Tamil News | Online Tamil News |
- வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தியா வழங்குகிறது கல்வி உதவி தொகை
- தமிழக காங்கிரசுக்கு இதுவரை இல்லாத நெருக்கடி: கூட்டணி சேர யாருமே முன்வராததால் பரிதாபம்
- மோடிக்கு எதிராக ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு நிராகரிப்பு
- கொடநாட்டில் இருந்து ஆட்சி பரிபாலனம்: கருணாநிதி 'கிண்டல்'
- பிற கட்சிகள் யாரோடு கூட்டணி: காத்திருக்கும் ஜெ.,
- தே.மு.தி.க.,வில் சுதீஷ் - பிரேமலதாவுக்கு திடீர் கட்டுப்பாடு
- காங்., வரலாற்று தினத்தில் "ஆம் ஆத்மி' கட்சி ஆட்சி அமைக்கிறது
- 'கன்டெய்னர்'களில் அழுகும் வேளாண் விளைபொருட்கள்: சுங்கத்துறை நிபந்தனையால் சீரழியும் பொருளாதாரம்
- அரசு மருத்துவமனைகள் இனி 'பளிச்!': தனியார் பராமரிப்பில் மின்னப் போகிறது
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நீராவி வெளியேற்றும் சோதனை
| வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தியா வழங்குகிறது கல்வி உதவி தொகை Posted: காத்மாண்டு:கடந்த 2000 ஆயிரம் ஆண்டு முதல் நேபாள நாட்டை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்தியா ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. இரு நாடுகளிடையே ஒப்பந்தம்: நேபாளம்-இந்தியா இடையே கடந்த 1964-ம் ஆண்டு நேபாள மாணவர்களின் கல்வி மேம்பாடு பற்றிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்திய தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடந்த 2000 ஆயிரம் ஆண்டில் இருந்து முறைப்படியான கல்வி கற்றுத்தரப்பட்டது. ஆரம்ப கால கட்டத்தில் வெறும் 12 மாணவர்களுக்கு மட்டுமே இந்த குறுகிய கால கல்வி பயிற்று ... |
| தமிழக காங்கிரசுக்கு இதுவரை இல்லாத நெருக்கடி: கூட்டணி சேர யாருமே முன்வராததால் பரிதாபம் Posted: லோக்சபா தேர்தலுக்கான உத்திகள் குறித்த விவாதம், தமிழகத்தில் உள்ள, தேசிய மற்றும் மாநில கட்சிகளில், ஏற்கனவே துவங்கி விட்டன. பிற கட்சிகளுக்கு, தூது விடும் முயற்சியிலும், சில கட்சிகள் இறங்கியுள்ளன. அதே நேரத்தில், மத்தியில் ஆளும், காங்கிரசுக்கு மட்டும், தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூட்டணி சேர யாருமே முன் வராததால், அக்கட்சி சோதனையில் சிக்கித் தவிக்கிறது.தமிழகத்தில், கடந்த, இரண்டு லோக்சபா தேர்தல்களின் போது, தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்து, காங்கிரஸ் களமிறங்கியது. தேர்தலுக்கு பின், தி.மு.க., உதவியுடன், மத்தியில் ஆட்சி ... |
| மோடிக்கு எதிராக ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு நிராகரிப்பு Posted: ஆமதாபாத்: 'குஜராத்தின், குல்பர்க் சொசைட்டியில், 2002ம் ஆண்டு நடந்த படுகொலைகளை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் அமைத்த, சிறப்பு விசாரணை குழுவின் முடிவு சரியானது தான். அதை எதிர்த்து, ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்படுகிறது' என, ஆமதாபாத் மெட்ரோபாலிடன் நீதிபதி, பி.ஜே.கனத்ரா நேற்று உத்தரவிட்டார்.குஜராத்தின், கோத்ரா என்ற இடத்தில், 2002ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், அயோத்தி சென்று திரும்பிய கரசேவகர்கள், பயணம் செய்த ரயில், தீவைத்து எரிக்கப்பட்டது. அதில், 50க்கும் மேற்பட்ட கரசேவகர்கள் இறந்தனர். அதையடுத்து, குஜராத்தின் பல பகுதிகளில் மத கலவரம் நடந்தது.68 ... |
| கொடநாட்டில் இருந்து ஆட்சி பரிபாலனம்: கருணாநிதி 'கிண்டல்' Posted: சென்னை: 'இலங்கை, தமிழக மீனவர்கள் பிரச்னைகளுக்கு, முடிவு காண வேண்டிய முதல்வர், கொடநாட்டில் இருந்து, ஆட்சிப் பரிபாலனம் செய்யப் போகிறாராம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். பால், கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். குடிநீர் பிரச்னையை கேட்க வேண்டியதில்லை; மதுரை மாவட்டத்தில், வரலாறு காணாத வறட்சி. மேட்டூர் அனல் மின் நிலையத்திலும், வல்லூர் மின் உற்பத்தி நிலையத்திலும், உற்பத்தி பாதிப்பு. கோமாரி நோய், கால்நடைகளை பலி வாங்குகிறது. தங்கள் கால்நடைகளை பறிக் ... |
| பிற கட்சிகள் யாரோடு கூட்டணி: காத்திருக்கும் ஜெ., Posted: லோக்சபா தேர்தலை சந்திக்க, எந்த கட்சி, யாரோடு கூட்டணி அமைக்கிறது என்பதை வேடிக்கை பார்க்க, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. தேர்தல் நெருக்கத்தில், எதிர்தரப்பினர் அமைக்கும் கூட்டணிக்கேற்ப, வியூகங்களை மாற்றி அமைக்கவும், திட்டமிட்டு உள்ளது.கடும் குழப்பம்: தமிழகத்தை பொறுத்தவரை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இம்முறை கூட்டணி அமைப்பதில், அரசியல் கட்சிகளிடையே, கடும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதிக இடங்களை கைப்பற்றினால், ஜெயலலிதா பிரதமராக வாய்ப்புள்ளதாக, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு, தேர்தலை ... |
