Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்... ஜாக்பாட்

Posted:

முழுக்க, முழுக்க, கோவாவையும், அங்கு நடக்கும் விளையாட்டுத் தனமான சம்பவங்களையும் மட்டுமே மையமாக வைத்து, ஜாலியாக, ஒரு அக்மார்க் மசாலா கலவையாக தயாரித்து, சுடச் சுட பரிமாற காத்திருக்கின்றனர். பாலிவுட்டின் டைம்பாம் என, புகழப்படும் சன்னி லியோனுக்கு தான், இந்த படத்தில் முக்கிய வேடம். போஸ்டரில், அவரின் புகைப்படங்களை பார்த்து விட்டு, ...

அமெரிக்காவில் இருந்து இசையமைத்த ரகுமான்

Posted:

சிம்பு- த்ரிஷா நடித்த, விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு, ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்க வைத்த கவுதம் மேனன், நீ தானே என் பொன்வசந்தம் படத்துக்கு, இளையராஜாவிடம் சென்றார். இப்போது, சிம்புவை வைத்து இயக்கும் படத்திற்காக, மறுபடியும், ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்துள்ளார். இன்னும், பெயரிடப்படாத, அந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ள கவுதம் ...

சிண்டு முடியும் வேலையை விட்டுத் தள்ளுங்க

Posted:

வீரம் படத்தில், அஜீத்துடன் புதிய உற்சாகத்துடன் நடித்து முடித்துள்ளார் தமன்னா. இந்த பட அனுபவம் குறித்து, அவர் கூறுகையில், இதில், கிராமத்து தேவதையாக வலம் வரும், என் கேரக்டர் பெருவாரியான ரசிகர்களை, கவரும் வகையில் உள்ளது. இதுவரை எந்த படத்திலும் இல்லாத வகையில், சென்டிமென்ட் காட்சிகளும், எனக்கு தரப்பட்டு உள்ளதால், இந்த படம், எனக்கு ...

அஜீத்துடன்டூர் சென்ற விதார்த்

Posted:

மைனா விதார்த் ஹீரோவாக நடித்த, சில படங்கள் ஓடாததால், கேரக்டர் நடிகராக ரூட்டை மாற்றிவிட்டார். விமல் நடித்து வெளியாகியுள்ள, ஜன்னல் ஓரம் படத்தில், ஒரு நெகடிவ் ரோலில் நடித்தவர், அடுத்து, அஜீத் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் வீரம் படத்தில், அஜீத்தின் தம்பியாக நடித்துள்ளார். இந்த படத்தில், விதார்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ...

அரச குடும்ப படகில்சவாரி செய்த ஸ்ருதி

Posted:

சில ஆண்டுகளுக்கு முன், இந்தியில் வெளியான, வெல்கம் படத்தின் தொடர்ச்சியாக, இப்போது, வெல்கம் பேக் என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில், ஜான் ஆபிரகாமுக்கு ஜோடியாக, நம்ம ஊர் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு, துபாயில் நடந்தபோது, அந்த நாட்டின், அரச குடும்பத்துக்குச் சொந்தமான, ஒரு படகில், சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினராம். ...

டுவிட்டர் போட்ட குண்டு நொந்து நூடுல்ஸ் ஆன சமந்தா

Posted:

நடிகர் - நடிகைகள் ரசிகர்களுடன், ஒரு தொடர்பு வேண்டுமே என்பதற்காகத்தான் டுவிட்டர், பேஸ் புக்கில் கணக்குத் துவங்கி, தங்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.அப்படித்தான் சமந்தாவும், அவ்வப்போது, செய்தி வெளியிட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில், இரவு, பகலாக படப்பிடிப்பில், கலந்து கொண்டதால், என் உடல் இளைத்து விட்டது. ...

ஜெயம் ரவியின் கனவு நனவாகிறது

Posted:

ஜெயம் ரவி, தன் அண்ணன் இயக்கத்தில், மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்துக்காக, ஜெனிலியா போன்று, ஒரு துறு துறு நடிகையை தான், பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுஇருந்தாராம், அண்ணன், ராஜா. ஆனால், ரவி குறுக்கிட்டு, நயன்தாராவுடன், ஒரு படத்திலாவது, ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை, நீண்ட நாளாக தனக்குள் இருப்பதாக ...

