Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நாளைய மின்தடை

Posted: 11 Dec 2013 01:35 PM PST

சென்னையில் மின்வாரிய பராமரிப்புப் பணியின் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்:  2200 பச்சிளங் குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனை

Posted: 11 Dec 2013 01:34 PM PST

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஏழு மாதத்தில் 2,220 பச்சிளங் குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலத்தரகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

Posted: 11 Dec 2013 01:33 PM PST

சென்னை புரசைவாக்கத்தில் நிலத்தரகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்: அப்துல் கலாம்

Posted: 11 Dec 2013 01:33 PM PST

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.

தலையில் செங்கல் விழுந்து 2 வயது குழந்தை சாவு

Posted: 11 Dec 2013 01:31 PM PST

தலையில் செங்கல் விழுந்து 2 வயது குழந்தை இறந்தது.

இலவச காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை: டிச.15-க்கு பிறகு அடையாள அட்டை அவசியம்

Posted: 11 Dec 2013 01:30 PM PST

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மதுரையில் முதியவர் கைது

Posted: 11 Dec 2013 01:29 PM PST

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து முதியவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

பிராட்பேண்ட் இணைப்பு உடனுக்குடன் வழங்கப்படும்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

Posted: 11 Dec 2013 01:28 PM PST

மதுரை நகரில் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு உடனுக்குடன் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

 காந்தி மியூசியத்தில் மெழுகுவர்த்தி தயாரிப்பு பயிற்சி

Posted: 11 Dec 2013 01:28 PM PST

மதுரை காந்தி மியூசியத்தில், மெழுகுவர்த்தி, கிறிஸ்துமஸ் மெழுகுவர்த்தி தயாரிப்பு ஒருநாள் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பாலியல் வன்முறை: விசாரிக்கத் தனி குழு

Posted: 11 Dec 2013 01:27 PM PST

அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை பல்கலையில் மோதல் சூழல்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உள்ளிட்ட 252 பேர் கைதாகி விடுதலை

Posted: 11 Dec 2013 01:27 PM PST

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினருக்கும், அலுவலர்கள் குழுவினருக்கும் இடையே

மதுரை பல்கலை விவகாரம்: விஎச்பி கண்டிப்பு

Posted: 11 Dec 2013 01:26 PM PST

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வெளிநபர்கள் தூண்டுதலால் சில மாணவர்கள் போராட்டம் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதை

நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் காலமானார்

Posted: 11 Dec 2013 01:25 PM PST

நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் (61) உடல் நலக்குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமானார்.

ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கும் பதிவுதாரர்கள் கவனத்துக்கு

Posted: 11 Dec 2013 01:25 PM PST

ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கும் போது, திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் டிசம்பர் 16-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ

பாரதி வழியில் தமிழ் மொழியை வளர்ப்போம்: என்.நன்மாறன்

Posted: 11 Dec 2013 01:24 PM PST

பாரதி வழியில் நின்று தமிழை வளர்ப்போம் என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க துணைத் தலைவருமான என்.

மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் டிச.16 முதல் திருப்பள்ளி எழுச்சி பூஜை

Posted: 11 Dec 2013 01:23 PM PST

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 16-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜனவரி 14-ம் தேதி வரை தனுர்மாத திருப்பள்ளி எழுச்சி் பூஜைகள்

வாடிப்பட்டி: மத்திய அரசு ஊழியர் வீட்டில் திருட்டு

Posted: 11 Dec 2013 01:22 PM PST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் புகுந்து 32 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர்.

  மதுரை

Posted: 11 Dec 2013 01:21 PM PST

மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தொடர்பியல்துறை, பயிலரங்கம், பொருள்: செம்மொழி இலக்கியத்தை

அனுப்பானடி கொலை வழக்கு: 2 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

Posted: 11 Dec 2013 01:20 PM PST

அனுப்பானடியில் ஜாமீனில் வந்தவர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸ் காவலில் 2 நாள்கள் விசாரிக்க மதுரை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கான முடிவை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Dec 2013 01:19 PM PST

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 11 Dec 2013 01:18 PM PST

மதுரை கிழக்குக் கோட்டத்தைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 12-ம் தேதி இன்று மேலூர் உதவி

தமிழக அமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Dec 2013 01:18 PM PST

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதில்

செல்போனில் சேனல்களை பார்வையிட 3 சிறப்புத் திட்டங்கள்

Posted: 11 Dec 2013 01:17 PM PST

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனில் விருப்பமான தொலைக்காட்சி சேனல்களை குறைந்த கட்டணத்தில் பார்வையிட 3 சிறப்பு திட்டங்களை தமிழக தொலைபேசி வட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அகில இந்திய நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை அலைக்கழிக்கும் வங்கி, தபால்துறையினர்

Posted: 11 Dec 2013 01:17 PM PST

மே 2014-ல் நடைபெறவுள்ள அகில இந்திய பொறியியல் மற்றும் மருத்துவத் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்தும் மாணவர்களை வங்கி மற்றும்

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2013 01:17 PM PST

கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மதுரையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடக்கம்

Posted: 11 Dec 2013 01:16 PM PST

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த நரிக்குறவர்கள் 4 பேர் கைது

Posted: 11 Dec 2013 01:16 PM PST

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே அரசு உரிமம் பெறாலம் துப்பாக்கி வைத்திருந்த நரிக்குறவர்கள் 4 பேர் புதன்கிழமை இரவு கைது செய்யட்டனர்.

ஏர்போர்ட் அருகே கிணற்றில் ஆண் சடலம்

Posted: 11 Dec 2013 01:15 PM PST

திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள ஒரு கிணற்றில் புதன்கிழமை இரவு கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர்.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கான முடிவை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Dec 2013 01:14 PM PST

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கான முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பாலியல் வன்முறை: விசாரிக்கத் தனி குழு

Posted: 11 Dec 2013 01:12 PM PST

அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி: பூம்புகார் படகுத்துறை விரிவாக்கம் செய்யப்படுமா? தி.ராமகிருஷ்ணன்

Posted: 11 Dec 2013 01:12 PM PST

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளில் செல்ல 3 மணி நேரம் வரை

சர்வதேச அணு விஞ்ஞானிகள் குமரியில் முகாம்.

Posted: 11 Dec 2013 01:12 PM PST

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் பங்கேற்ற கருத்தரங்கம் புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கியது.

கன்னியாகுமரி

Posted: 11 Dec 2013 01:11 PM PST

மானாமதுரை கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசிய விருது

Posted: 11 Dec 2013 01:11 PM PST

மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்புக்குப் பெயர்போன சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இசைக் கருவியான கடம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மீனாட்சி (60) என்பவர் மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குமரி ரூ. 14 கோடி மெகா சுற்றுலாத் திட்ட பணிகள் தீவிரம்

Posted: 11 Dec 2013 01:10 PM PST

கன்னியாகுமரியில் ரூ. 14 கோடி செலவில் நடைபெற்று வரும் மெகா சுற்றுலாத் திட்ட பணிகள் நிறைவு பெறும் நிலையை அடைந்துள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படைதாக்குவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை: பிரதமரிடம்  விஜயன் எம்.பி. முறையீடு

Posted: 11 Dec 2013 01:09 PM PST

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும், சிறைப்பிடிக்கப்படுவதையும் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர்

யுஜிசி கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Posted: 11 Dec 2013 01:09 PM PST

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிடிஇஏ பள்ளிகளில் குழந்தைகள் தின விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

Posted: 11 Dec 2013 01:09 PM PST

தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் (டிடிஇஏ) நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நிதி அளியுங்கள்: அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள்

Posted: 11 Dec 2013 01:08 PM PST

நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதால், கட்சிக்கு பொது மக்கள் தாரளமாக நிதி அளிக்க வேண்டும் என்று

விதிகளின்படியே ஜேபிசி அறிக்கை தாக்கல்: பி.சி. சாக்கோ விளக்கம்

Posted: 11 Dec 2013 01:07 PM PST

"2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான ஜேபிசி (நாடாளுமன்ற நிலைக் குழு) அறிக்கை விதிகளின்படியே மக்களவையில் தாக்கல்

தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடுக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2013 01:07 PM PST

தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி தில்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லியில் ஆட்சி அமைக்க யாருக்கு அழைப்பு? ஒரிரு நாளில் துணைநிலை ஆளுநர் முடிவு

Posted: 11 Dec 2013 01:06 PM PST

தில்லியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கோ ஆம் ஆத்மி கட்சிக்கோ அழைப்பு விடுப்பது குறித்து ஓரிரு நாள்களில் பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் முடிவு

சீலம்புரில் இளைஞர் சுட்டுக்கொலை

Posted: 11 Dec 2013 01:06 PM PST

கிழக்கு தில்லியில் இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.

பெண்களுக்கு  33 சதவீதம் இட ஒதுக்கீடுக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2013 01:05 PM PST

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடுக் கோரி தில்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லோக்பால் மசோதா நிறைவேறுவதில் தாமதம்: மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி கவலை

Posted: 11 Dec 2013 01:05 PM PST

மாநிலங்களவையில் வெவ்வேறு பிரச்னைகளை நாள்தோறும் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், திட்டமிட்டப்படி லோக்பால் சட்ட மசோதாவை

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்: மூன்றாவது நாளும் ஒத்திவைப்பு

Posted: 11 Dec 2013 01:04 PM PST

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் நிவாரண முகாம்களில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், கச்சத்தீவு விவகாரம், தெலங்கானாவுக்கு

உணவு தர நிர்ணயச் சட்ட விதிகளை அமல்படுத்தும் காலஅவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும்: மத்திய சுகாதார அமைச்சரிடம் தமிழக வணிகர்கள் நேரில் மனு

Posted: 11 Dec 2013 01:03 PM PST

 அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள் அமல்படுத்துவதற்கான காலஅவகாசத்தை

தெலங்கானா விவகாரம்: நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை பாஜக ஆதரிக்காது- ராஜ்நாத் சிங்

Posted: 11 Dec 2013 01:02 PM PST

தெலங்கானாவுக்கு எதிராக ஆந்திரத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை பாஜக ஆதரிக்காது என்று

வேலூர் சத்துவாச்சாரியில் சுரங்க நடைபாதை வேண்டும்: மக்களவையில் எம்.பி. வலியுறுத்தல்

Posted: 11 Dec 2013 01:02 PM PST

வேலூர், சத்துவாச்சாரியில் சுரங்க நடைபாதை அமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெஞ்சாலை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் மக்களவைத் தொகுதி திமுக

அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை

Posted: 11 Dec 2013 01:01 PM PST

அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை நரம்பியல் துறை: 100 கண்கள் தானம்

Posted: 11 Dec 2013 01:00 PM PST

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் துறையின் சார்பில் கடந்த பத்து மாதங்களில் 100 கண்கள் தானம் அளிக்கப்பட்டுள்ளன.

ஸ்டெமி திட்டம்: 7 மருத்துவமனைகளுக்கு அதிநவீன இ.சி.ஜி. கருவி

Posted: 11 Dec 2013 12:59 PM PST

மாரடைப்பு ஏற்பட்டவர்களின் நிலையைப் பரிசோதிக்கும் அதிநவீன இ.சி.ஜி. கருவி சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஏழு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிழக்குக் கடலோரக் காவல் படையில் புதிய ரோந்துக் கப்பல் "ராஜ்துவஜ்'

Posted: 11 Dec 2013 12:58 PM PST

இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்தியத்தில் இணைக்கப்பட்ட "ராஜ்துவஜ்' என்ற ரோந்துக் கப்பலை கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் புதன்கிழமை சென்னையில் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் அருகே மருந்து வாங்குவதற்காக திருட முயன்ற இளைஞர் கைது

Posted: 11 Dec 2013 12:57 PM PST

விருதுநகர் அருகே நோய்க்கு மருந்து வாங்குவதற்காக வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சி செய்த போது கையும், களவுமாக இளைஞர் ஒருவர் புதன்கிழமை பிடிபட்டார்.

விருதுநகர் அருகே வெவ்வேறு ரயில் விபத்தில் இரண்டு பேர் சாவு

Posted: 11 Dec 2013 12:56 PM PST

விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் குடும்பத் தகராறு காரணமாக இரண்டு பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

விருதுநகர் அருகே வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை நிகழ்ச்சி

Posted: 11 Dec 2013 12:56 PM PST

விருதுநகர் பகுதியில் வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை எனும் நிகழ்ச்சியை பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர்

Posted: 11 Dec 2013 12:55 PM PST

கால அவகாசம் கோரும் தமிழக வணிகர்கள்

Posted: 11 Dec 2013 12:54 PM PST

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை அமல்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க வலியுறுத்தி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் காட்டுவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாமல் கட்டுப்படுத்த யானை அகழி அமைக்க நடவடிக்கை

Posted: 11 Dec 2013 12:53 PM PST

வன விலங்குகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் பெரிய அளவில்

நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை பயிற்சி

Posted: 11 Dec 2013 12:52 PM PST

நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை குறித்த இலவசப் பயிற்சி நாமக்கல்லில் 17-ம் தேதி அளிக்கப்பட  உள்ளது.

பள்ளிகளில் பாரதியார் தின கொண்டாட்டம்

Posted: 11 Dec 2013 12:51 PM PST

பாரதியாரின் 132ம் ஆண்டு பிறந்தநாளை நாமக்கல்லிலுள்ள பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

முட்டை விலை

Posted: 11 Dec 2013 12:50 PM PST

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு புதன்கிழமை அறிவித்த முட்டை பண்ணைக் கொள்முதல் விலை நாமக்கல்லில் ரூ.3.75, சென்னையில் ரூ.3.80.