| தே.மு.தி.க.,வில் சுதீஷ் - பிரேமலதாவுக்கு திடீர் கட்டுப்பாடு Posted: கட்சியின் தீவிர செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்கு மாறு, பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோருக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.அதிகார மையம்: விஜயகாந்திற்கு அடுத்தபடியாக தே.மு.தி.க.,வில், அதிகார மையமாக இருப்பவர், அவரது மனைவி பிரேமலதா. கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், மகளிர் அணி நிர்வாகத்தை தலைமை ஏற்று நடத்துவது, பிரசாரங்கள் செய்வது போன்றவை பிரேமலதாவின் கட்சிப் பணிகள். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், விஜயகாந்திற்கு இணையான வரவேற்பு, அவருக்கும் வழங்க வேண்டும் என்பது, எழுதப்படாத ... |
| காங்., வரலாற்று தினத்தில் "ஆம் ஆத்மி' கட்சி ஆட்சி அமைக்கிறது Posted: புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின், 128வது ஆண்டுவிழா நாளின் போது, "ஆம் ஆத்மி' கட்சி, டில்லியில் பதவியேற்கிறது.ஊழலுக்கு எதிராக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயுடன் இணைந்து போராடிய, அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கினார். டில்லியில், காங்கிரஸ் கட்சியை, ஆட்சி கட்டிலிருந்து அகற்றி, புது அத்தியாயத்தை துவக்கியிருக்கிறது ஆம் ஆத்மி. இதன், தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், நாளை முதல்வராக பொறுப்பு ஏற்கிறார். அவருடன், ஆறு பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். அன்னா ஹசாரேயுடன், இணைந்து ஊழலுக்கு எதிராக, போராட்டம் நடத்தி, இந்தியாவையே திரும்பி பார்க்க ... |
| 'கன்டெய்னர்'களில் அழுகும் வேளாண் விளைபொருட்கள்: சுங்கத்துறை நிபந்தனையால் சீரழியும் பொருளாதாரம் Posted: சென்னை: சுங்கத்துறை குளறுபடியால், சென்னையில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய, ஏராளமான வேளாண் விளை பொருட்கள் முடங்கியுள்ளன. இவை, அழுகும் அபாயம் உள்ளதால், சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வேளாண் விளைபொருட்கள், சென்னையை சுற்றியுள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஏற்றுமதி கிடங்குகளுக்கு வந்து சேரும். சுங்கத் துறை மதிப்பீட்டு அதிகாரி மற்றும் பரிசோதனை அதிகாரி ஆய்வு செய்து, கன்டெய்னர்களுக்கு, 'சீல்' வைப்பர். அங்கிருந்து, மாதவரத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். ... |
| அரசு மருத்துவமனைகள் இனி 'பளிச்!': தனியார் பராமரிப்பில் மின்னப் போகிறது Posted: சென்னை: அரசு மருத்துக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, 31 மருத்துவமனைகளிலும், துப்புரவு, பாதுகாப்பு பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறை, அடுத்த சில நாட்களில் அமலுக்கு வருகிறது.தூய்மையற்ற நிலை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், துப்புரவு பணி சரியாக இல்லை; சுகாதாரக் குறைவும், தூய்மையற்ற நிலையும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு தீர்வு காண, மருத்துவமனைகளில் துப்புரவு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க, அரசு முடிவு செய்தது. இதற்காக, ... |
| கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நீராவி வெளியேற்றும் சோதனை Posted: திருநெல்வேலி: ""கூடங்குளம் அணுமின் நிலையத்தில், "டர்பைனுக்கு' செல்லும் நீராவியை வெளியேற்றும் சோதனை, இந்த வாரத்தில் நடக்க உள்ளது,'' என, அணுமின்நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.கூடங்குளம் அணுமின் நிலையத்தின், முதலாவது அணு உலையில், மின்உற்பத்தி துவங்கிய பின், அவ்வப்போது நிறுத்தி, ஆய்வு நடக்கிறது. நேற்று காலை, 425 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மதியம் சிறிது நேரம், ஆய்வுக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டு, பின், மீண்டும் துவங்கியது. இதுதொடர்பாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் அறிக்கை: கூடங்குளம் முதலாவது உலையில், தற்போது 425 மெகாவாட் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 27,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |