Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்...'47 ரோனின்'

Posted:

18ம் நற்றாண்டில், ஜப்பானில் நடந்த உண்மை சம்பவமே, இந்த படத்தின் கதை. தன் மாஸ்டரை, வஞ்சகமாக கொலை செய்தவர்களை, பழி வாங்கும் சாமுராயின் வீரம் தான், படத்தின் மையக் கரு.

இயக்குனர் : கார்ல் என்ரிக் ரின்ச் நடிப்பு : கேனு ரிவ்ஸ், தடனபு,சுசாமோ,
ரினக்கோ குகுபின், இசை : இலன் இஸ்கர்ஷ்


...

'49 ஓ' போடும்கவுண்டமணி

Posted:

கவுண்டமணி - செந்தில் கூட்டணி, சுமார், 450 படங்களில் நடித்துள்ளது. தமிழ் சினிமா காமெடியர்களில், அதிக ஆண்டுகள் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்தவர்கள், இவர்கள் தான். வடிவேலு வந்தபின், நிலைமை மாறியது. கவுண்டமணி - செந்தில், மார்க்கெட் டல்லடித்தது.

பின், சினிமாவில் நடிக்காமல், சில ஆண்டுகள் விலகியிருந்த கவுண்டமணி, தற்போது 'வாய்மை' என்ற ...

ராசியில்லா நடிகையாக முத்திரை குத்தாதீர்''சிரிப்பு போலீஸ்' ஜனனி கெஞ்சல்

Posted:

'அவன் இவன்' படத்தில், சிரிப்பு போலீசாக நடித்து, அனைவரையும் கவர்ந்தவர், ஜனனி அய்யர். ஆனால், அதற்கு பின், ஸ்ரீகாந்துடன், அவர் நடித்த, 'பாகன்' படம், சரியாக போகவில்லை. இதனால், ஜனனி மீது, ராசியில்லாத நடிகை என்ற முத்திரை, அழுத்தமாக பதிந்து விட்டது. இந்த முத்திரையை முறியடிக்க, அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. கோலிவுட் ஓரம் ...

இளையராஜா இசைக்கு அடிமை நான்! : மகேந்திரன்

Posted:

மவுனத்தை விட, சிறந்த வார்த்தைகள் எதுவும் இல்லை. இதனால் தான், என் படங்களில் வசனங்களுக்கு முக்கியத்துவம் தருவது இல்லை. அதேபோல், டூயட் பாடல் காட்சிகளையும், அதிகம் விரும்ப மாட்டேன். என் படங்களில், வசனங்களை, இளையராஜா, அவரின் இசையால் நிரப்புவார். அவரின் இசைக்கு, நான் அடிமை. மனம் சோர்வாக இருக்கும் நேரங்களில், அவர் இசை தான், எனக்கு உற்சாகம் ...

நான்தாங்க ஹீரோ!அபிஷேக் பச்சன்

Posted:

தூம்-3 படம் தொடர்பான விஷயங்களில் இருந்தும், விளம்பரங்களில் இருந்தும், என்னை, ஏன் ஒதுக்குகின்றனர் என, தெரியவில்லை. நான், அந்த படத்தின் ஹீரோ. இதை, யாராலும் மறைக்க முடியாது. படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சிகளுக்காக, எங்கு வர சொன்னாலும் வருவேன். தூம் போன்ற, கதையம்சம் உள்ள படங்களில், பெரிய நடிகர்கள் மட்டுமல்ல, சிறிய நடிகர்கள் நடித்தால் ...

ஹீரோக்கள் விரும்பும் லட்சுமி மேனன்

Posted:

கோலிவுட்டின் சமர்த்து பெண்ணாக உருவெடுத்துள்ளார், லட்சுமி மேனன். பந்தா இல்லாமல், அதிகம் அலட்டிக் கொள்ளாமல், இயக்குனர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே செய்து, அனைவரிடமும், சபாஷ் வாங்குகிறார். இதனால், இளம் ஹீரோக்கள் மட்டுமல்லாமல், முன்னணி ஹீரோக்களும், லட்சுவையே, தங்களுடன் சேர்க்க, ஆர்வம் காட்டுகின்றனர். சசி குமார், விஷால் போன்றவர்கள், ...

மகேஷ் பாபுவுடன் மோதும் சமந்தாஆந்திர திரையுலகில் பரபரப்பு

Posted:

தெலுங்கு திரையுலகில், நடிகை சமந்தாவுக்கும், பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கும் இடையே, பனிப் போர் நடந்து கொண்டிருக்கிறது. மகேஷ் பாபுவுக்கு போட்டியாக, தியேட்டர்களில், சமந்தா ரசிகர்களும், 'கட் - அவுட்'களை வைப்பதாக, முதலில் பேசப்பட்டது.

இந்நிலையில், மகேஷ் பாபு நடித்த, தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான போஸ்டர், சமீபத்தில், ...

அமீர் கானின் முதல் நிகழ்ச்சி

Posted:

பாலிவுட் நடிகர் அமீர் கான்,சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்பதில், அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால், சமீபத்தில் சென்னையில் நடந்த திரைப்பட விழாவில், பங்கேற்க வரும்படி, அழைப்பு விடுக்கப்பட்டதும், ஆர்வத்துடன், சம்மதித்தாராம். அந்த விழாவில் பங்கேற்று, கடைசி வரை, அனைவருடனும், கல கலப்பாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார். அவர் ...

ரஜினியின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை: கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

Posted:

கோச்சடையான் முடிந்ததும் அடுத்து ரஜினி நேரடியாக நடிக்கும் ஒரு படத்தை கே.எஸ்.ரவிகுமார் டைரக்ட் செய்யப்போவதாகவும், படையப்பா கதையின் பார்ட்-2 வாக அது இருக்கும் என்று செய்திகள் வெளியானது. இதுபற்றி ரவிகுமார் கூறியதாவது: கோச்சடையானில் எனது பங்களிப்பு முடிந்து விட்டது. ரஜினி சார் கோச்சடையானுக்கு பிறகான படம் பற்றி இப்போது எந்த முடிவும் ...

சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறேன்: வாணி போஜன்

Posted:

விமான பணிப்பெண்ணாக இருந்து டி.வி.சீரியல் நடிகையானவர் வாணி போஜன். ஆஹா, மாயா தொடர்களில் நடித்தவர் இப்போது தெய்வமகள் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். வாணி போஜனின் அழகு சினிமா வாய்ப்புகளை கொண்டு வந்தாலும் இன்னும் அதற்கு ஓகே சொல்லாமல் இருக்கிறார் வாணி. ஏன் என்பதற்கு அவர் விளக்கமும் தருகிறார்.

விமான பணிப்பெண்ணாக வேலை ...

நண்பனுக்காக கமல் எழுதி பாடிய பாடல்!

Posted:

கமலஹாசனும், இயக்குனர் ஆர்.சி. சக்தியும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் அன்னை வேளாங்கண்ணி படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள். இருவரும் ஒரே அறையில் தங்கி வாய்ப்பு தேடியவர்கள். பல எதிர்ப்புகளுக்கிடையே கமலை உணர்ச்சிகள் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தவர். இருவரும் காரைக்குடியை சேர்ந்தவர்கள். அண்மையில் நடந்த சர்வதேச ...

ஜனவரி 3ந் தேதி நம்ம கிராமம் ரிலீஸ்!

Posted:

பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான மோகன் சர்மா இயக்கி, தயாரித்து நடித்துள்ள சிறப்புத் திரைப்படம் நம்ம கிராமம். 2012ம் ஆண்டுக்கான தேசிய விருதை பெற்றுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் புரையோடிக் கிடந்த ஜாதி பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். மறைந்த நடிகை சுகுமாரி இதில் நடித்திருந்தார்.

படத்துக்கு விருது ...

மை ஸ்வீட் பெப்பர் லேண்ட் படம் ஒரு பார்வை - கோவா பட விழா ஸ்பெஷல்!

Posted:

பாரன், குர்த் பிரிவின் விடுதலைப் போரின் ஹீரோ. எர்பிள் என்ற இடத்தில் ஷெரீப் ஆக இருக்கிறார். காவல் துறையில் பணிபுரிந்தது போதும், வீட்டிற்கு திரும்பலாம் என்று அவர் மேலதிகாரியிடம் சொல்கிறார். உங்களைப்போன்ற நேர்மையான தைரியமான அதிகாரியை நாங்கள் இழக்க விரும்பவில்லை என்று சொல்லும் மேலதிகாரி, பாரனின் விருப்பத்திற்கு இணங்கி, ஈரான், ...

தெலுங்கில் டப் ஆனது வத்திக்குச்சி!

Posted:

ஏ.ஆர்.முருகதாசின் அண்ணன் மகன் திலீபன் ஹீரோவாக அறிமுகமான படம் வத்திக்குச்சி. அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாசும், ஃபாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோவும் இணைந்து தயாரித்திருந்தது. முருகதாசின் உதவியாளர் கின்ஸிலி என்பவர் டைரக்ட் செய்திருந்தார். படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பேசப்பட்டாலும் படம் பெருசாக போகவில்லை. திலீபனும் ...

தலைமுறைகள் பார்த்து கண்ணீர் சிந்திய பாலுமகேந்திரா!

Posted:

தமிழ் சினிமாவை புதிய கோணத்தில் காண்பித்த முக்கியமான இயக்குநர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர். கோகிலா, மூடுபனி, அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர் கடைசியாக தனுஷை வைத்து 2005ம் ஆண்டில் அது ஒரு கனாக்காலம் படத்தை இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைமுறைகள் எனும் படத்தை ...

உறவும், நட்பும் கை கொடுக்க பல புதுமைகள் படைத்திருக்கும் 'தோழனோடு இருக்கையில்...' குறும்படம் திரைப்படமாகிறது!!

Posted:

நான்காவது தலைமுறையாக திரையுலகில் கோலோச்சி வரும் ஏவிஎம் நிறுவனமே குறும்படம், இணையதளங்களுக்கான டெலிபிலிம் என பெரிய திரைக்கு சவால் விடும் சாதனை குறும்படங்களை எடுத்து வரும் சூழலில், புதியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு குறும்படத் தயாரிப்புகளில் கவனம் ஈர்க்கி்ன்றனர்.

அப்படி சமீபத்தில் 'தோழனோடு இருக்கையில்...' எனும் பெயரில் ...

தடகள விளையாட்டு வீரராக அதர்வா!

Posted:

பாணா காத்தாடியில் அறிமுகமான அதர்வா, பாலா இயக்கத்தில் நடித்த பரதேசியில் நடித்து தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதைத் தொடர்ந்தும் அந்த மாதிரியான வலுவான கதைகளாகவே தேடி வந்ததால் அடுத்தபடியாக அவருக்கு படங்கள் கிடைக்க சிறிது காலதாமதம் ஆனது.

அதனால் பல மாத இடைவெளிக்குப்பிறகு இப்போது இரும்புக்குதிரை என்ற படத்தில் ...

ஜில்லா தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

Posted:

விஜய் நடித்த தலைவா படம் பல்வேறு தடைகளை சந்தித்ததால் அவரது அடுத்த படமான ஜில்லாவை எந்தவித அரசியல் வசனங்களோ, யார் மனதையும் புண்படுத்தும்படியான காட்சிகளோ இல்லாமல் படமாக்கி வருகிறார்கள். இந்த விசயத்தில் விஜய்யே கவனமாக இருந்தபோதும், ஜில்லா பட தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி ரொம்ப உஷாராக இருந்தார்.

எக்காரணம் கொண்டும் தலைவா ...

தமிழ் படத்தில் நடிக்கத் தயார்: சென்னையில் அமீர்கான் பேட்டி

Posted:

அமீர்கான், அபிஷேக் பச்சன், உதய்சோப்ரா, கத்ரீனா கைப் நடித்த தூம் 3 படம் வருகிற 20ந் தேதி ரிலீசாகிறது. தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது. படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் நேற்று (டிசம்பர் 17) சென்னை வந்தனர். கிண்டியில் உள்ள 7 நட்டசத்திர ஓட்டலில் அவர்கள் சென்னை பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அமீர்கான் ...

நான் ஈ சுதீப்பை இயக்குகிறாராம் பேரரசு!

Posted:

ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்தவர் சுதீப். கன்னட நடிகரான இவர் அங்கு ஆக்சனுக்கு பேர்போனவர். அதனால் ஏதாவது மொழிகளில் சிறந்த ஆக்சன் படங்களைப்பார்த்து விட்டால் உடனே அந்த படங்களை இயக்கியவர்களை அழைத்து தன்னை வைத்தும் ஒரு அதிரடி படத்தை இயக்குமாறு கேட்டுக்கொள்வார். அந்த அளவுக்கு ஆக்சன் படங்களில நடிப்பதில் அதிக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™