Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மங்கள்யான் விண்கலம் வெற்றி பெற திருமலை, காளஹஸ்தி கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு

Posted: 03 Nov 2013 11:02 PM PST

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) 'மங்கள்யான்' என்ற விண்கலத்தை நாளை அனுப்புகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவு தளத்தில் இருந்து நாளை பிற்பகல் 2 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி. 25 ராக்கெட் மூலம் 'மங்கள்யான்' விண்கலம் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி ராதா கிருஷ்ணன் திருமலை வந்தார். இன்று அதிகாலை அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். கோவில் அதிகாரிகள். அவரை வரவேற்று ஏழுமலையானின்

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ராஜினாமா செய்த 4 மந்திரிகள் அரசு அலுவலகம் செல்லவில்லை

Posted: 03 Nov 2013 10:36 PM PST

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியை சேர்ந்த மத்திய மந்திரிகள் பல்லம் ராஜூ, சிரஞ்சீவி, சூர்ய பிரகாஷ் ரெட்டி, புரந்தேஸ்வரி ஆகிய 4 பேரும் பதவியை ராஜினாமா செய்தனர். பிரதமர் மன்மோகன் சிங்கை அவர்கள் 4 பேரும் கடந்த 4–ந்தேதி சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால், அவர்கள் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கவில்லை.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: தடகள வீராங்கனை பூனியா போட்டி

Posted: 03 Nov 2013 10:15 PM PST

டெல்லி உள்பட 5 வட மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. 200 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1–ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி 12–ந்தேதிவரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற 16–ந்தேதி கடைசி நாள்.

இன்று ஐதராபாத் வரும் பிரணாப்முகர்ஜியை ஜெகன்மோகன்ரெட்டி சந்திக்கிறார்

Posted: 03 Nov 2013 09:29 PM PST

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று ஐதராபாத் வருகிறார். அப்போது தெலுங்குதேச தலைவர் சந்திரபாபுநாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் அவரை சந்தித்து பேசுகிறார்கள். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

அசாமில் பொதுமக்கள் 7 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்: ராணுவ உடையில் வந்து தாக்குதல்

Posted: 03 Nov 2013 08:49 PM PST

அசாம் மாநிலம் கோல்பரா மாவட்டத்தில் உள்ள ஜென்ட மாரி எனும் கிராமத்தில் நேற்றிரவு தீபாவளி கொண்டாடியவர்களில் ஒரு பகுதியினர் வட்டமாக அமர்ந்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 9.30 மணி அளவில் சீட்டாட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது, அங்கு ராணுவ உடையில் சிலர் வந்தனர்.

பாலக்காடு அருகே மோட்டார் சைக்கிள் பஸ் மோதிய விபத்தில் கணவன்–மனைவி பலி: 2 குழந்தைகள் படுகாயம்

Posted: 03 Nov 2013 08:21 PM PST

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது ராமபுரம். இங்கு வசித்து வந்தவர் சாதிக் (வயது 25). இவரது மனைவி சாலிமா (19). இவர்களது குழந்தை மில்கா (2) மற்றும் சாதிக்கின் அக்காள் மகள் சபீனா ஆகியோர் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் மலப்புரத்தில் உள்ள பெருந்தல் மன்னா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

காமன்வெல்த் நாடுகள் மாநாடு: மன்மோகன்சிங் இலங்கை செல்ல 2 மத்திய மந்திரிகள் எதிர்ப்பு

Posted: 03 Nov 2013 07:41 PM PST

காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்ல 2 மத்திய மந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில், வருகிற 15 முதல் 17-ந்தேதி வரை காமன்வெல்த் நாடுகள் மாநாடு நடைபெற உள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசு நடத்தும் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு

ரஷியாவிடம் வாங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ரமாதித்யா’ 16-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு

Posted: 03 Nov 2013 07:21 PM PST

ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியாவிடம் ரஷியா வரும் 16-ந் தேதி ஒப்படைக்கிறது. தற்போது இந்தியாவிடம் 'ஐ.என்.எஸ். விராத்' என்ற ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் உள்ளது. இந்தக் கப்பல் இங்கிலாந்திடம் இருந்து வாங்கி இந்திய கடற்படையில் 1987-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இந்தக்

ஆதார் அட்டை ஒரு பிரச்சினை அல்ல: சமையல் கியாஸ் மானியம் அனைவருக்கும் தொடரும்- இந்திய எண்ணெய் கழகம்

