந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் ஜனநாயகத்துக்கு இடமே இல்லை – சஞ்ஜீவ பண்டார

Posted: 27 Dec 2013 10:43 PM PST

sanjeewa_ban

sanjeewa_banஇலங்கையில் ஜனநாயகத்துக்கு இடமே இல்லை. ராஜபக்சவின் ஆட்சிக்குத் தேவையான வரையறுக்கப்பட்ட சட்டமே நாட்டில் செயற்படுத்தப்படுகின்றது.

பொலிஸார், ராஜபக்ச அரசின் தேவைகளையே நிறைவேற்றி வருகின்றனர்.   இவ்வாறு அனைத்துப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,   நாட்டின் ஜனநாயகமும் சட்டமும் ராஜபக்ச நிர்வாகத்தின் கட்டளையின்படியே செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தமக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக எதிர்ப்பை வெளியிட நாட்டில் வாழும் சகல பிரஜைகளுக்கும் உரிமையுள்ளது.

நாட்டில் ஜனநாயகம் செயற்பாட்டில் உள்ளதென்றால் அநீதிக்கு எதிராக எதிர்ப்புகளை வெளிக்காட்ட சந்தர்ப்பம் இருக்க வேண்டும்.   பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு ஏற்படும் ஏதோ அநீதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது என்றும், அது சட்டவிரோதமான நடவடிக்கை என்றும் ராஜபக்ச அரசு கூறுகின்றது.

ஆனால், இந்த அரசுக்கு ஆதரவாகப் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதற்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்படவில்லை.   இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்போது குற்றத் தடுப்பு பிரிவினரோ அல்லது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளோ தலையிடுவதில்லை.

ஜனாதிபதியின் மகன் கார்ப்பந்தயம் நடத்த கொழும்பில் வீதிகள் மூடப்பட்டன. பொதுநலவாய மாநாடு நடைபெற்றபோது அநுராதபுரத்தில் சனல் – 4 ஊடகவியலாளர்கள் சென்ற ரயிலை நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.    இவ்வாறான செயற்பாடுகளின்போது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாதா? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வீடுகளை உரியவாறு கட்டாவிட்டால் காணியும், பணமும் சுவீகரிக்கப்படும்

Posted: 27 Dec 2013 09:34 PM PST

Internally displaced people (IDP) wait for police to search their bus at a checkpoint on the A-9 road in Vavuniya

Internally displaced people (IDP) wait for police to search their bus at a checkpoint on the A-9 road in Vavuniyaஇந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படுகின்ற வீடுகளை கட்டத் தவறும் பட்சத்தில்இ வீடுகட்ட தெரிவு செய்யப்பட்ட காணியையும் இதற்காக திறக்கப்பட்ட வங்கக் கணக்கிலுள்ள பணத்தையும் அரசாங்கம் சுவீகரித்துக் கொள்ளுமென எழுதப்பட்டுஇ முல்லைத்தீவில் பொதுமக்களிடம் வற்புறுத்தி கையெப்பம் பெறப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வீடுகளைக் முழுதாக கட்டி முடிப்பதை உறுதி செய்யும் நோக்குடனேயே இவ்வாறான செய்ற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் தரப்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மக்களிடம் இவ்வாறு கிராம சேவகர்கள் இவ்வாறு இதுகுறித்து கடிதமொன்றை எழுதிஇ அதில் கையெப்பம் பெற்று வருவது தெரியவநற்துள்ளது.

இந்தியாவின் விட்டுத் திட்டத்தைப் பெற்றுக் கொள்கின்ற எனக்கோ அல்லது எனது குடும்பத்திற்கோ இலங்கையில் எந்த பகுதியிலும் நிரந்தரவீடு இல்லை. இந்தவிட்டுத் திட்ட உடன்படிக்கையை சுய நினைவுடன் வாசித்தே கையொப்பமிடுகிறேன்.