இன் ஹைடிங் போலாந்து படம் - கோவா பட ஸ்பெஷல்

Posted:

இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் போலாந்து நாட்டில் ஒரு சிறு நகரத்தில் நடைபெறும் கதை. தன் தாயின் மரணத்திற்கு பிறகு தன் தந்தையுடன் வசிக்கிறான் ஜனைனா என்ற இளம் பெண். தன் நண்பரின் மகள் எஸ்தர் என்ற இளம் பெண்ணிற்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். முதலில் ஜனைனாவிற்கு, எஸ்தர் அவர்கள் வீட்டில் தங்குவது பிடிக்கவில்லை என்றாலும் ...

பிரியாணியின் கதை இதுதான்!!

Posted:

கார்த்திக், ஹன்சிகா, பிரேம்ஜி நடித்துள்ள பிரியாணி வருகிற 20ந் தேதி ரிலீசாகிறது. வெங்கட்பிரபு இயக்கி உள்ளார். பிரியாணி நான் வெஜ் அயிட்டம் என்பதால் தணிக்கை குழு விடாப்பிடியாக யு கொடுக்க மறுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் யு/ஏ வுடன் படம் ரிலீசாகிறது.

எப்போதும் ஒரு சிரிப்பு, தலைசாய்ந்து நடக்கும் நடை, கிண்டல் பேச்சு போன்ற ...

ஆந்திர சினிமாவில் குதிக்கிறார் சிங்கம் சூர்யா!

Posted:

சமீபகாலமாக தமிழில் தயாராகும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கேரளா, ஆந்திராவிலும் வெளியாகி வருகின்றன. இதில் சில படங்கள் வசூலித்து வருவதால், மற்ற மொழி நேரடி படங்களில் நடிக்கும் ஆர்வமும் இங்குள்ள நடிகர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த பட்டியலில், விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், விஷால் ஆகிய நடிகர்கள் உள்ளனர்.

இவர்களில் தனுஷ், ராஞ்சனா ...

தமன்னாவின் ஏமாற்றம்!

Posted:

தமிழ் சினிமாவில் முதல் ரவுண்டில் பெரிய அளவில் கொடியேற்றிய நயன்தாரா மறுபிரவேசத்திலும் கொடி நாட்டியிருப்பதையடுத்து தமன்னாவும் வீரம் படத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தனக்கான ரசிகர்கள் கவர்ச்சி பிரியர்கள் என்பதால் இப்படத்தில் முடிந்தவரை, இடை தொடை என தனது பளீர் கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை பதம் பார்க்க ...

ஹன்சிகாவுடன் டூயட் பாடியது இனிமையான அனுபவம்! -சொல்கிறார் சிவகார்த்திகேயன்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா ஜோடி சேர்ந்துள்ள படம் மான்கராத்தே. சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என சில படங்கள் தொடர்ந்து ஹிட்டானதால் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதோடு, இனி மெகா பட நிறுவனங்கள், மெகா ...

நடிகனாக மாறப்போகிறாராம் நந்தா!

Posted:

ஈரம் படத்தில் நடித்தவர் புன்னகை பூவே, நந்தா, ஆனந்தபுரத்து வீடு, வந்தான் வென்றான், வேலூர் மாவட்டம், புதிய திருப்பங்கள் உள்பட பல படங்களில் நடித்தவர் நந்தா. இதில் வேலூர் மாவட்டம் என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதனால், சூர்யாவுக்கு காக்கா காக்க, விக்ரமுக்கு சாமி என அவர்கள் போலீஸ் வேடத்தில் நடித்த படங்கள் ...

தமிழில் அறிமுகமாகும் பீகார் நடிகை

Posted:

பீகார் மொழி மற்றும் போஜ்புரி மொழிகளில் நடித்து வரும் ஜான்சி என்ற நடிகை தமிழில் வடக்கும் தெற்கும் என்ற படத்தில் அறிமுகமாகிறார். எஸ்.ஆர்.எம்.கல்லூரி மாணவர் அம்ரீஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஜி.ராஜேந்திரன் என்பவர் டைரக்ட் செய்கிறார். அல்ரூபியன், கார்த்திக் ஆச்சார்யா, தீசன், சூரிய பிரசாத், ராஜேஷ் என 6 இசை அமைப்பாளர்கள் அறிமுகமாகிறார்கள். 6 ...

40 நாளில் ரெடியான படம்!

Posted:

தஞ்சை மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த சத்யா நாகராஜ், செல்லதுரை, சாமி.வி.வெங்கட், பாலாமணி ஆகிய 4 பேரும் குவைத்தில் செட்டிலாகிவிட்ட தமிழர்கள். அவர்களுக்கு தமிழ் சினிமா ஒன்று தயாரிக்க ஆசை. வரம் கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி 60 புது இயக்குனர்களிடம் கதை கேட்டு சரணவன் என்பவர் சொன்ன இருக்கு ஆனா இல்ல கதையை தேர்வு செய்து அவரையே ...

ஐ.டி கம்பெனிகளின் மறு பக்கத்தை காட்டும் படம்

Posted:

பளபளப்பாக இருக்கும் ஐ.டி நிறுவனங்களுக்கு பின்னால் இருக்கும் இன்னொரு பக்கத்தை காட்டும் படம் ஒன்றை புதுமுக இளைஞர் சந்தோஷ் தயாரித்து நடிக்கிறார். படத்தின் பெயர் மாலுமி. இதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சுவாதி ஷண்முகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

கடற்கரை குப்பத்தை ஒட்டிய பகுதியில் பிரமாண்ட ஐ.டி நிறுவனம் ஒன்று இருக்கிறது. ...

சென்னை திரைப்பட விழாவில் அனிருத்துக்கு கவுரவம்!

Posted:

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா வருகிற 12ந் தேதி தொடங்குகிறது. இந்தி நடிகர் அமீர்கான் தொடங்கி வைக்கிறார். 8 நாட்கள் நடக்கும் விழாவை 12ந் தேதி மலையாள நடிகர் மோகன்லால் முடித்து வைக்கிறார். அன்று அவர் தமிழ் திரைப்பட பிரிவில் வெற்றி பெற்ற படங்களுக்கு விருது வழங்குகிறார்.

அதே விழாவில் இசை அமைப்பாளர் அனிருத்திற்கு, அமிதாப்பச்சன் இளம் ...

ராம்லீலா டைட்டில் விவகாரம்: பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே மீது வழக்கு பதிவு

Posted:

சமீபத்தில் வெளியான இந்திப் படம் ராம்லீலா. சஞ்ய் லீலா பன்சாலி டைரக்ட் செய்திருந்தார். ரன்வீர்சிங், தீபிகா படுகோனே நடித்திருந்தனர், ப்ரியங்கா சோப்ரா ஒரு பாட்டுக்கு ஆடியிருந்தார். வசூலை குவித்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்துக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகிறது. காரணம் படத்தின் டைட்டில்.

ராம்லீலா என்பது ராமபெருமானின் ...

லயோலா கல்லூரியில் சினிமா 100 கருத்தரங்கம்

Posted:

சென்னை லயோலா கல்லூரி சினிமா 100 என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறது. வருகிற 11 மற்றும் 12ந் தேதிகளில் கல்லூரியின் சுந்தரம் அரங்கில் நடக்கும் இந்த கருத்தரங்கில் திரைப்படம் தொடர்பான அறிஞர்கள், கலைஞர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். விவாத அரங்கம், ஆய்வரங்கம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு ...

லண்டன் தமிழர்களின் சிவசேனை

Posted:

புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் தமிழ் இளைஞர்கள் ஒன்றாக இணைந்து சிவசேனை என்ற படத்தை தயாரித்திருக்கிறார்கள். என்.ராதா என்பவர் தயாரிப்பாளர் கம் டைரக்டர். சுஜித், தர்ஷியா, அனுசுயா, ஹீரோ, ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். தென்றல் சானிய, இளங்கவி, பிரபாளினி பிரபாகரன், ஜுதன் ஸ்ரீ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். வேனன் ஜி, சேகரன் இசை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™