Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பெண் நிருபர் பாலியல் புகார்: தெகல்கா நிறுவனர் தேஜ்பால் கோவா போலீசில் ஆஜர்

Posted: 27 Nov 2013 11:08 PM PST

தெகல்கா டாட்காம் நிறுவனர் மற்றும் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா நட்சத்திர ஓட்டலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது லிப்டில் அவர் பெண் நிருபரிடம் பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவா போலீசார் டெல்லி வந்து தெகல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்திரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை

தெகல்கா ஆசிரியர் சோமா சவுத்திரி ராஜினாமா

Posted: 27 Nov 2013 10:10 PM PST

தெகல்கா டாட்காம் நிறுவனர் மற்றும் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது அதன் பெண் நிருபர் பாலியல் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக தருண் தேஜ்பாலுக்கு கோவா போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகு மாறு உத்தரவிட்டுள்ளனர். இன்று பிற்பகல் 3 மணி வரை அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா ஏற்பட்டால் நக்சலைட்டுகள் கை ஓங்கும்: உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 27 Nov 2013 09:54 PM PST

சீமாந்திராவில் உள்ள கர்னூல், கடப்பா, பிரகாசம், குண்டூர், தெலுங்கானா பகுதியில் உள்ள நல்கொண்டா, மகவூப் நகர் மாவட்டம் என ஒடிசா எல்லை வரை நல்லமலை காட்டுப்பகுதி உள்ளது. 2004–ம் ஆண்டுவரை நக்சலைட்டுகள் நல்லமலை பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக செயல் பட்டனர். அரசியல் தலைவர்களை குறிவைத்து கொலை செய்வது பலவித வன்முறை சம்பவங்களை,

திருப்பதி கோவிலை தாக்க தீவிரவாதிகள் சதி திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 27 Nov 2013 09:45 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட வருகிறார்கள். இந்தியர்களின் முக்கிய தலமான திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தனி தெலுங்கானா மாநிலம் என்னால்தான் கிடைத்தது: ஜெய்பால் ரெட்டி சொல்கிறார்

Posted: 27 Nov 2013 09:44 PM PST

ஆந்திராவை பிரிந்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுகிறது. இதற்கான மசோதா பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்

சபரிமலையில் மழை குறைந்தது: எரிமேலி காட்டுப்பகுதி வழியாக பக்தர்கள் வருகை தொடங்கியது

Posted: 27 Nov 2013 09:33 PM PST

மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 15–ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் இருமுடி கட்டிய பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. முதல் நாளில் இருந்தே சபரிமலையில் மழையும் பெய்யத் தொடங்கி விட்டது. நேற்று வரை சபரிமலையில் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று மாலை வரை பெய்த மழை அதன் பிறகு சற்று

'லெகர்' புயல் பலவீனம் அடைந்தது: ஆந்திரா தப்பியது

Posted: 27 Nov 2013 08:57 PM PST

சமீபத்தில் ஆந்திராவில் கரைகடந்த 'ஹெலன்' புயல் 4 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஹெலன் புயலைத் தொடர்ந்து புதிதாக உருவான 'லெகர்' புயலும் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்தது. மீண்டும் மிரட்டிய புதிய புயலால்

2ஜி ஊழல் வழக்கு சாட்சிகள் விசாரணை முடிந்தது

Posted: 27 Nov 2013 08:45 PM PST

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு இழப்பும், ஊழலும் நடந்தது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்பட 14 பேர் மீதும் மற்றும் 3 நிறுவனங்கள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அங்கு சி.பி.ஐ. தரப்பு சாட்சிகளிடம் கடந்த சில மாதங்களாக விசாரணை நடந்தது. ஒவ்வொரு சாட்சிகளாக அழைக்கப்பட்டு குறுக்கு வி

ஈரானுடனான வர்த்தகத் தொடர்புகள் அதிகரிக்க வாய்ப்பு: இந்திய அரசு தகவல்

Posted: 27 Nov 2013 07:48 PM PST

கடந்த வாரம் ஈரானின் அணுசக்திப் பயன்பாடு குறித்து உலக நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்காவும், ஐ.நாவும் அறிவித்துள்ளன. பொருளாதாரத் தடைகள் இருந்தபோதே இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் அனுப்புவதில் ஈரான் முன்னிலை இடத்தில் இருந்துவந்தது.தற்போது தடைகள் தளர்த்தப்படுகின்ற நிலையில் இந்தியா தன்னுடைய தேவைகளுக்கான எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முயற்சி

டெல்லியில் எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிடுவோம்: பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு

Posted: 27 Nov 2013 07:02 PM PST

டெல்லியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ''உங்களை விட்டு எப்போதும் போகமாட்டோம். டெல்லியில் பாராளுமன்ற தேர்தல் உள்பட எந்த தேர்தல் நடந்தாலும் நாங்கள் போட்டியிடுவோம்'' என்றார். டெல்லி மாநில சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா மற்றும் அரவிந்த்கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு ஒத்திவைப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Posted: 27 Nov 2013 01:58 PM PST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து நச்சுவாயு வெளியேறியதைத் தொடர்ந்து ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

டெல்லி அருகே கள்ளக் காதலன்,2 வயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

Posted: 27 Nov 2013 01:38 PM PST

புதுடெல்லியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரியானா மாநிலம்,ரோட்டக் பகுதியை சேர்ந்தவர், மோனிகா(24) அங்குள்ள ராம் கோபால் காலனியில் கணவருடன் வசித்து வந்தார்.இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

பேஸ்புக், டுவிட்டரில் 5 மாநில தேர்தல் முடிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted: 27 Nov 2013 01:24 PM PST

டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள், அடுத்த மாதம் 8-ந்தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் விரைவாக அறிந்து கொள்ளும் வகையில்

ஆசாராம் பாபு மகன் பஞ்சாபில் பதுங்கலா?: போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

Posted: 27 Nov 2013 12:50 PM PST

வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் படித்து வரும் ஒரு பள்ளி மாணவி, சமீபத்தில் ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் கூறினார். அதன்பேரில், ஆசாராம் பாபுவை ஜோத்பூர் போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் ஆமதாபாத் புறநகரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் வசித்து வரும் ஒரு இளம்பெண், ஆசாராம் பாபு மீது கற்பழிப்பு புகார் தெரிவித்தார். கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை, ஆசாராம் பாபு தன்னிடம் பாலியல்

சத்தீஸ்கர்:காட்டு யானை கூட்டம் தாக்கி வனக் காவலர் பரிதாப பலி

Posted: 27 Nov 2013 12:03 PM PST

சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் உள்ள அமடண்ட் கிராமத்துக்குள் கடந்த இரு தினங்களாக சுமார் 50 காட்டு யானைகள் கூட்டமாக வந்து பயிர்கள்,செடிகள் மற்றும் வீடுகளை மிதித்து துவம்சம் செய்து அட்டூழியம் புரிந்து வந்தன.

தருண் தேஜ்பால் மீது பாலியல் புகார் அளித்த பெண் நிருபர் மாஜிஸ்திரேட் முன்னர் 8 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார்

Posted: 27 Nov 2013 10:41 AM PST

டெல்லியைச் சேர்ந்த தெகல்கா நிறுவனம் இணையவழி செய்திகள் மற்றும் வார இதழ்களை நடத்தி வருகிறது. இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான தருண் தேஜ்பால் மீது அங்கு பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் செய்தார்.

காவேரி மேலாண்மை வாரியம்: தமிழக அரசு மனு மீது உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 3ம் தேதி விசாரணை

Posted: 27 Nov 2013 09:11 AM PST

காவிரி ஆற்றின் நீரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்துகொள்கின்றன. இந்நிலையில், காவிரி நீரை பகிர்ந்துகொள்வது குறித்த நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு புறக்கணித்து வருவதால், கர்நாடகம் மற்றும் தமிழக அரசு இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

தனது தயாரிப்பான மார்பகப் புற்றுநோய் மருந்திற்கு அங்கீகாரம் பெற்றுள்ள பயோகான் நிறுவனம்

Posted: 27 Nov 2013 08:47 AM PST

பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பயோகான் நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் மிலன் நிறுவனத்துடன் இணைந்து மார்பகப் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.

பீகாரில் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் ஆசிரியர்கள் 5-ம் வகுப்பு கணிதம்-இந்தி பாடத்தில் பெயில்

Posted: 27 Nov 2013 04:44 AM PST

பீகார் மாநிலத்தில் பள்ளிகளில் கல்வித்தரம் மோசமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு முதல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 5-ம் வகுப்பு வரையிலான ஆங்கிலம், கணிதம், இந்தி மற்றும் பொது அறிவு பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள்

தேஜ்பாலுக்கு இன்றும் முன்ஜாமின் வழங்கவில்லை: தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்

Posted: 27 Nov 2013 04:16 AM PST

பெண் நிருபரை பாலியல் பலாத்காரம் செய்ததாக டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் மீது கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக கோவா தனிப்படையினர் டெல்லி சென்றுள்ளனர். பாலியல் புகார் கூறிய நிருபரின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™