குறிக்கப்படும் காலத்திற்குள் எனக்குரிய வீட்டை அமைத்துக் கொள்ளவில்லையாயின் அவ்வீட்டிற்றகாக செலுத்தப்பட்ட முழுத் தொகையையும் திருப்பி செலுத்துவேன் என்றும் அவ்வாறு செலுத்தத் தவறும் பட்சத்தில் அரச நிதியில் கட்டப்பட்ட வீட்டையும் வீடு அமைந்திருக்கின்ற காணியையும் அவ்வீட்டிற்காக திறக்கப்பட்ட வங்கிக் கணக்கிலுள்ள பணத்தையும் அரசு மீளச் சுவீகரித்துக் கொள்ளும் என்றும் இதனை உணர்ந்து இவ்வீட்டைக் கட்டிமுடிப்பதற்கு சுயவருப்பம் தெரிவித்தே ஒப்பமிடுகிறேன் என அந்தக் கடிதங்களில் எழுதப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பொதுவேட்பாளர்!- ஐ.தே.கட்சி இணக்கம்?

Posted: 27 Dec 2013 09:26 PM PST

santhirika

santhirikaஅடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 22 ஆம் திகதி மங்கள சமரவீர வீட்டில் நடைபெற்ற இராபோசனத்தின் பின்னர் நடைபெற்றுள்ளது.

இந்த விருந்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட போதும் ரணில் மற்றும் சந்திரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் தனியான அறையொன்றில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை நிறுத்தினால் வெற்றிப் பெறும் விதம் குறித்து மங்கள சமரவீர தெளிவுபடுத்தியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டவர்களாக ரணில் மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியை பொதுவேட்பாளராக நிறுத்தினால் அரசாங்கத்தில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்களின் ஆதரவை பெற முடியும் என மங்கள இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். அப்படியான அதிருப்தியாளர்களின் பெயர் விபரங்களையும் மங்கள வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகாவின் ஜனநாயகக்கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் தேவை ஏற்பட்டால் ஜே.வி.பியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்கள் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கும் தோல்விக்கு தனது தலையை கொடுக்கக் கூடிய ஒருவரை தேடி வந்த ரணிலுக்கு இது பெறுமதியான சந்தர்ப்பம் என்பதால் அவர் இந்த தீர்மானத்திற்கு தலை அசைத்துள்ளார்.

எனினும் மகிந்த ராஜபக்‌சவை சந்திரிக்காவினால் தோற்கடிக்க முடியும் என மங்கள சமரவீர திட்டவட்டமாக கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

முடி உதிர்தலுக்கு சூப்பர் டிப்ஸ்….. கேளுங்க வயிறு வலிக்க சிரிச்சிட்டே இருங்க!….

Posted: 27 Dec 2013 04:48 AM PST

phone_speech_001.w245

phone_speech_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

விளையாட்டாக செய்த காரியம் இறுதியில் உயிரைப் பறித்த பரிதாபம்……

Posted: 27 Dec 2013 04:36 AM PST

man_death_001.w245

man_death_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

அறிவிப்பாளர்களின் அசத்தலான சொதப்பல்கள்…..

Posted: 27 Dec 2013 04:29 AM PST

news_blooper_001.w245

news_blooper_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

நீர்தேக்கத்தில் மூழ்கிய கோயில் வெளித்தோன்றியது

Posted: 27 Dec 2013 04:05 AM PST

Kovil-1-450x222

Kovil-1-450x222தற்போது மலையக பகுதிகளில் நிலவும் வெயிலுடனான காலநிலை காரணமாக ஆறுகளில் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது. இதனால் மலையகத்தில் காணப்படும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

மஸ்கெலியா நகருக்கு அண்மையில் அமைந்துள்ள மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வழிந்தோடும் நிலையில் இருந்து 40 வீதமாக குறைவடைந்துள்ளதாக லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மவுசாக்கலை நீர்தேக்கத்தில் மூழ்கிய மஸ்கெலிய பழைய நகரத்தில் காணப்பட்ட கதிரேசன் கோயில் முழுமையக வெளித்தோன்றியுள்ளது. இந்த காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் கோயிலை சென்றடைவதற்கான பாதை முற்றாக பயன்படுத்தக்கூடிய நிலையை அடையும் போது அதிகளவானவர்கள் இந்த கோயிலை தரிசிப்பதற்கு செல்வது வழமை.

தற்போது சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபடும் யாத்திரர்களாலும் இந்த பழைய கோயில் பார்வையிடப்படுவதால் இது ஓர் சுற்றுலா தளமாகவும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™