Posted: 03 Nov 2013 07:16 PM PST

சமையல் கியாஸ் மானியம் அனைவருக்கும் தொடரும், ஆதார் அட்டை ஒரு பிரச்சினை அல்ல என்று இந்திய எண்ணெய் கழகம் அறிவித்துள்ளது. அரசின் சேவைகள், மானியங்கள், சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஆதார் அட்டைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, அரசின் மானியங்கள். சலுகைகள், சேவைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயம்

குஜராத்தில் கோஷ்டி மோதல்: 3 பேர் பலி - 20 வீடுகள் எரிப்பு

Posted: 03 Nov 2013 04:10 PM PST

குஜராத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். கர்படா தாலுக்கா, கஜூரியா கிராமத்தில் வசிக்கும் இரு பிரிவினருக்கு இடையே நெடுங்காலமாக

வாகா எல்லையில் இந்தியா - பாக். வீரர்கள் இனிப்புகள் பரிமாறி தீபாவளி கொண்டாட்டம்

Posted: 03 Nov 2013 11:58 AM PST

தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சாலை வழி எல்லைப் பகுதியான வாகா எல்லைக் கோடு அருகே பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தார்கள்

காஷ்மீர் தலைமை செயலகம் இன்று முதல் ஜம்முவில் இயங்கும்

Posted: 03 Nov 2013 11:26 AM PST

தமிழக அரசின் தலைமை செயலகம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதைப் போல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில தலைமை செயலகமும் அந்த மாநிலத்தின் தலைநகரில் இயங்கி

மங்களூர் விமான விபத்தில் பலியான வெளிநாட்டு விமானிக்கு பணி இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 03 Nov 2013 10:18 AM PST

கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரெஸ் போயிங் 737 என்ற விமானம் நொறுங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 158 பேரும் இறந்தனர்

முன்னாள் ஆந்திர முதல் மந்திரி என்.டி.ஆர். சிலை எரிப்பு: தெலுங்கு தேசம் தொண்டர்கள் சாலை மறியல்

Posted: 03 Nov 2013 10:04 AM PST

பிரபல திரைப்பட நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்து ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்த முன்னாள் முதல் மந்திரியுமான என்.டி.ராமராவ் 16-8-1984 அன்று காலமானார். ஆந்திர மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பெற்றிருக்கும் என்.டி.ஆருக்கு அம்மாநிலத்தில்

குஜராத்: நர்மதா கால்வாய்க்குள் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Posted: 03 Nov 2013 09:45 AM PST

குஜராத் தலைநகர் அகமதாபாத் அருகே நர்மதா ஆற்றின் கால்வாய்க்குள் கார் பாய்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர். அடாலஜ் என்ற இடத்தில் நர்மதா கால்வாய்க்கு தடுப்பாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை

சத்தீஷ்கார் மாநிலத்தில் சோனியா காந்தி, நரேந்திர மோடி 7–ந்தேதி போட்டி பிரசாரம்

Posted: 03 Nov 2013 07:32 AM PST

ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு வருகிற 11–ந்தேதியும், 19–ந்தேதியும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் வருகிற 7–ந்தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், குஜராத்

நடிகை சுவேதா மேனன் செக்ஸ் புகார்: கொல்லம் காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப் பதிவு

Posted: 03 Nov 2013 04:29 AM PST

நடிகை சுவேதா மேனன், கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. பீதாம்பர குரூப் மீது செக்ஸ் புகார் கூறினார். இதனைத்தொடர்ந்து கொல்லம் போலீசார் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழில் அரவான் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளவர் நடிகை சுவேதா மேனன். சமீபத்தில் இவர் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் கொல்லம் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான பீதாம்பர குரூப் மீது , கொல்லத்தில் நடந்த ஒரு படகு விழாவின் போது தன்னிடம் அத்துமீறி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் கூறினார்.

மணிப்பூரில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Posted: 03 Nov 2013 02:01 AM PST

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் கடந்த செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். போலீசார் ரோட்டோரம் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து போலீசார் கிழக்கு இம்பால் மற்றும் மேற்கு இம்பாலில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

உ.பி.யில் 12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக்கொலை

Posted: 03 Nov 2013 12:53 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த ராணுவ வீரர் வேட்பிரகாஷ். இவரது மகன் அங்கித் (19). டெல்லியில் 12–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு மர்ம வாலிபர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டான். இதனால் அவன் மயங்கி விழுந்தான். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த அந்த நபர் மாணவன் மீது மூன்று முறை சுட்டு விட்டு ஓடிவிட்டான்.

5 மாநில தேர்தல்: கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம்

Posted: 02 Nov 2013 11:53 PM PDT

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. டெல்லியிலும் பாரதீய ஜனதா கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™