Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பெண் தூதர் கைது திட்டமிட்ட சதி: பாராளுமன்றத்தில் சல்மான் குர்ஷித் தகவல்

Posted: 17 Dec 2013 11:50 PM PST

அமெரிக்காவில் இந்திய பெண் துணை தூதர் கைது செய்யப்பட்டது தொடர்பான விவாதம் டெல்லி மேல்–சபையில் நடந்தது. இதற்கு பதில் அளித்து வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கூறியதாவது:– அமெரிக்காவில் இந்திய துணை தூதர் தேவயானி கைது செய்யப்பட்ட நடவடிக்கையில் சதி உள்ளது. சதி திட்டத்தில் அவர் சிக்க வைக்கப்பட்டுள்ளார். துணை தூதரின் கவுரவத்தை காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெண் தூதர் அவமதிப்பு: மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- பாராளுமன்றத்தில் மாயாவதி பேச்சு

Posted: 17 Dec 2013 11:43 PM PST

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசியதாவது:– அமெரிக்காவின் இந்த செயலுக்காக மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவயானி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் மீது குறி வைத்து இந்த

லோக்பால் மசோதா போன்ற அபாயகராமான மசோதா வேறு இல்லை: விவாதத்தில் முலாயம்சிங் யாதவ் கருத்து

Posted: 17 Dec 2013 11:29 PM PST

பாராளுமன்றத்தில் இன்று லோக்பால் மசோதா மீதான விவாதத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசும்போது, லோக்பால் மசோதா போன்ற அபாயகரமான மசோதா வேறு இல்லை. இம்மசோதா நிறைவேறினால் ஆவணங்களில் கையெழுத்து போட அரசு அலுவலர்கள் பயப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே, சோனியா காந்தி இந்த லோக்பால் மசோதாவை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக

தெலுங்கானா பிரச்சினையால் அமளி: பாராளுமன்றத்தில் கூச்சல்–குழப்பம் சபை ஒத்திவைப்பு

Posted: 17 Dec 2013 11:22 PM PST

தெலுங்கானா பிரச்சினையால் பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது. இன்று பாராளுமன்றம் கூடியதும் சபையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் பேச தொடங்கினர். அமெரிக்காவில் இந்திய பெண் தூதர் அவமதிப்பு, தெலுங்கானா விவகாரம் குறித்து பிரச்சினைகளை கிளப்பினர். சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் சைலேந்திரகுமார், நியூயார்க்கில்

லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் அரசு வரலாறு படைக்கவுள்ளது: பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு

Posted: 17 Dec 2013 11:18 PM PST

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இம்மசோதா மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடந்தது. இதில் பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பேசும்போது, லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் அரசு வரலாறு படைக்கவுள்ளது. ஊழலை ஒழிக்க

அன்னாஹசாரே 9–வது நாளாக உண்ணாவிரதம்

Posted: 17 Dec 2013 11:03 PM PST

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி சமூக ஆர்வலர் அன்னாஹசாரே தனது சொந்த ஊரில் உண்ணா விரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதம் இன்று 9–வது நாளாக நீடித்தது. டெல்லி மேல்–சபையில் நேற்று லோக்பால் மசோதா

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Posted: 17 Dec 2013 11:00 PM PST

ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கியின் குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ) 7.75 சதவீதமாக நீடிக்கும். இதே போல ரிசர்வ் வங்கியின் மற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை.

லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர், மாநில முதல்–மந்திரிகள்: புதிய லோக்பால் மசோதாவில் முக்கிய அம்சங்கள்

Posted: 17 Dec 2013 10:44 PM PST

நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஊழலை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்டது தான் 'லோக் பால்' இது தன்னாட்சி அமைப்பாகும். ஊழல் புகார் வந்தால் பிரதமர், மாநில முதல்– மந்திரிகள், அரசு அதிகாரிகள் என யாரை வேண்டுமானாலும் விசாரிக்கும். ஆனால் பொய் புகார் கொடுத்தால் புகார் கொடுத்த வருக்குத்தான் தண்டனை வழங்கப்படும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்

திருப்பதியில் வழங்கும் லட்டு இரண்டாக குறைப்பு

Posted: 17 Dec 2013 10:43 PM PST

நெய் வரத்து குறைவு காரணமாக திருப்பதி ஏழுமலையான் பிரசாத லட்டு தயாரிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கு கூடுதலாக 4 லட்டு வழங்கப்பட்டு வந்த நடைமுறை மாறி இனிமேல் இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானம் தினசரி 3 லட்சம் லட்டுகளை தயாரிக்கிறது. ஏழுமலையானை தரிசித்து வெளியே வரும் பக்தர்களுக்கு 2 லட்டு வழங்கப்படுகின்றன. அதில் மாற்றமில்லை. கூடுதலாக ஒரு லட்டு ரூ.25 என்ற விலையில்

தெலுங்கானா மசோதா: ஆந்திர சட்டசபையில் இன்றும் அமளி

Posted: 17 Dec 2013 09:58 PM PST

ஆந்திர சட்டசபையில் நேற்று முன்தினம் அமளிக்கு இடையே தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இன்றும் அங்கு அமளி நிலவியது. ராயலசீமா, ஆந்திர கடலோர பகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேச உறுப்பினர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து தெலுங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

பா.ஜ.க.வும், சி.பி.ஐ.யும் சேர்ந்து என்னை ஜெயிலில் தள்ளிவிட்டன: லல்லுபிரசாத் ஆவேசம்

Posted: 17 Dec 2013 09:46 PM PST

ஜெயிலில் இருந்து விடுதலையான பிறகு ராஷ்டீரிய ஜனதாதளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கி உள்ளார். ராஞ்சியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:– பீகார் முதல்–மந்திரி நிதீஷ்குமார் திட்டமிட்டு சதி செய்து, பா.ஜ.க.வுடன் சேர்ந்து என்னை ஜெயிலுக்குள் தள்ளினார்கள். அவர்களுக்கு ஆதரவாக சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்து கொண்டனர். சி.பி.ஐ. அதிகாரிகள் வினை விதைத்து இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் அதற்கான தண்டனையை அறுவடை செய்தே தீர வேண்டும்.

தூதரக பெண் அதிகாரி கைது பற்றி ஆய்வு செய்வதாக அமெரிக்கா உறுதி: மத்திய அரசின் நடவடிக்கையால் பணிந்தது

Posted: 17 Dec 2013 09:31 PM PST

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றுபவர் தேவயானி கோப்ரகடே. இவர் தனது வேலைக்கார பெண்ணுக்கு அமெரிக்க விசா பெற்றதில் தவறான தகவல் அளித்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக கடந்த 12–ந்தேதி தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பிய போது தேவயானியை அமெரிக்க போலீசார் பொது இடத்தில்

பாராளுமன்ற தேர்தலில் நிறைவேற்ற சாத்தியமுள்ள வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கவேண்டும்: மன்மோகன் சிங் அறிவுரை

Posted: 17 Dec 2013 09:30 PM PST

பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 7-கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது. தேர்தல் அறிவிப்பு தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வியூகம் குறித்தும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி மற்றும் பிரசாரம் பற்றியும் விவாதிப்பதற்கு முதற்கட்டமாக இன்று காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது.

தி.மு.க.வால் வென்ற 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற தி.மு.க.வுக்கு உரிமை உண்டு: ஞானதேசிகனுக்கு டி.ஆர்.பாலு பதில்

Posted: 17 Dec 2013 09:12 PM PST

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'டெல்லி மேல்சபை தேர்தலில் கனிமொழி போட்டியிட்ட போது, காங்கிரஸ் ஆதரவை தி.மு.க. கேட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. கூறியதாவது:– தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட 5 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. தொண்டர்களின்

பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை

Posted: 17 Dec 2013 09:07 PM PST

பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எப்போது நடத்தலாம் என்று தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வருகிற மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. பாரதீய ஜனதா ஏற்கனவே பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. 4 மாநில தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அந்தக் கட்சி உற்சாகத்துடன் களம் இறங்கியுள்ளது. வேட்பாளர் தேர்தல், பிரசார யுத்தி பற்றி முடிவு செய்ய அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.

திருப்பதியில் வன அதிகாரிகள் கொலை வழக்கில் திருப்பத்தூர் வாலிபர்கள் 3 பேர் கைது

Posted: 17 Dec 2013 09:02 PM PST

திருப்பதி மலையில் வனத்துறை அதிகாரிகள் 2 பேரை செம்மர கடத்தல் கும்பல் 16–ந் தேதி கல்லால் தாக்கி கொலை செய்தது. இது தொடர்பாக திருப்பதி, திருமலை, காளஹஸ்தி, சித்தூர், ராஜம்பேட்டை ஆகிய ஊர்கள் வழியாக தமிழகத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு தப்பிச்செல்ல முயன்ற 200–க்கும் அதிகமான மரம் வெட்டும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்

கேரளாவில் கோவில் அருகே 2 லாரிகள் மோதல்: 4 பேர் பலி

Posted: 17 Dec 2013 08:42 PM PST

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கடவளூர் பகுதியை சேர்ந்தவர்கள் மணீஸ் (வயது 28), ராஜன் (49), சுதாகர் (35), முகேஷ் (29), உண்ணி (35), சுஜா (30) ஆகிய 6 பேர் கடவளூரில் உள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற திருவாதிரை விழாவுக்கு நேற்று இரவு 11 மணிக்கு புறப்பட்டனர். கோவில் அருகே வந்த போது பக்தர்கள் கூட்டத்தில் அவர்கள் கலந்தனர்.

மத்திய மந்திரி நாராயணசாமி மனைவிக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை: ராகுல்காந்தி நலம் விசாரித்தார்

Posted: 17 Dec 2013 08:04 PM PST

மத்திய மந்திரி நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி (வயது 57). கடந்த ஆண்டு புதுவையில் நடந்த விபத்தில் கலைசெல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார். இதில் அவர் குணமடைந்தார். இந்த நிலையில் டெல்லியில் இருந்த கலைச்செல்விக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவரது மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக கலைச்செல்வி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில்

காங்கிரஸ் அல்லது பா.ஜனதா ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைக்கலாமா?: மக்களிடம் கருத்து கேட்கிறார், கெஜ்ரிவால்

Posted: 17 Dec 2013 07:35 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. அதைத் தொடர்ந்து 2-வது பெரிய கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்குமாறு துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்தார். ஆனால் அந்தக் கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலும், தனக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறினார். இருப்பினும் அவர் 10 நாட்கள் அவகாசம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிரடி திருப்பமாக, ஆம்ஆத்மி கட்சி ஆட்சி

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசியல் கட்சிகளை சேர்க்க தேவை இல்லை: பாராளுமன்ற குழு அறிக்கை தாக்கல்

Posted: 17 Dec 2013 03:22 PM PST

தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சட்டப்பிரிவு 2-ல், அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்டவர்கள் பொது அமைப்பாக கருதப்பட மாட்டார்கள் என்று சேர்க்கப்பட்டது. அதன்படி அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™