Tamil Star |
- நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா : முழுநிலவு நாளில் அமைச்சரவையை கூட்டும் ஜனாதிபதி
- மும்பையில் 26 மாடி அடுக்ககத்தில் பாரிய தீ அனர்த்தம் : 5 பேர் பலி
- வடக்கு மாகாணசபையின் நிர்வாக விடயத்தில் அரசியலமைப்பை மீறும் அரசு
- இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புககளில் அமெரிக்கா
| நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா : முழுநிலவு நாளில் அமைச்சரவையை கூட்டும் ஜனாதிபதி Posted: 13 Dec 2013 06:31 PM PST
பௌத்தர்களின் வழிபாட்டுக்குரிய நாளாக கருதப்படும் முழுநிலவு நாள் சிறிலங்காவில் விடுமுறை நாளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. குறித்த நாளில் எந்த அரச பணிகளும் ஆற்றப்படுவதில்லை. இந்தநிலையில், நாளை மறுநாள்- முழுநிலவு நாளில் அமைச்சரவையை அவசரமாக கூட்டியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. நாளை மறுநாள் காலை 7 மணியளவில் சிறிலங்கா அமைச்சரவைக் கூடம்டம் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாபிரிக்கா மற்றும் கென்யாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் சிறிலங்கா அதிபர் பங்கேற்கும் முதலாவது அதிகாரபூர்வ கடமை இந்த அமைச்சரவைக் கூட்டமாகும். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் வரவுசெலவுத்திட்டங்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டு வருவது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. அத்துடன், போதைப்பொருள் கொள்கலனுக்கு அனுமதிக் கடிதம் கொடுத்த சிறிலங்கா பிரதமருக்கு எதிராக கிளம்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் இதில் ஆராயப்படவுள்ளது. இதற்கிடையே வரும் 18ம் நாள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனக் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த நெருக்கடிகளின் காரணமாகவே முழுநிலவு நாள் என்றும் பாராமல் மகிந்த ராஜபக்ச அமைச்சரவையை கூட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் முழுநிலவு நாளன்று அமைச்சரவை கூடவுள்ளது இதுவே முதல்முறையாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மும்பையில் 26 மாடி அடுக்ககத்தில் பாரிய தீ அனர்த்தம் : 5 பேர் பலி Posted: 13 Dec 2013 06:21 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடக்கு மாகாணசபையின் நிர்வாக விடயத்தில் அரசியலமைப்பை மீறும் அரசு Posted: 13 Dec 2013 06:09 PM PST
குறிப்பாக, வடக்கு மாகாண ஆளுநர் அரசியலமைப்பை மீறும் விதத்தில் செயற்படுவதால் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான சட்டமுறையான தீர்மானமொன்றை நிறைவேற்ற மாகாணசபையால் முடியும் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வடக்கு மாகாணசபையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையில், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து ஆகிய இரண்டு துறைகளை புதிதாக உருவாக்கப்போவதாக அறிவித்திருந்ததன் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியலமைப்பை மீறியிருப்பதாக ஆளுநர் சந்திரசிறி கூறியிருப்பதை சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியிருக்கிறார். அப்படி ஆளுநர் சந்திரசிறி கூறியிருப்பதே அரசியலமைப்பை மீறும் செயல் என்றும், அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறு அரசியலமைப்பை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் சுமந்திரன் தெரிவித்தார். நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதன் பலன்''அரசியலமைப்பை மீறிச் செயற்படுவதைக் காரணம் காட்டி ஆளுநரை பதவி நீக்க முடியும்' என்கிறார் சுமந்திரன் வடக்கு மாகாணசபையின் பிரதம செயலர் பதவி முதலைமைச்சருடன் கலந்துரையாடிய பின்னரே நியமிக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறான- தமக்குப் பொருத்தமான ஒருவரை பிரதம செயலாளராக முதலமைச்சர் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள நிலையிலும், பல வாரங்கள் கடந்தும் இதுவரை அந்த நியமனம் சாத்தியப்படவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். வடக்கு மாகாணத்துக்கான புதிய காவல்துறை பிரதி பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளபோதும், அதுபற்றி வடக்கு மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடப்படவில்லை என்றும் சுமந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார். அரசியலமைப்பின் 13-ம் திருத்தப்படியும் மாகாணசபை சட்டத்தின்படியும் மாகாணசபை நிர்வாகத்தின் அதிகாரப் பட்டியலின் கீழுள்ள பல விடயங்களை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு தடையாக இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போரின் முடிவில் அமைந்த இலங்கையின் முதலாவது வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்தை பொறுப்பேற்கும்போது, தென்னிலங்கைக்கும் அரசாங்கத்திற்கும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவே ஜனாதிபதியின் முன்னால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டாலும், அரச தரப்பிலிருந்து அவ்வாறான சாதகமான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட வில்லை என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்துகொண்டுள்ளதாகவும் சுமந்திரன் கூறினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புககளில் அமெரிக்கா Posted: 13 Dec 2013 06:02 PM PST
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமான சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்க இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பிறகு இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைய காலத்தில் உலகில் இடம்பெற்ற போர்களில் போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன. இவற்றில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறிய வேண்டும் என்ற பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் முரண்டுபிடிக்கும் தன்மை என்பதே அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழுவின் நிலைப்பாடாகும். உண்மையா அல்லது பொய்யா என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில்,இலங்கையின் போர் பற்றி கிடைத்துள்ள சாட்சியங்கள் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை கொண்ட சாட்சியங்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அரச ஆட்சியாளர்கள் குழுவொன்று இவ்வாறு முரண்டு பிடிக்கும் விதத்தில் நடந்து கொள்ளுமாயின் சர்வதேச சமூகம் அதனை அமைதியாக வேடிக்கை பார்க்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம். இலங்கையின் ஆட்சியாளர்கள் இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டுக்கு முன்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் போர் குற்றச்சாட்டு தொடர்பில் பொறுப்புக் கூறும் தன்மையுடன் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை உள்நாட்டில் ஆரம்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




