மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தனியார் பேருந்துகளுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவினை ரத்து செய்த ஆந்திர அரசு
- 'நாசா ரோவர் சவால்' தேர்வில் பங்குபெறும் இந்திய மாணவர்கள்
- கேரளாவில் நெல்லை சுற்றுலா பயணியை கொன்ற ஓட்டல் உரிமையாளர்–மகன் கைது
- பீகாரில் ஓடும் ரெயிலில் ராணுவ வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை: மாவோயிஸ்டுகள் தாக்குதல்
- காங்.-பா.ஜனதா பலப்பரீட்சை: ராஜஸ்தான் மாநிலத்தில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
- நிதி நிறுவன மோசடி: திரிணாமூல் எம்.பி.க்கு 14 நாள் விசாரணை காவல்
- காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது: மோடி பேச்சு
- இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்: செவ்வாய் கிரகம் நோக்கி மங்கள்யான் வெற்றிகரமாக திருப்பிவிடப்பட்டது
- தலைமறைவாக இருக்கும் ஆசாராம் பாபு மகனின் நெருங்கிய கூட்டாளிகள் கைது
- ஓடும் ரெயில் மீது மாவோயிஸ்ட்கள் பயங்கர தாக்குதல் - 3 போலீசார் பலி
- அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை தடுத்தவர் கெஜ்ரிவால்: மோடி குற்றச்சாட்டு
- ஒடிசாவில் முதல் அமைச்சரின் வீட்டருகே ரூ.70 லட்சம் கொள்ளை
- டெல்லி சட்டசபை தேர்தல்: 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களித்தனர்
- முன்ஜாமின் வழங்க கோவா கோர்ட் மறுப்பு: தருண் தேஜ்பால் கைது
- இந்த ஆண்டில் ரூ.2.32 கோடி லட்சம் விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி: சரத் பவார்
- ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை
- டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
- நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்: அல்டமாஸ் கபீர்
- நாளை வீடு கிரக பிரவேசம்: எந்திரம் மூலம் தென்னை மரம் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
- காங்கிரசின் உள்நோக்கமே அவர்களது பிரச்சினை: டெல்லி பிரச்சாரத்தில் மோடி சாடல்
| தனியார் பேருந்துகளுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவினை ரத்து செய்த ஆந்திர அரசு Posted: 30 Nov 2013 10:33 PM PST சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் சொகுசு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆந்திராவின் மகபூப் நகரில் நடைபெற்ற ஒரு விபத்தில் 45 பேர் இறந்தனர். பின்னர் கர்நாடகாவின் ஹவேரியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஆந்திர அரசு தற்போது தனியார் பேருந்துகளுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவினை நிறுத்திவைத்துள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு விதிகள் சரிவர நிறைவேற்றப்படாததினால் நூற்றுக்கணக்கான தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு அரசு தடை விதித்துள்ளது. மொத்தம் 800 பேருந்துகள் |
| 'நாசா ரோவர் சவால்' தேர்வில் பங்குபெறும் இந்திய மாணவர்கள் Posted: 30 Nov 2013 10:25 PM PST அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளிக் கழகத்தில் அடுத்த வருடம் நிலவுக்கு செலுத்த இருக்கும் மூன்பகி (moon buggy) என்ற தொழில் நுட்ப மாதிரியைத் தேர்வு செய்யும் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 10-12 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக உலகளவில் நடைபெற்ற மாணவர் குழு தேர்வில் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஐஐஎல்எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் ஒரு குழுவினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆஷ்தா சிங், அவந்தாஸ் ஸ்ரீவஸ்தவா, அன்ஷு ராய், பிரிஜேஷ்குமார் ராய் மற்றும் லலித் குமார் ஆகிய இறுதி ஆண்டு மெக்கானிகல் மற்றும் எலக்டிரிகல் துறை மாணவர்கள் இந்தப் போட்டிக்குத் தேர்வு |
| கேரளாவில் நெல்லை சுற்றுலா பயணியை கொன்ற ஓட்டல் உரிமையாளர்–மகன் கைது Posted: 30 Nov 2013 10:09 PM PST நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது வர்க்கலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் சூரியநாராயணனும், அவரது நண்பர்களும் உணவு அருந்தினார்கள். |
| பீகாரில் ஓடும் ரெயிலில் ராணுவ வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை: மாவோயிஸ்டுகள் தாக்குதல் Posted: 30 Nov 2013 09:43 PM PST பீகார் மாநிலம் ஆஷிக்பூர்– ஜமால்பூர் இடையே சாகேப்கஞ்ச்– பாட்னா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த ரெயில் ஜமால்பூரில் இருந்து புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். பாகல்பூரில் 12–வது யூனிட்டைச் சேர்ந்த ரெயில்வே பாதுகாப்பு படை ராணுவ வீரர்களும் பயணம் செய்தனர். இந்த ரெயில் பீகார் மாநிலம் ஆஷித்பூர்– ஜமால்பூர் |
| காங்.-பா.ஜனதா பலப்பரீட்சை: ராஜஸ்தான் மாநிலத்தில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு Posted: 30 Nov 2013 09:31 PM PST ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த நவம்பர் மாதம் 5–ந்தேதி 200 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நவம்பர் 12–ந்தேதி மனு தாக்கல் முடிந்தது. நவம்பர் 16–ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரம் தொடங்கியது. இந்த நிலையில் சுரு தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஜெகதீஷ் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் |
| நிதி நிறுவன மோசடி: திரிணாமூல் எம்.பி.க்கு 14 நாள் விசாரணை காவல் Posted: 30 Nov 2013 02:37 PM PST மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனத்தின் மோசடியால் ஆயிரக்கணக்கான மக்கள் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டனர். இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குணால் கோஷ் எம்.பி.க்கு தொடர்பு இருப்பதாக புகார் |
| காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது: மோடி பேச்சு Posted: 30 Nov 2013 02:20 PM PST டெல்லி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத் முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் |
| Posted: 30 Nov 2013 12:53 PM PST செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 5-ம் தேதி விண்ணில் |
| தலைமறைவாக இருக்கும் ஆசாராம் பாபு மகனின் நெருங்கிய கூட்டாளிகள் கைது Posted: 30 Nov 2013 11:30 AM PST வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் படித்து வரும் ஒரு பள்ளி மாணவி, சமீபத்தில் ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் கூறினார். அதன்பேரில், ஆசாராம் பாபுவை ஜோத்பூர் |
| ஓடும் ரெயில் மீது மாவோயிஸ்ட்கள் பயங்கர தாக்குதல் - 3 போலீசார் பலி Posted: 30 Nov 2013 10:19 AM PST பீகாரின் முங்கர் மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்ட்கள் ரெயிலின் மீது நடத்திய தாக்குதலில் 3 ரெயில்வே போலீசார் பலியாகினர். சாஹேப்கஞ்ச் - தனாபூர் ஆகிய நகரங்களை இணைக்கும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முங்கர் மாவட்டத்தில் உள்ள ஜமல்பூர் - |
| அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை தடுத்தவர் கெஜ்ரிவால்: மோடி குற்றச்சாட்டு Posted: 30 Nov 2013 08:35 AM PST டெல்லி சட்டசபைக்கு வரும் 4-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டெல்லி சீமாபூர் தொகுதி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாவின் பிதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் குறித்து மறைமுகமாக கூறியதாவது:- |
| ஒடிசாவில் முதல் அமைச்சரின் வீட்டருகே ரூ.70 லட்சம் கொள்ளை Posted: 30 Nov 2013 08:19 AM PST ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் பாலஸ்பள்ளி மேம்பாலம் அருகில் முதல் அமைச்சர் நவீன் பட்நாயக்கின் வீடு உள்ளது. உயர் பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் முதல்வரின் வீட்டின் அருகே இன்று காலை 10.30 மணியளவில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் |
| டெல்லி சட்டசபை தேர்தல்: 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களித்தனர் Posted: 30 Nov 2013 07:37 AM PST 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. புதுடெல்லி தொகுதியில் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் விஜேந்தர் குப்தா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் |
| முன்ஜாமின் வழங்க கோவா கோர்ட் மறுப்பு: தருண் தேஜ்பால் கைது Posted: 30 Nov 2013 06:55 AM PST பெண் நிருபரை பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால்மீது கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து டெல்லியில் தலைமறைவாக இருந்த தேஜ்பால், முன்ஜாமின் பெற முயற்சி செய்தார். ஆனால் டெல்லி |
| இந்த ஆண்டில் ரூ.2.32 கோடி லட்சம் விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி: சரத் பவார் Posted: 30 Nov 2013 06:37 AM PST சிக்கிம் மாநிலம் ராணிபூல் பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மத்திய வேளாண்துறை மந்திரி சரத் பவார் பங்கேற்றார். அப்போது 1.2 பில்லியன் மக்களின் நுகர்வு தேவை மற்றும் உணவு தானியங்களின் இருப்பு தொடர்பாக அவர் பேசியதாவது:- |
| ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை Posted: 30 Nov 2013 05:29 AM PST ஒடிசா மாநிலத்தின் நுவபடா மாவட்ட மலைப்பகுதிகளில் மறைந்துகொண்டு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இங்குள்ள தட்டுடோலா மற்றும் தேகுன்பானி கிராமங்களிடையே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடி நேற்று மாலை சி.ஆர்.பி.எப்., மாவட்ட தன்னார்வ படை, சிறப்பு போலீஸ் படை அதிகாரிகள் உள்ளே புகுந்தனர். |
| டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல் Posted: 30 Nov 2013 05:17 AM PST டீசல் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில், மாதந்தோறும் 50 காசுகள் வரை விலையை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த மாதத்துக்கான விலை உயர்வு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வரிகள் தவிர லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது |
| நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்: அல்டமாஸ் கபீர் Posted: 30 Nov 2013 04:48 AM PST சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பயிற்சி வழக்கறிஞர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியிருக்கிறார். இதுபற்றி கருத்து தெரிவித்த முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், "நீதித்துறை மீது |
| நாளை வீடு கிரக பிரவேசம்: எந்திரம் மூலம் தென்னை மரம் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Posted: 30 Nov 2013 03:53 AM PST திருச்சூர் உல்லூரை சேர்ந்தவர் ரதீஸ் (வயது20) மரம் ஏறும் தொழிலாளி. இவர் புதிய வீடு கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா நாளை நடைபெறுவதாக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் ரதீஸ் நேற்று அருகில் உள்ள தென்னை மரத்தில் எந்திரம் மூலம் ஏறினார். தேய்காய் பறித்தபோது அருகில் சென்ற மின்கம்பியின் மீது எந்திரம் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து ரதீஸ் |
| காங்கிரசின் உள்நோக்கமே அவர்களது பிரச்சினை: டெல்லி பிரச்சாரத்தில் மோடி சாடல் Posted: 30 Nov 2013 02:39 AM PST டெல்லி சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தீவிர பிரச்சாரம் செய்து வரும் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, டெல்லி ஷதாரா என்னுமிடத்தில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |