Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மும்பையில் ஒரே பிரசவத்தில் 168 நாளில் பிறந்த 3 குழந்தைகள்

Posted: 21 Dec 2013 10:51 PM PST

கோவாவை சேர்ந்தவர் வென்ஸ்லி டி சில்வா. இவரது மனைவி ஷெரில் (33). இவருக்கு ஏற்கனவே 3 தடவை கருசிதைவு ஏற்பட்டது. எனவே, 4 தடவை கர்ப்பம் தரித்ததும் அவர் மும்பையில் சாந்தாகுரூசில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தார். அங்கு அவரை சோதனை செய்ததில் கர்ப்பபையில் 3 குழந்தைகள் வளர்ந்து வருவது தெரிய வந்தது. எனவே, அவருக்கு

பிரதமர் வேட்பாளருக்கு ராகுல்காந்தி தகுதியானவர்: வீரப்பமொய்லி

Posted: 21 Dec 2013 10:42 PM PST

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பிரசாரம் செய்து வருகிறார். இதன் பயனாக 4 மாநில தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் வருகிற 17–ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ்

டெல்லி முதல்– மந்திரியாக கெஜ்ரிவால் 25–ந்தேதி பதவி ஏற்கிறார்: பொதுமக்கள் முன்னிலையில் விழா

Posted: 21 Dec 2013 10:26 PM PST

கடந்த 4–ந்தேதி நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா 32 தொகுதியிலும், ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதியிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களே கிடைத்தன. மெஜாரிட்டி பலத்துக்கு 36 இடங்கள் தேவை. இதனால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதையடுத்து மாநில கவர்னர் நஜிப் முறைப்படி பாரதீய ஜனதாவுக்கு அழைப்பு விடுத்தார். அந்த கட்சி ஆட்சி அமைக்க மறுத்ததால்

மோடி வியூகத்தை வீழ்த்த குஜராத்தில் 26 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டி

Posted: 21 Dec 2013 10:24 PM PST

ஊழல் எதிர்ப்பு தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் 'ஆம் ஆத்மி' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரசை படுதோல்வி அடையச் செய்த அவரது கட்சி பாரதீய ஜனதாவின் ஆட்சி கனவையும் தகர்த்து விட்டது. பெரிய பெரிய வி.ஐ.பி.க்கள், மத்திய மந்திரிகள் வசிக்கும் புதுடெல்லி தொகுதியில் ஷீலாதீட்சித்தையும் தோற்கடித்து விட்டார்.

தேவயானி வீட்டு பணிப்பெண் அமெரிக்காவின் ஏஜெண்டு: தந்தை குற்றச்சாட்டு

Posted: 21 Dec 2013 10:15 PM PST

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றிய தேவயானி மீது அவரது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா பல்வேறு புகார்களை அமெரிக்க போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தேவயானி மீதான நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு

3 பெண்களை கற்பழித்து கொன்ற ஆசிரியருக்கு தூக்கு தண்டனை: மங்களூர் கோர்ட்டு தீர்ப்பு

Posted: 21 Dec 2013 09:53 PM PST

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (50). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2009–ம் ஆண்டு பண்டுவலா பகுதியை சேர்ந்த அனிதா (22) என்ற இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தினார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து வந்தார். பின்னர் உணவில் சையனைடு கலந்து கொடுத்து கொலை செய்தார். அனிதா கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது அனிதா – மோகன்குமார் செல்போன் உரையாடலை

உலகம் முழுவதிலும் இருந்து 'கூகுள்' வழியாக தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்கள் வரிசையில் மோடிக்கு முதல் இடம்

Posted: 21 Dec 2013 09:51 PM PST

இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக 'கூகுள்', 'யாஹூ' உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் (சர்ச் எண்ஜின்) உதவுகின்றன. இவற்றில் 'கூகுள்' தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணையதளங்களுக்குள்

விண்வெளிப்பயணத்திற்கு இலவச அனுமதி பெற்ற மும்பை விளம்பர நிர்வாகி

Posted: 21 Dec 2013 09:36 PM PST

மும்பையைச் சேர்ந்த விளம்பர நிர்வாகியான வினய்சிங் (24) அமெரிக்காவைச் சேர்ந்த அபோல்லோ விண்வெளி வீரர்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு ஆன்லைன் போட்டியில் கலந்துகொண்டார். 60 நாடுகளில் இருந்து 120க்கும் மேற்பட்ட விண்வெளி ஆர்வலர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் ராக்கெட் மாடலிங், விமானப் போர்ப் பயிற்சி மற்றும்

காங்கிரஸ், பா.ஜனதாவை விட சிறந்த ஆட்சியை வழங்க முடியும்: அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

Posted: 21 Dec 2013 08:00 PM PST

டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், மக்களின் கருத்துகளை கேட்டு ஆட்சியமைப்பதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இது தொடர்பாக சுமார் 25 லட்சம் கடிதங்கள், டெல்லி மக்களுக்கு அக்கட்சி சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி பெங்களூரில் 3–வது அணி தலைவர்கள் கூட்டம்: தேவேகவுடா தகவல்

Posted: 21 Dec 2013 11:08 AM PST

பாராளுமன்ற தேர்தலையொட்டி பெங்களூரில் 3–வது அணி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார். ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு முன்னாள் பிரதமர்

மோடி கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் வாபஸ்

Posted: 21 Dec 2013 10:29 AM PST

அமெரிக்காவில் இந்திய துணை தூதர் தேவயானி அவமதிப்பு செய்யப்பட்டதையடுத்து அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா கண்டனக்குரல் எழுப்பி வருகிறது. அமெரிக்காவிற்கு எதிராக போராட்டமும் நடந்துவருகிறது. இந்நிலையில் மும்பையில் நாளை நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பாதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

அமெரிக்க தூதர்கள் என்று அழைக்கப்படும் அதிகாரிகளை சோதனை செய்ய வேண்டும்: யஷ்வந்த் சின்கா வலியுறுத்தல்

Posted: 21 Dec 2013 07:53 AM PST

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், வழக்கை வாபஸ் பெறும்படி வலியுறுத்தி வருகிறது. அதேசயம் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகளையும் ரத்து செய்தது. ஆனால் எதற்கும் பிடிகொடுக்காத அமெரிக்கா,

மாணவர்களைக் கடத்தி கட்டாய செக்ஸ் உறவு: வீடியோ எடுத்து மிரட்டிய 8 பேர் கைது

Posted: 21 Dec 2013 07:29 AM PST

கர்நாடக மாநிலம் மங்களூரில் மாணவர்களைக் கடத்தி செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:- 22 வயது மருத்துவ மாணவர் தனது நண்பருடன் வியாழக்கிழமை இரவு ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பியிருக்கின்றனர். மங்களூரில்

வளர்ச்சி இல்லாமல் வறுமையை ஒழிக்க முடியாது: ராகுல் காந்தி பேச்சு

Posted: 21 Dec 2013 04:40 AM PST

இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:- நாட்டில் இன்று ஊழல், வறுமை மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஊழல் நமது மக்களின் மீது ஏற்றுக்கொள்ள முடியாத சுமையாக உள்ளது. மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஊழலை ஒழிக்க அதிரடி

கணக்கு தொடங்கிய ஓராண்டுக்குள் மம்தா பானர்ஜியின் 'ஃபேஸ்புக்' பக்கத்துக்கு 5 லட்சம் 'லைக்' குவிந்தன

Posted: 21 Dec 2013 04:11 AM PST

உலகில் உள்ள அரசியல், சினிமா மற்றும் தொழிற்துறை பிரபலங்கள் அனைவரும் 'டுவிட்டர்', 'ஃபேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு துவங்கி அந்த பக்கங்களின் வாயிலாக தங்களது கருத்துக்களை பொது மக்களிடம் பதிவு செய்து வருகின்றனர்

பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் தாக்கப்பட்ட பெண் விரைவில் டிஸ்சார்ஜ்: குற்றவாளி இன்னும் சிக்கவில்லை

Posted: 21 Dec 2013 03:26 AM PST

பெங்களூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடந்த மாதம் 19-ம் தேதி பாதுகாவலர் இல்லாத ஒரு ஏ.டி.எம். மையத்திற்குச் சென்ற வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய், பணம் எடுத்துவிட்டு திரும்பும்போது உள்ளே நுழைந்த ஆசாமி ஒருவன் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு பணத்தை பறித்துச் சென்றான்

காஷ்மீரில் 40 நாட்கள் கொண்ட கடும் குளிர்காலம் தொடங்கியது

Posted: 21 Dec 2013 02:10 AM PST

காஷ்மீரில் ரத்தத்தை உறைய வைக்கும் 40 நாட்கள் கொண்ட கடும் குளிர்காலம் இன்று தொடங்கியது. இதனால் இனி வரும் 40 நாட்களும் அதிகமாக பனிப்பொழிவு இருக்கும். குல்மார்கில் உள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டில் குளிர்கால விளையாட்டுக்களும் இந்த காலகட்டத்தில் நடைபெறும். குல்மார்க், சோனமார்க், ஷோபியான், குப்வாரா மற்றும் பாகல்காம் போன்ற உயரமான பகுதிகளில் இன்று மிதமான பனிப்பொழிவு இருக்கும் என்றும், ஸ்ரீநகரில் இரவில் மழை மற்றும் லேசான பழிப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தேவயானி விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் பல்வேறு மட்டங்களில் இந்தியா பேசி வருகிறது: சல்மான் குர்ஷித்

Posted: 21 Dec 2013 01:19 AM PST

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கைது செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டதற்கு இந்திய அரசு கண்டனத்தை தெரிவித்தது. மேலும், தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால், வழக்கை வாபஸ் பெற அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

பண்டிகை காலங்களில் டெல்லி–மும்பை ரெயிலில் பிரிமீயம் கட்டணம்

Posted: 21 Dec 2013 12:04 AM PST

பண்டிகை காலங்களில் ரெயில்களில் பிரிமீயம் கட்டணம் வசூலிக்க ரெயில்வே முடிவு செய்துள் ளது. சோதனை முறையில் டெல்லி–மும்பை இடையேயான சிறப்பு ராஜ்தானி ரெயிலில் இந்த பிரிமீயம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் திடீர் ராஜினாமா: கட்சி பணியாற்ற முடிவு

Posted: 20 Dec 2013 11:57 PM PST

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ் கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. காங்கிரசும், பா.ஜ.க.வும் நேருக்கு நேராக களத்தில் குதித்த இந்த 5 மாநில தேர்தல் அடுத்த ஆண்டு (2014) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமான அரை இறுதி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™