Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நீச்சல் உடை அணிந்து கலக்கலாக போஸ் கொடுத்த அழகி (வீடியோ இணைப்பு)

Posted: 12 Nov 2013 04:20 AM PST

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ள வெனிசுலாவின் கேப்ரியலா இஸ்லர், 10 லட்சம் டொலர் மதிப்பிலான நீச்சல் உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். மாஸ்கோவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் வெனிசுலாவின் கேப்ரியலா இஸ்லர் பட்டம் வென்றார். இதையடுத்து மாஸ்கோவின் கன்சர்ட் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் மிஸ் யுனிவர்ஸ் என்ற அந்தஸ்துடன் 10 லட்சம் டொலர் மதிப்பிலான நீச்சல் உடையில் தோன்றி போஸ் கொடுத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிஸ் யுனிவர்ஸ் அழகியாக எனது முதல் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சோமாலியாவை பதம் பார்த்த சூறாவளி! 100 பேர் பலி

Posted: 12 Nov 2013 04:15 AM PST

சோமாலியாவை நேற்று தாக்கிய புயலில் சிக்கி 1 லட்சம் வீடுகளை இழந்துள்ள நிலையில், 100 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்திய பெருங்கடலில் உருவான புயல் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் புந்த் லேண்ட் பகுதியில் நேற்று கரையை கடந்தது. இதன் எதிரொலியாக கனமழையும், கடும் சூறாவளியும் அதனைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. பலமாக வீசிய சூறைக் காற்றில் சிக்கி மரங்கள் வேரோடு சாய்ந்தன, வீடுகள் இடிந்தன, சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், தொலை தொடர்பு […]

கொழும்பு – யாழ் விமான சேவை நிறுத்தம்

Posted: 12 Nov 2013 04:10 AM PST

யாழ். – கொழும்புக்கு இடையிலான விமான சேவை திங்கட்கிழமை (11) முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேற்படி விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, விமான சேவை நிறுத்தப்பட்டதிற்கான காரணம் தங்களுக்கு தெரியாதென்றும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சபையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அத்துடன் மீண்டும் விமான சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு இன்று (12) விஜயம்மேற்கொண்ட கனேடியப் பிரதிநிதிகள் ஏ […]

இலங்கை காமன்வெல்த் விவகாரம்: ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: கருணாநிதி

Posted: 12 Nov 2013 04:05 AM PST

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது இதுகுறித்து பேரவையில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் பற்றி திமுக தலைவர் கருணாநிதி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், எந்தத் தீர்மானமாக இருந்தாலும், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றார். சென்னையில் திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் கருணாநிதி இதனை வலியுறுத்தினார்.

தென் ஆப்ரிக்கா அணி 117 ஓட்டங்களால் அபார வெற்றி

Posted: 12 Nov 2013 03:51 AM PST

தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு ராச்சியத்தில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 117 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு அணிகளுக்கும் இடையிலான […]

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

Posted: 12 Nov 2013 03:46 AM PST

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ள கூடாது. இந்த மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என கூறி தமிழகத்தில் வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். நாகை மாவட்டம் சீர்காழி கச்சேரி சாலையில் தனியார் லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் சுமார் 100 அடி உயரம் கொண்டது. இந்த செல்போன் கோபுரத்தில் இன்று காலை 9.15 மணியளவில் […]

புலம்பும் மைக்கேல் கிளார்க்

Posted: 12 Nov 2013 03:35 AM PST

அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவரான மைக்கேல் கிளார்க் டி.ஆர்.எஸ் முறை சந்தேகம் தரும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில் நடக்கும் போட்டித் தொடர்களில் டி.ஆர்.எஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில், டி.ஆர்.எஸ் முறையில் வழங்கப்பட்ட பல தீர்ப்புகள் சர்ச்சையை கிளப்பின. இதனால், இப்போது பல அணிகள் டி.ஆர்.எஸ்., குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இவ்வரிசையில் இணைந்துள்ளார் மைக்கேல் கிளார்க். இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஸ்டூவர்ட் […]

பொதுநலவாய நாடுகளுக்கு இடையில் பொருளாதார இடைவெளி காணப்படுகின்றது – ஜனாதிபதி

Posted: 12 Nov 2013 03:29 AM PST

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையில் பாரியளவில் பொருளாதார இடைவெளி காணப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் வர்த்தக அமர்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டு;ள்ளார். 1971ம் ஆண்டு முதல் இந்த முரண்பாட்டு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். வறுமையை இல்லாதொழிப்பது குறித்து பேசப்பட்ட போதிலும் இதுவரையில் அதற்கான தீர்வுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கடந்த கால பிரகடனங்களில் குறிப்பிடப்பட்டதற்கு […]

கோலாகலமாக நடந்த பாராட்டு விழா (வீடியோ இணைப்பு)

Posted: 12 Nov 2013 03:23 AM PST

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெறும் சச்சினுக்கு, மும்பையில் பிரமாண்டமான அளவில் பாராட்டு விழா நடந்தது. இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர்(வயது 40), தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறார். இதற்காக மும்பை கிரிக்கெட் சங்கம்(எம்.சி.ஏ) சார்பில், சச்சினுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அணி வீரர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். விழாவில் மும்பையில் உள்ள கண்டிவ்லி […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தென்னாபிரிக்க ஜனாதிபதி இலங்கை வருகிறார்

Posted: 12 Nov 2013 03:07 AM PST

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவென தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஸுமா இலங்கை வரவுள்ளார். இத்தகவலை தென்னாபிரிக்கா உறுதி செய்துள்ளது. இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நிலையான வளர்ச்சி, கடன் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், பெண் சமத்துவம், சுகாதாரம், மனித உரிமைகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சட்டம், பல்தரப்பு வர்த்தக விவகாரங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™