வேகக்கட்டுப்பாட்டுக் கருவி விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு லாரி உரி்மையாளர்கள் வரவேற்பு

Posted: 11 Dec 2013 12:49 PM PST

சரக்கு வாகனங்களுக்கு வேகக்கட்டு்ப்பாட்டுக் கருவி பொருத்துவது தொடர்பாக மத்திய அரசு விடுத்துள்ள உத்தரவை தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வரவேற்றுள்ளது.

மாணவர்களை துன்புறுத்திய ஆசிரியை மீது நடவடிக்கை கோரி புகார்

Posted: 11 Dec 2013 12:49 PM PST

தொடக்கப் பள்ளி மாணவர்களை உடல், மனரீதியாக துன்புறுத்தியதாக பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை

பாரதி பிறந்தநாள்: 132 குழந்தைகளுக்கு பாரதியார் வேடம்

Posted: 11 Dec 2013 12:48 PM PST

மகாகவி பாரதியாரின் 132-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாமக்கல் அருகே கீரம்பூரிலுள்ள நவோதயா அகாதெமி பள்ளியில் 132 குழந்தைகள் பாரதியார்

குடிசை வீட்டில் தீப்பிடித்து பணம், பொருட்கள் சேதம்

Posted: 11 Dec 2013 12:47 PM PST

பழக்கன்றுகள் விற்பனைக்கு தயார்

Posted: 11 Dec 2013 12:46 PM PST

பல்வேறு வகை பழக்கன்றுகள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைத்தில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.

சங்க இலக்கிய ஆய்வு பயிலரங்கம்: நாமக்கல்லில் நாளை தொடக்கம்

Posted: 11 Dec 2013 12:45 PM PST

சங்க இலக்கியங்களின் ஆய்வு பயிலரங்கம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை (டிச.13) தொடங்கி டிசம்பர் 22-ம் தேதி வரை நடக்க உள்ளது.

நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை பயிற்சி

Posted: 11 Dec 2013 12:44 PM PST

நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை குறித்த இலவசப் பயிற்சி நாமக்கல்லில் 17-ம் தேதி அளிக்கப்பட  உள்ளது.

புதிய வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பேற்பு

Posted: 11 Dec 2013 12:44 PM PST

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக கே.தமிழ்ச்செல்வன், புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

 பெரம்பலூர் அருகே கார் மோதி சாலையைக் கடக்க முயன்ற கணவன், மனைவி சாவு

Posted: 11 Dec 2013 12:42 PM PST

பெரம்பலூர் அருகே, புதன்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற கணவன், மனைவி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே

 பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2013 12:41 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Posted: 11 Dec 2013 12:40 PM PST

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு, தகுதியுடையோர்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Posted: 11 Dec 2013 12:39 PM PST

பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருமானூர் பேருந்து நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி

Posted: 11 Dec 2013 12:39 PM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய அளவிலான எறிபந்து போட்டிக்கான பயிற்சி தொடக்கம்

Posted: 11 Dec 2013 12:38 PM PST

சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் டிச. 19ம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணியினருக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

டிச. 14-ல் உணவுப்பொருள் வழங்கல் குறை கேட்கும் கூட்டம்

Posted: 11 Dec 2013 12:37 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில், டிச. 14ம் தேதி உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

  தேசிய அளவிலான எறிபந்து போட்டிக்கான பயிற்சி தொடக்கம்

Posted: 11 Dec 2013 12:36 PM PST

சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் டிச. 19ம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணியினருக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற முதியவர் சாவு

Posted: 11 Dec 2013 12:35 PM PST

பெரம்பலூர் அருகே, ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

திருச்சி மாம்பழச் சாலையில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் டிச. 13-ல் தொடக்கம்

Posted: 11 Dec 2013 12:35 PM PST

திருச்சி மாம்பழச் சாலையில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் திறப்பு விழா டிச. 13ம் தேதி நடைபெறுகிறது என்றார் அதன் நிர்வாக இயக்குநர் கணேசன்.

 கலைத்துறையில் சாதனைப் படைத்தோர் அரசு விருதுபெற டிச. 26க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 11 Dec 2013 12:34 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்தோர், அரசு விருது பெற டிச. 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

உச்ச நீதிமன்ற நீதிபதி சிங்வி ஓய்வு பெற்றார்

Posted: 11 Dec 2013 12:32 PM PST

உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். சிங்வி (65) புதன்கிழமை ஓய்வு பெற்றார்.

தில்லியில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை: பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு

Posted: 11 Dec 2013 12:30 PM PST

தில்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக வியாழக்கிழமை (டிசம்பர் 12) ஆலோசனை நடத்த வருமாறு பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்தனுக்கு தில்லி துணைநிலை ஆளுநர் நஜிப் ஜங் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரம்: மூட நம்பிக்கை எதிர்ப்பு மசோதா தாக்கல்

Posted: 11 Dec 2013 12:29 PM PST

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தெலங்கானா மசோதா:  திருப்பி அனுப்பினார் பிரணாப்?

Posted: 11 Dec 2013 12:29 PM PST

தெலங்கானா மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை திருப்பி அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் 88-வது திருமணநாள் கொண்டாடிய தம்பதியினர்

Posted: 11 Dec 2013 12:28 PM PST

100 வயதைக் கடந்த, பிரிட்டனின் மிக வயதான தம்பதியாகக் கருதப்படும், இந்தியாவைச் சேர்ந்த ஜோடி, தங்களது 88-வது திருமணநாளை புதன்கிழமை கொண்டாடினர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தவறிவிட்டன

Posted: 11 Dec 2013 12:27 PM PST

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தவறி விட்டதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

அமளியால் லோக்பால் மசோதா நிறைவேறுவதில் தாமதம்

Posted: 11 Dec 2013 12:26 PM PST

மாநிலங்களவையில் வெவ்வேறு பிரச்னைகளை நாள்தோறும் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், திட்டமிட்டப்படி லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறை இணை அமைச்சர் வே. நாராயணசாமி கவலை தெரிவித்தார்.

செஞ்சுரியனில் மழை விளையாடியது: 3-வது ஆட்டம் கைவிடப்பட்டது

Posted: 11 Dec 2013 12:13 PM PST

இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

பெரம்பலூர் அருகே கார் மோதி தம்பதி சாவு

Posted: 11 Dec 2013 12:09 PM PST

பெரம்பலூர் அருகே புதன்கிழமை இரவு சாலையை கடக்க முயன்ற வயதான தம்பதி மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.

டயர் பஞ்சரானதால் விபத்து: கரூர் அருகே லாரி மீது கார் மோதி 3 பேர் சாவு

Posted: 11 Dec 2013 12:09 PM PST

கரூர் அருகே காரின் டயர் பஞ்சரானதால் எதிரே வந்த லாரி மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை

Posted: 11 Dec 2013 12:08 PM PST

சின்னாளப்பட்டி அருகே அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இறந்தவரின் சடலம் சொந்த ஊரில் தகனம்

Posted: 11 Dec 2013 12:08 PM PST

சிங்கப்பூரில் உயிரிழந்த தொழிலாளி ச. குமாரவேலின் சடலம் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஓணாங்குடி - சத்திரம் கிராமத்தில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

கொலை மிரட்டல் வழக்கில் எ.வ.வேலுவுக்கு ஜாமீன்

Posted: 11 Dec 2013 12:07 PM PST

ஏற்காடு இடைத்தேர்தல் தகராறில் அதிமுகவினரால் தொடரப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு புதன்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது.

16-இல் ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பட்டமளிப்பு விழா

Posted: 11 Dec 2013 12:06 PM PST

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 4-ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: சேலம் நீதிமன்றத்தில் பன்னா இஸ்மாயில் மீண்டும் ஆஜர்

Posted: 11 Dec 2013 12:06 PM PST

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி போலீஸாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த பன்னா இஸ்மாயில், புதன்கிழமை திடீரென சேலம் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிதம்பரம் அருகே வீட்டுக்குள் புகுந்த பஸ்: 3 பேர் காயம்

Posted: 11 Dec 2013 12:02 PM PST

கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவு பஸ், சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புதன்கிழமை புகுந்தது.

கூட்டத்தில் புகுந்தது பள்ளி வேன்: 3 பேர் சாவு

Posted: 11 Dec 2013 12:01 PM PST

சென்னை மாதவரத்தில் தனியார் பள்ளி வேன் கட்டப்பாட்டை இழந்து மக்கள் கூட்டத்தில் புகுந்ததில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

பக்ருதீனை சந்திக்க அனுமதி அளிக்க முடியாது

Posted: 11 Dec 2013 12:00 PM PST

அப்துல் ரஹீம் ஏற்கெனவே இந்திய வெடிபொருள்கள் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர் என்பதால் பக்ருதீனை சந்திக்க அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் விஷயத்தில் காங்கிரஸ், பாஜக இடையே எந்த வித்தியாசமும் இல்லை

Posted: 11 Dec 2013 11:59 AM PST

ஊழல், பொருளாதாரக் கொள்கை இரண்டிலும் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் ஒன்று போலத்தான் இருக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™